என்னை தொடர்ந்து

வாருங்கள், நண்பரே வணக்கம். தங்கள் வருகையை பதிவு செய்யுங்களேன் !அன்புடன் கருணாகரன்6,இடைப்பாடி. அன்பர்களே ! முழுக்க முழுக்க தமிழில் திருக்கணித முறையில் ஜாதகம் கணிக்க வேண்டுமா? உங்கள் பெயர், பெற்றோர் பெயர், பிறந்த தேதி, மாதம் வருடம், பிறந்த இடம் போன்ற விபரங்களை தாருங்கள், உங்கள் ஜாதகம் கூரியர் மூலமாக உங்களுக்கு அனுப்பி வைக்கப்படும்.( நள்ளிரவில் இரவு 12.00 மணிக்கு மேல் காலை 7.00 மணிக்குள் பிறந்திருந்தால் விடிந்தால் என்ன கிழமை என குறிப்பிடவும்.K.செந்தில்குமார்,கணேஷ் கம்ப்யூட்டர்ஸ்,34,கடைவீதி, இடைப்பாடி,சேலம் மாவட்டம்-637101.

Tuesday, May 31, 2011

செல்வம் செழிக்க வைக்கும் மகாலக்ஷ்மி ஸ்தோத்ரம் தமிழில்

அன்புள்ளங்களே, வணக்கங்கள். உங்களுக்காக இங்கே ---

தாரித்ரியம் போக்கி, செல்வம் கொழிக்கசெய்யும் ஸ்ரீ ஸ்ரீ மகாலக்ஷ்மி ஸ்தோத்ரம் தமிழில் தருகிறேன் - தினமும் கேட்டு - மனதில் சொல்லி செல்வாக்கு பெருகி நல்வாழ்வு பெருகி நலமோடு வாழுங்கள்.


செல்வம் பெருக்கும் மகாலக்ஷ்மி ஸ்தோத்ரம் தமிழில் Lakshmi Stothram 


அன்புடன் கருணாகரன்   

Monday, May 30, 2011

Kanakadhara Sthothram - கனகதாரா ஸ்தோத்ரம்

அன்பான நண்பர்களே ! தேடித் பார்த்தேன், வலைத்தளங்களில் கிடைக்கவில்லை உங்களுக்காக ....அழகு தமிழில் கனகதாரா ஸ்தோத்ரம் - 

கேளுங்கள் - தினமும் சொல்லுங்கள் .

பொன்மாரி பொழியட்டும் நமது இல்லங்களில்.

Kanakadhara_SthothamTamil - கனகதாரா ஸ்தோத்ரம்அன்புடன் கருணாகரன் 

Tuesday, May 17, 2011

தெய்வீக தேனமுது - திருவாசகம்

அன்பிற்குரியவர்களே , அனைவருக்கும் வணக்கம்.

தெய்வீக தேனமுதெனும் திருவாசக தேனை அள்ளிப் பருகிப் பாருங்கள்.

ஆனந்தம் பொங்கிப் பெருகுவதை உணருங்கள்.


எம்.பி.த்ரீ வடிவில் 
உங்கள் 

Saturday, May 14, 2011

அன்பானவர்களே! சிவன் கோயில் வழிபாட்டு முறைகள் -1

அன்பானவர்களே !

 நாம் தினமும் ஏதேனும் ஒரு வணக்கமுறையை கையாளுகிறோம்.

அந்த முறைகளை - முறையாக செய்கிறோமா ?

என்பதுதான் இந்த பகுதியில் நாம் காண இருப்பது. 

ஸ்ரீ ஸ்ரீ சிவன் கோயிலில் வணங்கும் முறையை காண்போம்.

நம்மில் பலர் தினசரி கோயிலுக்கு செல்வோம், வணங்குவோம். 

ஆனால் அது முறையாக உள்ளதா? என்பதை அறியத் தவறுகிறோம். 

முறையாக இல்லாத வழிபாடு முழுமையான பலன் தருவதில்லை என்பது உண்மை.

நாம் சொல்வோம் கடவுளை கும்பிடுவதில் என்ன முறை, எப்படி கும்பிட்டாலும் கடவுள் ஏற்றுக்கொள்வார். 


உண்மைதான் எப்படி வணங்கினாலும் இறைவன் ஏற்றுக்கொள்வார்.
ஆனால் நமக்கு பலன் கிடைக்க வேண்டுமே
அதற்கு, 


முறையான வணக்கமுறை தேவைதான்.

நமக்கு காபி குடிக்கவேண்டும் என்றால்,
காபி போட்டு அல்லது காபி வாங்கி குடிப்போம்.

எப்படி குடித்தாலும் காபிதானே என்று நினைத்து,

கொஞ்சம் காபித்தூள் வாயில் போட்டுக்கொண்டு,கொஞ்சம் பால் வாயில் ஊற்றிக் கொண்டு, கொஞ்சம் சர்க்கரை வாயில் போட்டு கொப்பளித்து விழுங்குவோமா இல்லை அல்லவா 
அதுபோல் கோயில் சென்று வணங்கும் முறையும் ஏதோ சென்றோம் என்றில்லாமல் சரியான முறையில் சென்று வணங்கி 

முழுமையான பலன்களை பெறுவோமே!!!!!!

திருக்கோவில் சென்று வணங்கும் முறைகளை நாம் இங்கே காண்போம்.

சிவன் கோவில் 

சேக்கிழார் பெருமான்
“ 
நீறணிந்தார் அகத்தருளும் நிறைகங்கில் புறந்தருளும்
மாறவருந் திருப்பள்ளி எழுச்சியினில் மாதவஞ்செய் 
சீறடியார் திருவலகுந் திருமெழுக்குந் தோண்டியுங் கொண்டு
ஆறணிந்தார் கோயிலினுள் அடைந்தவரை கொடுபுக்கார்
 ”

என கூறுகிறார்.

இதிலிருந்து காலை நேர இறைவழிபாடு மிக உகந்ததாக தெரிகிறது.

