என்னை தொடர்ந்து

வாருங்கள், நண்பரே வணக்கம். தங்கள் வருகையை பதிவு செய்யுங்களேன் !அன்புடன் கருணாகரன்6,இடைப்பாடி. அன்பர்களே ! முழுக்க முழுக்க தமிழில் திருக்கணித முறையில் ஜாதகம் கணிக்க வேண்டுமா? உங்கள் பெயர், பெற்றோர் பெயர், பிறந்த தேதி, மாதம் வருடம், பிறந்த இடம் போன்ற விபரங்களை தாருங்கள், உங்கள் ஜாதகம் கூரியர் மூலமாக உங்களுக்கு அனுப்பி வைக்கப்படும்.( நள்ளிரவில் இரவு 12.00 மணிக்கு மேல் காலை 7.00 மணிக்குள் பிறந்திருந்தால் விடிந்தால் என்ன கிழமை என குறிப்பிடவும்.K.செந்தில்குமார்,கணேஷ் கம்ப்யூட்டர்ஸ்,34,கடைவீதி, இடைப்பாடி,சேலம் மாவட்டம்-637101.

சித்தர்களோடு

சித்தர்களோடு 

அன்பார்ந்தவர்களே !

இந்த வலையில் நம்மோடு அரூபமாக வாழ்ந்து வரும் சித்தர்களின் வாழ்வின் முறையையும், வாழ்வின் அருநெறியும், நமக்களித்த அருமையும் பெருமையும் நிறைந்த அற்புதமான பாடல்களையும் காணப்போகிறோம்.

இந்த பகுதியில் கணக்கற்ற சித்தர் பெருமக்களின் தகவல்களை தந்துள்ள அன்பு தேவன் (மெயஞானமே தவம் )அவர்களுக்கும், அன்பு தோழி 
( சித்தர்கள் ராச்சியம்) அவர்களுக்கும், அன்பு தம்பி கனி அவர்களுக்கும் அடியேனின் மனமார்ந்த நன்றியை காணிக்கையாக்குகிறேன். கருணாகரன்6.இடைப்பாடி.

முதலில் 

பெருமைமிகு சித்தர்களை காண


இனி சித்தர்களின் அதிசய வாழ்வை காண்போம் : 


அன்பின் உள்ளங்களே உங்கள் அனைவருக்கும் கருணாகரனின் அன்பு வணக்கங்கள்.

