என்னை தொடர்ந்து

வாருங்கள், நண்பரே வணக்கம். தங்கள் வருகையை பதிவு செய்யுங்களேன் !அன்புடன் கருணாகரன்6,இடைப்பாடி. அன்பர்களே ! முழுக்க முழுக்க தமிழில் திருக்கணித முறையில் ஜாதகம் கணிக்க வேண்டுமா? உங்கள் பெயர், பெற்றோர் பெயர், பிறந்த தேதி, மாதம் வருடம், பிறந்த இடம் போன்ற விபரங்களை தாருங்கள், உங்கள் ஜாதகம் கூரியர் மூலமாக உங்களுக்கு அனுப்பி வைக்கப்படும்.( நள்ளிரவில் இரவு 12.00 மணிக்கு மேல் காலை 7.00 மணிக்குள் பிறந்திருந்தால் விடிந்தால் என்ன கிழமை என குறிப்பிடவும்.K.செந்தில்குமார்,கணேஷ் கம்ப்யூட்டர்ஸ்,34,கடைவீதி, இடைப்பாடி,சேலம் மாவட்டம்-637101.

Thursday, September 12, 2013

சின்னத் தவறுதான் . . .

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்
அன்பு நண்பர்களே , வணக்கம்.
சின்னத் தவறு எனும் ஒரு செயல்பாட்டு குறியீட்டினை பார்ப்போம் .

நாம் செய்யும் செயல் நமக்கோ , பிறருக்கோ பாதிப்பினை தருமேயானால் அதனை தவறு , தப்பு என்று சொல்கிறோம்.

அப்படி நேர்கின்ற பாதிப்பானது குறைவான பாதிப்பினை தருமேயானால் அதனை சிறு தவறு என்றும் , பெரிய அளவினில் பாதிப்பினை ஏற்படுத்து மானால் அதனை பெரிய தவறு என்றும் சொல்லப்படும்.
உதாரணமாக :
நமது செயல் அல்லது பொதுவாக ஒருவரது செயல், அவருக்கோ, மற்றவருக்கோ மனச் சங்கடத்தை தந்து மன உளைச்சலைத் தருமானாலும் , பெரும் பாதிப்பை ஏற்படுத்தாத வகையில் பொருட்சேதத்தையும் தருமானால் அது சிறிய தவறு எனக் கொள்ளப்படுகின்றது.
நமது செயல் அல்லது பொதுவாக ஒருவரது செயல், அவருக்கோ , மற்றவருக்கோ பெருமளவு மன உளைச்சலுடன், பெருமளவு பொருள் , தொழில் என எல்லாவகையிலும் சேதம்  ஏற்படுமானால் அதனை பெரும் தவறு என்றும் சொல்கின்றோம்.
முன்னோர்கள், ஒருவரால் மற்றவருக்கு ஏற்படும் பாதிப்பு சிறிதாக இருக்குமானால் அதனை தவறு என்றும் , ஒருவரால் மற்றவருக்கு ஏற்படும் பாதிப்பு பெரிதாக இருக்குமானால் அதனை தப்பு என்றும் வகைப் படுத்தினார்கள்.

அதாவது ஒருவர், மற்றவருக்கு தன்னால் ஏற்படப்போகும் விளைவின் பாதிப்பினை உணராமல் இருந்திருப்பாரேயானால் அது தவறு (தவறென அறியாமல் செய்தது) என்றும்,
ஒருவர் , மற்றவரை தனது செயல் கடுமையான பாதிப்புக்கு உள்ளாக்கும் என நன்கு அறிந்தே செய்தாரென்றால் அது தப்பு என்றும் சொல்லி வைத்தார்கள்.
மேலும் நமது முன்னோர்கள், தவறு செய்தவர்கள் தண்டிக்கப்பட வேண்டியவர்கள் அல்ல மன்னிக்கப்பட வேண்டியவர்கள், ஆகவே அவர்கள் திருந்துவதற்கு வாய்ப்பினை தர வேண்டும் எனவும்,

