எளிய
முறையில் த்யானம்
முக
நூலில் என் பயணம்
அன்பு
நண்பர்களே , வணக்கங்கள்.
பொதுவாகவே
உங்கள் அனைவரையும் உங்களாலேயே மேல்நிலை காணச் செய்ய வேண்டும் எனும் பேராவலில்தான்
இந்த முக நூலில் அடியேன் பயணத்தினை துவக்கினேன்.
ஆனால் இதனை
தொடர்ந்த பலரும் மந்த்ரம் , மாந்தரீகம் கற்கவும் , ஏதேனும் ஒரு துஷ்ட காரியம்
கற்றுக் கொள்ளவும்தான் நினைத்தனரேயன்றி யாரும் த்யானம் யோகம் , தவம் , இறைநிலை , இறைத்தன்மை,
இறையுணர்வு, இறையோடிணைவு பற்றிய சந்தேகமோ கேள்வியோ எழுப்பவில்லை.
அதனை சிந்திக்கவும்
யாரும் தயாரில்லை என்பதும் புரிந்தது.
காரணம் ,
அவரவர்களின் வாழ்வும்
, அவரவர்களின் அன்றாட தேவையும்தான்.
அனைவரும் அன்றாட
வாழ்வின் ஓட்டத்தில் சிக்கி சின்னாபின்னமாகி கொண்டிருப்பதுவுமே காரணம் என
உணர்ந்தேன்.
தீரா கடன் தீர
வழி என்றால் எல்லோரும் அதிகம் விரும்புகின்றனர். வசியம், தனஆகர்ஷணம் எனும்
செய்திகள் இன்னும் வேகமாக விரும்பப்படுகிறது.
இப்படி ஒரு சூழலில்
உள்ள அவர்கள் த்யானம் , தவம் , இறையனுபூதி பற்றி எப்படி சிந்திப்பார்கள் ?. அதோடு
மட்டுமல்ல, அவரவர்களின் ஜாதக அமைவுகளும் முக்ய காரணமாகின்றன .
எல்லோரும்
இந்நிலையை எய்த முடிந்தால் அதற்கேது பெருமை?. இல்லையா ?
ஆனால் யோகா ,
த்யானம் , தவம் , மூச்சுப்பயிற்சி , இறையுணர்வு , இறையோடிணக்கம் என்பது போன்ற
செய்கைகளின் பலன் ஒவ்வொரு மனிதரின் வாழ்வின் பாதையையே வெகுவாக மாற்றியமைத்து
சீராக்கும் வல்லமை கொண்டது என்பதுவும் , இந்த பேருண்மையை எம்பெருமானே அம்பாளிடம் திருவாய் மலர்ந்து அருளியதையும் மறக்கக்கூடாது.
நம்மை
கடைத்தேற்ற நாம் நம்மைக் கொண்டே மாற்றி அமைத்துக்கொள்ளும் வித்தையே இது.
விடியற்காலம் எழுந்து
, உடலை முறுக்கி , மூச்சை நிறுத்தி குண்டலினியை தட்டி எழுப்பி . . . . . . . . . .
. . . . . என்பது போன்ற புரியாத , பயப்படுத்தும் வார்த்தைகளெல்லாம் இல்லாமல் , சாதாரணமாக
வாழும் வாழ்வில் , வாழும் போதே , வாழ்வினை உணரும் , மகோன்னதமான நிலையினை நாம் காண
, உணரக் கூடிய எளிமையான த்யானமுறையை
அனைவருக்கும் அறியத் தர வேண்டும் என ஆவல் கொண்டேன்.
அதன் பயனாக எளிய
முறை த்யானதின் பயிற்சி முறையை இங்கே தருகிறேன்.
த்யானம்
மிக எளிய முறை :
உங்கள் பிறந்த
நட்சத்திரம் , பிறந்த நாள் , பிறந்த கிழமை அல்லது ஒரு வெள்ளிக்கிழமையில் . . .
குளித்து
முடித்து நெற்றியில் நீறணிந்து சிறு விளக்கேற்றி வைத்து ஊதுபத்தி சாம்பிராணி ஏற்றி
வைத்து நீங்கள் த்யானம் செய்ய உத்தேசித்துள்ள அறையில் துர்மணம் இல்லாதவாறு
பார்த்துக்கொள்ளுங்கள்.
நான் த்யானம்
செய்யப்போகிறேன் , எல்லோரும் அமைதியாக இருக்க வேண்டும் என்பது போன்ற
கட்டுப்பாடுகளை யாருக்கும் விதிக்காதீர்கள்.