தினமும் காலை சுத்தமான நீரில் குளித்துமுடித்து தூய உடை அணிந்து (லுங்கி,கைலி போன்றவை அணியக்கூடாது)சிவநாமம் சொல்லியவாறே ஆலயம் நோக்கி புறப்படவேண்டும். 

வழியில் யாரிடமும் அநாவசியமான பேச்சின்றி மௌனமாக செல்லவேண்டும்.

கோயிலில் சாற்றுவதற்கு மலர், மாலைகள், கற்பூரம், தேங்காய், பழம் ஏதாவது வாங்கியிருந்தால் அதனை மார்போடு அணைத்து எடுத்து செல்லவேண்டும், நமது இடுப்புக்கு கீழே அந்த பொருட்கள் இருக்ககூடாது. 

கைகளை நீட்டி கீழ் வரைக்கும் கொண்டு செல்லும்போது நமது காலணியின் மண் அந்த கூடைக்குள் விழும். 

பாதையில் உள்ள முடி, எச்சில் போன்றவை தெறித்து உள்ளே விழும் அதனால் இடுப்புக்கு மேலே மார்போடணைத்து கொண்டு செல்வது மிகவும் சிறந்தது. 

தினசரி கோயில் போகும் வழக்கம் உள்ளவர்கள் தேங்காய் பழம் வாங்க வேண்டிய அவசியம் இல்லை. அர்ச்சனை செய்யும் காலம் மட்டும் வாங்கிச் சென்றால் போதும். 

மற்ற நாட்களில் சுவாமியை தரிசனம் செய்தால் போதும். இறைவன் கேட்பது பரிசுத்த மனம் மட்டுமே.

தொலைவில் இருந்தே கோபுரம் கண்டுவிட்டால் அதனை இறைவனாகவே கருதி வழிபடவேண்டும். 


அதனால் கோபுரம் கண்டவுடன் "சிவசிவ" என்று சொல்லி வணங்கி பின் செல்லவேண்டும்.

“கோபுர தரிசனம் கோடி புண்ணியம்” ஆன்றோர் வாக்கு.

தரிசனம் இன்னும் உண்டு.ஸ்ரீ சிவன் திருக்கோயில் வணங்கு முறைகளை காண்கிறோம்நாம் இப்பொது திருக்கோயில் திருவாசல் வந்து விட்டோம்.திருகோபுரத்தின் முன் நின்று உச்சியைப்பார்த்து வணங்கி விட்டு இங்கிருந்தே மூலவர் இருக்கும் திசை நோக்கி வணங்கிகோவிலுள்  புக வேண்டும்.
தென்நாட்டில் உள்ள  எல்லா சிவன் கோவிலும் ஒரே அமைப்பில்தான் இருக்கும். வட மாநிலங்களில் சிவன் கோவில்கள் சற்று மாறுபட்டு இருக்கும்.

     சிவாலயத்திற்கு சென்று எப்படி வழிபடவேண்டும் என்பதையும், நற்கதி அடைய என்னவழி என்பதையும் திரு மூலர் பெருமான்,

 ஆய பதிதான் அருட் சிவலிங்கம்
 ஆய பசுவும் அடலேறென நிற்கும்
 ஆய பலிபீடம் ஆகும் நற்பாசமாம்
 ஆய அரன்நிலை அறிந்துகொள்வார் கட்கே

என்று மிகவும் தெளிவாகக் கூறியுள்ளார்கள்.

     இந்த பேருண்மையை நன்கு உணர்ந்துதான் வழிபாடு நிகழ்த்த வேண்டுமாதலால் முதலில் நாம் பலிபீடத்தை வீழ்ந்து வணங்கி நமது ஆணவமாகிய பாசத்தை விட்டு ஒழிக்கவேண்டும். 

மேலும் வீழ்ந்து வணங்கும் போது நமது கால்களை மேற்குஅல்லது தெற்கு திசையில்தான் நீட்டவேண்டும் , வடக்கு மற்றும் கிழக்கில் எக்காரணம் கொண்டும் கால்களை நீட்டக்கூடாது என்பதை கருத்தில் கொள்ளவேண்டும்.

ஏனென்றால் மேற்கு, தெற்கில் எந்த ஸ்வாமியின் சிலாரூபங்களும் இருக்காது. நமது கால்கள் அவர்களை நோக்கி இருக்காது.

(உணமையில் கோயில் அமைப்பில் உள்ளிருக்கும் தெய்வீக அருள் சக்தி நம் மேல் முழுவதுமாக படரவே இந்த முறைகளை கையாள்கிறோம். நாம் தெற்கு நோக்கியோ, மேற்கு நோக்கியோ வீழ்ந்தால் அருள்சக்தி கிடைப்பதில்லை)
இவ்வாறு வீழ்ந்து வணங்கிய பின் எழுந்து மேல் நோக்கி கொடிமரத்தை வணங்கவேண்டும். 

த்வஜஸ்தம்பம் எனப்படும் கோபுரவாசலில் உள்ள கொடிமரம் சிவபெருமானது பரங்கருணையை அறிவிப்பது. உயிர்கள் மேல் உள்ள பெருங்கருணையினாலேயே சிவபெருமான் படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல் ஆகிய ஐந்து தொழில்களையும் ஆற்றுகிறான். 

இவ்வைந்து தொழில் மாட்சியை உணர்த்துவதுதான் பஞ்சாட்சர மந்த்ரம். சைவ,சித்தாந்த சாத்திரங்களால் இப்பேருண்மையை அறியலாம், அம் மந்திரங்களை தாங்கியே ஓங்கி நிற்கின்றது கொடிமரம்.
     இவ்வுண்மையை,
    
     அஞ்செழுத்தும் எட்டெழுத்தும் ஆறெழுத்தும் நாலெழுத்தும்
     பிஞ்செழுத்தும் மேலைப்பெருஎழுத்தும்  நெஞ்சழுத்திப்
     பேசும் எழுத்துடனே பேசா எழுத்தினையும்
     கூசா மற் காட்டக் கொடி             கொடிக்கவி (4).

