என்னை தொடர்ந்து

வாருங்கள், நண்பரே வணக்கம். தங்கள் வருகையை பதிவு செய்யுங்களேன் !அன்புடன் கருணாகரன்6,இடைப்பாடி. அன்பர்களே ! முழுக்க முழுக்க தமிழில் திருக்கணித முறையில் ஜாதகம் கணிக்க வேண்டுமா? உங்கள் பெயர், பெற்றோர் பெயர், பிறந்த தேதி, மாதம் வருடம், பிறந்த இடம் போன்ற விபரங்களை தாருங்கள், உங்கள் ஜாதகம் கூரியர் மூலமாக உங்களுக்கு அனுப்பி வைக்கப்படும்.( நள்ளிரவில் இரவு 12.00 மணிக்கு மேல் காலை 7.00 மணிக்குள் பிறந்திருந்தால் விடிந்தால் என்ன கிழமை என குறிப்பிடவும்.K.செந்தில்குமார்,கணேஷ் கம்ப்யூட்டர்ஸ்,34,கடைவீதி, இடைப்பாடி,சேலம் மாவட்டம்-637101.

Q - A

அன்பானவர்களே ! இந்த பகுதியில் உங்களுக்கு ஏற்படும் ஜோதிட  சம்பந்தமான எல்லாக் கேள்விகளுக்கும் அடியேனால் முடிந்தவரை பதில் அளிக்கப்படும்.




கேள்விகளை நீங்கள் கேளுங்கள்.


உங்களுக்காகவே இந்த பக்கம்


mail to gurukaruna2006@gmail.com


ஜாதக கேள்விகள்

அன்புநண்பர் கருணாகரன் ஐயா அவர்களுக்கு வணக்கம்.
  எங்கிருந்து ஆரம்பிப்பது கேள்வியை எங்கு முடிப்பது என்பது கூட தெரியாத ஒரு விஷயம் ஜாதக கலை..
இருப்பினும் கேள்விகளை ஓரளவு முறைப்படுத்தி ஆரம்பிக்க அனுமதி கோருகிறேன், இது ஒரு நீண்ட கேள்வி பதில் தொடராக அமையும் என்பது மட்டும் உறுதி. என் கேள்விகளின் தொனியில் மாறுதல் இருந்தால் அது அறியாமையால் ஏற்ப்படும் பிழையே தவிர வேறு ஒன்றில்லை. ஒரு ஆசானிடம் மாணவன் கேள்விகளைப்போன்றதே , எந்த ஒரு இழையிலும் கிடைக்காத தகவல்கள் இங்கு கிடைக்க போகிறது என்கிற ஆவலுடன் என்னுடைய முதல் கேள்வி
 .
கேள்வி ஒன்று :

ஒரு மனிதனுக்கு ஜாதகம் என்பது எப்போது கணிக்கப்படுகிறது ,
ஒரு வயதுக்கு முன் ஜாதகம் கணிக்கக்கூடாது என்று சில கட்டுப்பாடுகள் இருப்பதன் காரணம் ஏன்?.


பதில் : 
அப்படி ஒரு கட்டுப்பாடுகளும் இல்லை, எந்த ஜாதக சந்திரிகைகளிலும் ஒரு ஆண்டு அல்லது எத்தனை நாள் கழித்துதான்  ஜாதகம் எழுதப்படவேண்டும் என்ற கட்டுப்பாடுகளும் குறிப்பிடப்படவில்லை,
ஏன் எப்படி ஒரு எழுதப்படாத ஒரு சட்டம் கடைபிடிக்கப்படுகிறது சில இடங்களில் என்றால்,
அந்த காலத்தில் ஜோதிடர்கள் மிக குறைவு , ஜாதகம் எழுத அமர்ந்தால் ராசி, நவாம்சம், த்ரேக்கானம், பாவகம், சஷ்டியாம்சம், சப்தாம்சம் என ஷோடசாம்சம் வரை போட்டு மாத வாரியாக பலன், தசா புக்தி வாரியாக பலன் தினசரி பலன் என்று மிகவும் விரிவாக எழுதுவார்கள். அதற்கு நாட்கள் மிகவும் அதிகமாக ஆகும்.
மேலும் அந்த காலத்தில் மருத்துவர்களும் மிக குறைவானவர்களே இருந்ததால் உடல்நலக்குறைவால் சிசு மரணங்களும் தவிர்க்கமுடியாததாக இருந்தது. அதனால் ஜாதகம் எழுத குறைந்தது ஓராண்டாவது ஆகட்டும் என்றார்கள்.மற்றபடி எந்தவிதமான ஜோதிட காரணங்களும் இல்லை.
 ஆனால் ஒரு விஷயம் என்னவென்றால்,