உண்மையிலேயே சித்தர்கள் சித்தர்கள் என்கிறார்களே இவர்கள் யார்? 
இவர்கள் உண்டென்றால் இவர்களைக் நாம் காண்பது எப்படி? நமது தமிழில் ஒரு விசேஷம் என்னவென்றால் அது சொல்லிலேயே பொருளைக் கொண்டிருப்பதுதான்.
பாருங்கள் சித்தர், புத்தர், ஞானி இந்த சொல்லிலேயே அவர்களைப் பற்றிய விபரம் உள்ளது. 
ஆம், சித்தம் தெளிந்தவன் சித்தன்.
புத்தி தெளிந்தவன் புத்தன்.
ஞானம் அறிந்தவன் ஞானி 
பாருங்கள் வார்த்தையிலேயே விஷயங்கள் இதுதான் தேன்தமிழின் அற்புதம்.
சித்தம் தெளிந்ததனால் அவர்கள் சித்தரானார்கள், நாம் 
பித்தம் நிறைந்தனால் பித்தர்கள் ஆனோம்.
சித்தம் தெளிந்த அவர்கள் நிலையாமையை உணர்ந்தார்கள். 
அதனால் அவர்களுக்கு உலகின் இயக்கநிலையின் உண்மை புரிந்தது.
இந்த உலகின் ( பிரபஞ்சத்தின் - பூமியின் ) அருமையான ஆற்றல் என்ன தெரியுமா? 
நீங்கள் ஒன்று தந்தால் அதனை நூறாக திரும்பத்தரும், ஒரு மாங்கொட்டை நட்டால் எத்தனை மாம்பழங்கள், ஒரு நெல் வைத்தால் எத்தனை நெல்மணிகள்? இந்த மாபெரும் உண்மையை கண்டறிந்தார்கள் சித்தர்கள்!
இதைப்போலவேதான் புண்ணியங்களும், இதே நிலைதான் பாபங்களுக்கும்.
ஒன்று என்பது ஒன்றுடன் நிற்பதில்லை ஒன்று அதன் தன்மைக்கேற்ப இரண்டாகலாம், நூறாகலாம் ஏன் ஆயிரம் கூட ஆகலாம் என நன்கறிந்தனர் சித்தர்கள்.
ஆகவேதான் அவர்கள் உலக வாழ்வின் அனைத்து துறைகளுக்கும் தீர்வு தந்தார்கள்.
ஏனென்றால் எதிர்வரும் காலங்களில் மனிதன் மன மமதை
கொண்டவனாக, 
தான் தெரியாததையும் தெரிந்தவனாக ஊருக்கு காட்டிக் கொள்பவனாக, 
தான் கண்டதை செல்வம் பண்ணும் வழியில் தேர்ந்தவனாக, 
உண்மையை மறைத்து தனக்கொரு நீதியும், 
மற்றவர்களுக்கு ஒரு நீதியுமாக உலாவருபவனாக
வருவான் என்பதை அறிந்த அந்த சித்புருஷர்கள் தாங்கள் கண்டதையும், 
கொண்டதையும், செய்ததையும், 
செய்வதையுமே 
மறைபொருளாக வைத்துள்ளார்கள்.
மேலும் அவர்களின் பார்வையில் இருந்து எதுமே தப்பாது.
ஆயிரக்கணக்கான சித்புருஷர்கள் வாழ்ந்த, வாழும் உலகில் எங்கும் அவர்கள் நிறைந்துள்ளார்கள்.
சித்புருஷர்களின் ஒரு விசேஷ அருங்குணம் என்னவென்றால் நாம் அவர்களின் வழியை பின்பற்றினால் மிக மகிழ்ச்சியுடன் நமக்கு எல்லாவிதமான நன்மைகளையும் அள்ளித்தருவார்கள் பின் தொடர்வார்கள், நம்மை பாதுகாப்பார்கள்.
ஆனால் நமது நிலையின் சிறு மாற்றம் கூட அவர்களை கோபப்பட வைத்துவிடும், ஒரு முறை நம்மீது கோபம் வந்தால் அதன்பின் என்ன செய்தாலும் அவர்களின் அன்பைப் பெறவே முடியாது.
அதோடு நம் வாழ்வும் அதோகதியாகிவிடும்.
காரணம், அவர்கள் (சித்தர்கள்) உலகில் விதியின் கைகளில் மாட்டித் தவிக்கும் மனிதர்களை எதன் மூலமாகவாவது கரைசேர்க்கவேண்டும் என்ற எண்ணத்தினால் தன்னைக்கரைத்துக் கொண்டவர்கள்.
அதனால்தான் இன்னும் இங்கேயே வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள். அவர்களை நம்பிச் சேர்பவர்களை கரை சேர்க்கிறார்கள். 
அவர்களையே ஏமாற்றுபவர்களை (ஏமாற்றுவதாக எண்ணி ஏமாறுபவர்கள்) அவர்கள் அழிக்கிறார்கள், 
ஆமாம் சித்தர்கள் அழிக்கிறார்கள். அழித்திருக்கிறார்கள்.
ஆனால் அவர்களை நம்பினவர்களை எந்த சூழலிலும் கை விடுவதில்லை
கை விட்டதும் இல்லை. 
கைவிடப்போவதும் இல்லை.
காரணம் அவர்கள் நமக்காக தன்னைக் கரைத்துக்கொண்டவர்கள்.
மருத்துவம், மாந்தரீகம், ஜோதிஷம், வாழ்வியல் அத்தனையிலும் அவர்களின் பங்கு மகத்தானது.
அவர்களைக் காணவும், அவர்களுடன் சேரவும், அவர்களின் அன்பில் திளைக்கவும், அதியற்புதமான நிலைகளை அடையவும் மிக எளிமையான அவர்களின் மூல மந்த்ரம் ஒன்று உண்டு.
இதனை நல்ல தூய்மையான உள்ளத்துடன், 
மற்றவர்களுக்கு (எந்தவிதமான பலனும் எதிர்பாராமல்)
உதவும் மனதுடன் இரவில் அவர்களை நினைத்து நூற்றிஎட்டு முறை மனமுருக தினசரி சொல்லுங்கள் அவர்களின் தரிசனம் நிச்சயமாக கிடைக்கும், ஆனால் உங்களுடைய இந்த சாதனை முழுக்க முழுக்க பிறர் நன்மைக்காக மட்டுமே தான் பயன்படவேண்டும்.

