என்னை தொடர்ந்து

வாருங்கள், நண்பரே வணக்கம். தங்கள் வருகையை பதிவு செய்யுங்களேன் !அன்புடன் கருணாகரன்6,இடைப்பாடி. அன்பர்களே ! முழுக்க முழுக்க தமிழில் திருக்கணித முறையில் ஜாதகம் கணிக்க வேண்டுமா? உங்கள் பெயர், பெற்றோர் பெயர், பிறந்த தேதி, மாதம் வருடம், பிறந்த இடம் போன்ற விபரங்களை தாருங்கள், உங்கள் ஜாதகம் கூரியர் மூலமாக உங்களுக்கு அனுப்பி வைக்கப்படும்.( நள்ளிரவில் இரவு 12.00 மணிக்கு மேல் காலை 7.00 மணிக்குள் பிறந்திருந்தால் விடிந்தால் என்ன கிழமை என குறிப்பிடவும்.K.செந்தில்குமார்,கணேஷ் கம்ப்யூட்டர்ஸ்,34,கடைவீதி, இடைப்பாடி,சேலம் மாவட்டம்-637101.

Sunday, September 22, 2013

பேசுங்கள் நிறைய பேசுங்கள்

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்

அன்பு நண்பர்களே வணக்கம்.
பேசுங்கள் , நிறைய பேசுங்கள் என்கிற கருத்தினில் ஓர் ஆய்வு .

நிறைய பேசுவதனால் என்ன நடைபெறுகிறது ?.

பேசப்படும் செய்தியைப் பொறுத்துதான் மாற்றங்கள் உண்டாகும்.
பரிமாறப்படும் விஷயங்கள் என்று பார்க்கும் போது நிறைய உதாரணங்களை சொல்லலாம்.

சில விஷயங்களை மட்டும் பார்ப்போம் .

ஒருவரை ஒருவர் புரிந்துகொள்ள பேசுதல் முக்கியமான காரணமாகின்றது .

ஒருவரைப் புரிந்து கொள்ளாமலேயே அவரோடு ஒரு பகைமை உணர்வோடு பேசாமல் இருப்போம் , அவ்வாறான வேளைதனில் பேசுவது ஒருவர் மேல் மற்றவர் புரிதலுடன் , அன்பு கொள்ளும் வாய்ப்பினையும் தருகின்றது.

மேலும் ஒருவர் பேசும்போதுதான் மனம் அமைதியையும் , தெளிவையும் , மற்றவர்களிடமிருந்து பலவிதமான புதிய அறிதலையும் பெற முடிகிறது.

பேசாதவரையில் நமக்குள்ளேயே நாம் மடங்கித்தான் இருப்போம் , நமது எண்ணங்களும் , செயல்களும் , புத்தியும் , ஞானமும் விசாலமாக வேண்டுமானால் பேச வேண்டியது கட்டாயமாகின்றது .
 
குறிப்பாக மனம் வெதும்பிய நிலையில், குழம்பிய மனநிலையில்  உள்ளவர் தன் நிலையை , தனது நண்பர்களோடு பகிர்ந்து பேசும்போது அவரது மனம் அமைதியையும் , சாந்தமும் பெறமுடியும் .
ஒருவரது மனம் வேதனையில் வாடும்போது பேசப்படுகின்ற பேச்சானது அவரது வேதனையை தீர்த்து ஓரளவு சமாதானம் பெற வழி செய்கிறது .

குடும்ப கோர்ட்டுகளில் பிரிவினை கேட்கும் தம்பதிகள் இருவரையும் பேசச் செய்து மனமாற்றம் ஏற்பட செய்கிறார்கள், இதனால் பிரிந்துவிட எண்ணியவர்கள் தங்களை , தங்கள் நிலையை உணர்ந்து மீண்டும் இணைந்து வாழ்வதுண்டு , வாழ்கிறார்கள் .

தன்னை மாய்த்துக் கொள்ள எண்ணியவர்கள் கூட தனது நண்பர்களிடம் தனது சூழ்நிலையை பகிர்ந்து பேசி அவர்களின் ஆறுதலான வார்த்தையினை கேட்டு தனது உயிரை விட்டுவிடும் முடிவினை மாற்றிக் கொண்டதுண்டு.