எந்த குழந்தையின் ஜாதகமும் அந்த ஜாதகருக்கு பதிமூன்று வயதாகும் வரை அந்த வீட்டிற்கு எந்த பலனையும் தராது.
அந்த குழந்தைக்கும் அதன் தாய்க்கும் மட்டுமே பலன் காணமுடியும், அதன் தந்தைக்கே பலன் தராது. ஆனால் நடைமுறையில் ஒரு ஜாதகர் பிறந்தவுடன் தாத்தாவுக்கும், பாட்டிக்கும், சித்தப்பன், சித்திக்கும் பார்ப்பது வழக்கமாக உள்ளது. பார்க்கமுடியாது என்பதல்ல விஷயம், அந்த ஜாதகப்படி பலன் நடைபெறாது.

ஒரு குழந்தையின் ஜாதகத்தை வைத்துக்கொண்டு அவரது தந்தைக்கு பலன் சொல்லும்போது அந்த தந்தையின் ஜாதகப்படிதான் பலன்கள் நடைபெறும், ஆனால் ஜோதிடர் கையில் இருப்பது குழந்தையின் ஜாதகம். அதனால் கேட்பவர்களுக்கு குழந்தை பிறந்த நேரம் சரியில்லை போலிருக்கிறது என்று அந்த குழந்தையின் பேரில் இனம் புரியாத கோபம் மனதுக்குள் உருவாகி விடும். அது அந்த குழந்தையின் எல்லா காலத்திலும் பேசப்படும். 

அது குழந்தையின் வாழ்நாளை மிக பாதிக்கும். ஒரு தாழ்வு மனப்பான்மையை அந்த குழந்தையின்பால் வளர்த்துவிடும்,அது அந்த குழந்தையின் முன்னேற்றத்தை தடுக்கும். பெரும்பாலும் நான் குழந்தையின் ஜாதகங்களை பார்த்து அந்த குடும்பத்திற்கு பலன்கள் சொல்வதில்லை.

மொத்தத்தில் குழந்தைகளுக்கு ஜாதகம் கணிப்பதற்கு வயது ஒரு காரணம் இல்லை.



அன்புடன் உங்கள் கருணாகரன், இடைப்பாடி.

11 comments:

mithuna said...

மரியாதைக்குரிய குரு அவர்களுக்கு ,

வணக்கம் . ஐயா , எனக்கு தூக்கத்தின்போது அடிக்கடி கடவுள் பற்றிய கனவுகள் நிறைய வருகின்றது .

கடவுளே ஆனாலும் அடிக்கடி கனவில் வரக்கூடாது என்று என் நண்பர்கள் கூறுகின்றனர் . அவ்வாறு கடவுள் கனவில் வந்தால் உடல் வலி ஏற்படும் என்றும் என் நண்பர்கள் கூறுகின்றனர் . அவர்கள் கூறுவது போலவே கனவு கண்ட அந்த நாள் காலையில் எனக்கு கடுமையான உடல் வலி ஏற்படுகிறது . இதனால் காலையில் சீக்கிரம் என்னால் எழமுடியவில்லை .

என் நண்பர்கள் கூறுவது சரியா ? ஏன் கடவுள் பற்றிய கனவுகள் எனக்கு அதிகம் வருகின்றது ? அதற்க்கு என்ன காரணம் ? நான் மிகப்பெரிய பக்திமான் இல்லை

ஒரு வேளை ஏன் ஆழ்மனத்தின் எண்ணங்கள்தான் அவ்வாறு கனவுகளாக வெளிப்படுகின்றனவா ?

இர.கருணாகரன் said...

ஒரு வேளை ஏன் ஆழ்மனத்தின் எண்ணங்கள்தான் அவ்வாறு கனவுகளாக வெளிப்படுகின்றனவா ?



அன்பின் திரு.மிதுன் அவர்களுக்கு கருணாகரனின் அன்பு வணக்கங்கள்.

உண்மைதான்
நமது ஆழ்மனம் காண்பதைதான் பெரும்பாலும் கனவுகளாக நாம் எண்ணிக் கொள்கிறோம்.

பலசமயங்களில் நாம் முன்பின் பாராத நபர் அல்லது இடம் அல்லது நிகழ்ச்சி இவைகளில் நாம் ஈடுபடும்போது இந்த சூழலில் நாம் முன்பே அனுபவப்பட்டதுபோல் ஒரு பிரமை உண்டாவதை உணர்ந்ததுண்டல்லவா?

இதெல்லாம் ஆழ்மனம் கண்டவைகள்தான், ஆனால் நாம்அதனை பெரிதுபடுத்தாததால் அவை அப்படியே ஆழ்ந்து விட்டன. பிறிதொருநாள் அவை வெளிப்படலாம், வெளிப்படாமலும் போகலாம்.