நாம் இருக்கும்
சூழலில்தான் எதையும் கற்க முற்பட வேண்டும். அமைதியான சுழலில் பழகிக் கொண்டால்
பின்னர் சிறு ஓசையும் நம்மை த்யானம் செய்ய விடாது.
சுமார் 25 % , 30
% சதவீதம் காலி வயிறாக இருக்கட்டும்.
உங்களுக்கு
எப்படி அமர்ந்தால் சௌகரியமோ அப்படி வடக்கு நோக்கி அமர்ந்து கொள்ளுங்கள்.
கூன்
விழுந்தமாதிரி அமராமல் நிமிர்ந்து உட்கார்ந்து கொள்ளுங்கள் , ஆனால் விறைப்பாக
வேண்டாம். கைகளை இடது கையின் உள்ளங்கையின் மேல் வலது கையின் புறங்கை இருக்குமாறு
மடியில் வைத்துக் கொள்ளுங்கள்.
கண்களை மெல்ல
மூடுங்கள் , மூடிய கண்கள் மூடியபடியே இருக்க இரு கண்களின் இடையே உள்ள புருவ
மத்தியை நோக்கி கவனத்தையும் , பார்வையையும் குவித்து செலுத்துங்கள்.
அடுத்து , உங்கள்
மூச்சினை இரண்டு மூக்கு துவாரத்திலும் ஒரே நேரத்தில் உங்களால் முடிந்த மட்டும் மிக
மெதுவாக உள்ளிழுங்கள். ஒருபக்கம் இழுக்க வேண்டாம்.
உள்ளிழுத்த
மூச்சினை நிறுத்தாமல் உடனே இரண்டு மூக்கு துவாரத்திலும் ஒரே நேரத்தில் உங்களால்
முடிந்த மட்டும் மிக மிக மெதுவாக வெளி விடுங்கள். ஒரு பக்கமாக வெளிவிட வேண்டாம்.
இந்த மாதிரி
மூன்று முறைகள் நீண்டதாக, அமைதியாக, மெதுவாக, ஒரே சீராக செய்யுங்கள்.
கவனம் மிக மிக
மெள்ளமாக எவ்விதமான பதட்டமுமின்றி இதனை செய்ய வேண்டும்.
இப்போது உங்கள்
உள்மனமும் ,உங்களின் வெளிஇயக்க உணர்வும் கொஞ்சம் கொஞ்சமாக அமைதிக்குள் செல்லும் .
இப்போது
நீங்கள் த்யானத்திற்கு தயாராகி விட்டீர்கள்.
இப்போது மிக
முக்கியமான தருணம்.
உங்கள் ஒவ்வொரு
அசைவும் உங்களால் கவனிக்கபடுகின்றது. (நீங்கள் அறியாமலேயே)
இந்நிலையில் நீங்கள்
மிக முக்கியமான மூன்று விஷயங்களை கடைபிடிக்க வேண்டும்.
ஒன்று
:
நீங்கள் கண்களை
மூடி அமர்ந்தவுடன் இதுவரை நீங்கள் கண்ட நிறைய காட்சிகள் நிழல்படங்களாக உங்கள் முன்
வரிசையாக தோன்றி கொண்டே இருக்கும் .
அதனை வராமல் தடுக்காதீர்கள்
, தடுக்க முயற்சிக்காதீர்கள் . வர விடுங்கள்.
இரண்டு
:
வருகின்ற
காட்சிகளில் சிந்தனையை செலுத்தி காட்சியின் பின்னே நீங்கள் செல்லாதீர்கள் .
காட்சிகளை ஒரு
வேற்று மனிதனாக வெறுமனே காணுங்கள். அதனைப் பற்றி எந்த சிந்தனையும் செய்யாதீர்கள்.
மூன்று :
சும்மா இருக்க
முடியாமல் நீங்களே ஒன்றை புதிதாக உருவாக்காதீர்கள் .
உதாரணமாக : ஓம்
நமசிவய சொல்லிக்கொண்டிருப்பது அல்லது வேறு மந்த்ரங்கள் சொல்வது போன்றவைகள்.
இந்த நிலையில்
நீங்கள் இருக்கும் போது உங்கள் மூச்சு என்ன செய்கிறது ? எங்கெல்லாம் செல்கிறது ?
என கவனியுங்கள் , வேறொன்றும் செய்ய வேண்டாம்.
இவ்வாறான
நிலையில் இயல்பாக நீங்கள் அமர்ந்து பயிற்சி பெறுவதற்கு குறைந்தது 5 அல்லது 6
வாரங்களாகளாம்.