ஆனால் பேசாமல் தன்னுள்ளேயே மனம் குமுறிக் கொண்டிருந்தால் நமது மனம் நம்மை சுய பச்சாதாபத்தில் தள்ளி “ யாருக்கும் தீங்கெண்ணாத எனக்கேன் துன்பம் தொடர்கதையானது ? எனக்கு மட்டும் ஏன் இப்படி நடக்கின்றது ? எல்லோருக்கும் நல்லது நினைக்கும் எனக்கா இந்த நிலை ? அப்படி இப்படி என்று மனம் நம்மை குழப்போ குழப்பென்று குழப்பி , நம்மை ஒரு வழியாக்கி விடும் .

சமாதானப் பேச்சானாலும் , அன்பினை பகிர்ந்து கொள்ளும் பேச்சானாலும் அதனை மனம் திறந்து பேசியே அடைய முடியும் .

இருவர் கடுமையாக பேசி சண்டையிடும் போது மூன்றாமவர் குறுக்கிட்டு நிலையைப் பேசி பகிரும் போது அங்கே நிச்சயம் சாந்தமும் சமாதானமும் பிறக்கின்றது.

உண்மையிலேயே மனம் விட்டு பேசும்போது பலவிஷயங்கள் தெளிவாகும் வாய்ப்பு உண்டாகின்றது .

நம்மை வெல்ல வேறு யாரும் தேவையில்லை , நமது மனமே நம்மை வென்று விடுகின்றது .

வாழ்வியலில் துன்பமும் இன்பமும் கலந்தே இருக்கின்றது. 

இன்பத்தை முழு மனதோடு பிரியத்தோடு ஏற்று அனுபவிக்கும் நாம், துன்பத்தினை மனமின்றி ஏற்றுக்கொள்வதால் அது மிகவும் சிரமமான, நீண்டகால வேதனையாக தெரிகின்றது .

உதாரணமாக :

நமது வீட்டில் இருந்து கொஞ்சம் தொலைவில் உள்ள ஒரு ஊருக்கு ஒரு வாகனத்தில் செல்வதாக வைத்துக் கொள்வோம் . செல்லும்போது ஒரு மணி நேரமாக இருந்த பயணம் திரும்பி வரும்போது குறைகின்றது , இதன் காரணம், நாம் போகும் போது இந்த பயணம் ஒரு கடமையாகவும் , திரும்பி வரும் போது இதே பயணம் வீடு நோக்கி வரும் ஆவலோடும் இருப்பதுதான்.

மனம் ஒரு செயலை பிரியமாக செய்யும் போது அந்த காரியம் இலகுவானதாகவும், அதே காரியத்தை பிரியமின்றி செய்யும் போது கடினமானதாகவும் உணர்கின்றது.

அடிப்படையில் . . . .

நாம் பெரும்பாலும் மற்றவர்கள் நம்மை உதாசீனப்படுத்துகிறார்கள் என்றெண்ணியே மன உளைச்சலுக்கு ஆளாகின்றோம். அதனால் துன்பம் என்பதே நமக்கு மட்டும் வருவதாக எண்ணுகிறோம்.

எவ்வளவு செய்தாலும் நம்மை மதிப்பதில்லை , எவ்வளவு கொடுத்தாலும் நம்மேல் அன்பு காட்டுவதில்லை , ஏனோ தெரியவில்லை யாருக்குமே நம்மை பிடிப்பதில்லை என்றெண்ணும் மனோபாவம் இன்று எங்கும் பரவலாக பெருகிவிட்டது.

நாம் சிரிப்பதோ , துக்கிப்பதோ நமது செயலின் நிகழ்வேயன்றி வேறு ஒருவரால் நம்மீது திணிக்கப்பட்டதல்ல . இதனைத்தான் செய்வினை அதாவது நாம் முன்பு செய்த வினை என்றார்கள்.

நமது ஒவ்வொரு காரியங்களும் நம்மால் தீர்மானிக்கப்பட்டவையே என்பதை ஒவ்வொருவரும் உணர்ந்தால் போதும் அடுத்து நடப்பது நன்றாகவே இருக்கும் . ஏனென்றால் தனக்கு தன்னாலேயே தீங்கு வரும் என உணர்ந்த மனிதன் தனக்கே தீங்கெண்ணுவானா ? 
என்ன ?
உண்மை நிலை அதுதானே.
ஆனால் எந்த மனிதனும் அதனை எண்ணுவதே இல்லை.

பலரின் கருத்து என்னவென்றால் . . .

