ஓம் நமசிவய.
அன்பிற்குரியவர்களே,
மந்த்ரங்களை
உச்சரிக்கும் போது இந்த மந்த்ரம் இத்தனை முறைகள் சொல்லவேண்டும் என்று
கணக்கிடாதீர்கள் ,
மேலும்,
ஒருமணி நேரத்தில் இந்த மந்த்ரம் முடிக்கவேண்டும் முடித்தபின் அந்த மந்தரம் சொல்லவேண்டும் என்பது போன்ற கணக்கீடுகளுக்கு உட்படுத்திக் கொள்ளாதீர்கள்.
மந்திர உச்சாடனத்தை (பயிற்சியை) குறிப்பிட்ட நேரத்தில் குறிப்பிட்ட
எண்ணிக்கையில் முடிக்கவேண்டுமே என அவசரப்படாதீர்கள் .
மஹா காயத்ரியின் எண்ணிக்கை 24 ஆகும்.
நீங்கள் சொல்வது (காயத்ரி, மூலமந்திரம், மாலா மந்த்ரம் , த்ரிசதி என ) எந்த மந்திரமாக இருந்தாலும் அதனை
ஸ்ருதி சுத்தமாக, நிதானமாக
, நிறுத்தி
, பொறுமையுடன், மந்த்ரத்தினுள் ஆழ்ந்து , மந்த்ரத்தை அனுபவித்து , பொருள் உணர்ந்து , புல்லரிப்புடன் அதன் தன்மை
மாறாமல் 24 முறைகள் உச்சரித்தால் போதும்.
பிரபஞ்சம் எங்கும் வியாபித்துள்ள மந்த்ரங்கள் உங்களுள் பிரவாகமாக
பாய்ந்து அருள்நிலையைத் தந்து நீங்கள் சொல்லும்
மந்த்ரத்திற்கு பூரண பலன்களைத் தரும்.
ஆனால்,
அவசர கதியில் வேகமான நடையில் மந்த்ரதினை மனப்பாடம் போல
ஒப்பிப்பதால் எத்தனை இலட்சம் சொன்னாலும் எந்த பலனும் ஏற்படாது.
உங்கள் நன்மைக்காக நீங்கள் சொல்லுகின்ற மந்த்ரத்தில் ஏன் பதட்டம், அவசரம்.
பொறுமையாக நிறுத்தி ஆற அமர மந்தரங்களை சொல்லி ஜெயம் பெற
வாழ்த்துக்கள்.
ஓம் நமசிவய.
No comments:
Post a Comment