என்னை தொடர்ந்து

வாருங்கள், நண்பரே வணக்கம். தங்கள் வருகையை பதிவு செய்யுங்களேன் !அன்புடன் கருணாகரன்6,இடைப்பாடி. அன்பர்களே ! முழுக்க முழுக்க தமிழில் திருக்கணித முறையில் ஜாதகம் கணிக்க வேண்டுமா? உங்கள் பெயர், பெற்றோர் பெயர், பிறந்த தேதி, மாதம் வருடம், பிறந்த இடம் போன்ற விபரங்களை தாருங்கள், உங்கள் ஜாதகம் கூரியர் மூலமாக உங்களுக்கு அனுப்பி வைக்கப்படும்.( நள்ளிரவில் இரவு 12.00 மணிக்கு மேல் காலை 7.00 மணிக்குள் பிறந்திருந்தால் விடிந்தால் என்ன கிழமை என குறிப்பிடவும்.K.செந்தில்குமார்,கணேஷ் கம்ப்யூட்டர்ஸ்,34,கடைவீதி, இடைப்பாடி,சேலம் மாவட்டம்-637101.

Thursday, October 21, 2010

வினை என்பது என்ன ?

அன்பானவர்களே ! எல்லோரும் வினை செய்தவன் வினையறுப்பான், எல்லாம் எனது வினை என்கிறார்களே, அது என்ன வினை ?

பார்ப்போமா?

ஒருவர் செய்யும் கர்மாவானது (காரியம்) இந்த உலகில் நம்மோடு ஜனித்துள்ள யாரையும், 

எந்த ஜீவனையும் பாதிக்காத வண்ணமிருந்தால் அது சுபகர்மாவாகவும், எந்த ஒரு 

ஜீவனையாவது பாதிக்குமானால் அது அசுப கர்மாவாகவும் உண்டாகிறது. இந்த 

பூலோகமானது தன்னுள் பிறந்த எல்லாஉயிர்களுக்கும் பொதுவானது. இங்கு வாழ்வதற்கு மனிதனுக்கு உள்ளது போலவே மற்ற உயிரினங்களுக்கும் சம உரிமை உண்டு.

என்ன நாம் எண்ணிய பின் செய்கிறோம், பிற உயிர்கள் எண்ணிய உடன் செய்கின்றன.

சரி வினைக்கு வருவோம்..

எந்த ஒரு ஜீவனுக்கும் பாதிப்பு ஏற்படாத வகையில் யாருக்கும், எந்த ஒரு ஜீவனுக்கும் 

வாழ்வின் அமைப்பு நிலை அமைக்கப் படவில்லை என்பதை முதலில் அறிக.

உயிர் வளர்க்க தேவையான உணவு, இருப்பிடம், தொழில் என பூமியில் எல்லா 

உயிர்களுக்கும் (மனிதனுக்கு + எதிர்காலம் ) அமைந்துள்ள வாழ்வியல் முறைகள் 

எல்லாமே ஏதேனும் ஒரு வகையில் பிற ஜீவனுக்கு பாதிப்பைத் தரும் வகையில் 

இயற்கையாகவே அமைக்கப்பட்டிருக்கிறது.

அப்படி என்றால் நாம் செய்யும் காரியம் எல்லாமே அசுப கர்மாதானா ? என்பதுதானே உங்கள் கேள்வி?


அப்படி இல்லை, அப்படி ஒரு காரியம் நம்மை செய்ய வைத்து நமக்கு வினையை உருவாக்கும் சிறுமதி கொண்டதல்ல இயற்கை எனும் இறைவன் மனம்.

ஒவ்வொரு நிகழ்வும் ஒன்றன் தொடர்பாகவேதான் அமைகின்றன.

மிருகங்கள் தனது தேவைகளை மாற்றி அமைத்துக் கொள்வதில்லை. உலகில் உயிரினம் தோன்றிய காலத்திலிருந்தே உணவு, ஆடை, இருப்பிடம் எல்லாவற்றிலும் மாற்றம் கொண்டவன் மனிதன் மட்டுமே என்பதை நினைவில் கொள்க.

ஆடு, மான், ஒட்டகசிவிங்கி, ஒட்டகம், மாடு, யானை போன்ற விலங்குகள் அன்றும் இன்றும் ஒரே உணவுதான்.

