என்னை தொடர்ந்து

வாருங்கள், நண்பரே வணக்கம். தங்கள் வருகையை பதிவு செய்யுங்களேன் !அன்புடன் கருணாகரன்6,இடைப்பாடி. அன்பர்களே ! முழுக்க முழுக்க தமிழில் திருக்கணித முறையில் ஜாதகம் கணிக்க வேண்டுமா? உங்கள் பெயர், பெற்றோர் பெயர், பிறந்த தேதி, மாதம் வருடம், பிறந்த இடம் போன்ற விபரங்களை தாருங்கள், உங்கள் ஜாதகம் கூரியர் மூலமாக உங்களுக்கு அனுப்பி வைக்கப்படும்.( நள்ளிரவில் இரவு 12.00 மணிக்கு மேல் காலை 7.00 மணிக்குள் பிறந்திருந்தால் விடிந்தால் என்ன கிழமை என குறிப்பிடவும்.K.செந்தில்குமார்,கணேஷ் கம்ப்யூட்டர்ஸ்,34,கடைவீதி, இடைப்பாடி,சேலம் மாவட்டம்-637101.

Tuesday, January 13, 2015

உயர்நிலை

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்


குமரவேல் வைத்தியநாதன் அவர்களின் மிக அருமையான கேள்வி :
.நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலு புட்பம் சாத்தியே
சுற்றி வந்து முணுமுணுத்துச் சொல்லும் மந்திரம் ஏதடா
நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
சுட்ட சட்டி சட்டுவம் கறிச்சுவை அறியுமோ ?

அய்யா இந்த பாடலின் படி பார்த்தால் நாம் செய்யும் அனைத்தும் வீண் போல் அல்லவா தெரிகிறது இதன் கூற்று படி பார்த்தோமேயானால் கோவிலே தேவையில்லை என்றல்லவா வருகிறது .

ஆனால் இதே சிவவாக்கியர் நிச்சயம் ஈசனை சிலை வடிவில் தொழாமல் இருந்திருக்கமாட்டார் அப்படி இருக்க ஏன் இந்த முரண்பாடு?

விள்க்கௌம்.

அன்புள்ள குமரவேல் வைத்தியநாதன் , வணக்கம் , மிகவும் நல்ல கேள்வியைக் கேட்டிருகின்றீர்கள் , காரணம் ஆன்மீக மார்க்கத்தை அடைந்தவர்களும் இதே கேள்வியை மனதில் கொண்டிருக்கின்றார்கள் என்பதனை அறிந்துள்ளேன் என்பதானால் கூறுகின்றேன்.

நாமும் பெருமானாரான சிவவாக்கியரும் ஒன்றா ? சரி இருக்கட்டும் .

உங்கள் கேள்விக்கு வருவோம்.

மகா பெரியவரான பெருமானார் சிவவாக்கியர் அறியாததா ? அல்லது அவர்களாலேயே அறிய முடியாததை நம்மால் அறிந்து கொள்ளத்தான் கூடுமா ?

அவர்களின் ஒவ்வொரு சொல்லுக்குள்ளும் பல ஆயிரம் அர்த்தங்கள் பொதிந்துள்ளது , ஆனால் நாம் மற்றவர்கள் சொல்லும் எந்த ஒரு சொல்லையும் , விஷயத்தையும் நாம் நமது அறிவினாலேயே தெரிந்து கொள்ள முயல்கின்றோம் , விளங்கிக் கொள்கின்றோம் – காரணம் அதற்குமேல் சிந்திக்க நம்மால் – நாம் கற்ற அறிவால் முடியாததுதான்.

பெருமானார் சிவவாக்கியர் அவர்கள் சொன்னதை அவர் எப்போது சொன்னார் , யாருக்காக சொன்னார் என்பதை பார்க்கவேண்டும் .

நாம் முதல் பக்கத்தையும் இறுதி பக்கத்தையும் ஒரு சேர படித்துவிட்டு எப்படித்தான் இருக்கும் என முடிவெடுக்கின்றோம்.

அவ்வையார் மானிட பிறப்பினை அறிதென்கின்றார் ஓரிடத்தில் , பிறிதோரிடத்தில் பிறவாமை வேண்டும் என்கின்றார்.

ஏன் இந்த மாறுபாடு.

அதனை பதிலாக சொன்னது மகனிடம் (முருகன்) இதைக் வரமாகக் கேட்டது தந்தையிடம் (சிவபெருமான்).

நாம் உடனே அவ்வையார் பிறவாமை கேட்கிறார் அப்பறம் பிறப்பே அரிது என்கிறாரே என்றெண்ணகூடாது.

அது அந்த இடத்திற்கான பதில் , அடுத்தது இந்த இடத்திற்கான வேண்டல்.

இரண்டுமே பேருண்மை.

மனித பிறப்பில்லாமல் வேறு எப்பிறப்பினாலும் தமது வினைகளை மனிதர்கள் தீர்க்கவே முடியாது.

மிக உயர்ந்த நிலையை அடைந்த பின்னும் மனமானது உருவ வழிபாட்டிலேயே இருக்குமானால் அதற்கு உய்யும் நிலையே கிட்டாது போகும்.
அதனாலேயே பெருமானார் சிவவாக்கியர் மிக விளக்கமாக, மனிதர்களுக்கு புரியும் விதமாக,  எளிமையாக அருளிச் செய்த பாடலாகும் .

ஆனால் அதனை மட்டும் படிப்பவர்களுக்கு அது நாத்திகவாதம் போன்று தோன்றும் .

உதாரணமாக :

பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு சிலேட்டு என்பதும் , அ ஆ அட்டையும் இன்றி அமையாதது.

ஆனால் phd செய்பவர் , அ ஆ அட்டையும், சிலேட்டுமே போதும் என்றிருந்தால் அது சரியா ?

அதுபோலவே

பக்தி மார்க்கம் துவங்கும் ஒருவரின் ஆரம்பகால பக்திக்கு , பாடல்களும் , உருவ வழிபாடும் மிக அவசியமான தேவையாகும்.

ஆனால் . . . .

பக்தி நெறியில் நின்று இறைவனின் மிக மேலான அழகையும் , இந்த பிரபஞ்சத்தை அவர் நடத்தும் அற்புதத்தையும் , அவரையும் உணர்ந்த பின்னும், உருவ வழிபாட்டை தொடர்ந்தால் அது நாம் இன்னும் நமது இறைவழிபாட்டின் முழுமையையும் , இறைவனையும் அறிந்ததற்கு அடையாளம் இல்லை.

அதனால்  

அப்படி உயர்நிலை கண்டு கொண்டவர்கள் இன்னும் உருவ வழிபாட்டிலே இருப்பதால் அவர்களையே மகா பெரியவரான சிவவாக்கிய பெருமானார் சாடுகின்றார்.

இதனை மேல்நிலையை அடைந்து , இறைவனை உணர்ந்தவர்களே உணர்வர் .(அறிவர் இல்லை).

ஓம் நமசிவய. 

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...