பொறுமை மிக
அவசியம் . எந்த முதிர்ச்சி நிலையும் உடனே வருவதில்லை.
இந்த நிலையினை
நீங்கள் பெற்றபின் எந்த சூழலிலும் எவ்வளவு இரைச்சல் இருந்தாலும் நீங்கள் த்யானம் மிக
சுலபமாக செய்ய முடியும்.
இதனால் என்ன
பயன் ?
நம்மை சுற்றி
உள்ள அனைத்து இறுக்கங்களும் தாமாகவே தளர்வடையும்.
வாழ்வின்
இயல்பு நமக்கு புரியும். சத்யமான வாழ்வின் சுகம் நிதர்சனமாக புலப்படும்.
இந்த
பேருண்மையை விளங்கிக் கொண்டால் எந்த துக்கமும் இல்லை , எந்த சந்தோஷமுமில்லை எனும்
தெளிவு நமக்குள் ஏற்படும்.
பிற உயிரின்
மேல் அலாதி பாசமும் , நேசமும் உண்டாகும்.
இறையவனின்
ஆற்றல், மகிமை, அன்பு, அருமை, அருகாமை புலனாகும்.
எல்லாவற்றிற்கும்
மேலாக நம்மை நாமே அறிந்து கொள்ள உதவும்.
நம்முள்
அடைபட்டிருக்கும் மன அமைதி , சாந்தம் , ஒழுக்கம் , தூய அன்பு ஆகிய அருங்குணங்கள் தாமாக
வெளித் தோன்றும்.
பின்
குறிப்பு :
இந்த பயிற்சியினை நீங்கள் காலையில் அல்லது
மாலையில் சுமாராக 6.20 மணிக்கு மேல் இரவு 8.00 மணிவரை மட்டுமே செய்ய வேண்டும்.
வாய்ப்பிருந்தால்
காலை , மாலை இரண்டு நேரமும் செய்யலாம்.
அதாவது ஒளி
உலகினை சூழும் நேரம், இருள் உலகினை சூழும் நேரம்.
மதியம்
செய்வதாக இருந்தால் 12.00 மணிக்கு துவங்கி 2.30மணி வரை செய்யலாம்.
ஒவ்வொரு முறை
த்யானப் பயிற்சி முடித்த பின்னும் சுமார் ½ மணி நேரம்
வெறுமனே படுத்திருப்பது மீண்டும் பயிற்சி செய்வதற்கு உதவும்.
உடலுக்கு
எந்தவிதமான உபாதையும் தராது.
ஆகவே சைவ உணவே
மிக சிறந்தது.
அசைவ உணவினை
உண்பவர்கள் மெல்ல சைவ உணவிற்கு மாறுவது நல்லது.
அசைவ உணவினால்
பயிற்சியில் ஈடுபடும் போது உடல் உபாதைகள் குறிப்பாக மூச்சு பிடிப்பு , தசைவலி
போன்றவைகள் ஏற்படும்.
ஆனால் பயம்
வேண்டாம் அதுவே சரியாகிவிடும்.
சைவ உணவில்
இந்த தொல்லைகள் உருவாகாது.
மிக எளிய இந்த
பயிற்சியை யார் வேண்டுமானாலும் செய்யலாம்.
கீழே விரிப்பு
ஏதேனும் (வெண்மையான துணி) விரித்துக் கொள்ளுங்கள்.
கீழே அமர
முடியாதவர்கள் நாற்காலியில் அமர்ந்து கொள்ளுங்கள் , கால்களின் பாதங்களை , இடதுகாலின்
பாதத்தின் மேல் வலதுகால் பாதம் இருக்குமாறு அமருங்கள். நாற்காலியில் அமர்பவர்கள்
கால்களை மடித்து மேலே அமரக்கூடாது.
முதுகினை
வளைக்காமல் நேராக இருக்குமாறு அமருங்கள் .
முன் அனுபவம்
உள்ளவர்கள் சின்முத்திரையை பிரயோகிக்கலாம்.
இது
சம்பந்தமான தங்களின் சந்தேகங்களை மட்டும் (வேறு
கேள்விகள் வேண்டாம்) gurukaruna2006@gmail.com என்கிற
மெயிலுக்கு தொடர்பு கொண்டு கேளுங்கள்.
வளமோடு வாழுங்கள் வாழும் நாளெல்லாம்.
சிவனருள் கருணாகரன்.
No comments:
Post a Comment