சிங்கம், கரடி, புலி போன்ற விலங்குகள் அன்றும் இன்றும் ஒரே உணவுதான். நாய், பூனை போன்ற விலங்குகள் மனிதனிடம்  தோழமை கொண்டதால் இவைகளின் உணவில் கொஞ்சம் மாற்றம் உண்டு.

ஆனால் மனிதர்களாகிய நமது உணவு பழக்கம் மட்டும் பலவாறாக மாற்றம் கண்டு விட்டது. என்னென்னவோ உண்டு பழகி இன்று எப்படி எப்படியோ ஆகிவிட்டோம்.

இயற்கையின் பாதையில் என்றுமே தவறுகள் இல்லை. நாம் நமது எல்லையைத் தாண்டி (இயற்கை நமக்கு அளித்துள்ள) பயணப்படும் போதுதான் அது அசுபகார்யமாக உருவாகிறது.
உதாரணமாக நமது நண்பரை அவரது உயரிய குணங்களை மதித்து நமது வீட்டில் தங்கிக்கொள்ள அனுமதிக்கிறோம் ஆனால் அவரது நடவடிக்கைகள் (நாம் அவருக்கு தந்திருக்கும்) எல்லையை மீறும்போது நாம் அவரது குணம், பெருமை எதையும் யோசிக்கமாட்டோம் அல்லவா?

     இந்த பரந்த உலகை அளித்துள்ள இயற்கை அதனுடைய கரங்களின் உள்ளேதான் அனைத்து ஜீவராசிகளையும் (நம்மையும் சேர்த்துதான்) வைத்துள்ளது. நாம் இல்லையென்றாலும் சரி, ஒப்புக்கொண்டாலும் சரி உண்மை அதுதான்.எல்லா உயிரினங் களுக்கும் இயற்கை ஒரு பவுண்டரி வைத்துள்ளது, அதை மீறி நடந்தால் அது எந்த ஜீவனாக இருந்தாலும் அது செய்யும் கார்யம் அசுப கார்யம்தான். அதற்கு உண்டான பலன் கிடைத்தே தீரும்.
 அந்த பலன்கள் பலனாளர்களுக்கு நலம் தந்தால் புண்ய மென்றும், சிரமம் தந்தால் பாபமென்றும் நாம் சொல்லிக் கொள்கிறோம். இதைதான் நாம் வினைகள் என்று கூறுகிறோம். 

        

Thursday, October 14, 2010

இல்லறவாசியும் இறையுணர்வுஞானியும் ஓர் ஒப்பீடு (சும்மாதான்)




அன்பார்ந்தவர்களே! இல்லறவாசியும், இறையுணர்வுஞானியும் ஓர் ஒப்பீடு (சும்மாதான்)
அது என்ன இல்லறவாசியை முதலில் சொல்லி பின் இறையுணர்வுஞானியை இரண்டாவதாக சொல்வது என்கிறீர்களா?


விஷயம் இருக்கிறது, சொல்கிறேன்.


கவலைகளில் பலவிதங்கள் உள்ளன, பையன் அல்லது பெண்ணுக்கு படிப்பு, திருமணம், வேலை, உடல்நலம் என ஒரு பக்கம்.

மனைவிக்கு உடல்நலம், மனம் ஒத்துபோகாமை, வேலை செய்யும் இடத்தில் சிறு, பெறு சங்கடங்கள், தனக்கே உடல்நலம், மனநலம், முயற்சியின் தோல்வி, நஷ்டம், கஷ்டம் என பல்வேறு கவலைகள்.

பெற்றோருக்கு உடல்நலம், அவர்களை சரியாக கவனிக்க முடியாமை இப்படி இல்லறவாசிக்கு அடுக்குமலைத் தொடரென கவலை அலைகள்.

ஆனால் இறையுணர்வுஞானிக்கு அதெல்லாம் இல்லை அவரது நோக்கமெல்லாம் தான் இறைவனை சேருவது எப்படி எனும் ஒரே கவலைதான். அதில் அவருக்கு தனது மனம் அடங்காமை, தனது யோகநிலை பலிதம், தனது பூஜை, தனது த்யானம் என எல்லாம் தனது எனும் சுயநோக்கம்தான் அதிகம் காணப்படுகிறது.