தப்பு எனத் தெரிந்தே செய்தவர்களுக்கு மன்னிப்பளிக்க கூடாது, அவர்கள் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டியவர்கள் , அவர்கள் செய்த தப்பை எண்ணி எண்ணி வருந்த வேண்டும் , ஆகவே அவர்களுக்கு கண்டிப்பாக தண்டனை தர வேண்டும் எனவும் தீர்ப்பினை வகுத்தார்கள்.
இதனால் அன்றைய மனிதர்கள் தவறு செய்து மன்னிக்கபடுவதோ, தப்பினை செய்து தண்டனை பெறுவதையோ அவமானமாக கருதினார்கள்.
பின்னாளில் தனது சந்ததிகளைக் கூட யாரும் தன்னைக் காரணம் காட்டி பழிச்சொல்லை சொல்லி விடக் கூடாது என்பதில் மிக கவனமாக இருந்தார்கள்.
உதாரணமாக :
இன்றுவரை புகழ் பெற்ற கட்டபொம்மனைப் புகழும் போதெல்லாம் அவரைக் காட்டிக்கொடுத்த எட்டப்பனை இழித்துப் பேசி வருகின்றோம்.
வாழ் நாளில் எட்டப்பன் செய்த ஒரே தப்பு மாமன்னன் கட்டபொம்மனை ஆங்கிலேயரிடம் காட்டிக் கொடுத்தது தான் .
ஆனால், குறுநில மன்னனான எட்டப்பனின் நாட்டில் எட்டப்பனின் பெயரில் எட்டு என்று வருவதால் ஒன்றிரண்டு எண்ணும்போது எட்டு என்று சொல்லாமல் மன்னன் அதாவது ராஜா என்று சொல்வார்களாம், பதினெட்டு என்று சொல்லாமல் பத்து ராஜா என்பார்களாம், அவ்வளவு உயர்ந்த மனிதன் .
இயேசு பிரானின் புகழை பேசும் போதெல்லாம் அவரைக் காட்டிக்கொடுத்த சீடன் யூதாஸ் இன்றளவும் கிருத்துவ மக்களால் சபிக்கப்பட்டு கொண்டிருக்கின்றான் . வாழ்நாளில் அவன் செய்த முதலும் கடைசியுமான தப்பு அது ஒன்றுதான்.
நமது முன்னோர்கள் , இதனைபோல தமது குலமோ , குடும்பமோ இழிவாக பேசப்பட்டு விடக்கூடாது என்பதில் ஜாக்கிரதை உணர்வு மிகுதியாகக் கொண்டிருந்தார்கள்.   
அன்றைய மனிதர்களின் போக்கிலும் , இன்றைய மனிதர்களின் போக்கிலும் பெருமளவு மாற்றம் காணப்படுகிறது.
தற்கால நிகழ்வுகளில் சிறு தவறுக்கான மன்னிப்பினை பெற்ற மனிதன் , சிறு தவறினை செய்த தன்னுடைய முன்அனுபவத்தின் மூலமாக பெரும் தவறு ஒன்றிற்கு தன்னை தயார் செய்து கொள்கிறான்.
காரணம் தவறுகள் சிறியதாக இருக்கும் போது மன்னித்து விடுவதால்-
தவறு செய்த மனிதனுக்கு, தவறினால் ஏற்படும் விளைவினால், மற்றவர்கள் படும் துயரமோ , துன்பமோ அறியாத காரணத்தினால்,
தவறுகள் செய்தவரை அது மேலும் பல தவறுகள் செய்திட தூண்டுதலாக அமைந்து விடுகின்றது.
இந்த முறையினால் தவறு செய்பவர்களின் எண்ணிக்கை கூடிக்கொண்டே போக வழியாகின்றது. இதனால் உலகில் அதிகமாக தவறிழைப்போரின் எண்ணிக்கைகள் நாளுக்குநாள் அதிகரித்துக் கொண்டே போகின்றது. இதன்படி ஒருநாள் உலகின் மக்கள் தொகைக்கு சரியாக தவறிழைப்போர் எண்ணிக்கையும் கூடும் .
