என்னை தொடர்ந்து

வாருங்கள், நண்பரே வணக்கம். தங்கள் வருகையை பதிவு செய்யுங்களேன் !அன்புடன் கருணாகரன்6,இடைப்பாடி. அன்பர்களே ! முழுக்க முழுக்க தமிழில் திருக்கணித முறையில் ஜாதகம் கணிக்க வேண்டுமா? உங்கள் பெயர், பெற்றோர் பெயர், பிறந்த தேதி, மாதம் வருடம், பிறந்த இடம் போன்ற விபரங்களை தாருங்கள், உங்கள் ஜாதகம் கூரியர் மூலமாக உங்களுக்கு அனுப்பி வைக்கப்படும்.( நள்ளிரவில் இரவு 12.00 மணிக்கு மேல் காலை 7.00 மணிக்குள் பிறந்திருந்தால் விடிந்தால் என்ன கிழமை என குறிப்பிடவும்.K.செந்தில்குமார்,கணேஷ் கம்ப்யூட்டர்ஸ்,34,கடைவீதி, இடைப்பாடி,சேலம் மாவட்டம்-637101.

Monday, November 25, 2013

மந்த்ரமும் மாந்த்ரீகமும் தொடர்ச்சி . . . 5

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்


அன்பு நண்பர்களே, வணக்கம்.
மந்த்ரமும் மாந்த்ரீகமும் தொடர்ச்சி . . . 5

நாம் அறிந்து கொள்ள முற்படும் யோகம் மூலிகை மந்த்ரம் பகுதியில் மூலிகைகளை பயன்படுத்தும் விதம் பற்றிய பாகத்தை காணப் போகின்றோம்.

அதற்கு முன் . . . .

நண்பர்களின் மேலான கவனத்திற்கு . .

இந்த தொடரின் மூலமாக அடியேனிடமுள்ள (?) மூலிகைகளை விற்கவோ , அடியேனுக்கு தெரிந்தவர்களிடமுள்ள மூலிகைகளை விற்கவோ, அடியேனுக்கு தெரிந்தவர்களை அறிமுகப்படுத்தி வியாபாரம் செய்யவோ அல்லது அடியேன் யோகம் கற்று தருவதற்காக சீடர்களை என்னிடம் வரவழைப்பதற்காகவோ முயற்சிப்பதாக தயவு செய்து எண்ண வேண்டாம்.

இந்த கட்டுரையின் உள்நோக்கம் - இந்த தெய்வீக கலையின் அதியற்புத மேன்மைதனை உணரும் அன்பர்கள் இந்த தெய்வீக கலையின்பால் ஈர்க்கப்பட்டு இதனை கற்க முற்பட்டுவார்கள். அதனால் அவர்கள் நல்லதொரு குருவை தேடி அடைவார்கள். இந்த கலையினை உயிரென கற்று தேர்வார்கள் .

அதன்பயனாக அவர்கள் வாழும் ஊர் சிறப்புறும் , ஒரு ஊர் சிறப்புற்றால் , ஒரு நகரம் சிறப்புறும் , ஒரு நகரம் சிறப்புற்றால் , ஒரு மாநிலம் சிறப்புறும் , ஒரு மாநிலம் சிறப்புற்றால் , ஒரு நாடு சிறப்புறும் , ஒரு நாடு  சிறப்புற்றால் படிப்படியாக இந்த உலகமே அற்புத மாற்றம் காணும் என்கிற பேராசையினால் இந்த கலையின் மிக உள்ளார்ந்த சூட்சும ரகசியங்களைத் தவிர்த்து மற்றதை இங்கே பதிவிடுகின்றேன் .

இதுவரை இவ்வளவு விரிவாக யாரும் எழுதவில்லை என்பது
உங்களுக்கே தெரியும் .

காரணம் , அந்த அதி சூட்சும ரகசியங்களை மகாகுருவானவர் தொட்டு உணர்த்துவார், தழுவி உணர்த்துவார், பார்த்து உணர்த்துவார்.

இதனை இராமாயணத்தில் மகா குரு ஸ்ரீ ஸ்ரீ வால்மீகியானவர் ,
ஸ்ரீ ஸ்ரீ ராமர் பெருமான் மூலமாக ,
பார்த்து உணர்த்தியது – சீதைக்கு (நயன தீக்கை),
தொட்டு உணர்த்தியது – அகலிகைக்கு (ஸ்பரிச தீக்கை),
தழுவி உணர்த்தியது – குகனுக்கு (ஆலிங்கன தீக்கை) என மூன்று நிலைகளை உலகிற்கு அருளிச் செய்தார்கள்

அது ஒவ்வொருவர் தேக ஆரோக்கியம் மற்றும் பயிற்சியின் நிலைகளை பொறுத்து அமைகிறது .