இந்த விஷயத்தில் இல்லறவாசி தன்னை நாடிவந்த பெண்ணையும், தனக்கு பிறந்த குழந்தைகளையும், தன்னை பெற்றோர்களையும் என தன் உயிரையும், தனக்கு உயிர் தந்தவர்களையும், தன்னால் உயிர் பெற்றவர்களையும், தன்னையே நம்பியவளையும் காக்கும் மிகப் பெரிய பொறுப்பை ஏற்கிறான்.

நமது இறையுணர்வுஞானிக்கு இந்த விஷயங்கள் ஏதும் கிடையாது. எனக்கு ஞானம் வந்து நான் ஞானியாகிவிட்டேன் என எல்லாவற்றையும் உதறித் புறந்தள்ளி விட்டு புறப்பட்டுவிடுகிறார்.

அதனால்தான் இல்லறவாசியை முதலிலும், இறையுணர்வுஞானியை அடுத்தும் அமைத்தேன்.

இந்த இருவரையும் ஓர் ஒப்பீடு செய்தால் பலவித கவலைகளில் உழன்று தானும் வாழ்ந்து, தன்னை நம்பிய உயிர்களையும் காப்பாற்றும் இல்லறவாசி ஒருபடி மேலே தெரிகிறான்.

தனக்கு மட்டுமே, தனது ஆன்மா மட்டுமே உயர்வு பெற, உடலை வருத்தும் இறையுணர்வுஞானி என்னதான் ஞானியாக இருந்தாலும் ஒருபடி கீழே இருப்பதாகதான் தெரிகிறது.

இன்னும் இல்லறவாசி என்பவன், இறைவனின் பணியை அதாவது உயிர்களை காக்கும் பணியை மனைவி,குழந்தைகள்,பெற்றோர் ஆகியோரை இல்லறவாசி காப்பதால் இறைவனுக்கு (இந்த நபர்களை) காக்கும் வேலை பளு குறைகிறது.

ஆக இல்லறவாசி இறைவனை வணங்காமலே இருந்தாலும் கூட இறைவனுக்கு சகாயம் செய்கிறான்.

இறையுணர்வுஞானியோ தான் என்ன பாபங்கள் செய்திருந்தாலும் என்னை ஏற்று எனக்கு ஞானம் தந்து என்னை ஏற்றுக்கொள் என இறையவனுக்கு கொஞ்சம் தர்ம சங்கடத்தை உண்டு பண்ணுகிறார் என்பதும் புலனாகிறது.


ஆக, மானிடர்களான நாம் வாழும் இந்த பரந்த பூமியில் இல்லறவாசியே ஞானியைக்காட்டிலும் உயர்ந்தவனாக(ராக) அடியேனின் பார்வையில் தெரிகிறார்.


அன்புடன் கருணாகரன்6.இடைப்பாடி.             
                         

Tuesday, October 12, 2010

விதியோடு கைசேர்த்து

அன்பார்ந்தவர்களே!விதியோடு கைசேர்த்து நடப்பதில் நமக்கு (மனிதருக்கு) இணை வேறுயாருமில்லை, நன்றாக இருப்பவரைப் பார்த்து அவருக்கு நேரம் உச்சத்திலே .....என்போம், அதுவே கஷ்டம்னு வந்தால் அவர் விதி என்போம். 

இப்படி எழுதப்படாத பலவித நியாயங்களை நாம் நமக்கென உருவாக்கி வைத்துக் கொண்டுள்ளோம். தேவைப்படும்போது வேண்டுவதை எடுத்து அங்கே வைத்துக் கொள்வோம்.
     விதி என்ற ஒன்று என்னவென்றே தெரியாதபோது ஏனிந்த மயக்கம்? நமக்கு முன்பாக உள்ள இரண்டு அல்லது மூன்று பாதைகளில் ஒன்றைத்தான் தேர்ந்து எடுக்கவேண்டும் என்ற நிலை வந்தால் மூன்றின் வழியிலும் உள்ள கஷ்ட, நஷ்ட, சாதக,பாதகங்களை கண்டு, விசாரித்து, உணர்ந்து தெளிந்து பின் நாமே ஒரு   தேர்ந்தெடுத்த வழியில் சென்றாலும் சரி ,

இல்லை எனக்கு எல்லாமே தெரியும் ஏற்கனவே நான் சென்ற வழிதான் என்று ஒரு பாதையை நாமாகவே தேர்ந்தெடுத்து சென்றாலும் சரி ,

