அன்பு
நண்பர்களே வணக்கம்.
அன்பு வேண்டும்
என்பதே தலைப்பு .
அன்பு வேண்டும்
என்றால் யாருக்கு? எதனிடம் ?
என்கிற ஒரு
கேள்வி எழுகிறதா ? சரி . இனி தலைப்புக்குள் போகலாம்.
கேள்வி
எழவில்லையானால் மேலே படிக்கவேண்டாம் . ஏனென்றால் ,
நீங்கள்
தெரிந்து கொண்டுள்ளீர்கள் , உங்களுக்கு தெரிய வைக்கவேண்டாம்.
சரி, முதலில்
அன்பு என்பதை தெரிந்துகொள்வோம் .
அன்பு என்பது
என்ன ? இதன் வேறு பெயர்கள் என்ன ?
முதலில்
அன்பின் ஆரம்பத்தை தெரிந்துகொள்ளவேண்டும் ,
அன்பின்
தோற்றம் எதனால் உருவானது ? என்பதில்தான் அதன் வலிமை இருக்கின்றது.
அன்பு உரிமையில்
உண்டானதா? – உரிமை குறைந்தால் குறையும்.
அன்பு
பாசத்தினால் உண்டானதா? – பாசம் மோசமானால் குறையும்
அன்பு
மோகத்தினால் உண்டானதா? – மோகம் தீர்ந்தவுடன் குறையும்
அன்பு
இரக்கத்தினால் உண்டானதா? – எந்த நேரமும் மாறும் தன்மைஉடையது
அன்பு
பரிதாபத்தினால் உண்டானதா? - எந்த நேரமும் மாறும் தன்மைஉடையது
அன்பு
கடமையினால் உண்டானதா? - எதிர்பார்ப்புடன் கூடிய அன்பு - எந்த நேரமும் மாறும்
அன்பு
ஆசையினால் உண்டானதா? – நிராசையானால் மாறிவிடும்
அன்பு
பேராசையினால் உண்டானதா? – கொஞ்சம் நஷ்டம் வந்தாலும் மாறும்
அன்பு நடிப்பாக(போலியாக)
உண்டானதா? – இதனை விளக்கவே வேண்டாம்
அன்பு
வேண்டாவெறுப்பாக
(யாரோ
சொன்னார்கள் என்பதற்காக) உண்டானதா? - இதனை விளக்கவே வேண்டாம்
அன்பு எல்லை
மீறிய அன்பினால் உண்டானதா? – இது பிறருக்கு தீங்கு எண்ணாதது
அன்பு காரணமே
இல்லாமல் உண்டானதா? – இது தாயின் அன்பு இது என்றும் நிலையானது .
அன்பினை ;
பாசம் , நேசம் , ப்ரியம் , காதல் , கருணை , பக்தி, அபிமானம், அபிலாஷை , பிரயாசை என்றெல்லாம்
கூறலாம்.
என்றாலும் கூட
அன்பை அன்பு என்று சொல்லும் போதுதான் அழகு , இதில் ஒரு நெருக்கமும் , நெகிழ்வும் ,
ஆழமும் தெரியும் .
அன்பிற்கு
எதிர்பார்ப்பில்லை , தேவைகள் இல்லை, .
அன்பு
இயற்கையைப் போன்றது , எல்லோருக்கும் பொதுவானது.
அன்பு
சஞ்சலமடையாதது , சந்தேகம் கொள்ளாதது.
அன்பு
இறவாத்தன்மை கொண்டது , எந்நேரமும் ஜீவனுள்ளது .
அன்பு எத்தகைய
மனதினுள்ளும் நுழையும் தன்மை கொண்டது , இதனை பெரியோர் அன்பிற்குண்டோ அடைக்கும்
தாழ் என்கிறார்கள்.
எதிர்பார்ப்பில்லாத
அன்பினையே அன்பு என்கிறோம். நான் அன்பு செய்கிறேன் நீயும் அன்பு செய் என்றாலே அது
வியாபாரம் ஆகின்றது.
