என்னை தொடர்ந்து

வாருங்கள், நண்பரே வணக்கம். தங்கள் வருகையை பதிவு செய்யுங்களேன் !அன்புடன் கருணாகரன்6,இடைப்பாடி. அன்பர்களே ! முழுக்க முழுக்க தமிழில் திருக்கணித முறையில் ஜாதகம் கணிக்க வேண்டுமா? உங்கள் பெயர், பெற்றோர் பெயர், பிறந்த தேதி, மாதம் வருடம், பிறந்த இடம் போன்ற விபரங்களை தாருங்கள், உங்கள் ஜாதகம் கூரியர் மூலமாக உங்களுக்கு அனுப்பி வைக்கப்படும்.( நள்ளிரவில் இரவு 12.00 மணிக்கு மேல் காலை 7.00 மணிக்குள் பிறந்திருந்தால் விடிந்தால் என்ன கிழமை என குறிப்பிடவும்.K.செந்தில்குமார்,கணேஷ் கம்ப்யூட்டர்ஸ்,34,கடைவீதி, இடைப்பாடி,சேலம் மாவட்டம்-637101.

Sunday, May 4, 2014

மந்த்ரமும் உச்சரிப்பும்

அன்பிற்குரிய நண்பர்களே , வணக்கம்.

ஒரு மந்த்ரத்தினை எழுதி இந்த மந்திரத்தை , தீப தூப படையலிட்டு ஒரு இலட்சத்திஎட்டு ஜபித்தால் உடனே இந்த தெய்வம் உங்களுக்கு முன் தோன்றி உங்களுக்கு எல்லாவித வரங்களையும் அருளி எக்காலமும் உங்களுக்கு பாதுகாப்பாக இருக்கும். 

என்பது போன்ற வாசகங்களை மந்த்ர , மாந்த்ரீக புத்தகங்களிலும் , ஒரு சில குருமார்கள் சொல்வதையும் கேட்டிருப்பீர்கள்.

இது உண்மையா ? 

அப்படி பூஜைகள் செய்து , மந்திரத்தை இலட்சத்திஎட்டு சொல்வதால் அந்த குறிப்பிட்ட தெய்வம் நேரில் வருமா ? 
வரம் தருமா ? 
சாத்தியமா ?

சாத்தியமில்லைதான்.

அப்படி எல்லாம் நடக்காது . 

ஆனால்,

தன் வாழ்வை முழுமையாக பொதுநலமான ஆன்மீக வாழ்விற்கே அர்ப்பணித்து அதற்கெனவே வாழ்பவர்களுக்கு அது சாத்தியமே .

அன்றாட வாழ்வில் சிக்கித் தவிக்கும் ஒருவர் உட்கார்ந்து என்னதான் மெனக்கெட்டு ஒரு இலட்சம் , இரண்டு இலட்சம் சொன்னாலும் எதுவும் வராது.

ஒரு காரியத்தை செய்ய எண்ணுபவர் முதலில் தன்னை அந்த காரியத்திற்கு முழுமையாக முழுமனதோடு அர்பணிக்கவேண்டும்.
ஒருவர் மருத்துவ பணியாற்ற நினைப்பாரேயானால் முதலில் அது தொடர்பான படிப்பினை சில வருடங்கள் படிக்கவேண்டும்.

 அதில் தேர்ச்சி பெறவேண்டும். படிப்பு முடித்தவுடன் அந்த படிப்பு சம்பந்தமான பயிற்சியை பயில வேண்டும். அதிலும் தேர்ச்சி பெறவேண்டும். 

அப்புறம்தான் அவர் மருத்துவர் என சொல்லிக் கொள்ள முடியும். பலருக்கும் வைத்தியம் பார்க்கலாம்.

ஆனால் அதெல்லாம் வேண்டாம் , எனக்கு நல்ல ஆங்கில புலமை உண்டு, அதனால் நான் மருத்துவம் சம்பந்தப்பட்ட புத்தகங்களையும் , அறுவை சிகிச்சை தொடர்பான புத்தகங்களையும் நன்கு படித்தாலே போதும் , மருத்துவராகிவிடுவேன் என்பது சரியா ? 