என்னால் யாருக்கும் தொல்லையில்லை , எவருக்கும் நான் கெடுதல் நினைப்பதில்லை , எனது செயல் தீயதோ , நல்லதோ நானறியேன் , எனது கடமையைத்தான் செய்கிறேன் , அதில் நான் மாறுவதில்லை ,

மேலும் , நம்மால் நான்கு பேருக்கு நன்மை உண்டாகுமென்றால் எதுவுமே தீதில்லை என்போர் உலகில் உண்டு ,
ஆனால் இந்த தத்துவ வேதாந்த சித்தாந்தமெல்லாம் நடைமுறை வாழ்வில் சிதறுண்டு போனதைத்தான் வீரமாமுனிவரின் முற்காலம் நமக்கு தெளிவாகக் காட்டுகிறது .

“எம்மைக்காக்கும் பொருட்டு நீர் செய்த எந்த பாபங்களும் , தீய கார்யங்களும் எம்மை தீண்டாது, அதற்கு நீர் மட்டுமே பொறுப்பு என்ற மனையாளின் சொல்லும் , பிள்ளைகளின் வாக்கும் அந்த வழிப்பறிக் கொள்ளையனை ஒரு வீரமாமுனிவனாக்கியது .

குடும்பத்திற்காக நான் செய்வது நன்மையோ தீமையோ எதுவானாலும் அதில்  அவர்களுக்கும் பங்குண்டு எனும் வேதாந்த வாதம் பயனற்றது .

யாரையும் காக்கும் பொறுப்பு நமக்கென இருந்தால் அந்த பொறுப்பினை தூய்மையான, கபடற்ற, சத்யமான நெறியில் நின்றுதான் காக்க வேண்டு மென்பதனை மேலே சொல்லப்பட்ட ஸ்ரீ வீரமாமுனிவரின் வரலாறு மனிதர்களுக்கு தெளிவாக போதிக்கின்றது .
அன்று பேசியதால்தான் வீரமாமுனிவர் தெளிவானார் , பேசாமல் இருந்திருப்பாரேயானால் வாழ்வியலின் தெளிவற்றவராக இருந்திருப்பார் . பலவிதமான தீய செயல்களின் நாயகனாக வாழ்ந்திருப்பார் ,
ஆனால் நமக்கு ஒரு வீரமாமுனிவர் கிடைத்திருக்கமாட்டார் .

இது என்ன குழந்தை ? இது என்ன வளர்ந்த மனிதன் ? இது என்ன வயோதிக தோற்றம் ? இது என்ன பிரேதம் என கேள்விகளை கேட்டதினால்தான் இளவரசனான சித்தார்த்தன் ஒரு கௌதம புத்தர் ஆனான்.

இன்றுள்ள மனிதர்களில் எத்துணையோ வீரமாமுனிவர்களும் , புத்தர்களும் சித்தர்களும் பொதிந்து இருக்கலாம் , அவர்களை மற்றவர்கள் அடையாளம் காண வேண்டுமானால் பேச வேண்டும் .
மௌனம கலையாமல் மௌனியாக இருக்கும் வரை முகவரியில்லாத கடிதமாக முடங்க வேண்டிய நிலை ஏற்படும் . வாழ்வு முடிந்தபின் அவருக்கு  இதெல்லாம் தெரியும் என்று பேசுவதால் பயனில்லை அல்லவா ?

இயற்கை மனிதருக்கு பல விஷயங்களை அறியத்தருவதே சக மனிதரிடம் பேசி பகிர்ந்து கொள்ளத்தான் , மனதிற்குள்ளேயே வைத்து புழுங்க அல்ல.

இன்பமோ துன்பமோ பகிர்ந்தால் . . . . நல்லது

பகிர்ந்த இன்பம் இரட்டிப்பாகின்றது என்றும் ,
பகிர்ந்த துன்பம் பாதியாகின்றதென்றும் முன்னோர்கள் சொல்லி வைத்தார்கள்.

எந்த ஒரு விஷயத்திற்கும் மனம் திறந்து பேசுவதென்பது நல்ல பலன்களைத் தரும்.

துன்பத்தை பகிர்ந்து பேசி குறைப்போம்
இன்பத்தை பகிர்ந்து பேசி கூட்டுவோம்

சகாக்களோடு மனம் திறந்து பேசுங்கள் , பேசுங்கள் , நிறைய பேசுங்கள் .

வளமோடு வாழுங்கள் , வாழும் நாளெல்லாம்.
அன்புடன் கருணாகரன் .
   
     


No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...