     என்னும் உமாபதி சிவாச்சாரிய ஸ்வாமிகளின் திருவாக்கால் உணரலாம். இந்த பேருண்மையை உணர்ந்து எண்ணி கொடிமரத்தை
சிரமேற் கரங் கொண்டு கூப்பித் தொழ வேண்டும்.

தரிசனம் இன்னுமுண்டு.

அன்பின் உள்ளங்களே உங்கள் அனைவருக்கும் கருணாகரனின் அன்பு வணக்கங்கள்.
ஸ்ரீ சிவன் திருக்கோயில் வணங்கு முறைகளை காண்கிறோம்

நாம் இப்போது திருக்கோயில் கொடிமரம் வரை வந்து விட்டோம்.

உள்ளே செல்வதற்கு திருக்கோயில் வாசல் திறந்தே இருக்கும் ஆனாலும் கோயிலின் திருக்காவலராகிய நந்தியம்பெருமானின் உத்திரவு பெறாமல் உள்ளே செல்லக் கூடாது.
     ஸ்ரீ சிவாலயங்களில் வழிபட வருவோரைச் சமயம் பார்த்து உள்ளே விடுவதற்குரிய அதிகாரம் பெற்றவர் திருநந்தித்தேவர். அதனால் அவரை அதிகார நந்தி என்றும் கூறுவர். இவர் நெற்றிக் கண்ணும், நான்கு தோள்களும், இடபத்தின் முகமும், தேவ உடலும் கொண்டு கையில் கத்தியும், பிரம்பும் தாங்கி காட்சி அளிப்பார்.
     இச்சிறப்பெல்லாம் இவர் சிவபெருமானால் என்பதை
    மற்றிணையில் லாக் கயிலைமலை நாதன் நந்திக்கு
     நெற்றியிற்கண் நாலுபுயம் நெருப்புருவம் பிறைகொண்முடி
     சற்றுமொரு குறைவிலாச் சாரூபம் பணிந்தருளிப்
     பெற்றியினா லருட்சுரிகைப் பிரம்புமருள் செய்தனனே

எனவரும் திருவையாற்றுப் புராணம் தெளிவாகக் காட்டுகிறது.

     ஆனால் எல்லாகோயில்களிலும் நந்தியம்பெருமான் மேற்கூறிய தோற்றத்தில் இல்லை என்றாலும் பலிபீடம்,கொடிமரம்,அடுத்துள்ள நந்திதேவராகிய நந்தியிடம் பிரார்த்தித்து பின் உள்ளே செல்ல வேண்டும் உள்ளேயும் நேராக இறைவன் சந்நிதிக்கே சென்று விடாமல் வலம் வந்து செல்ல வேண்டும்.

பிரகார வலம் வருவதால் எல்லாவகையான அச்சங்களும், நோய்களும் விலகி அளவற்ற புண்ணியங்கள் உண்டாகின்றன என்று ஆகமங்கள் கூறுகின்றன.

அக்கூற்றுப்படி வியாதிகள் நீங்க முற்பகலிலும், இஷ்டசித்திகளை அடைய நண்பகலிலும், பாபங்கள் தொலைய பிற்பகலிலும், வீடு பேறடைய அர்த்த ஜாமத்திலும் வலம் வர வேண்டும் என்பதை அறிகிறோம்.

அடுத்து வலம் :
     வலம் வரும்போது மூல மூர்த்திக்கும், நந்தி, பலி பீடங்களுக்கு இடையில் புகுந்து வலம் வருதல் கூடாது. இதைப்பற்றிக் கூறும்போது
நூல்களில்  சமீபத்தில் பிரசவிக்கக் கூடிய பெண் ஒருத்தி நிறைந்த எண்ணெய் குடம் ஒன்றைத்தாங்கி நடந்தால் எப்படி நடப்பாளோ அப்படி நடந்து வலம் வர வேண்டும் என்று தெரிவிக்கின்றன. எப்பொழுதும் திருக்கோவிலை மூன்று முறை வலம் வருதல் நல்லது. வழி பாட்டின் பலனை முழுமையாகப் பெற நாம் சண்டேசுவரர் சந்நிதியில் வேண்டிக்கொள்ள வேண்டும்.  அவர்தான் சிவபூசையின் சிறப்பை உணர்த்தியவர், அதனாலேயே சிவபெருமான் அவருக்கு அடியார்களுக்கு வழிபாட்டு பயனை அளிக்கும் சண்டீச பதத்தை அருளினார். அவர் சதாசர்வ காலமும் சிவா தியானத்திலேயே இருப்பதால் நாம் வந்திருப்பதை அவருக்கு உணர்த்த இடது உள்ளங்கையில் வலது நடு மூன்று விரல்களால் ஓசை வராமல் மூன்று முறை தட்டி (தொட்டு) வருகையை தெரிவிக்கவேண்டும், பின்னர் நமது வேண்டுதல்களை தெரிவிக்க வேண்டும்.
    
ஆலயத்துள்ளே கீழே வீழ்ந்து வணங்குதல் கூடாது. வலம் வரும்போது ஸ்தூபி, கொடிமரம், ஆகியவற்றின் நிழலையும், ஸ்வாமி மீதிருந்து களைந்த நிர்மால்யத்தையும் மிதிக்காமலும், தாண்டாமலும் வலம் வரவேண்டும். தவிர்க்க முடியாத நிலையில் மேலே சொன்ன நிழல்களின் ஐந்தில் மூன்று பாகம் நீக்கி மற்ற இரண்டு பாகத்தில் செல்லலாம்.

