அதற்குரிய பதில் :
ஓம் நமசிவய.
நமது கண்களின் பார்வைக்கு எட்டாத தூரத்தினை நாம் நீலவண்ணமாக உணர்வதுபோல . . . (உதாரணமாக : வானம் )
எண்ணிக்கையில் அடங்காத வருடங்களை நாம் கல்பகாலம் அல்லது கல்பாந்தகாலம் என்று சொல்கின்றோம்.
உதாரணமாக நாம் அறிந்துள்ள விஷயத்தில் இருந்து பார்ப்போம் :
1. யுகங்கள் நான்கு, கிருத (சத்திய) யுகம், திரேதா யுகம், துவாபர யுகம், கலியுகம்.
2. கலியுகத்தின் கால அளவு நான்கு லட்சத்து முப்பத்திரண்டு ஆயிரம் ஆண்டுகள் (4,32,000). துவாபர யுகம் இக்கால அளவைப் போல் இரண்டு பங்கு (8 64,000), திரேதா யுகம் மூன்று பங்கு (12,96,000), கிருத யுகம் நான்கு பங்கு (17,28,000).
3. நான்கு யுகங்கள் சேர்ந்தது ஒரு சதுர்யுகம். இதன் மொத்த கால அளவு நாற்பத்து மூன்று லட்சத்து இருபது ஆயிரம் ஆண்டுகள் (43,20,000).
ஒரு சதுர்யுகம் என்பது ஒரு மஹா யுகமாகின்றது.
4. 71 சதுர்யுகங்களைக் கொண்டது ஒரு 'மன்வந்திரம்' என்று அழைக்கப் பெறும். மன்வந்திரத்தின் அதிகாரியை 'மனு' என்று புராணங்கள் குறிக்கிறது.
14 மன்வந்தரங்களும் முடிந்தவுடன் ஒரு இடைவேளை இருக்கும்.
ஆக,
பிரமனின் ஒரு பகலில், 71 மகாயுகங்களும். 15 ஸந்தியாகாலங்களும் இருக்கும்.
14 மன்வந்தரங்கள் = 71 x 14 மகாயுகங்கள் = 994 மகாயுகங்கள்.
15 ஸந்தியாகாலங்கள் = 15 x 17,28,000 ஆண்டுகள் = 6 x 43,20,000 ஆண்டுகள் = 6 மஹாயுகங்கள்.
ஆக பிரமனின் ஒரு பகலில் ஆயிரம் மகாயுகங்கள்.
ஒரு மகாயுகம் 43,20,000.என்றால் ஆயிரம் மகாயுகங்கள் ................
ஆகவே அதனை நாம் கல்பகாலம் அல்லது கல்பாந்த காலம் என்று ஒரே சொல்லில் சொல்லி விடுகின்றோம்.
5. 14 மன்வந்திரங்களின் கால அளவு ஒரு 'கல்பம்' . இது 1000 சதுர்யுகங்களைக் கொண்டது. இதுவே பிரம்மாவின் ஒரு பகல் பொழுது.
6. பிரம்மாவின் ஒரு நாள் இரு கல்ப காலம்.( 864 கோடி ஆண்டுகள் ).
முதல் கல்பமான பகல் பொழுதின் முடிவில் பிரளயம் வரும்.
பிரயளத்தில் 14 உலகங்களில் மூன்று (பூலோகம், புவர்லோகம், சுவர்லோகம்) மட்டும் முழுவதுமாய் அழியும்.
7. இப்பிரளயம் பிரமனின் இரவுப் பொழுது முழுவதும் நீடிக்கும் (ஒரு கல்ப காலம்). அதாவது அடுத்த 1000 சதுர்யுகங்களுக்கு படைப்பு இல்லை.
அச்சமயத்தில் ஆன்மாக்கள் உருவமற்று, செயலற்று மாயையாகிய கோளத்தில் கட்டுண்டு இருக்கும்.
8. பிரமனின் இரவுப் பொழுது முடிந்தவுடன் மீண்டும் மூன்று உலகங்களின் படைப்பு துவங்கும்.
இக்கால அளவின் படி, பிரமனின் ஒரு நாள்,வாரமாகி, வாரம் மாதமாகி, மாதம் வருடமாகி, அவ்வருடங்கள் நூறு கடந்தால் பிரமனின் ஆயுள் முடிவுறும்.
தற்பொழுது இருக்கும் பிரம்மாவுக்கு இவ்வகையில் 50 ஆண்டுகள் கடந்து விட்டது.
9. தற்பொழுது நடப்பது 'சுவேத வராக கல்பம்'.
இதன் 14 மன்வந்திரங்களில் இப்பொழுது நடைபெறுவது 7 ஆம் (வைவசுவத) மன்வந்திரம்.
இம்மன்வந்திரத்தின் 71 சதுர்யுகங்களில்
நாம் இருப்பது 28 ஆம் சதுர்யுகத்தில்.
10. தற்பொழுது நடைபெறும் கலியுகத்தில் சுமார் 5100 ஆண்டுகள் கடந்துள்ளது.
இக்கலியுகம் முடிவுற சுமார் 4,27,000 ஆண்டுகள் மீதமுள்ளது.
ஆக கல்பம்காலம் அல்லது கல்பாந்த காலம் என்பது கணக்கிலடங்காதது எனப் பொருள்.
ஓம் நமசிவய.