நமது உறக்கத்தின் போது நமது மூளையின் செயல்பாடு நம்மை சுற்றிலும் சுமார் முப்பது மீட்டர் சுற்றளவில் செயல் படுவதாக சொல்லப்படுகிறது. (இதனை யூனிவர்சல் மைன்ட் என்று கூறப்படுவதாக அறிகிறோம்)

இது ஒருபுறம் இருக்க,

கனவில் கடவுளர்களின் திருத்தோற்றம் தோன்றுவது நமது இறையுணர்வின் வெளிப்பாடாகவே கருத வாய்ப்புண்டு. இதற்கு நாம் பெரிய பக்தியாளனாக இருக்கவேண்டும் என்பது அவசியமில்லை.

மேலும் சில வகைகளில்,

நாம் ஏற்றுக்கொண்டதற்கும், நாமே ஏற்றதற்கும் முதிர் நிலையைக் (Results) காண கனவுகள் உதவுவதாக அறியப்படுகிறது. மேலும் கனவுகள், ஆன்மீகவாதிகளுக்கும், யோகமார்க்கம் பயில் வோருக்கும் மிக பின்புலமாக இருப்பதாகவும் அறியப்படுகிறது.

ஆக எப்படியாயினும் கனவுகள் நன்மையாகவே பயன்படுகின்றன.

ஆனால் நீங்கள் கடவுளர்களைக் கண்டதினால் உடல்வலி ஏற்படுவதாகவும் சொல்கிறீர்கள்.

இது எதனால் என்றால்,

தாங்கள் உறக்கத்தில் காணும் நிகழ்ச்சியை வெளிமனத் திலும் ஞாபகத்தில் இருக்கவேண்டும் என்பதற்காக கொஞ்சம் சிரமப்பட்டு அதனை நிறுத்த முயற்சிப்பீர்கள் என நினைக்கிறேன்.

அதனை விட்டு விடுங்கள், தேவையானவற்றை நமது மனமே வைத்துக் கொள்ளும்.

தவிர, தெய்வ உருவங்கள் எல்லாம் நமது கற்பனையே அதற்கு முக்கியத்துவம் தரவேண்டாம். ஞானம் கைவரப் பெறுவதே வாழ்வின் இலட்சியமாக கொள்ளுங்கள். நீங்களே சிவம் என்பதை உணருங்கள்.

வருவது தானே வரும்

வருவதுதானே வரும்.


அன்புடன் கருணாகரன், இடைப்பாடி.

mithuna said...

மரியாதைக்குரிய குரு அவர்களூக்கு ,

வனக்கம் .

களத்திரகாரகன் ( ஆண்களூக்கு ) சுக்கிரன் எனவும்

களத்திரகாரகன் ( பெண்களுக்கு ) செவ்வாய் எனவும் நாடி ஜோதிடம் கூறுகிறது.

ஆனால் இரு பாலருக்கும் களத்திரகாரகன் சுக்கிரன் என கொன்டே பல ஜோதிடர்கள் கூறுகின்றனர் .

இதில் எது சரி ?

http://lifestyle-jothidam.blogspot.com/ said...

அன்பு மிதுன் அவர்களுக்கு கருணாகரனின் வணக்கங்கள்.


பராசரர் முறையில் இருபாலருக்கும் சுக்ரனையும், நாடிவிதியில் ஆணுக்கு சுக்ரனும்,பெண்களுக்கு செவ்வாயையும் களத்திர காரகனாக கூறப்படுவது பற்றிய கேள்வி தங்களது.



இரண்டு முறைகளும் ஒன்றே போல் தோன்றினாலும் இரண்டுக்கும் பெரும் வித்யாசமிருப்பதை நாம் உணரலாம்.

ராசி கட்டம் மட்டும் வைத்து நாடியில் சொல்லலாம்,
பராசரரில் திசா, புக்தி, அந்தரம் வரையில் செல்லவேண்டும்.

ஒன்று ஐந்து மட்டும் போதும், ஜீவ,கர்ம,காரகர்கள் போதும் என்கிறது நாடி.
எல்லாக்கட்டங்களும் பார்க்கசொல்கிறார் பராசரர்.

அந்த முறையில் பார்ப்பவர்களுக்கு அந்த முறையும், இந்த முறையில் பார்ப்பவர்களுக்கு இந்த முறையும் சிறந்ததாகத்தான் தோன்றும்.

எப்படி கே.பி-யில் பார்ப்பவர்கள் திருக்கணிதத்தை
புறக்கணிப்பதுபோல.

எது சரி என்பது நாம் கொண்ட முறையில்தான் உள்ளது.

செவ்வாயை மங்களன் என்பதால் மாங்கல்யகாரகனாக நாடி சொல்லலாம் அல்லவா?