(
அதாவது அவர்கள் உங்கள் மூலமாக உலகமக்களுக்கு நன்மைகள் செய்ய முயல்வார்கள்) 
சித்புருஷர்கள் நமது உள் மனம் புரிந்தவர்கள், 
நிஜத்தில் ஒன்றும், செயலில் ஒன்றுமாக இறங்கி விடவேண்டாம். உன்மத்த நிலைக்கு (பைத்தியநிலை) ஆளாக்கி விடுவார்கள்.
மேலும் பரிசோதிக்க எண்ணி இறங்கவேண்டாம்.
உண்மையில் உலக நன்மைக்காக செயல்பட நினைப்பவர்கள் செய்யலாம். சாதிக்கலாம், பெரும் புகழ் பெறலாம், உங்களுக்கு தெரியாத விஷயமே இருக்காது. சித்புருஷர்களுக்கு தெரிந்ததெல்லாம் உங்களுக்கும் தெரியும்
அந்த மகா மந்த்ரம் 
"ஓம் கிங் ரங் அங் சிங்"
இந்த மந்த்ரத்தை ஒரு சிறு இடைவெளி கூட இல்லாமல் சொல்லி வந்தால் அந்த மகாசித்புருஷர்களை நீங்களும் சந்திப்பீர்கள், சாதிப்பீர்கள், வாழ்க வாழ்க. பல்லாண்டு. 

ஓம் சித்தேஸ்வராய நமஹ.,
 
அன்புடன் கருணாகரன்6.இடைப்பாடி.

இனி ஒவ்வொரு சித்தர்களின் வாழ்வியல் நிலையையும் காண்போம் 

முதலில் கடேந்திர நாதர் எனும் விளையாட்டு சித்தர்-1


கடேந்திர நாதர் எனும் விளையாட்டு சித்தர் பற்றி பார்ப்போமா...

தமிழ் நாட்டைப்போலவே வடநாட்டிலும் சித்தர்கள் இருந்திருக்கிறார்கள். அவர்களை நவநாத சித்தர்கள் என்கிறார்கள். அவர்கள்;
1.சத்திய நாதர், 2.சதோக நாதர், 3.ஆதிநாதர், 4.வெகுளி நாதர், 5.மதங்கநாதர், 6.மச்சேந்திர நாதர், 7.கடேந்திர நாதர், 8.அநாதி நாதர், 9.கோரக்க நாதர். ஆகியோர்.

இவர்களில் கடேந்திர நாதர் வட நாட்டில் இருந்து தமிழகத்திற்கு வந்து இங்கு கோவைக்கு அருகில் இருக்கும் வெள்ளயங்கிரி மலையில் வசித்திருக்கிறார். இங்குள்ள ஐந்தாவது மலையில் இருக்கும் குகை ஒன்றை இவரது குகை என்று சொல்கிறார்கள். இல்லை, இல்லை இவர் புதுச்சேரிக்காரர் என்கிறார்கள் ஒரு சாரர் சரி எதுவாகினும் சரி; எக்காலத்தில் இங்கு வந்தார் என்ற விவரம் தெரியவில்லை. இவரைப்பற்றிய வேறு எந்த தகவலும் கிடைக்கப் பெறவில்லை.

ஞானம் வாய்த்தவருக்கு மொழியறிவு என்ன ஒரு பெரிய விசயமா? தமிழ் இலக்கணம் அறிந்து அதனில் பாடலும் இயற்றிப் பாடியிருக்கிறார். எங்கெங்கிருந்தோ வந்தவர்கள் நம் பெருமை அறிந்தனர், நாமோ நமதருமை தெரியாமல் இருக்கிறோம் இன்னும்... சரி இதோ பாடல்கள் ...

கண்ணிகள்

ஆதிசிவ மானகுரு விளையாட்டை - யான்
அறிந்துரைக்க வல்லவனோ விளையாட்டை
சோதிமய மானசத்தி யென்னாத்தாள் - சுய
சொரூபத் தடங்கிநின்ற விளையாட்டை. 1

பார்தனி லுள்ளவர்க்கு விளையாட்டாய் - ஞானம்
பற்றும்வழி யின்னதெனச் சொன்னதினால்
சீர்பெறுஞ் சித்தர்களு மென்னைவினை - யாட்டுச்
சித்தனென்றே அழைத்தார்க ளிவ்வுலகில். 2

இகபர மிரண்டுக்குஞ் சரியாகும் - இதை
இன்பமுடன் சொல்லுகிறேன் தெம்புடனே
சகலமும் விளையாட்டாய் பிரமமுனி - முன்பு
சாற்றினா ரெந்தனுக்கீ துண்மையுடன். 3