இந்த தெய்வீக கலையின் உள்ளார்ந்த சூட்சும நிலைகள் அனைத்தும் ஸ்தூல தேகத்தின் உள் நிலையையே சார்ந்து இருப்பதால், ஸ்தூல தேகத்தினை முழுமையாக ஆராய்ந்தே பயிற்சியின் முதிர்வு வெளிப்படுகிறது .

ஆதலால் பயிற்சியினை மேற்கொள்ளும் மாணாக்கர்கள் ஸ்தூல தேகத்தினை முழுமையான சுத்தத்துடன் பராமரித்தல் மேலதிக அவசியமாகின்றது . எண்ணங்களில் தூய்மையும் , பக்தியும் , சாந்தமும் மிக அவசியம்.

கோபம் , காமம் , போதை வஸ்துகள், எரிச்சலடையும் தன்மை, முன் கோபம் ,
முரட்டு குணம் , எதிர்வாதம் , முரண்வாதம் , காழ்ப்புணர்ச்சியுடன் சமயம் பார்த்து இருத்தல் , உள்ளொன்றும் புறமொன்றுமாக வாழ்தல் , மறைவாக தவறு செய்தல் , பெண்களை பயமுறுத்தி உறவு கொள்ளுதல் , நைசாக பேசி உறவு கொள்ளுதல் , தன்னிடம் மகாசக்தி இருப்பதாக சொல்லி உறவு கொள்ளுதல் , பிற பெண்களுடன் வைத்துக்கொள்ளும் தவறான உறவுகள் போன்ற பழக்க , வழக்க , குணங்களை அறவே கலைந்திடல் வேண்டும்.       ( இதுவரை இருந்தால் ).
இது போன்ற தவறான பழக்கங்களுடன் இந்த தெய்வீக கலையை பயில்வோர் , தீர்க்க முடியாத தோஷங்களோடும் , குலத்திற்கே நாசம் விளைவிக்கும் பிள்ளைகளை பெற்றும், வாழ்வில் ஒவ்வொரு நொடியும் மரணம் வந்தால் போதும் என்று எண்ணும் எண்ணத்துடனே வாழ்வார்கள்.
மேலும் சொப்பனஸ்கலிதம் (உறக்கத்தில் விந்து வெளியேறுதல்) ,
தவறான தனது செய்கைகள் வாயிலாக விந்துவை வெளியேற்றுதல் போன்றவை மாணாக்கனின் உயர்வு நிலையின் எல்லா வழிகளையும் மூடிவிடும்.

பழமொழி : விந்து கெட்டவன் நொந்து கெட்டான் .

காம எண்ணங்களையும் , காம எழுச்சியை தூண்டும் காட்சிகளையும் , காமத்தை தூண்டும் விதமான பேச்சுகளையும் அறவே தவிர்க்கவேண்டும். அது போன்ற எண்ணங்களை பேசி உருவாக்கும் நண்பர்களிடமிருந்து விலகுங்கள்.

இவை கொஞ்சமே , இதனைப் போல இன்னும் பல நுணுக்கமான உள்ளார்ந்த ரகசிய அறிவுறுத்தல்கள் உள்ளது .

இதனை ஒரு குரு உடனிருந்து கற்றுத் தருதல் அவசியம்.
குரு வேண்டும் என்று சொல்வது அதற்குதான்.

மேலும் இது இன்ஸ்டன்ட் காலம், அதைப்போல இன்று துவங்கி நாளை உங்களிடம் மாற்றங்கள் தோன்றாது , மெல்ல மெல்லதான் எல்லாம் மாறும் பொறுமையும் , விடாமுயற்சியும் , தீவிர பயிற்சியும் மிக அவசியம் .

இன்றைய காலச் சூழலில் ஏதோ ஒரு வகையில் சுயமாக பாதிக்கப்பட்டவர்கள், இதனை கற்றுக்கொண்டோ அல்லது இதனை கற்றவர் மூலமாகவோ தனது எதிர்ப்பாளர்களை (விரோதிகளை) அது , மனைவி, மகள், மகன், அப்பா, அம்மா சகோதர , சகோதரி என தனது உற்றார் உறவினருக்கு , நண்பர்களுக்கு அல்லது வேறு நபருக்கு ஏதாவது ஒரு வகையில் துன்புறுத்தல் தர எண்ணுகிறார்கள் என்பது சிலநாட்களாக அடியேனுக்கு வருகின்ற மெயில் மூலமும், கைப்பேசி அழைப்பிலும் தெரிகிறது .

