முகநூலில் திரு 'இடைசை' ஆளவந்தான் :
ஐயா மீண்டும் ஒரு கேள்வி....
ஆன்மாவின் குரலின் , பொருளை உணர்ந்து கொள்வது அல்லது புரிந்து கொள்வது எப்படி?
ஆன்மாவின் குரலின் , பொருளை உணர்ந்து கொள்வது அல்லது புரிந்து கொள்வது எப்படி?
நமது ஆன்மா
பெரும்பாலும் நம்மிடம் நேரடியாக எந்த தகவலையும் சொல்லாமல். குறிப்பால்
உணர்த்துகிறது என்பதும்,
அந்தக் குறிப்புகளை
பல சந்தர்ப்பங்களில் என்போன்ற சாமானியர்களால் புரிந்துகொள்ள முடிவதில்லை என்பதும்
உண்மைதானே?
அன்புள்ள நண்பர்
“இடைசை” ஆளவந்தான் அவர்களின் இந்த கேள்வி பலரது நினைவிலும் எழும் கேள்வியாகும்.
காரணம் நமக்கு ஆன்மாவே என்னவென்று தெரியாது அப்புறம் அதன் குரலை – குரலின் பொருளை
உணர்வது எப்படி ?
பொதுவாக ஒரு விஷயத்திற்கு வருவோம்.
ஒரு பள்ளிக்கூடத்தில் +2 முடிக்கும் மாணவ ,
மாணவியர்கள் தத்தமது அபிலாஷைகளுக்கு ஏற்றார்போல ஒவ்வொரு துறையை தேர்வு செய்து மேற்கொண்டு
படிப்பினை தொடர்வார்கள் . சிலர் மருத்துவராகலாம், சிலர் எஞ்சினியர் ஆகலாம், சிலர்
வக்கீல் ஆகலாம். அது அவரவர்கள் தேர்ந்தெடுக்கும் தொழில் பிரிவினைச் சார்ந்த
படிப்பினை பொறுத்து அமையும்.
ஒரு சிலர் மேற்கொண்டு படிக்காமல் ஏதேனும்
ஒரு தொழிலை தேர்வு செய்து பயின்று அந்த தொழிலில் பிரபலம் அடையலாம். மேலும் சிலர்
அதோடு படிப்பை விட்டு விடலாம் , வீட்டோடு இருந்து மணம் செய்து கொண்டு மன
நிறைவடையலாம்.
படித்து முடித்து ஒரு தொழில் செய்பவரை
பார்த்து படிப்பை நிறுத்தியவர் நானும் கத்தி எடுத்து ஆபரேஷன் செய்வேன் எனச்சொல்லி
கிளம்புவதும்,
அவரும் நானும் ஒன்றாகத்தான் படித்தோம் ,
அதனால் நானும் கோர்ட்டுக்கு சென்று வாதாடுவேன் எங்கள் வீட்டில் கூட நான்தான்
எல்லோருக்கும் சரியான தீர்ப்பு சொல்வேன் என்பதும்,
எப்படி உள்ளதோ , அப்படித்தான் எனக்கு
ஆன்மாவின் குரல் புரியவில்லை என்பதும் உள்ளது.
எல்லாவற்றிற்கும் பயிற்சி வேண்டும் சும்மா
அப்படியே எல்லாம் வந்து விடாது.
மலாய் மொழியில் பேசுவது நமக்கு புரிய
வேண்டுமானால், நாம் மலாய் மொழி
அறிந்திருக்க வேண்டுமல்லவா ? இல்லை இல்லை ஜாடையில் சொன்னாலும் புரிந்து கொள்வேன்
எனும் வார்த்தைகள் உதவாது.
நமது அறிவில் இல்லாததை நமது மனம் ஏற்காதது
போல , பயிற்சியில் இல்லாத ஒன்றை, முன்பின் அனுபவமில்லாத ஒன்றை நாம் விளங்கி
கொள்வது எங்ஙனம் ? அதன் பொருள் புரிவது எப்படி ?
ஆகவே மேலான பயிற்சியில் ஈடுபடாமல் எதையும்
சாதிக்க இயலாது.
வேண்டுமானால் அப்படி இப்படி என்று பேசிக் கொண்டிருக்கலாம்.
பயிற்சி அவசியம் , உங்களை நீங்களே ஆய்வு
செய்யுங்கள் , நீங்கள் யார் என்று ?
மற்றவரை ஆய்வு செய்வதை தவிர்த்திடுங்கள் .
அடுத்து . . . .
முகநூலில் மகள் ராஜேஸ்வரி
ராமசாமி அவர்களின் கேள்வி :
ஆன்மா என்பதை நம்
ஆழ்மனம் என்று கூறலாமா ?
எங்கள் DNA ,எங்களின்
எல்லாபிறப்பின் ரகசியங்களும் இதில் உள்ளதுதானே?