நானென்று சொல்வதும் விளையாட்டே - இந்த
நானிலத் திருப்பதுவும் விளையாட்டே
தானென் றறிவதுவும் விளையாட்டே - பெற்ற
தாயென் றுரைப்பதுவும் விளையாட்டே. 4

தாய்தந்தை கூடுவதும் விளையாட்டே - பூவிற்
தநயனாய் வந்ததுவும் விளையாட்டே
மாயையாய் வளர்ந்ததும் விளையாட்டே - பத்து
வயது தெரிந்ததுவும் விளையாட்டே. 5

பெற்றபிள்ளை என்றதுவும் விளையாட்டே - தந்தை
பேரிட் டழைத்ததுவும் விளையாட்டே
மற்றதை யுணர்வதுவும் விளையாட்டே - இந்த
வையகத் திருப்பதுவும் விளையாட்டே. 6

பெண்டுபிள்ளை யென்பதுவும் விளையாட்டே - எங்கும்
பேரோங்க வாழ்வதும் விளையாட்டே
கண்டுபொருள் தேடுவதும் விளையாட்டே - பணம்
காசுவட்டி போடுவதும் விளையாட்டே. 7

மாடிமனை வீடுவாசல் விளையாட்டே - என்றன்
மனைவிமக்க ளென்பதுவும் விளையாட்டே
தேடிவைத்த பொருளெல்லாம் விளையாட்டே - இச்
செகத்திற் திரிவதுவும் விளையாட்டே. 8

ஆடுமாடு தேடுவதும் விளையாட்டே - சதுர்வே
தாகமநூ லாய்வதுவும் விளையாட்டே
கூடுவிட்டுப் போகுமுயிர் விளையாட்டே - உற்றார்
கூடிமகிழப் பேசுவதும் விளையாட்டே. 9

பிணமா யிருப்பதுவும் விளையாட்டே - அதைப்
பெற்றோர்கண் டழுவதும் விளையாட்டே
குணமாய்க் கழுவியதும் விளையாட்டே - ஈமங்
கொண்டுபோய்ச் சுட்டதுவும் விளையாட்டே. 10

செத்தோர்க் கழுவதுவும் விளையாட்டே - சுடலை
சேரும்வரை அழுவதும் விளையாட்டே
மெத்தஞானம் பேசுவதுவும் விளையாட்டே - குளித்து
வீடுவந்து மறப்பதும் விளையாட்டே.11

வீணாட் கழிவதுவும் விளையாட்டே - சுடலை
சேரும்வரை அழுவதும் விளையாட்டே
மெத்தஞானம் பேசுவதும் விளையாட்டே - குளித்து
வீடுவந்து மறப்பதுவும் விளையாட்டே. 12

கனவுநினை வெண்பதுவும் விளையாட்டே - இக்
காசினியோ ருழல்வதும் விளையாட்டே
நினவாய்ச்சேய் வஞ்சகமும் விளையாட்டே - மிக்க
நிதிநிலம் பெண்ணென்பதும் விளையாட்டே. 13

பெண்ணாசை யென்பதுவும் விளையாட்டே - அவர்
பின்னாற் திரிவதுவும் விளையாட்டே
மண்ணாசை யென்பதுவும் விளையாட்டே - நல்ல
வயல்தோட்டம் புஞ்சையெல்லாம் விளையாட்டே. 14

சீராக வாழ்வதுவும் விளையாட்டே - செம்பொன்
சேகரித்து வைப்பதுவும் விளையாட்டே
நேராய்ப்பொய் சொல்வதுவும் விளையாட்டே - நெஞ்சில்
நினக்காமற் செய்வதுவும் விளையாட்டே. 15


பந்துசன மென்பதெல்லாம் விளையாட்டே - லோகப்
பற்றுடனே வாழ்வதுவும் விளையாட்டே
சொந்தநிதி தேடுவதும் விளையாட்டே - இதைச்
சொற்பனம்போ லெண்ணாததும் விளையாட்டே. 16

வருவேன் இன்னும் இவர் பாடல்களுடன்....

நல்லோர் பதம் போற்றி!