 உண்டகலமும் உடுப்பனவும் சூடுவனவும் உனக்காகச் சண்டீசனுமாம் பதந் தந்தோம்

என்று சிவபெருமானே இவருக்கு அருள் புரிந்திருப்பதால் சிவபெருமான் திருமேனியிலிருந்து பிரசாதமாகப் பெற்ற நிர்மாலியத்தை ( திருநீறு,பழம்,பூ போன்றவைகளை ) சண்டேசுவரர் முன் சமர்ப்பித்து அவர் திருவருளோடு அதனைப் பெற்று= கொண்டு வணங்கி விடைபெறுதல் வேண்டும். இத்தகைய செயல்களையும், இவைபோன்ற செய்யத்தகாத காரியங்களையும் பெரியோர்கள் வாயிலாக கேட்டறிந்து செய்வது மிகவும் நலமளிக்கும்.
இந்த அளவில் சிவ வழிபாடு நிறைவடைகிறது. விநாயகரிடம் குட்டோடு ஆரம்பிப்பது சண்டீஸ்வரரிடம் தட்டோடு பூர்த்தியாவதாக ஆன்றோர் பெருமக்கள் கூறுவர்.

இவ்வாறு ஆலயத்துள் வழிபாடு நிகழ்த்தி பூர்த்தி செய்ததும் சிவ சிந்தனையோடு திரும்பி மீண்டும் பலிபீடத்தருகில் வீழ்ந்து வணங்கி வரவேண்டும். வணங்கி முடிந்ததும் உடனே வந்து விடக் கூடாது. ஏனென்றால் நாம் கோயிலுள் நுழைந்த உடன் நந்தியம்பெருமான்   அருளாணைப்படி நந்தி கணத்தவர் நமக்கு உடனிருந்து வழிபாடு செய்வித்தார்கள் அல்லவா? அவர்களை நாம் அலட்சியம் செய்ததாக எண்ணுவர். ஆகையால் சற்று நேரம் அங்கேயே அமர்ந்து பஞ்சாட்சரம் ஜபித்து நந்தி கணத்தவரை வணங்கி விடை பெற்று தூய மனத்துடன் வீட்டிற்கு வருதல் வேண்டும்.

இவ்வாறாக சிவாலய தினசரி வழிபாடு இனிதே முற்றுப்பெறுகிறது. 

சிவாலயங்களில் செய்யத் தகாதவைகள்.

v  ஆலயத்தில்  வழிபாடு செய்யுங்கால் இறைவனைத் தவிரவும் வேறு எவரையும் வணங்கலாகாது. நாம் வழிபடும் குருவேயானாலும் சந்நிதியில் அவரை வீழ்ந்து வணங்குதல் ஆகாது. கோவிலுக்குள்ளும் யாரையும் வீழ்ந்து வணங்கக் கூடாது.

ஆசாரக்கோவை எனும் நூலில் ,
  
   பெரியார் மனையகத்தும் தேவகுலத்தும்
  வணங்கார் குரவரையும் கண்டால் அணங்கொடு
  நேர் பெரியார் செல்லுமிடத்து

என்று அறிவுறுத்துவதை சிந்தித்தல் வேண்டும்.

தங்கள் குடும்பங்களில், பிறப்பு,இறப்பு நேர்ந்தால் அதற்குரிய தீட்டு காலங்கள் முடியும் வரை கோயிலினுள் சென்று வழிபடக் கூடாது.

பேசிக் கொண்டும், தாம்பூலம் மென்று கொண்டும்,  தலைப்பாகை கட்டிக்கொண்டும் இறைவணக்கம் நிகழ்த்துவது பெரும் குற்றமாகும்..       

Saturday, May 7, 2011

வினை தீர்த்து வளம் சேர்க்கும் பதிகங்கள் - 2

அன்பானவர்களே !! வணக்கங்கள்.

நம் வினை எவ்வளவு என்று நாமறியோம், அதனை அந்த பரம்பொருளே அறியும்.

ஆனால் தினமும் நாம் இந்த பதிகங்களை பாடி வர வர நமது பொல்லா வினைகள் வேரழியும் என்பது மட்டும் உறுதி. 
அன்பினால் 

Vinai Thirukkum Padhikangalதோடுடைய 
Vinai Thirukkum Padhikangalஎன்ன புண்ணியம் 
Vinai Thirukkum Padhikangalகாதலாகி 
Vinai Thirukkum Padhikangalமின்னுமா மேகங்கள் 
Vinai Thirukkum Padhikangalபேராயிரம் பார்வை 
Vinai Thirukkum Padhikangalபொன்னர் 
Vinai Thirukkum Padhikangalதுஞ்சாலும் 
Vinai Thirukkum Padhikangalபூவாமலர் 
Vinai Thirukkum Padhikangal
அன்பன் கருணாகரன்

Friday, May 6, 2011

கணபதி தேவாரம் Mp3 வடிவில்


அன்பார்ந்த நண்பர்களே, உங்கள் அனைவருக்கும் வணக்கங்கள்.

பயனும் பலனும் தரவல்ல ஸ்ரீ விநாயகப் பெருமானின் தேவாரம் - உங்களுக்காக 


இதோ தினமும் கேட்டு பயனும் மகிழ்வும் பெறுங்கள்கணபதி தேவாரம் - 1

கணபதி தேவாரம் - 2

கணபதி தேவாரம் - 3

கணபதி தேவாரம் - 4

கணபதி தேவாரம் - 5

கணபதி தேவாரம் - 6

கணபதி தேவாரம் - 7

கணபதி தேவாரம் - 8

கணபதி தேவாரம் - 9

கணபதி தேவாரம் - 10

கணபதி தேவாரம் - 11

கணபதி தேவாரம் -12

கணபதி தேவாரம் - 13


வளம் பெற வாழ்த்தும்,

அன்பன் கருணாகரன் 

உங்கள் நட்சத்திர கடவுள்,மரங்கள்,பாடல்கள்


அன்பானவர்களே, அனைவருக்கும் அன்பு வணக்கங்கள்.நமது நட்சத்திரத்திற்குரிய கடவுள் (அதிதேவதை) எதுவென அறிந்திருந்தால் நாம் தினமும் தொழுது வழிபட நலம் பெருகும் அல்லவா?

இதோ உங்கள் நட்சத்திரத்திற்குரிய கடவுளர்கள் பற்றிய தகவல்.