இதுதானே நம் தூக்கத்தில் முந்தைய பிறப்பு ,
அந்த இடங்களுக்கு சென்று வருகிறது?
ஆகாயபதிவிலும் எமது முற்பிறப்பு பற்றிய
தகவல் உள்ளதாமே ?
எல்லாவிதமான லோகங்கள் பற்றியும் எழுத
முடியுமா ?
ஆன்மாவின் குரலை நம் மதிப்புக்குரிய
மனசாட்சி என்று எடுத்துக் கொள்ளலாமா ?
ராஜேஸ்வரி ராமசாமி அவர்களின் அடுக்கடுக்கான
கேள்விகள் அவருள் ஒரு தேடல் உருவாகி இருப்பதை காண்பிக்கின்றது !!
இதற்கான பதிலை தருவதில் மனமகிழ்வடைகிறேன் .
அவர்களின் கேள்விக்கான பதில்கள் இதோ :
அவர்களின் கேள்விக்கான பதில்கள் இதோ :
மனம் என்பதே இப்பிறப்பில் நாம் அறிந்த
தகவல்களின் அடிப்படையில் இயங்குவது , நீங்கள் அறியாத எதையும் உங்கள் மனம்
ஒப்புக்கொள்ளாது. ஆனால் ஆன்மா அறியாத ஒன்று இல்லவே இல்லை .
ஆகவே மனம் என்பது ஆன்மா ஆகாது.
நாம் நிறைய விஷயங்களை
படிக்கின்றோம்,அதனால் நிறைய விஷயங்களை உள்வாங்குகின்றோம் .நண்பர்களோடு
பேசுகின்றோம் , அதனால் நிறைய தகவல்களை ஒருவருக்கு ஒருவர் பரிமாறிக் கொள்கின்றோம்.
சிலவேளைகளில் உயர்நிலையை உணர்ந்தவர்களோடு சம்பாஷிக்கும் வாய்ப்பும் கிடைக்கின்றது , அவர்கள் தங்கள் அனுபவங்களை
கூறுகின்றார்கள் . அந்த வேளைகளில் நமக்கும் அப்படி ஓர் நிகழ்வு ஏற்பட்டதாக
உணர்கின்றோம். அதனை அவர்கள் அடைந்த நிலைக்கே நாம் சென்றதாக கற்பனையும் செய்து
கொள்கின்றோம்.
படித்ததினால்
ஏற்படும் அறிதலுக்கும்,
தகவல்களை
பரிமாறிக்கொள்ளும் போது உண்டாகும் தெளிவிற்கும் ,
உயர்நிலை
உணர்ந்தவர்களோடு உண்டான சம்பாஷணையில் ஏதோ புரிந்ததை, நாமே உணர்வுபூர்வமாக கண்டதாக
கற்பனையை வளர்த்துக் கொள்வதற்கும் நிறைய வித்தியாசங்கள் உண்டு .
இதன் காரணமாகவே
பலரும் மேற்கொண்டு தன்னை மேம்படுத்திக் கொள்ள மறந்து விட்டார்கள்.
மேலே உள்ள அத்தனை
கேள்விகளும் கிட்டத்தட்ட ஒரே மாதிரியாக தெரிந்தாலும் , சிலவற்றைத் தவிர மற்ற
கேள்விகள் மிக நுணுக்கம் கொண்டதாகும்.
ESP (Extrasensory Perception) என்பது வேறு , ஆழ்நிலை அறிதல் வேறு.
AkashAkash Document எனப்படும்
ஆகாயபதிவுகளை தெரிந்துகொள்வதும் , புரிந்து கொள்வதும் , படித்துணர்வதும் வேறு .
இந்த மூன்றையும் ஒருவராக உணர்ந்திருப்பபவர்கள்
குறைந்த அளவே இன்று நம்மிடையே உள்ளனர்.
அசீரரியாக ஒலிக்கும் குரலோசையை கூட
புரிந்து கொள்ள , அதில் தனக்கென உள்ளதைப் பிரித்தறிய மிகவும் மேலான ஞான அனுபவம்
தேவைப்படுகிறது. (அனுபவ ஞானம் அல்ல).
ஒரு Game விளையாடும்
போது அந்த (Stage ) பகுதியை முழுவதுமாக முடித்தபின் தான் ,
அடுத்த (Stage)
பகுதி திறக்கப்படுவது போல நமது பயிற்சிகள் நிறைவுறும் நிலையினை
அடையும்போதுதான் நமது மூளையின் ஒரு பகுதியில் ஒருசில
செல்தொகுப்புகள் திறக்கப்படுகின்றன. நாம் மீண்டும் வேறு சில பயிற்சிகளை துவக்கி
முடிக்கும் போது நமது மூளையின் பகுதிகளில் வேறுசில செல்தொகுப்புகள்
திறக்கப்படுகின்றன. இவ்வாறான பல திறப்புகளை நாம் சந்தித்தபின்தான் , மனம் , வாக்கு
, சித்தம் மூன்றும் ஒரே நேர்க்கோட்டில் நிற்கின்றது.