திருவருள் போற்றி ! குருவருள் போற்றி........
தொடரும் விளையாட்டு சித்தரின் - பாகம் 2
கடேந்திர நாதர் எனும் விளையாட்டு சித்தர் _ 2

 

யோகம்வந்து மகிழ்வதும் விளையாட்டே - அதன்
உண்மைதெரி யாததுவும் விளையாட்டே
சாகசஞ் செய்வதுவும் விளையாட்டே - ஒருவர்
தஞ்சமென்று நினைப்பதுவும் விளையாட்டே.17 கோடிபணந் தேடுவதும் விளையாட்டே - அதைக்
குழிவெட்டிப் புதைப்பதுவும் விளையாட்டே
தேடியலைவதும் விளையாட்டே - மனந்
தேறுதலாய் திரிவதும் விளையாட்டே.18 கற்பனையுங் கபடமும் விளையாட்டே - அதைக்
காணாமல் மறைப்பதுவும் விளையாட்டே
சற்பங்க ளாட்டுவதும் விளையாட்டே - ஒரே
சாதனையாய்ப் பேசுவதும் விளையாட்டே.19 நம்பினோருக் காசைசொல்லல் விளையாட்டே - பின்பு
நாட்டாற்றில் போகவிடுதல் விளையாட்டே
கும்பிக் கிறைதேடுதல் விளையாட்டே - கடன்
கொடுத்தாரைக் கெடுத்தலும் விளையாட்டே.20 இச்சையால் மயங்குவதும் விளையாட்டே - அதை
இயல்பாய் மதிப்பதுவும் விளையாட்டே
பிச்சையெடுத் துண்பதுவும் விளையாட்டே - பொல்லாப்
பேய்போ லலைவதுவும் விளையாட்டே.21 முத்தி யறியாததும் விளையாட்டே - மேலாம்
மோட்சங் கருதாததும் விளையாட்டே
பத்திகொள் ளாததுவும் விளையாட்டே - மனம்
பாழிற் செலுத்தினதும் விளையாட்டே.22 கேடு வருவதுவும் விளையாட்டே - எதற்கும்
கெம்பீரம் பேசுவதும் விளையாட்டே
பாடு வருவதுவும் விளையாட்டே - மனப்
பற்றுதலாய் நிற்காததும் விளையாட்டே.23 பாசவினை போக்காததும் விளையாட்டே - பெண்
பாவாயென் றழைப்பதும் விளையாட்டே
நேசமாய்த் தேடுவதுவும் விளையாட்டே - காணாமல்
நிமிடநேர மென்பதுவும் விளையாட்டே.24 நித்திரையிற் சொக்குவதும் விளையாட்டே - அதில்
நினைவுதடு மாறுவதுவும் விளையாட்டே
சித்தியடை யாததுவும் விளையாட்டே - ஞானம்
சிந்தியா திருப்பதுவும் விளையாட்டே.25 சொற்பனமுண் டாவதுவும் விளையாட்டே - மனம்
சொக்கா திருப்பதுவும் விளையாட்டே
விற்பனங்கண் டறிவதும் விளையாட்டே - வந்த
விதமறி யாததுவும் விளையாட்டே.26 பகலிர வென்பதுவும் விளையாட்டே - இகப்
பயனடைந் திருத்தலும் விளையாட்டே
சகவாழ்விற் சிக்குவதும் விளையாட்டே - யோக
சாதன மறியாததும் விளையாட்டே.27 புத்திமா னென்பதுவும் விளையாட்டே - இப்
பூதலத்தோ ரேத்துவதும் விளையாட்டே
வெற்றி யடைவதுவும் விளையாட்டே - நான்
வீரனென்று சொல்வதுவும் விளையாட்டே.28 தவநிலை தோணாததும் விளையாட்டே - ஞான
தத்துவந் தெரியாததும் விளையாட்டே
பவமது போக்காததும் விளையாட்டே - ஏக
பரவௌி காணாததும் விளையாட்டே.29 யோகந் தெரியாததும் விளையாட்டே - அதன்
உண்மைதனைக் காணாததும் விளையாட்டே
பாகம் அறியாததும் விளையாட்டே - இகப்
பற்றுக்காது இருப்பதுவும் விளையாட்டே.30 பெரியோரைக் காணாததும் விளையாட்டே - கண்டு
பேரின்பஞ் சாராததும் விளையாட்டே
தெரியா திருந்ததுவும் விளையாட்டே - சிவ
தேக நிலை பாராததும் விளையாட்டே . 31 அஞ்ஞானமுட் கொண்டதுவும் விளையாட்டே -பே
ரறிவாற் றெரியாததும் விளையாட்டே
மெய்ஞ்ஞானங் காணாததும் விளையாட்டே - இந்த
மேதினியே போதுமெனல் விளையாட்டே . 32 வருவேன் இன்னும் இவர் பாடல்களுடன்....
நல்லோர் பதம் போற்றி!
திருவருள் போற்றி ! குருவருள் போற்றி !!

நன்றி : திருமிகு.தேவன் அவர்கள்,
மெய்ஞானமே தவம்.ப்ளக்ஸ்பாட்.காம்.