இனி உங்கள் நட்சத்திரத்திற்குரிய கடவுளை வணங்கி,

சகல வளமும் நலமும் பெற்று வாழ்வாங்கு வாழ வாழ்த்துகிறேன், நமசிவயம்.1.    அஸ்வினி, மகம், மூலம்          -    விநாயகர்

2.   பரணி , பூரம் , பூராடம்           -    ரங்கநாதர்

3.   கிருத்திகை, உத்திரம், உத்திராடம்  -    ஆஞ்சநேயர்

4.   ரோஹிணி, அஸ்தம், திருவோணம் - சிவன்
    
5.   மிருகசீரிடம், சித்திரை, அவிட்டம்  -    துர்க்கை

6.   திருவாதிரை, சுவாதி, சதயம்    -    பைரவர்

7.   புனர்பூசம், விசாகம், பூரட்டாதி   -    ராகவேந்திரர்

8.   பூசம், அனுஷம், உத்திரட்டாதி   -    சிவன்

9.   ஆயில்யம், கேட்டை, ரேவதி    -    பெருமாள்


இனி உங்கள் நட்சத்திரத்திற்குரிய மரங்கள் பார்ப்போம்.


நட்சத்திரத்திற்குரிய மரங்கள்


அசுவணி----எட்டி

பரணி ----நெல்லி

கார்த்திகை--அத்தி

ரோகிணி ---நாவல்

மிருகசீரிடம்-கருங்காலி

திருவாதிரை-செம்மரம்

புனர்பூசம் --மூங்கில்

பூசம் -----அரசு

ஆயில்யம்--புன்னை

மகம் ---ஆல்

பூரம் ----பலா

உத்திரம் --அலரி

அஸ்தம்---வேலம்

சித்திரை--வில்வம்

சுவாதி----மருது

விசாகம்--விலா

அனுஷம்--மகிழம்

கேட்டை--குட்டிப்பலா

மூலம்----மா

பூராடம் - வஞ்சி

உத்திராடம்-சக்கைப்பலா

திருவோணம்-எருக்கு

அவிட்டம்---வன்னி

சதயம்-----கடம்பு

பூரட்டாதி -கருமருது

உத்திரட்டாதி-வேம்பு

ரேவதி------இலுப்பை

அவரவர் தங்களுக்குரிய மரங்களை ஏதேனும் கோவில்களிலோ , தனக்கு சொந்தமான இடத்திலோ நட்டு அனுதினம் நீர் ஊற்றி பராமரித்து வர சகலவிதமான தோஷங்களும் விலகி வாழ்வில் நன்நிலையை விரைவில் பெறுவர் என்பது திண்ணம்.

இனி உங்கள் நட்சத்திர இறைவணக்கப் பாடல்கள் 


நிம்மதியாக வாழ சிவ வழிபாடு:

உங்கள் நட்சத்திரப் பாடல்களுடன்

கீழே அவரவர் பிறந்த நட்சத்திரத்திற்குரிய ஒவ்வொரு தேவாரப்பாடல் தரப்பட்டுள்ளன.
நீங்கள் உங்களது பிறந்த நட்சத்திரத்தின் பாடலை
ஒவ்வொரு நாளும் மூன்று தடவை பாடி,சிவபெருமானை வணங்கி வந்தால், நவக்கிரகங்களால் ஏற்படும் இன்னல்கள் நீங்கி நிம்மதியாக வாழலாம்.
தகவல் உதவி : பால ஜோதிடம் பக்கம் 26,
வெளியீட்டு நாள் 25.1.2010

அசுவினி :
தக்கார்வம் எய்திசமண் தவிர்ந்து
உந்தன் சரண் புகுந்தேன்
எக்கால் எப்பயன் நின் திறம்
அல்லால் எனக்கு உளதே
மிக்கார் தில்லையுள் விருப்பா
மிக வடமேரு என்னும்
திக்கா! திருச்சத்தி முற்றத்து
உறையும் சிவக்கொழுந்தே.

பரணி :

கரும்பினும் இனியான் தன்னைக்
காய்கதிர்ச் சோதியானை
இருங்கடல் அமுதம் தன்னை
இறப்பொடு பிறப்பு இலானைப்
பெரும்பொருள் கிளவியானைப்
பெருந்தவ முனிவர் ஏத்தும்
அரும்பொனை நினைந்த நெஞ்சம்
அழகிதாம் நினைந்தவாறே. 

கார்த்திகை/கிருத்திகை :

செல்வியைப் பாகம் கொண்டார்
சேந்தனை மகனாக் கொண்டார்
மல்லிகைக் கண்ணியோடு
மாமலர்க் கொன்றை சூடிக்
கல்வியைக் கரை இலாத
காஞ்சி மாநகர் தன்னுள்ளார்
எல்லிய விளங்க நின்றார்
இலங்கு மேற்றளியனாரே.

ரோகிணி :

எங்கேனும் இருந்து உன்
அடியேன் உனை நினைந்தால் 
அங்கே வந்து என்னோடும்
உடன் ஆகி நின்றருளி
இங்கே என் வினையை
அறுத்திட்டு எனை ஆளும்
கங்கா நாயகனே
கழிப்பாலை மேயோனே.

மிருக சீரிடம் :

பண்ணின் இசை ஆகி நின்றாய் போற்றி
பாவிப்பார் பாவம் அறுப்பாய் போற்றி
எண்ணும் எழுத்தும் சொல் ஆனாய் போற்றி
என் சிந்தை நீங்கா இறைவா போற்றி
விண்ணும் நிலனும் தீ ஆனாய் போற்றி
மேலவர்க்கும் மேலாகி நின்றாய் போற்றி
கண்ணின் மணி ஆகி நின்றாய் போற்றி
கயிலை மலையானே போற்றி போற்றி

திருவாதிரை/ஆதிரை :

கவ்வைக் கடல் கதறிக் கொணர்
முத்தம் கரைக்கு ஏற்றக்
கொவ்வைத் துவர் வாயார்
குடைந்து ஆடும் திருச்சுழியல்
தெய்வத்தினை வழிபாடு செய்து
எழுவார் அடி தொழுவார்
அவ்வத் திசைக்கு அரசு
ஆகுவர் அலராள் பிரியாளே.