இவரைத்தானே போலி டாக்டர் என்கின்றார்கள்.

அப்படித்தான் மேலே சொல்லப்பட்ட கருத்துக்களும்.

ஒருவர் தனது வாழ் நாளை முழுமையாக மந்த்ரம் கற்றுக்கொள்ள அல்லது மாந்தரீகம் கற்றுக்கொள்ள பயன் படுத்தவேண்டும் .

தனது வாழ்வில் சிரமங்கள் வந்ததும் , இந்த மந்த்ரம் , அந்த மந்த்ரம் என்று கற்றுக்கொள்வது , அவரது தலைமுறைக்கே சுமைகளை ஏற்றி வைக்கும் காரியம் போன்றது. 

இப்படி சொல்வதற்கு நிறைய காரணங்கள் இருக்கின்றது. 

காரணம் ஒன்று : 
உலகில் உள்ளோருக்காக தரப்பட்டுள்ள மந்த்ரங்கள் அனைத்துமே ஜீவனுள்ளவை (உயிருள்ளவை).

காரணம் இரண்டு :
குறிப்பிட்ட எண்ணிக்கையில் சொல்லப்பட்டவுடன் அந்த மந்திரம் ஜீவன் பெறப்பட்டு விடுகிறது.

காரணம் மூன்று:
ஜீவனை பெற்ற மந்த்ரத்தின் தெய்வம் அவ்விடத்தினை வந்து அடைந்து விடும் .

காரணம் நான்கு :
எந்தவிதமான பயிற்சியும் இல்லாமல் போனதால் அந்த தெய்வம் வந்ததையே அறியாமல் மேலும் மேலும் மந்த்ரத்தை உச்சரித்துக் கொண்டே இருப்பீர்கள்.

காரணம் ஐந்து :
நீங்கள் உச்சரிக்க உச்சரிக்க உச்சநிலை கோபம் அடைந்த அந்த தெய்வம் அல்லது தேவதை உங்கள் மேல் அளவு கடந்த உக்கிரமாகி உங்களுக்கோ  உங்கள் குடும்பத்திற்கோ மிக அதிகமான துன்பங்களை உருவாக்கி விடும்.

இதுபோன்ற காரியங்களை செய்து சிக்கிக்கொண்டவர்கள் ஏராளம்.

காரணம் என்னவென்றால் முறையான பயிற்சி இருந்தால் அந்த மந்த்ரத்திகுரிய தெய்வமோ தேவதையோ வந்ததை அறிந்த கொள்ள முடியும்.

அல்லது வேறு தெய்வமோ தேவதையோ வந்திருந்தால் அதனை அப்புறப்படுத்த தெரிந்திருக்கும். 

வந்த தெய்வம் அல்லது தேவதையை சமாளிக்கவும் , சாந்தப்படுத்தவும், சந்தோஷப்படுத்தவும் , வந்திருக்கும் தெய்வமோ தேவதையோ சந்தோஷமாக இருக்கும் போதே தனக்கு வேண்டிய காரியங்களை அதனிடம் கேட்டு பெறவும் அனுபவமிருந்தால் மட்டுமே முடியும்.

இதெல்லாம் எதுவுமே தெரியாமல் வெறும் புத்தகத்தை படித்தேன் , எதுவும் வரவில்லை , கஷ்டம்தான் வந்தது என்றால் கஷ்டம்தான் வரும்.

நமக்குதான் தெய்வம் இங்கு வந்ததே தெரியாதே .

ஆகவே முன் அனுபவம் பெற்று பயிற்சியை துவங்குங்கள் .

சிலருக்கு குருவானவர் சொல்லித்தந்த மந்த்ரங்களை சொல்லியும் பலன்கள் கிட்டுவதில்லை .

இதற்கென்ன காரணம் ? 

குருவானவர் ஒரு மந்த்ரத்தினை தந்து அதனை மூன்று முறைகள் நமது காதிலோ , முன்புறம் அமரச் செய்து நேரிலோ சொல்லித் தருவார்கள்.