பாம்பாட்டி சித்தர் கார்த்திகை மாதம் மிருகசீரிடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்.

பாம்பைப் பிடிப்பது அவற்றின் விஷத்தை சேமித்து விற்பது. இதுவே பாம்பாட்டி சித்தரின் தொழில். இவர் விஷமுறிவு மூலிகைகளைப் பற்றி அறிந்திருந்ததால் அந்த ஊரில் பாம்புக்கடிக்கு சிறந்த வைத்தியராகத் திகழ்ந்தார்.
ஒருநாள் சிலர், மருத மலையின் மீது பெரிய நவரத்ன பாம்பு ஒன்று இருப்பதாகவும், அதன் தலையில் விலையுயர்ந்த மாணிக்கம் இருப்பதாகவும், அதனைப் பிடிப்பவன் திறனுள்ள பெரிய பாக்கியசாலி என்றும் பேசிச் சென்றனர். 

இதனைக் கேள்விப்பட்ட பாம்பாட்டி சித்தர் அதனைப் பிடிக்க விரும்பி காட்டிற்குள் சென்றார். பாம்பைத் தீவிரமாக தேடினார். அப்போது திடீரென பலத்த சிரிப்பொலி கேட்டுத் திரும்பினார். 

அங்கே மிகப் பிரகாசமான ஒளியோடு சட்டைமுனி சித்தர் நின்றார். இங்கு எதைத் தேடுகிறீர்கள்?” என்று வினவினார். அதற்கு பாம்பாட்டி சித்தர் நான் நவரத்ன பாம்பைப் பிடிக்க வந்தேன், அதைக் காணவில்லைஎன்றார்.
இதைக் கேட்ட சட்டைமுனி சிரித்தார். நவரத்ன பாம்பை உனக்குள் நீயே வைத்துக் கொண்டு வெளியே தேடுகின்றாயே! இது பயனற்ற செயல் அல்லவா! மிகுந்த உல்லாசத்தைத் தரக்கூடிய ஓர் பாம்பு எல்லோர் உடலிலும் உண்டு, ஆனால் யாரும் அதை அறிவதில்லை. 