அதாவது தவறிழைப் போரால் , தன்மேல் திணிக்கப்படும் பாதிப்பினை தாங்கித் தாங்கி நொந்துபோன நல்ல மனிதனும் , பொறுமை தனை இழந்து தானும் தவறுகள் செய்ய துணிந்து விடுவான்.
வசதி இல்லாமல் , வாழ்வின் வழியறியாமல் , வேறுவழியின்றி தவறிழைப் போர்களின் எண்ணிக்கையைவிட , எல்லாவிதமான வசதி வாய்ப்புகளோடு, இராஜ போகத்தோடு , அதிகாரமான பதவியில் இருப்பவர்கள் செய்யும் தவறுகளின் பாதிப்புகள்தான் அதிகமாகிப் போனது.
காரணம் , தன்மீது யாரும் பழி சுமத்தவோ , தண்டிக்கவோ முடியாது எனும் எண்ணமே ஒரு மனிதனை மென்மேலும் தவறுகள் செய்ய தூண்டுகிறது.
இந்த நிலை மனிதர்களின் மத்தியில் மட்டுமல்ல, ஒவ்வொரு நாட்டுக்கு இடையிலும் காணப்படுகின்றது , உயர்நிலையில் உள்ள நாடுகள் , தாழ்நிலை நாடுகளை மேல் தனது ஆதிக்கத்தினை செலுத்துகின்றன.
இன்றைய சூழலில் உலகில் இதுபோன்ற நிகழ்வு சர்வ சாதாரணமாகிப் போனது
பாதிக்கப்பட்ட மனிதரின் நிலையை , வேறு ஒரு மனிதரால் உணர முடியாது.
அது பாதிப்புக்குள்ளான மனிதரால் மட்டுமே உணரத்தக்கதாகும்.
அதனால்தான் அதை பற்றி மற்றவர் சிந்தித்து அபிப்ராயம் சொல்வதோ , தண்டிக்கவேண்டிய தண்டனை குறித்தோ பேசும்போது அது பாதிப்புக்கு உள்ளான மனிதருக்கு திருப்தியளிப்பதில்லை .
பாதிப்புக்குள்ளான ஒரு மனிதரின் நிலையை , தீர்ப்பு சொல்பவர் தானே ஒருநாள் அடையும் போது அவரது பேச்சும் , தண்டனை குறித்த பார்வையும் நிச்சயமாக அப்போது மாறுபடுகிறது. காரணம் , தனக்கு ஒரு நீதியும் , மற்றவருக்கு ஒரு நீதியுமாக செயல்பாடு உண்டாகி விடுகிறது .
இதுதான் தப்பின் ஆரம்ப நிலை .
இப்படியான தவறான நீதி வழங்கப்படுவதால்தான் தவறுகளின் தொடக்கத்தினை தவிர்க்க முடிவதில்லை , ஒவ்வொருவரும் தனக்கென பாதிப்புகள் வரும்போதெல்லாம் மாற்றப்பட்டுவரும் தவறான நீதியானது இன்று மெகா மாற்றத்துடன் தவறு செய்வதே சரியான செயல் என்றாகி விட்டது.
சின்ன வயதினில் ஆரம்பித்த சின்னச் சின்ன விதிமீறல்கள் இன்று மாற்றம் காண முடியாததாகி அதுவே முடிவும் ஆனது . பள்ளிக்கு செல்வதிலிருந்து துவங்கிய விதிமீறல், போக்குவரத்து , வேலை செய்தல், குடும்பம் என அனைத்து வகையிலும் ஏதோ ஒரு வகையில் மனிதர்களை விதிகளை மீறவைத்து ஆட்சி செய்கிறது.   
விதிகளை மீறவே மனித மனம் பெரிதும் விரும்புவதால் தப்பினைச் செய்வது தவிர்க்க முடியாததாகிப் போனது. இப்படியாக .,