இதன்மூலம் என்னை உங்களுக்கு அறிமுகப்படுத்தி வியாபாரம் செய்ய முயற்சிக்கவில்லை , என்னை நேரில் சந்திப்பதாலோ , தொலைபேசியில் தொடர்பு கொள்வதாலோ எந்த பயனும் இல்லை . எதனையும் அடியேன் யாருக்கும் சொல்லித்தர இயலாது.
வழியை காட்டுகிறேன் பிடித்து கொண்டு முன்னேறுங்கள் , அடியேனையே குருவாக இருந்து எனக்கு மட்டுமாவது சொல்லிக் கொடுங்கள் என்பது போன்ற வாசகங்கள் பேசவேண்டாம் .
இதனை படித்து இதன் தெய்வீக தன்மையை புரிந்து இந்த அதியற்புத தெய்வீக கலையை நன்கு உணர்ந்து இதனை பயிலுங்கள் , உயருங்கள் , நீங்கள் உயரவேண்டும் என்பதே எனது குறிக்கோள்.

ஸ்படிகம் போன்ற தெளிந்த மனமும், தீவிரமான பயிற்சியும் ஒரு தெய்வீக குருவை உங்களிடம் கொண்டு வந்து சேர்க்கும் . குருவே உங்களை தேடி வரும்வரை பயிற்சியில் இருங்கள் .

ஒன்றை தெளிவாக புரிந்து கொள்ளுங்கள் நண்பர்களே,

இந்த தெய்வீக கலையின் அருமையை தெரிந்து , முழுமையாக யோகப்பயிற்சி பெற்றவர்கள் , அதனை உயிர் மூச்சென உணர்ந்தவர்கள் , யாருக்கும் எந்தவிதமான மந்த்ர துஷ்ப்ரயோகமும் செய்ய முன் வரமாட்டார்கள். அப்படி வருபவர்கள் கலையை முழுமையை அறியாதவர்களாகவே இருக்கமுடியும் , அவர்களால் உங்கள் அபிலாஷையை நிறைவேற்ற முடியாது , ஆனால் முடித்து தருவதாக சொல்லிச் சொல்லி உங்களின் பணத்தை வாங்கிக் கொள்வார்கள் . கடைசியாக ஏதாவது ஒரு காரணம் சொல்லி முடியாது என்பார்கள்.
( முக்கியமாக நீங்கள் செய்த ஏதாவது காரியம் ஒன்றை சொல்லி அதுதான் காரணம் என்று கூறுவார்கள், பழியை உங்கள் மேலேயே போட்டு விடுவார்கள் , நீங்களும் செய்ய சொன்ன வேலை தப்பானது என்பதால் இதனை யாரிடமும் சொல்லமாட்டீர்கள், இப்படித்தான் இன்றைய சித்தும் , யோகமும் போகின்றது ) அடியேனிடம் கேட்பவர்களின் எண்ணமும் இப்படித்தான் இருக்கின்றது .

யோகமும், சித்தும், மந்த்ரமும் , மாந்த்ரீகமும் நம் நலனுக்காக இறைவனால் உருவாக்கப்பட்டதேயன்றி பிறருக்கு தொல்லை கொடுக்க அல்ல என்பதனை உணர்ந்து செயல்படுங்கள்.

“ இன்றைய விதைப்பு நாளைய அறுவடை என்பதை
எப்போதும் , எந்த நிலையிலும் மறக்கவேண்டாம்

பணத்திற்காக பிறருக்கு தொல்லை தருபவர்கள் மிக மோசமான மறுபிறவிக்கு இன்றே பதிவு செய்கிறார்கள் என்பதனை மறக்க வேண்டாம். ஆகவே தவறான சிந்தனையை கனவிலும் எண்ண வேண்டாம் . உங்கள் வாழ்வு சிறக்கவே இவ்வளவும் எழுதுகிறேன் , அடுத்த பதிவினில் மூலிகை பற்றிய தொடர்ச்சியை காணலாம் .
அடியேனுக்கு நேரிலும் , மெயிலிலும் , தொலைபேசியிலும் வந்த
விசாரிப்புகளினாலேதான் இந்த பதிவிடவேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.


வளமோடு வாழுங்கள் , வாழும் நாளெல்லாம்.
கருணாகரன். 

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...