அதனால் வெளியில் திரியும் இந்தப் பாம்பை தேடுவதை விட்டுவிட்டு, இல்லாத பாம்பைத் தேடி ஓடாதேஎன்றார். எல்லாவற்றையும் கேட்டு உண்மையை உணர்ந்த பாம்பாட்டியார் சித்தரின் காலில் விழுந்து வணங்கினார்.
சட்டை முனி சித்தர் கனிவோடு பாம்பாட்டியைப் பார்த்து விளக்கமளிக்கத் தொடங்கினார். அற்புதமான இந்த மனித சரீரத்தினுள் ஆதியிலிருந்தே ஒரு பாம்பு படுத்துக்கொண்டு இருக்கிறது. குண்டலினிஎன்று அதற்கு பெயர். தூங்கிக் கொண்டு இருக்கும் அந்தப் பாம்பு அறிவை சுருக்குகிறது. இதன் நுட்பத்தை அறிவது அரிது. மக்களின் துன்பத்திற்கு மூலாதாரமே இந்த மூலாதாரப் பாம்பின் உறக்கம் தான்.
இறைவனை உணரப் பாடுபடுபவர்களுக்கு சுவாசம் ஒடுங்கும். அப்பொழுது குண்டலினிஎன்ற அந்தப் பாம்பு விழித்து எழும். அதனால் தியானம் சித்திக்கும். இறைவன் நம்முள் வீற்றிருப்பார். மனிதனுள் இறைவனைக் காணும் இரகசியம் இதுவேஎன்று சொல்லி முடித்தார்.
குருதேவா! அரும்பெரும் இரகசியத்தை இன்று உங்களால் அறிந்தேன். மேலான இந்த வழியை விட்டு இனி நான் விலக மாட்டேன்!என்று சொன்ன பாம்பாட்டியார், சித்தரை வணங்கி எழுந்தார். சித்தர் அருள்புரிந்து விட்டு மறைந்தார்.
பாம்பாட்டியார் செய்த தொடர்யோக சாதனையால் குண்டலினி யோகம் கைகூடியது. எல்லாவகை சித்துக்களும் சித்தியானது. இரவு பகலாக பல நாடுகளையும் சுற்றினார். மக்களின் வியாதிகளை மூலிகைகளால் குணமாக்கினார்.
ஒருநாள் வான் வழியே உலா வந்து கொண்டிருந்த போது பாம்பாட்டி சித்தர் அரசனொருவன் இறந்து போய் அவனது உடல் கிடத்தப்பட்டிருப்பதை பார்த்ததும் யோசித்தார். கூடுவிட்டு கூடுபாயும் வித்தையின் வாயிலாக பாம்பாட்டி சித்தர் தன் உடலை மறைவிலிட்டு இறந்து போன அரசனின் உடலில் புகுந்தார்.
அரசன் எழுந்தான். அனைவருக்கும் மகிழ்ச்சி. ஆனால் அரசன் பிழைத்துக் கொண்டாரே தவிர அவர் செய்கைகள் ஏதும் திருப்திகரமாக இல்லை. சித்தன் போல் பிதற்றுகிறார், மாயங்கள் எல்லாம் செய்கிறார் என்ற மக்களின் விமர்சனம் ராணியின் காது படவே விழுந்தது. அவள் மனதில் கவலையோடு சந்தேகமும் எழுந்தது.
அரசனைப் பார்த்து ஐயா! தாங்கள் யார்? எங்கள் அரசரா? அல்லது சித்து வித்தைகள் புரிபவரா?“ என்று கேட்டாள். அதற்கு சித்தர் அரசி! உனக்கு உண்மை புரிய ஆரம்பித்திருக்கிறது. இறந்து போன மன்னனுக்காக அழுது கொண்டிருந்த உங்களின் துன்பத்தினைப் போக்குவதற்காகவே நான் மன்னனது உடலில் புகுந்தேன். என் பெயர் பாம்பாட்டி சித்தன்என்றார்.
உண்மை உணர்ந்த அரசி எங்களுக்குத் தெய்வமாக வந்து உதவி செய்தீர். நாங்கள் என்ன செய்ய வேண்டும்? கடைதேறும் வழியை உபதேசியுங்கள்என்று கைகூப்பி வேண்டினாள்.
அரசரிடமிருந்து பலப்பல தத்துவப் பாடல்கள் உபதேசமாக வெளிவந்தன. அவைகளை கவனமாக எல்லோரும் கேட்டனர். அரசர் உடலிலிருந்து சித்தர் வெளியேரினார். அரசர் உடம்பு கீழே விழுந்தது. சித்தர் உபதேசப்படி ராணி அந்நாட்டை ஆளத்தொடங்கினாள்.
அரசர் உடலில் இருந்து வெளியேறிய பாம்பாட்டிச் சித்தர் தான் பத்திரப்படுத்தி வைத்திருந்த தன் உடலில் புகுந்தார்.
இவர் தவம் செய்த குகை மருதமலையில் இருக்கிறது. இவர் மருதமலையில் சித்தியடைந்ததாகச் சிலரும், துவாரகையில் சித்தியடைந்ததாகச் சிலரும், விருத்தாச்சலத்தில் சிலரும் கூறுகின்றனர். மூன்று இடங்களிலும் இவரது நினைவிடம் உள்ளது.
இவர் செய்த நூல்கள்
பாம்பாட்டிச் சித்தர் பாடல்கள்,
சித்தராரூடம்,
பாம்பாட்டி சித்தர் வைத்திய சாத்திரம் ஆகியன.
மருதமலை சித்தர் தியானச் செய்யுள்
அடவி வாழ் பாம்புகளை ஆட்டுவித்து ! பின்
உடலில் வாழ் பாம்புதனை எழுப்புவித்து
கூடுவிட்டு கூடுபாய்ந்து ஞானமுத்து
கொடுத்தவரே! குவலயத்தின் காவலரே!
ஆதிசேசனின் அருள் கண்டு
ஆதிசிவன் மகன் வரம் கொண்டு
சாதி மத பேதம் இன்றி
காக்கும் சித்தரே காக்க! காக்க!
பாம்பாட்டி சித்தரின் பூசை முறைகள்
தேக சுத்தியுடன் அழகிய சிறுபலகையில் மஞ்சளிட்டு மெழுகி, பக்தியுடன் கோலமிட்டு, அதன்மேல் ஸ்ரீ பாம்பாட்டி சித்தர் சுவாமிகளின் படத்தை வைத்து

அதன்முன் மஞ்சள், குங்குமம் இட்டு அலங்கரிக்கப்பட்ட குத்து விளக்கினை ஏற்றி வைக்க வேண்டும். முதலில் சித்தருக்காக குறிப்பிட்ட தியானச் செய்யுளை கண்மூடி மனமுருக கூறவேண்டும்.
பின்னர் அல்லி, தாமரை, தாழம்பூ, சம்பங்கி ஆகிய மலர்களால் பின்வரும் 16 போற்றிகளைக் கூறி அர்ச்சிக்க வேண்டும்.
பதினாறு போற்றிகள்
1.
ஸ்ரீ நாகாபரணம் உடைய சிவனை வணங்குபவரே போற்றி!

