என்னை தொடர்ந்து

வாருங்கள், நண்பரே வணக்கம். தங்கள் வருகையை பதிவு செய்யுங்களேன் !அன்புடன் கருணாகரன்6,இடைப்பாடி. அன்பர்களே ! முழுக்க முழுக்க தமிழில் திருக்கணித முறையில் ஜாதகம் கணிக்க வேண்டுமா? உங்கள் பெயர், பெற்றோர் பெயர், பிறந்த தேதி, மாதம் வருடம், பிறந்த இடம் போன்ற விபரங்களை தாருங்கள், உங்கள் ஜாதகம் கூரியர் மூலமாக உங்களுக்கு அனுப்பி வைக்கப்படும்.( நள்ளிரவில் இரவு 12.00 மணிக்கு மேல் காலை 7.00 மணிக்குள் பிறந்திருந்தால் விடிந்தால் என்ன கிழமை என குறிப்பிடவும்.K.செந்தில்குமார்,கணேஷ் கம்ப்யூட்டர்ஸ்,34,கடைவீதி, இடைப்பாடி,சேலம் மாவட்டம்-637101.

Saturday, December 31, 2016

உங்கள் கேள்வி அடியேன் பதில்

ஓம் நமசிவய :

கேள்வி :

 உயிர் வேறு ஆன்மா வேறு பின் ஏன் இரண்டும் ஒன்றாக சென்று வருகின்றன விளங்கவில்லை, விளக்கம் தாருங்கள்.

பதில் :

அன்பிற்குரிய அய்யா , உயிர் என்பதும் ஆத்மா என்பதும் ஒன்றே
ஆனால் ஆத்மா வேறு ஆன்மா வேறு.  ஆன்மா என்பது பூமியில் பிறந்துள்ள அனைத்து உயிர்களுக்கும் பொதுவானஒன்றே ஆனது. எம்பெருமான் எனும் மூல ஜோதியில் இருந்து உருவானது. ஆத்மா எனப்படும் உயிரானது பல பிறப்புகளில் தான் பெற்றிருந்த உடலால் செய்த பாபங்களையோ புண்ணியங்களையோ கரைப்பதற்க்காக கர்ம பூமியில்(பூலோகத்தில்) அவதரிக்கின்றது
அவ்வாறு அவதரிக்குங்கால் அதற்கு அதனை அது யார் என நினைவூட்டவும் ,அந்த உயிர் வந்த நோக்கம் தெரிவிக்கவும் அதனுடன்ஆன்மா பயணிக்கின்றது 

ஓம் நமசிவய .

எது தர்மம்? இதை சரியாக புரிந்து கொள்ள முடியவில்லை ஐயனே

தர்மம் எது ?
தர்மத்திற்கு ஒரு சிறு உதாரணம் சொல்கின்றேன் .
ஒரு நண்பரை நம் வீட்டுக்கு அழைக்கின்றோம் அவர் வருகின்றார் . நாம் அவரை அமரச்செய்து அவருக்கு வேண்டியவற்றை செய்கின்றோம்.
இப்போது நமது வீட்டிக்குள் நாம் அங்கும் இங்கும் செல்ல வேண்டியுள்ளதற்காக அவரை அதாவது நம் வீட்டிற்கு வந்துள்ள நண்பரை அவர் அமர்ந்துள்ள இடத்தில இருந்து நகரச் செய்வது , TV தெரியவில்லை கொஞ்சம் சாய்ந்து கொள்ளுங்கள் - அங்கு வேண்டாம் இங்கே வந்து அமர்ந்து கொள்ளுங்கள் என வேறு இடத்தில் அவரை எழுந்து அமரச் செய்வதும் தர்மம் இல்லாத செயலாகும்.

ஓம் நமசிவய

அப்படியானால் இன்று உலகில் நடைபெறும் அனைத்து காரியங்களுமே அதர்ம செயலே ஆகும்.
இது கலியின் பாதையில் செல்லும் லோக வர்த்தமான செயலாகும்.
இதிலிருந்தும் தப்புகின்றவனே மெய்ஞானவான் . துஷ்டர்களின் மத்தியில் இருந்த விதுரனைபோல 
.
ஒரே வரியில் சொல்வதென்றால் மனசாட்சிக்கு த்ரோகம் அதாவது உறுத்தாத விசயத்தை செய்வதே தர்மமாக எடுத்துக்கொள்ளாலாமா இந்த கலியில் .