நாம் அதனை எத்தனை முறைகள் உச்சரிக்க வேண்டும் என்பதனையும் கூறுவார்கள்.

சரி என்று வாங்கி கொண்டு வந்தபின் ஒரு நல்ல நாளில் துவக்குவோம்.

ஆனால் ,

நாட்கள் செல்லச்செல்ல மந்த்ரம் சொல்லும் உச்சரிப்பு மாற்றம் கண்டு நம்மை அறியாமலே வேறு மாதிரி உச்சரிக்க துவங்கியிருப்போம்.

ஒரு மணி நேரத்திற்கு இத்தனை என்று எண்ணிக்கையை மட்டுமே குறியாக கொண்டு மந்த்ரத்தின் தன்மையையே மாற்றி இருப்போம்.

ஒரு இலட்சத்திஎட்டு மந்த்ர ஜபம் என்பது , முழுக்க முழுக்க மந்த்ரமானது நம் உடலை சுற்றி ஒரு கவசம் போல மாயமான தோற்றத்தோடு சூழ்ந்திருப்பதாகும். 

ஒரு மந்த்ரத்தினை உச்சாடனம் செய்யும் போது நாம் அந்த மந்த்ரத்தில் கரைவதுபோல உணர்வு பிரவாகத்தில் ஆழ்ந்து உச்சரிக்க வேண்டும்.

உதடுகள் மந்திரத்தை உச்சரிக்க ,கண்கள் கடிகாரத்தை பார்க்க , மனம் அடுத்து என்ன செய்யலாம் என்று சிந்திக்க இது போல் சொல்லப்பட்ட மந்த்ரங்கள் ஒரு கோடியை தொட்டாலும் புண்ணியமில்லை.

மனம் , சிந்தனை , செயல் அனைத்தும் மந்த்ரமே நிறைந்திருக்க வேண்டும்.

உதாரணமாக ஓம் நமசிவய எனும் மந்த்ரம் என்றால் ஓம் ந ம சி வ ய என்று ஆழ்ந்து உள்ளார்ந்து சொல்ல வேண்டும் , 

அதை விட்டு விட்டு ஓம் நமசிவய ஓம் நமசிவய ஓம் நமசிவய ஓம் நமசிவய ஓம் நமசிவய என்று ஓட ஆரம்பித்தால் மந்த்ரம் பலனற்று போகும்.

மந்த்ரம் சொல்லும் போதே நாம் அந்த மந்த்ரத்தின் முழு அர்த்தத்தையும் உணர்ந்து அதனுள் பொதிந்து ஆழ்ந்து நாமே மந்த்ரடுள் கரைந்து போக வேண்டும் . 

நாமே அந்த மந்த்ரத்தின் முழு சொரூபமாக நம்மை உணர்ந்து மாற வேண்டும்.

மந்த்ர சொரூபமாக நாம் நின்று செய்யும் எந்த நற்காரியமும் வீணாகாது.

ஆகவே , மந்த்ரம் கற்பது என்றால் உங்களை முழுமையாக ( வேறு வேலையை செய்யாமல்) அதற்கே செலவிடுங்கள் , இல்லை அப்படி முடியாது என்றால் விட்டு விடுங்கள். 

வீணாக அவஸ்தைப்படவேண்டாம். 

குருமூலமாக கற்றிருந்தால் ,

எண்ணிக்கையின் பின்னே போகாமல் , மந்த்ரத்தின் தன்மையை மாற்றாமல், மந்த்ரத்தினை உணர்ந்து பூரணமாக உங்களை அந்த மந்த்ரத்துள் ஆழ்த்துங்கள் , மந்த்ரமாக நீங்களே மாறுங்கள். 

முயற்சியை விடாதீர்கள், வெற்றியை எட்டுங்கள், 
வெற்றி உங்களுக்கு மிக அருகில்.

வளமோடு வாழுங்கள் , வாழும் நாளெல்லாம்.
சிவனருள் கருணாகரன். 

Related Posts Plugin for WordPress, Blogger...