புனர்பூசம் :

மன்னும் மலைமகள் கையால்
வருடின மாமறைகள்
சொன்ன துறைதொறும் தூப்பொருள்
ஆயின தூக்கமலத்து
அன்னவடிவின அன்புடைத்
தொண்டர்க்கு அமுது அருத்தி
இன்னல் களைவன இன்னம்பரான்
தன் இணை அடியே.


பூசம் :

பொருவிடை ஒன்றுடைப் புண்ணிய
மூர்த்திப் புலி அதளன்
உருவுடை அம்மலைமங்கை
மணாளன் உலகுக்கு எல்லாம்
திருவுடை அந்தணர் வாழ்கின்ற
தில்லை சிற்றம்பலவன்
திருவடியைக் கண்ட கண்கொண்டு
மற்று இனிக் காண்பது என்னே.

ஆயில்யம் :

கருநட்ட கண்டனை அண்டத்
தலைவனைக் கற்பகத்தைச்
செருநட்ட மும்மதில் எய்ய
வல்லானைச் செந்நீ முழங்கத்
திருநட்டம் ஆடியைத் தில்லைக்கு
இறையைச் சிற்றம்பலத்துப்
பெருநட்டம் ஆடியை வானவர்
கோன் என்று வாழ்த்துவனே.


மகம் :

பொடி ஆர் மேனியனே! புரிநூல்
ஒருபால் பொருந்த
வடி ஆர் மூவிலை வேல் வளர்
கங்கையின் மங்கையொடும்
கடிஆர் கொன்றையனே! கடவூர்
தனுள் வீரட்டத்து எம்
அடிகேள்! என் அமுதே!
எனக்கு ஆர்துணை நீ அலதே.

பூரம் :

நூல் அடைந்த கொள்கையாலே
நுன் அடி கூடுதற்கு
மால் அடைந்த நால்வர் கேட்க
நல்கிய நல்லறத்தை
ஆல் அடைந்த நீழல் மேவி
அருமறை சொன்னது என்னே
சேல் அடைந்த தண்கழனிச்
சேய்ன்ஞலூர் மேயவனே.

உத்திரம் :

போழும் மதியும் புனக் கொன்றைப்
புனர்சேர் சென்னிப் புண்ணியா!
சூழம் அரவச் சுடர்ச் சோதீ
உன்னைத் தொழுவார் துயர் போக
வாழும் அவர்கள் அங்கங்கே
வைத்த சிந்தை உய்த்து ஆட்ட
ஆழும் திரைக்காவிரிக் கோட்டத்து
ஐயாறு உடைய அடிகளே.


அஸ்தம் :

வேதியா வேத கீதா விண்ணவர்
அண்ணா என்று
ஓதியே மலர்கள் தூவி ஒருங்கு
நின் கழல்கள் காணப்
பாதி ஓர் பெண்ணை வைத்தாய்
படர் சடை மதியம் சூடும்
ஆதியே ஆலவாயில் அப்பனே
அருள் செயாயே.

சித்திரை :

நின் அடியே வழிபடுவான்
நிமலா நினைக் கருத
என் அடியான் உயிரை வவ்வேல்
என்று அடர்கூற்று உதைத்த
பொன் அடியே இடர் களையாய்
நெடுங்களம் மேயவனே.

சுவாதி :

காவினை இட்டும் குளம் பல
தொட்டும் கனி மனத்தால் 
ஏவினையால் எயில் மூன்று
எரித்தீர் என்று இருபொழுதும்
பூவினைக் கொய்து மலரடி
போற்றுதும் நாம் அடியோம்
தீவினை வந்து எமைத்
தீண்டப்பெறா திருநீலகண்டம்.


விசாகம் :

விண்ணவர் தொழுது ஏத்த நின்றானை
வேதம் தான் விரித்து ஓத வல்லனை
நண்ணினார்க்கு என்றும் நல்லவன் தன்னை
நாளும் நாம் உகக்கின்ற பிரானை
எண்ணில் தொல்புகழாள் உமை நங்கை
என்றும் ஏத்தி வழிபடப் பெற்ற
கண்ணும் மூன்று உடைக் கம்பன் எம்மானைக்
காணக் கண் அடியேன் பெற்றவாறே.

அனுஷம் :

மயிலார் சாயல் மாது ஓர் பாகமா
எயிலார் சாய எரித்த எந்தை தன்
குயிலார் சோலைக் கோலக்காவையே
பயிலா நிற்கப் பறையும் பாவமே.

 கேட்டை :

முல்லை நன்முறுவல் உமை பங்கனார்
தில்லை அம்பலத்தில் உறை செல்வனார்
கொல்லை ஏற்றினர் கோடிகாவா என்று அங்கு
ஒல்லை ஏத்துவார்க்கு ஊனம் ஒன்று இல்லையே.


மூலம் :

கீளார் கோவணமும் திருநீறும்
மெய்பூசி உன் தன்
தாளே வந்து அடைந்தேன் தலைவா
எனை ஏற்றுக்கொள் நீ
வாள் ஆர் கண்ணி பங்கா!
மழபாடியுள் மாணிக்கமே
ஆளாய் நின்னையல்லால்
இனியாரை நினைக்கேனே.


பூராடம் :

நின் ஆவார் பிறர் அன்றி நீயே ஆனாய்
நினைப்பார்கள் மனத்துக்கு ஓர் வித்தும் ஆனாய்
மன் ஆனாய் மன்னவர்க்கு ஓர் அமுதம் ஆனாய்
மறை நான்கும் ஆனாய் ஆறு அங்கம் ஆனாய்
பொன் ஆனாய் மணி ஆனாய் போகம் ஆனாய்
பூமி மேல் புகழ்தக்கப் பொருளே உன்னை
என் ஆனாய் என் ஆனாய் என்னின் அல்லால்
ஏழையேன் என் சொல்லி ஏத்துகேனே.