நிச்சயமாக ... அருமை மிக சரியாக சொல்லிவிட்டீர்கள் ஓம் நமசிவய .
மிக்க நன்றி ஜி. திருச்சிற்றம்பலம்



ஓம் நமசிவய

உங்களால் உங்களுக்கு மாற்றம் உண்டு

ஓம் நமசிவய
அன்பிற்குரியோர்களே,
மகனின் கேள்வி
Prasah JM :

அந்த மூலவித்துவுக்கு தெரியுமல்லவா நான் என்பது யார் என்று..
அப்படி எனில் என் தவறுகளை என்னிடமிருந்தே மறைக்கின்றேனா..
என் தவறுக்களுக்கான காரணங்களை நானே உருவாக்கி நியாயப்படுத்திக்கொள்கின்றேனா..
என் தவறுகளும் தெரிந்தே செய்த தப்புகளுமே மனதில் தோன்றுகின்றது அப்பா..
தெளிவில்லாமல் தவிக்கின்றேன் அப்பா.
பதில் :

மகனே , இதில் குழப்பம் கொள்ள எதுவுமில்லை , மனிதனின் நற்செயலோ , தீயசெயலோ அவனால் ஏற்படுவதில்லை,

இயற்கையின் நீதியில் மனிதமனத்தின் ஆசைகள் எதுவாயினும் அது நிறைவேற்றப்படவேண்டும் .

ஒரு மனிதனோ வேறு ஜீவனோ ஏதேதோ ஆசைகளை உள்ளடக்கி வைத்திருக்கும்.

அவைகள் நிறைவேறாமலே அந்த ஜீவனின் ஆத்மா அதனிடமிருந்து பிரிந்திருக்கும்.

அவ்வாறான ஆத்மாக்களின் மறு பிறப்பில் அவைகளை நிறைவேற்றவேண்டிய கட்டாயத்தில் இயற்கை இருக்கின்றது.

ஆதலால்,

அந்த ஆத்மா தனது தீராத ஆசைகளை நிறைவேற்றிக் கொள்வதற்கான பூரண வாய்ப்பையும் உருவாக்கித் தருகின்றது.

தனது ஆசையானது இறைவழியைச் சார்ந்ததாக இருந்து அந்த ஆத்மா அந்த வாய்ப்பினை தனக்கு சாதகமாக பயன்படுத்தி தன்னை உயர்த்திக்கொண்டாலும்,

அல்லது

தனது ஆசையானது காம க்ரோத மார்க்கமாக இருந்து அதனை கடுமையை கையாண்டு நிறைவேற்றிக் கொண்டாலும் இயற்கை எவ்விதத்திலும் தடுக்காமல் நிறைவேற்றி வைக்கும் .

ஆனால் அதற்குண்டான மன சங்கடங்களையும், வேதனைகளையும், துன்பங்களையும், பிரிவையும் அந்த ஆத்மாவிற்குரிய மனிதன்,

மனைவி, குழந்தைகள், பெற்றோர், உற்றார், நண்பர்கள் மூலமாக கட்டாயம் அனுபவித்தே தீரவேண்டும்.

உதாரணமாக :

நாம் நமக்கு ஆசையாக இருக்கின்றதற்காக சில உணவுவகைகளை அவை நமக்கு ஒவ்வாது என்று தெரிந்தே உண்டுவிடுகின்றோம்.

ஆனால் அந்த செயலை நமது வயிறு எக்காரணம் கொண்டும்- செய்யாதே!! என்று நம்மை தடுப்பதில்லை – நம்மை நம் போக்கிலேயே விட்டு விடுகின்றது.

ஆனால் நாம் உண்டதின் பலனாக நமக்கு வரும் வயிறு சம்பந்தமான அல்லது உடல் சம்பந்தமான வலிகளையும் வேதனைகளையும்
நம்மோடு சேர்ந்து நமது வயிறும் அனுபவிக்கின்றதைப் போல என சொல்லலாம்.

பார்த்தது கண்கள், 

ஆசை கொண்டது மனது, 

எடுத்தாண்டது கைகள், 

உண்டது வாய், 

அனைத்தையும் செயலாக்கம் செய்தது மூளை ,

ஆனால் வேதனை அவைகளுக்கில்லை.

வேதனை முழுவதும் உடலுக்கு மட்டும் அல்லவா ?

இதைபோலவே இயற்கை நம்மை நம்போக்கில் விட்டு நம்மோடு சேர்ந்து அதுவும் துன்பப்படுகின்றது.

மாற்றம் காண்பது மனிதனிடமே உள்ளது. சீரிய சிந்தனைத்திறன் கொண்ட மனிதன் தன்னை முழுவதுமாக மாற்றிக் கொள்ளமுடியும்.

நாம் நமது மனதினை எக்காரணம் கொண்டும்
காம க்ரோத மதமாச்சர்யங்களில் சிக்கிகொள்ளாமல்
சிந்தையை சிதறவிடாமல்

எதுவரினும் சத்யமான பாதையை
நோக்கியே பயணித்தால்
எல்லாம் நலமாகவே முடியும் .

ஓம் நமசிவய.
Related Posts Plugin for WordPress, Blogger...