2.
ஆலகால விஷத்திலிருந்து காப்பவரே போற்றி!

3. சர்ப்பரட்சகரே போற்றி!

4. முருகனின் பிரியரே போற்றி!

5. பசும்பாலில் பிரியம் உள்ளவரே போற்றி!

6. மூன்று வர்ணங்கள் கொண்டவரே போற்றி!

7. வாக்கில் சுத்தம் உடையவரே போற்றி!

8. ஸ்ரீ ஆதிசேசனை வணங்குபவரே போற்றி!

9. விஷத்தினை முறிப்பவரே போற்றி!

10. நடுநிசியில் சஞ்சரிப்பவரே போற்றி!

11. ஜந்துக்களின் உருவம் உடையவரே போற்றி!

12. சனீஸ்வர பகவானின் நண்பரே போற்றி!

13. ஓம் வசி பீஜாட்சரத்தில் வசிப்பவரே போற்றி!

14. சிவனுக்கு ஆபரணமாஅக இருப்பவரே போற்றி!

15. நந்திதேவரின் நண்பரே போற்றி!

16. ஸ்ரீ பாற்கடலில் வாசம் செய்யும் பூஜ்ய சித்தர் பாம்பாட்டி சித்தர் சுவாமியே போற்றி! போற்றி!
இவ்வாறு கூறி அர்ச்சித்தபின் மூலமந்திரமான ஓம் வசி ஸ்ரீ பாம்பாட்டி சித்தர் சுவாமியே போற்றி!என்று 108 முறை கூறி, ஜெபிக்க வேண்டும். பின்னர் நிவேதனமாக சர்க்கரை கலக்காத பச்சைப் பாலையும், வாழைப்பழங்களையும் வைக்க வேண்டும். பின் உங்கள் பிரார்த்தனையை மனமுருகக் கூறி வேண்டவும்.
பாம்பாட்டி சித்தர் பூசா பலன்கள்
இவர் நவக்கிரகங்களில் ராகு பகவானை பிரதிபலிப்பவர். இவரை முறைப்படி வழிபட்டால்:

1.
நாகதோசம் அகலும்.

2. மாயை அகன்று மனத்தெளிவு பிறக்கும். நிழல் நிஜமாகவும், நிஜம் நிழாகவும் தோன்றும் நிலை மாறும்.

3. கணவன், மனைவி இடையே உள்ள தாம்பத்திய பிரச்சினைகள் அகலும்.

4. போதைப் பொருட்கள், புகைப்பிடித்தல், குடிப்பழக்கம் போன்ற தீய பழக்கங்கள் அகலும்.

5. வெளிநாட்டில் வேலைவாய்ப்பு, வெளிநாட்டு பிரயாணங்கள் உண்டாகும்.

6. ஜாதகத்தில் ராகுபகவானால் ஏற்படக்கூடிய களத்திர தோசம் நீங்கும். நல்ல இடத்தில் திருமணம் நடக்கும்.

7. ஏற்றுமதி, இறக்குமதி வியாபாரம் ஓங்கும்.

8. வீண்பயம் அகன்று தன்பலம் கூடும்.

9. நரம்பு சம்பந்தமான கோளாறுகள் அகலும்.

இவருக்கு கருப்பு வஸ்திரம் அணிவித்து வழிபடுதல் விசேடம். 

பூசை செய்ய உகந்த நாள் சனிக்கிழமை

அன்புடன் கருணாகரன்6.இடைப்பாடி.3 comments:

sivayogi said...

anbum madamaiyum kalatha padaipu.

இர.கருணாகரன் said...

அன்பு என்பதே மடமை கலந்ததுதானே யோகி அவர்களே,
ஆராய்ந்து பார்த்து, யோசித்து பின்னர் அன்பு கொள்வதல்ல அன்பு, இறையன்பும் அப்படித்தான்.

மேலே கண்ட எதனை தாங்கள் கூறுகிறீர்களோ அடியேன் அறியேன் அன்பை குறித்து நீங்கள் சொன்னதற்கு கூறுகிறேன்,

தங்கள் வரவுக்கும் கருத்துக்கும் நன்றி.

அன்புடன்

mylai homenaath said...

expect more from u, what u have discovered from the universe, just repeating the same like others not enough

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...