Game ல் நாம் ஒரு Stage முடிக்காதவரை
அடுத்த Stage
வராது
அதுபோலவே
அதுபோலவே
நாம் ஒரு பயிற்சியின் நிலையில் (Stage in Complete) தவறினாலும்
நம்மை நாம் மேலெழுப்பும் நிலை தோல்வியை அடைகிறது. சிலர் அதற்குபின் எந்த
நிலையையும் அடைவதில்லை.
மிக சாதாரணமானவனாக இருந்த ஒருவர் மிக
அசாதாரணமானவராக தன்னுள் மாறுவது இவ்வாறாக நிகழ்கிறது.
ஆனால் ஒருசிலர் எந்த முனைப்பும் இல்லாமலே
தாம் உயர்நிலையை அடைந்து விட்டதாகவே எண்ணிக்கொண்டு விடுகிறார்கள்.
அவர்களை குறை சொல்லவில்லை – அவர்களையும் பயிற்சி
செய்து உங்களுக்குள் மேம்பட்ட நிலையை காணுங்கள் என்கிறேன் .
“மதிப்புக்குரிய மனசாட்சி” அருமையான வாசகங்கள்.
Great Rajeswari Ramasamy.
Great Rajeswari Ramasamy.
உண்மையில் மனசாட்சியை நமது ஆன்மாவின்
குரலாக கொள்ளலாம்.
ஆன்மா நமது மனசாட்சியாகவும் ஒருசில
நேரங்களில் செயலாற்றுகின்றது.
ஆனால் மனசாட்சி நம்மை பலசமயங்களில் கண்டுகொள்வதில்லை , நாமும் மனசாட்சியை கண்டு கொள்வதில்லை.
ஆனால் மனசாட்சி நம்மை பலசமயங்களில் கண்டுகொள்வதில்லை , நாமும் மனசாட்சியை கண்டு கொள்வதில்லை.
மனசாட்சி எனும் பெயரை கவனியுங்கள் , மனம்
எதனைக் கண்டு கொண்டதோ அதற்கு சாட்சி அவ்வளவுதான் . அதற்கு மறைத்து நம்மால் எதுவும்
செய்ய முடியாது . ஆகவே நாம் காணாத , அறியாத ஒன்றுக்கு நம் மனம் எப்படி சாட்சியாக
முடியும் ?
ஆனால் ஆன்மா நம்மை ஒரு கணமும் கவனிக்கத்
தவறியதில்லை .
அது நம்மோடு இருந்து நம்மோடு முடிகிறது .
ஆழ்ந்த உறக்கத்தில் நாம் இருக்கும் போது
நம்முள் இருக்கும் மூளையின் அதிவேக செயல்திறன் விழிப்படைந்து நம்மை சுற்றி உள்ள
அனைத்தையும் கவனிக்கின்றது (இதனை Universel Mind என்போம்)
இதனுடைய செயலாக்கத்திறன் என்பது சுமாராக நாம் இருக்கும் இடத்தில் இருந்து 100 கிலோமீட்டர் சுற்றளவு ஆகும். மனிதர்களில் ஒரு சிலருக்கு இதன் ஆரம் 300 கிலோ மீட்டர் வரை அதிகப்படுவதுண்டு.
இதனுடைய செயலாக்கத்திறன் என்பது சுமாராக நாம் இருக்கும் இடத்தில் இருந்து 100 கிலோமீட்டர் சுற்றளவு ஆகும். மனிதர்களில் ஒரு சிலருக்கு இதன் ஆரம் 300 கிலோ மீட்டர் வரை அதிகப்படுவதுண்டு.
ஞானிகள் , முனிவர்கள் , ரிஷிகள், சித்தர்கள்
போன்றவர்களுக்கு இது எல்லையற்ற நிலையை கொண்டிருக்கிறது விண்ணுலகம் முதல் மண்ணுலகம்
வரை அவர்கள் முழு ஆதிக்கம் செலுத்துகிறார்கள்.
அதனால்தான் உயர்நிலை கண்டவர்களின்
இருப்பிடங்களை இன்னொரு உயர்நிலை கண்டவர் எளிதில் காணவும் , அங்கே செல்லவும்
முடிகிறது.
ESP
ஒரு முன்னறிதல் சக்தியாகும் , கனவின் முன் அல்லது
கனவின் பின் தோன்றும் காட்சியாகும் , நடக்கபோவதை முன்னரே தெரிவிக்கும்.
ஆகவே univarsal (Universal Mind)யும் , ESP யையும் ஒன்றாக்கி குழம்ப வேண்டாம்.