இல்லையில்லை இந்த மூன்றுமே சரியில்லை என நமக்கென  ஒரு பாதையை உருவாக்கி அதிலே பயணித்தாலும் சரி - அதுவரை சும்மா இருந்த விதி ஆமாம் அதுவரை நமது நடவடிக்கையை ரசித்து பார்த்துக்கொண்டிருந்த விதி நம் பயணம் துவங்கிய உடனே அதற்கான லிங்க்கு (தொடர்பு)களை ஏற்படுத்த ஆரம்பிக்கிறது,

இப்போது விதி பாதையை தேர்ந்தெடுக்கும் போதும் நம்  பொறுப்பில் விட்டுவிட்டது. பயண துவக்கத்தையும் நமது பொறுப்பில்தான் விட்டுவிட்டது. நாமே தான் முழுபொறுப்பில் ஏற்றுக் கொண்டோம்.

ஆனால் நமது தீர்மானம் சிறந்ததாகி வெற்றிபெற்றால் அது எனது உழைப்புக்கு கிடைத்த வெற்றியாகவும், நமது  கணிப்பு தவறாகி நாம்  தோல்வியை தழுவினால் எல்லாம் என் விதி அல்லது எல்லாம் என் தலையெழுத்து, நான் என்ன செய்வேன் என்றும் சொல்கிறோம்.

ஏனிந்த மயக்கம்?

காரணம் எனது கணிப்பு தவறாகாது என்ற எனது எண்ணம் முதல் காரணம்.

இரண்டாவது எனக்கு புத்திமதி சொல்லும் அளவிற்கு உனக்கு என்ன தெரியும் எனும் மனோபாவம்.

மூன்றாவது வேறு ஒருவர் எனது வழியில் வந்து செல்வது பிடிக்காதது.

நான்காவது இன்பமோ, துன்பமோ என்னால் வந்ததாகவே இருக்கட்டும் என்ற எண்ணமும் ஒரு காரணமாகிறது.

ஆனால் வெற்றியும், புகழும் , சாதனையும், தனி மனிதனால் செய்யமுடியாது எந்த சாதனைக்கும் உடன் யாராவது ஒருவர் கண்டிப்பாக துணை இருப்பர்.

காபி குடிப்பது மிக சாதாரண ஒரு காரியம்தான், ஆனால் அதற்கும் மூன்று, நான்கு நபர்களின் ஒத்தாசை தேவைப்படுகிறது அல்லவா?  

நமது எண்ணம் சிறந்ததாகவும், உயர்ந்ததாகவும் இருந்தால் மட்டும் போதாது, மனமும், மனம் சார்ந்த செயலும் உயர்ந்தாகவும் பொதுநல நோக்கோடும் இருத்தல் அவசியமாகிறது.

இப்போதும் விதி நமக்கு குறுக்கே நிற்பதில்லை, அது நமது செயல்களை பதிவு செய்து கொண்டே வருகிறது அவ்வளவே, நலமாக முடிந்தால் நமது செயல், இல்லையென்றால் விதி என்று சொல்லும் போதுதான் விதி சிரிக்கிறது.

அன்புடன் கருணாகரன்6.இடைப்பாடி

Monday, October 11, 2010

ஒவ்வொரு சாதனையும்


அன்பானவர்களே ! நாம் காணும் எந்த ஒரு சாதனையாளரும் தனது சாதனையை நொடியில் சாதித்தில்லை,பலநாட்கள் முயன்று,பலநூறு முறை தோற்று, கிண்டலுக்கும், கேலிக்கும் ஆளாகி சலிக்காமல் தனது நோக்கம்,எண்ணம்,செயல் என ஒரே நேர்கோட்டில் பயணித்ததால் சாதித்தார்கள்.

நாம் ஏதாவது சாதனை செய்தால் உடனே அதனுடைய வெற்றியை காண துடிக்கிறோம், வரவில்லை என்றால் சோர்ந்து போகிறோம், அதுமட்டுமல்ல, மீண்டும் முயற்சிப்பதுமில்லை.


பொறுமையும்,விடாமுயற்சியும், சாதிக்கவேண்டும் என்ற ஒரே நோக்கமும் இருந்தால் மட்டுமே சாதனையை செய்ய இயலும். 

பலநாட்கள் உறக்கமும், பசியும், உடல் மற்றும் மன ஒற்றுமையும் கலந்ததே ஒரு சாதனை.

இதனை நினைவில் கொள்ளவேண்டியது சாதனை செய்ய எண்ணுபவர்களின் முதல் விதியாகும்.