கால புருஷனுக்கு (ஆணுக்கு) ஏழாமிடம் துலாம் (சுக்ரன்), அந்த துலாத்திற்கு (பெண்ணுக்கு) ஏழாமிடம் மேஷம் (செவ்வாய்) என
இருக்கலாம் இது ஆணுக்கு பொருந்தும் ஆனால் பெண்ணுக்கு....

எப்படி இருந்தாலும் சுக்ரன் களத்திரகாரகன் என்பதே சரி.

Anonymous said...


NAME : T.KARTHICK KUMAR
DOB : 31.10.1988
TIME : 06.44 AM
PLACE OF BIRTH : PATTUKKOTTAI, TAMILNADU

1.நான் இப்போது வேலை இல்லாமல் உள்ளேன். எப்போது வேலை கிடைக்கும்.? .தனியார் துறையில் அல்லது அரசு துறையில் ?

2.என் ஜாதகப்படி என் எதிர்காலம் எப்படி இருக்கும்.?

3.நான் எனக்கு சொந்தமான இடத்தில் என்ன தொழில் செய்தால் முன்னேற்றம் ஏற்படும்? எப்போது நான் தொழில் தொடங்கலாம்?

4.என்னுடைய வீட்டுக் கடன் எப்போது தீரும்? எனது குடும்பத்தில் எப்போது அமைதி நிலவும்?

5.திருமண வாழ்க்கை எப்படி இருக்கும்?எனக்கு எப்பொழுது நிலையான வாழ்க்கை அமையும்?

my mail id: vinko044@gmail.com

Anonymous said...

NAME : T.KARTHICK KUMAR
DOB : 31.10.1988
TIME : 06.44 AM
PLACE OF BIRTH : PATTUKKOTTAI, TAMILNADU

1.நான் இப்போது வேலை இல்லாமல் உள்ளேன். எப்போது வேலை கிடைக்கும்.? .தனியார் துறையில் அல்லது அரசு துறையில் ?

2.என் ஜாதகப்படி என் எதிர்காலம் எப்படி இருக்கும்.?

3.நான் எனக்கு சொந்தமான இடத்தில் என்ன தொழில் செய்தால் முன்னேற்றம் ஏற்படும்? எப்போது நான் தொழில் தொடங்கலாம்?

4.என்னுடைய வீட்டுக் கடன் எப்போது தீரும்? எனது குடும்பத்தில் எப்போது அமைதி நிலவும்?

5.திருமண வாழ்க்கை எப்படி இருக்கும்?எனக்கு எப்பொழுது நிலையான வாழ்க்கை அமையும்?
my mail id: vinko044@gmail.com

http://lifestyle-jothidam.blogspot.com/ said...

உங்கள் ஜாதகம் பரிசீலனையில் உள்ளது , விரைவில் பதில் அளிக்கப்படும்

Unknown said...

வணக்கம் ஐயா!
நான் இலங்கையில் யாழ்ப்பாணத்தில் பிறந்தவன்.
திகதி-16-06-1982
நேரம்-அதிகாலை 4 மணி 56 நிமிடம்.
மேஷராசி,ரிஷபலக்கினம்,கார்த்திகை 1ம் பாதம்.
என் ஜாதகம் பார்த்தவர்கள் எல்லாம் நான் ஹிட்லர் மாதிரி, விஷ்வாமித்திரன் மாதிரி வருவேனெண்டு சொல்கிறார்கள். என்னாலும் சாதாரண மனிதரைப்போல வாழமுடியவில்லை. தயவுசெய்து நான் யாரென்று கூறுங்கள்.. என்னால் என்ன நடைபெறப்போகிறதென்று கூற முடியுமா?

Unknown said...

ஐயா,
எனக்கு 50 வயது ஆகிறது .35/36-ல் திருமணம் செய்தேன் ,எனக்கு 12 வயதில் மகளும் ,10 வயதில் மகனும் இருக்கிறார்கள் .
(ஆனால் என்னிடம் இல்லை ).என் மனைவி இறந்து 10 வருஷம் ஆகி விட்டது .என் குழந்தைகள் என்னிடம் ஒன்று சேருவார்களா?அல்லது கடைசிவரை தனிமனிதனாகவே இருக்க நேரிடுமா (இன்னொரு திருமணத்தை விரும்பவில்லை )

raja said...

சார்,
கார்த்திகை 1 பாதம் எந்த ராசி? சேர்ந்து மேஷம் அல்லது ரிஷேபம்?

Unknown said...

விருச்சிக ராசியில் (சந்திரன்) பிறந்த கடவுள் யார்? விநாயகர் கன்னி ராசி.அது போல் விருச்சிக ராசி கடவுள்?

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...