ஆகவே univarsal (Universal Mind)யும் , ESP யையும் ஒன்றாக்கி குழம்ப வேண்டாம்.
DNA
(Deoxyribonucleic acid )என்பது நம்முடைய தலைமுறை தொடர்பானது , இதில் நமது தாத்தாவின் –
தாத்தாவின் தாத்தா பற்றிய விபரங்கள் கிடைக்கும்
ஆனால் உங்களுடைய பூர்வ ஜன்ம விபரங்கள் இல்லை. மேலும் அதில் கிடைக்கும்
விபரங்களை வைத்து நமது முற்பிறவியின் எந்த தகவலும் தெரிந்து கொள்ளமுடியாது.
காரணம் , நமது பரம்பரை என்பதும் , நமது முற்பிறப்பும் ஒன்றல்ல என்பதை விளங்கிக் கொள்ளுங்கள் .
காரணம் , நமது பரம்பரை என்பதும் , நமது முற்பிறப்பும் ஒன்றல்ல என்பதை விளங்கிக் கொள்ளுங்கள் .
ஆன்மாவை அறிவதென்பது சாதாரணமானதல்ல.
யுகங்களை கடந்ததாக உள்ள ஆன்மாவை அறிதல்
யாவராலும் சாத்தியமில்லை , அறிதலுக்குரிய அனுமதி பெற்ற ஜீவனே ஆன்மாவை அறிய
முடியும். மேலும் எல்லோரும் அறிந்து ஆவது
ஒன்றுமில்லை . உணர்ச்சி வசப்பட்டு ஒருநாள், ஒருமணி நேரம் பேசுவார்கள் நான் கண்டேன்
என்று தம்பட்டம் அடித்துக் கொள்வார்கள். அப்புறம் அவர்கள் வேலையில்
மூழ்கிப்போவார்கள் .
அதனால்தான் ஆன்மா பற்றிய செய்திகள் இரகசியமாக்கப்பட்டுள்ளது.
அதனால்தான் ஆன்மா பற்றிய செய்திகள் இரகசியமாக்கப்பட்டுள்ளது.
ஒரு நொடியும் விடாத , இடைவிடாத ,
இறைநினைவில் , இறை சிந்தனையில் , இறையுணர்வில் வாழ வேண்டும்.
தன்னை , தன்நினைவை மறந்து இறையுணர்வில்
மூழ்கவேண்டும்.
இறை , மனித நிந்தனையற்ற , குற்றம் காணாத ,
மேல் கீழ் என பாகுபாடு பார்க்காத சர்வமும் சிவமே எனும் மெய்யுணர்வில் ஒன்றி தன்னை
இயற்கையிடம் ஒப்புவிக்க வேண்டும்.
ஜபம் , தவம் , த்யானம் , யோகம் மூலம் தன்னை
அறிதல் வேண்டும்.
தன்னை முழுக்க அறிந்தவர்கள் , ஞானிகள்,
ரிஷிகள், முனிவர்கள்,சித்தர்கள் ஆவார்கள். இதுவே பிறப்பெடுத்தவர்களுக்கு இறைவனால்
(இயற்கையால்) தரப்படுகின்ற பேரருள் நிலை . (அதற்கு தான் இந்த போராட்டம் )
குறைவின்றி எப்பிறப்பும் இல்லை , ஞானிகள்,
ரிஷிகள், முனிவர்கள், சித்தர்கள் ஆகியோரும் குறைபாடுள்ளவர்களே , அவர்கள் தங்களின்
குறைபாடுகளை கலைந்ததனால் உயர்ந்து அந்நிலையை அடைந்தார்கள் .
(அவர்கள் குறைபாடு என்பது மனிதர்களின் குறைபாடு போல அல்ல ,
குழப்பம் வேண்டாம்)
தன்னை கொஞ்சமும் குறைவின்றி முழுமையாக
அறிந்தவன் – ஆன்மாவை அறியும் ஆற்றலை அடைகிறான்.
ஆன்மாவை அறிந்தவன் – அகிலம் முழுவதும்
செயல்படும் செயலாற்றலை அறிந்தவனாகின்றான் .
ஆன்மாவை அறிந்தபின் அறிந்துகொள்ள
வேறொன்றும் இல்லை.
அதுவே பிரபஞ்ச இரகசியம். அந்த இரகசியத்தை
அறிந்தவன் எவனோ
அவனே யோகிகளின் தலைவன், அவனே ஞானிகளின்
தலைவன், அவனே ரிஷிகளின் தலைவன் , அவனே சித்தர்களின் தலைவன் , அவனே இயற்கை, அவனே
இறைவன்.
வளமோடு வாழுங்கள் வாழும் நாளெல்லாம்.
சிவனருள்
கருணாகரன்.
No comments:
Post a Comment