உத்திராடம் :

குறைவிலா நிறைவே குணக்குன்றே
கூத்தனே குழைக்காது உடையோனே
உறவு இலேன் உனை அன்றி மற்று அறியேன்
ஒரு பிழை பொறுத்தால் இழிவு உண்டே
சிறைவண்டு ஆர் பொழில் சூழ்திருவாரூர்ச்
செம்பொனே திருவடுதுறையுள்
அறவோனே எனை அஞ்சல் என்று அருளாய்
ஆர் எனக்கு உறவு அமரர்கள் ஏறே

திருவோணம் / ஓணம் :

வேதம் ஓதி வெண்நூல் பூண்ட 
வெள்ளை எருது ஏறி
பூதம் சூழப் பொலிய வருவார்
புலியின் உரிதோலார்
நாதா எனவும் நக்கா எனவும்
நம்பா என நின்று
பாதம் தொழுவார் பாவம்
தீர்ப்பார் பழன நகராரே.

அவிட்டம் :

எண்ணும் எழுத்தும் குறியும்
அறிபவர் தாம் மொழியப்
பண்ணின் இடைமொழி பாடிய
வானவரதா பணிவார்
திண்ணென் வினைகளைத்
தீர்க்கும் பிரா திருவேதிக்குடி
நண்ணரிய அமுதினை
நாம் அடைந்து ஆடுதுமே.

சதயம் :


கூடிய இலயம் சதி பிழையாமைக்
கொடி இடை இமையவள் காண
ஆடிய அழகா அருமறைப் பொருளே
அங்கணா எங்கு உற்றாய் என்று
தேடிய வானோர் சேர் திருமுல்லை
வாயிலாய் திருப்புகழ் விருப்பால்
பாடிய அடியேன் படுதுயர் களையாய்
பாசுபதா பரஞ்சுடரே.

பூரட்டாதி :

முடி கொண்ட மத்தமும் முக்கண்ணனின்
நோக்கும் முறுவலிப்பும்
துடிகொண்ட கையும் துதைந்த
வெண்ணீறும் சுரிகுழலாள்
படி கொண்ட பாகமும் பாய்புலித்
தோலும் என் பாவி நெஞ்சில்
குடி கொண்டவா தில்லை அம்பலக்
கூத்தன் குரை கழலே.

உத்திரட்டாதி :

நாளாய போகாமே நஞ்சு
அணியும் கண்டனுக்கு
ஆளாய அன்பு செய்வோம்
மட நெஞ்சே அரன் நாமம்
கேளாய் நம் கிளை கிளைக்கும்
கேடுபடாத்திறம் அருளிக்
கோள் ஆய நீக்குமவன்
கோளிலி எம்பெருமானே.

ரேவதி :

நாயினும் கடைப்பட்டேனை
நன்னெறி காட்டி ஆண்டாய்
ஆயிரம் அரவம் ஆர்த்த
அமுதனே அமுதம் ஒத்து
நீயும் என் நெஞ்சினுள் நிலாவிளாய்
நிலாவி நிற்க
நோயவை சாரும் ஆகில் நோக்கி
நீ அருள் செய்வாயே.


நீங்கள் நட வேண்டிய நட்சத்திர விருட்சம் or விருட்ச சாஸ்திரப்படி
27 நட்சத்திரக்காரர்களின் மரங்கள்

மரக்கன்றை நட்டதும் அவரது கையால் நவதானியங்களைஊற வைத்த நீரை அச்செடிக்கு விட்டு ஊறிய   நவதானியங்களையும் அந்தமரக்கன்றுக்கு உரமாகப்போட வேண்டும்.

இப்படிச் செய்த மறு விநாடிமுதல்,அம்மரக்கன்று வளர,வளர அதைநட்டவரின் வாழ்க்கைமலரும்.அந்த மரக்கன்றைநட்டவரின் பிறந்த ஜாதகத்தில் இருக்கும்அனைத்து தோஷங்களையும்அந்த மரக்கன்று ஈர்த்துவிடும்.
அம்மரக்கன்று பூத்து,காய்க்கும்போது,உரியவரின்வாழ்க்கையும் செழிப்பாகத்துவங்கும்.அவரதுகர்மவினைகள் நீங்கியிருக்கும்.கர்மவினைகளை வெற்றிகொள்ள விருட்ச சாஸ்திரம்இப்படிஒரு வழிகாட்டுகிறது.

இப்போது உங்களது பிறந்த நட்சத்திரத்துக்குரியவிருட்சம் எனப்படும் மரம் எதுவெனப்பார்ப்போம்:

அஸ்வினி
1 ம் பாதம் - காஞ்சிதை (எட்டி)
2 ம் பாதம் - மகிழம்
3 ம் பாதம் - பாதாம்
4 ம் பாதம் - நண்டாஞ்சு

பரணி
1 ம் பாதம் - அத்தி
2 ம் பாதம் - மஞ்சக்கடம்பு
3 ம் பாதம் - விளா
4 ம் பாதம் - நந்தியாவட்டை

கார்த்திகை
1 ம் பாதம் - நெல்லி
2 ம் பாதம் - மணிபுங்கம்
3 ம் பாதம் - வெண் தேக்கு
4 ம் பாதம் - நிரிவேங்கை

ரோஹிணி
1 ம் பாதம் - நாவல்
2 ம் பாதம் - சிவப்பு மந்தாரை
3 ம் பாதம் - மந்தாரை
4 ம் பாதம் - நாகலிங்கம்

மிருகஷீரிஷம்
1 ம் பாதம் - கருங்காலி
2 ம் பாதம் - ஆச்சா
3 ம் பாதம் - வேம்பு
4 ம் பாதம் - நீர்க்கடம்பு

திருவாதிரை
1 ம் பாதம் - செங்கருங்காலி
2 ம் பாதம் - வெள்ளை
3 ம் பாதம் - வெள்ளெருக்கு
4 ம் பாதம் - வெள்ளெருக்கு

புனர்பூசம்
1 ம் பாதம் - மூங்கில்
2 ம் பாதம் - மலைவேம்பு
3 ம் பாதம் - அடப்பமரம்
4 ம் பாதம் - நெல்லி