இந்த எண்ணம் சிறிது சிறிதாக பெருகி இன்று, சின்னதப்பு , பெரிய தப்பு எல்லாம் ஒரே தப்பாகி அது பெரிய விஷயமில்லை எங்கும் நடப்பதுதான் , பாதிக்கப்பட்ட மனிதன் பொறுத்துத்தான் போகவேண்டும் வேறு வழியில்லை என்று ஒருசாரார் சொல்வதையே சட்டமாக்கி விடும் அபாயத்தை நோக்கி நமது வாழ்க்கைப் பயணம் தடுமாற்றமின்றி ஜோராக செல்வதை காண முடிகிறது.
மனிதர்களின் நெடுநாள் மன வக்கிரம் இன்றைய செயல்பாடாகி உள்ளதைத்தான் இந்த நிலை காட்டுகிறது.
மற்றவர்களின் வாய்ப்பை எதையேனும் தந்தாவது தனதாக்கிக் கொள்ளும் மனோபாவம் விஸ்வரூபம் எடுத்தாடுவதை எல்லோரும் காண்கிறோம் .
ஒளிவு மறைவின்றி பிறர் உரிமையை தனதாக்கும் காட்சிகள் நீக்கமற நிறைந்து எங்கும் காண முடிகின்றது.
யாருக்கும் இதில் வெட்கம் இல்லை , அவமானம் இல்லை, அசிங்கம் இல்லை, கேவலம் இல்லை.
இது ஒருவகையான சாமர்த்தியமாக கருதப்படுகின்றது , இதனை புத்திசாலித்தனமாக எண்ணும் பாவனை நம்முள் வ்ருக்ஷமாக வேரூன்றி வளர்ந்து விட்டது.
“அவன்ல்லாம் புத்தியா பொழைக்கிறான் பார் , நீயும் இருக்கியே என்று நல்லவனையும் கெடவைக்கும் தீய செயலுக்கான முயற்சி எங்கும் ஜோராக நடந்தேறி வருகின்றது. சொந்த வீட்டிலேயே இதற்கு தனிப் பயற்சியும் தருகின்றார்கள் .  
“இந்த வேலையை தேர்ந்தெடுத்தா நல்ல காசு என்று சேவையை விட பணத்தினை குறிவைக்கும் நோக்கிலேயே அரசு வேலையைத் தேடும் படலம் இனிதே துவங்குகிறது.
பணம் சம்பாதிப்பதைவிட நல்லவனாக இருக்க நினைப்பவர்கள், பிழைக்கத் தெரியாதவர்களாகவும், யாரையும் வாழ விடாதவர்களாகவும் , கொஞ்சம் முட்டாளாகவும் மற்றவர்களின் பார்வையினால் முத்திரை குத்தப்படுவதை தவிர்க்க முடியவில்லை.
அடிப்படையில் சின்ன தவறுக்கான மன்னிப்புதான் இதன் மூல காரணம்.

காரணம் , முதல் தவறிலேயே கடுமையான தண்டனையை தந்திருந்தால் இன்றைய மெகா பாதிப்பிலிருந்து உலகம் தப்பித்திருக்கும்.
ஆனால் துரதிர்ஷ்டவசமாக மனிதர்களின் சுயநலம் மிக்க ஆரம்பகால மன்னிப்புகள்தான் இன்றைய உலகின் மோசமான அழிவு நிலைக்கு காரணமாகி விட்டது.
தவறு, சின்னதோ , பெரிதோ தண்டனை கடுமையாகாத வரையில் மனிதர்களுக்கு பயம் வராது. மனிதர்களுக்கு பயம் வராத வரையில் தவறோ, தப்போ குறையாது , தவறோ, தப்போ குறையாத வரையில் உலகம் பாய்ந்து செல்லும் அழிவின் வேகத்தை தடுக்க யாராலும் முடியாது.
ஆரம்பம் . . . . . சின்னத் தவறுதான் . . . . . . .

வாழுங்கள் வளமோடு , வாழும் நாளெல்லாம்.
அன்புடன் கருணாகரன்                 


No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...