நான் அன்பினை
தந்தாலும் என் அயலான் எதிர்ப்பினையே செய்கிறானே ! என்றால் நீங்கள்தான் தண்ணீர்
ஊற்றினீர்கள் என்பதால் , உங்கள் வீட்டு ரோஜாசெடியின் முட்கள் உங்கள் கையில்
குத்தாமல் இல்லையே – அதுபோல் அது அவரின் இயல்பு. அவருக்காக உங்கள் இயல்பினை ஏன்
நீங்கள் மாற்றிக் கொள்ளவேண்டும் . அத்துடன் அது அது அதனுடைய இயல்பில்
இருந்தால்தான் அழகு.
யோசித்து பாருங்கள்
, வெப்பமில்லாத சூரியன் , குளிர்ச்சியற்ற நிலவு, இரவு பகலில்லாத பூமி ஒருநாள் வாழமுடியுமா நம்மால் ?
காரணம் ,
காரமான ஒரு சுவை இருப்பதால்தானே இனிப்பின் சுவையை உணர முடிகிறது.
இதனை பெரியோர்
வெயிலின் கொடுமை நிழலில் தெரியும் என்கிறார்கள்.
உயர்ந்த அன்பு
இறைவனுக்கு நிகரானது ; என்றும் இறையன்பு நிகரற்றது , அதற்கிணையானது ஒன்றுமே இல்லை
, அதனால் அதனை அன்பே சிவம் என்கிறார்கள் பெரியோர்.
ஒருவர் கேட்டு
அன்பினை பரிமாறுதல் கூடாது , அன்பு , தானே சுரக்க வேண்டும் – குழந்தைகள்
கேட்டுக்கொண்டு நாம் அன்பு செய்கிறோமா
இல்லையே , அதுபோல் இதயம் முழுவதுமாக சுரக்கும் அன்பு , எல்லா
துன்பங்களையும் மாற்றவல்லது.
ஒரே
எண்ணத்துடன் முழுமனதாக ஒன்றுகூடி அன்போடு செய்யும் பிரார்த்தனை எவ்வித
தோஷங்களையும் போக்கும் என்பது திண்ணம்.
பாருங்கள் . .
.
குழந்தைகளின்
அன்பில் களங்கம் இருப்பதில்லை , அவர்கள் எல்லோரிடமும் ஒன்றேபோல் அன்பு
செய்கிறார்கள் , ஏழை – பணக்காரன் , படித்தவன் – முட்டாள் , ஞானி – அஞ்ஞானி ,
நல்லவன் – கெட்டவன் , நோயாளி – திடசாலி என்றெல்லாம் அவர்களுக்கில்லை , எல்லோரையும்
மனிதர்களாகவே பார்க்கும் பெரும் பண்பு அவர்களிடம் உண்டு. அதனால்தான் குழந்தையும்
தெய்வமும் ஒன்று என்றார்கள் பெரியோர்.
உங்கள் அன்பினை
சோதியுங்கள் , உங்கள் அன்பு எத்தகையது ?
பாரபட்சமற்ற
அன்பினை எல்லா உயிரினங்களுக்கும் அள்ளி வழங்குங்கள்.
உயிர் கொன்று
உயிர் வளர்க்கும் நிலையில் இருந்து மீளுங்கள்.
பிறப்பென்பது
ஒரு சுழற்சி முறையாகும் , ஆகவே, நமது உறவுகளே , மீண்டும் பிறந்து நாம் உண்ணும்
உயிரினமாக வருவதற்கு வாய்ப்புண்டு, அதனை நாம் விரும்பி உண்பதற்கும் வாய்ப்புண்டு.
புனரபி மரணம்,
புனரபி ஜனனம் என்றார் பெரியோர்.
அன்பு , அன்பு
, அன்பு அஃதொன்றே அனைத்தியக்கத்திற்கும் மூலதனமாகும்.
அன்பினை
தாராளமாக விதையுங்கள் , அன்பெனும் பயிர் செழித்தோங்கினால் உலகில் தீவிரவாதம், தானே
ஒழியும்.
அன்பிலார்
கண்டும் அன்பு செய் – அஃதொன்றே
பண்பினில்
எல்லாம் தலை. எனது குறள்
அன்புடன்
கருணாகரன் .
No comments:
Post a Comment