பூசம்
1 ம் பாதம் - அரசு
2 ம் பாதம் - ஆச்சா
3 ம் பாதம் - இருள்
4 ம் பாதம் - நொச்சி

ஆயில்யம்
1 ம் பாதம் - புன்னை
2 ம் பாதம் - முசுக்கட்டை
3 ம் பாதம் - இலந்தை
4 ம் பாதம் - பலா

மகம்
1 ம் பாதம் - ஆலமரம்
2 ம் பாதம் - முத்திலா மரம்
3 ம் பாதம் - இலுப்பை
4 ம் பாதம் - பவளமல்லி

பூரம்
1 ம் பாதம் - பலா
2 ம் பாதம் - வாகை
3 ம் பாதம் - ருத்திராட்சம்
4 ம் பாதம் - பலா

உத்திரம்
1 ம் பாதம் - ஆலசி
2 ம் பாதம் - வாதநாராயணன்
3 ம் பாதம் - எட்டி
4 ம் பாதம் - புங்கமரம்

ஹஸ்தம்
1 ம் பாதம் - ஆத்தி
2 ம் பாதம் - தென்னை
3 ம் பாதம் - ஓதியன்
4 ம் பாதம் - புத்திரசீவி

சித்திரை
1 ம் பாதம் - வில்வம்
2 ம் பாதம் - புரசு
3 ம் பாதம் - கொடுக்காபுளி
4 ம் பாதம் - தங்க அரளி

சுவாதி
1 ம் பாதம் - மருது
2 ம் பாதம் - புளி
3 ம் பாதம் - மஞ்சள் கொன்றை
4 ம் பாதம் - கொழுக்கட்டை மந்தாரை

விசாகம்
1 ம் பாதம் - விளா
2 ம் பாதம் - சிம்சுபா
3 ம் பாதம் - பூவன்
4 ம் பாதம் - தூங்குமூஞ்சி

அனுஷம்
1 ம் பாதம் - மகிழம்
2 ம் பாதம் - பூமருது
3 ம் பாதம் - கொங்கு
4 ம் பாதம் - தேக்கு

கேட்டை
1 ம் பாதம் - பலா
2 ம் பாதம் - பூவரசு
3 ம் பாதம் - அரசு
4 ம் பாதம் - வேம்பு

மூலம்
1 ம் பாதம் - மராமரம்
2 ம் பாதம் - பெரு
3 ம் பாதம் - செண்பக மரம்
4 ம் பாதம் - ஆச்சா

பூராடம்
1 ம் பாதம் - வஞ்சி
2 ம் பாதம் - கடற்கொஞ்சி
3 ம் பாதம் - சந்தானம்
4 ம் பாதம் - எலுமிச்சை

உத்திராடம்
1 ம் பாதம் - பலா
2 ம் பாதம் - கடுக்காய்
3 ம் பாதம் - சாரப்பருப்பு
4 ம் பாதம் - தாளை

திருவோணம்
1 ம் பாதம் - வெள்ளெருக்கு
2 ம் பாதம் - கருங்காலி
3 ம் பாதம் - சிறுநாகப்பூ
4 ம் பாதம் - பாக்கு

அவிட்டம்
1 ம் பாதம் - வன்னி
2 ம் பாதம் - கருவேல்
3 ம் பாதம் - சீத்தா
4 ம் பாதம் - ஜாதிக்காய்

சதயம்
1 ம் பாதம் - கடம்பு
2 ம் பாதம் - பரம்பை
3 ம் பாதம் - ராம்சீதா
4 ம் பாதம் - திலகமரம்

பூரட்டாதி
1 ம் பாதம் - தேமா
2 ம் பாதம் - குங்கிலியம்
3 ம் பாதம் - சுந்தரவேம்பு
4 ம் பாதம் - கன்னிமந்தாரை

உத்திரட்டாதி
1 ம் பாதம் - வேம்பு
2 ம் பாதம் - குல்மோகர்
3 ம் பாதம் - சேராங்கொட்டை
4 ம் பாதம் - செம்மரம்

ரேவதி
1 ம் பாதம் - பனை
2 ம் பாதம் - தங்க அரளி
3 ம் பாதம் - செஞ்சந்தனம்
4 ம் பாதம் - மஞ்சபலா

தங்களுக்குரிய நட்சத்திரங்கள் , பாதங்கள் அறிந்து விருட்சங்கள் வளர்த்து
வளம் பெறுங்கள்..

சில மரங்கள் -நீங்கள் கேள்விப்படாததாக இருக்கலாம்.அருகில் இருக்கும் சித்தமருத்துவரையோஅல்லதுகூகுள் லெ யோ தேடிப்பாருங்கள்.. இல்லையா , அந்தநட்சத்திரத்துக்கு மற்றபாதங்களுக்குரிய -பரிச்சயமான மரங்களை வளர்க்கலாம்.

மரங்களை சாதாரணமாக நினைத்து விடாதீர்கள். ஒவ்வொரு ஆலயத்திற்கும் ஸ்தல விருட்சங்கள் உண்டு. அந்த ஸ்தல விருட்சத்தின் அடியில்அருகில் நீங்கள் அமர்வது , நீங்கள் அந்த ஆலயத்தின் கருவறைக்குள் அமர்வதுக்கு ஒப்பானது. ஆலயத்தை சுற்றி இருக்கும் அருள் அலைகளை ஸ்தல விருட்சம் கிரகித்து வெளியிடுகிறது..  திருவண்ணாமலை சென்றால்அந்த மகிழ மரத்தடியில் சில நிமிடங்கள் அமர்ந்துஉணர்ந்து பாருங்கள்..  உங்கள் ஊரில் அருகில் இருக்கும் ஸ்தலங்களில் விருட்சங்களின் அடியில் அமர்ந்து உணர்ந்து பார்த்துவிட்டு ... உங்கள் அனுபவங்களை எழுதுங்கள் .. 

நன்றி :      http://elakumana.blogspot.in/2013/06/blog-post_22.html


நிறைவான வளம் பெற வாழ்த்துக்கள்

அன்பன் கருணாகரன் 

Related Posts Plugin for WordPress, Blogger...