நம்மை நாம் புடம் போடுவோம்.


பற்பல சாதனைகள் செய்வோம், நாட்டுக்கும் வீட்டுக்கும் பெருமை சேர்ப்போம்.


அன்புடன் கருணாகரன்6.இடைப்பாடி.   

Friday, October 8, 2010

எதிர்மறை சிந்தனைகள்

அன்பானவர்களே! உங்கள் அனைவருக்கும் அடியேனின் அன்பு வணக்கங்கள்.


நமது வாழ்வில் ஏன் துன்பம் தொடர்கதையானது ?


நமது எண்ணமே நமது வாழ்வை அமைக்கிறது. 
அதிகமாக எண்ணும் எண்ணமானது, அவரவர் வாழ்வை தீர்மானிக்கிறது.

மனம் போல் வாழ்வு,

எண்ணம் போல் வாழ்வு,

மனம் போல் வாழ்வாய் மகளே என்பார்கள் பெரியோர்.


ஞானிகளும், மகரிஷிகளும், முனிவர்களும் ஒரு வார்த்தையை சொல்லி இதனை விடாமல் உச்சரித்து வந்தால் உனக்கு இந்த தெய்வம் பலன் தரும் என்று சொல்கிறார்களே அது என்ன தெரியுமா? 

நாம் எதனை விடாமல் சொல்லி வருகிறோமோ அல்லது செய்து வருகிறோமோ அது நமக்கு கிடைக்கும் என்பதுதான் பொருள்.

உண்மையில் நடப்பது என்ன தெரியுமா?.

நாம் எல்லோரும் இறையருளுடன் கூடிய அமைதியான, சந்தோஷமான, யாரையும் தூஷிக்காத, நலமான, வளமான வாழ்வைத்தான் விரும்புகிறோம் .......

ஆனால் துரதிர்ஷ்டவசமாக நமது எண்ணமெல்லாம் துன்பத்தையும், வாழ்வின் இயலாமையையும், முடிந்துபோன தோல்வியையும், முறிந்துபோன உறவையும், பிரிந்துபோன சொந்தங்களையும் என்று நமது நொந்துபோன வாழ்நாளை இடைவிடாது நினைத்தே அல்லது விடாமல் சொல்லியே வாழ்கிறோம்.

அதனால்தான் அதுவே ஒரு மந்த்ரமாக உருமாறி பின் அதுவே நமக்கு ஒரு வரமாகி பலன்தர துவங்குகிறது.


இன்று பலரின் வாழ்வின் போராட்ட நிலைக்கு இதுவே காரணமாகிறது.

ஓயாத சோகமான நினைவலைகளில் இருந்து நம்மை நாம் மாற்றிக்கொண்டு (துன்பமிருந்தாலும்) ஆனந்தமான நினைவுகளில் ( நமது வாழ்வில் சில நேரம் கூடவா இன்பமில்லை ), இறைவனை நினைத்து இடைவிடாது சிந்தித்திருந்தால் நிச்சயம் ஒருநாள் மாற்றம் காணும்,

இது சத்தியம்.

அன்புடன் கருணாகரன்6.இடைப்பாடி.                   

Thursday, September 16, 2010

ஜோதிடம் சொல்வது என்ன?

அன்பானவர்களே !


ஜோதிடம் என்றாலே எதிர்கால கனவு, நிகழ்கால நிஜம், கடந்தகால அசைபோடல் என்பதாக் ஒரு பரவலான நினைவு எல்லோருக்கும் உண்டு.


ஆனால் அதையும் மீறி அதில் ஒரு விஞ்ஞானம் இருப்பதை நாம் இங்கே காணப்போகிறோம்,


உங்கள் ஊக்கமிகு கடிதங்கள் வரவேற்கப்படுகின்றன.


அன்புடன் கருணாகரன்6.இடைப்பாடி.


  

Wednesday, August 25, 2010

ஜோதிட சிக்கல்கள்

அன்பானவர்களே !!
இந்த உலகில் எங்கு சென்று நீங்கள் கேட்டாலும் இரண்டும் + இரண்டும் நான்குதான் அதில் எங்குமே, என்றுமே மாற்றமில்லை,
ஆனால் ஜோதிடத்தில் மட்டும் ஒருவருக்கு நடைபெறும் ஒரே திசை- ஒரே புக்தி காலத்தை ஒவ்வொரு ஜோதிடர் ஒவ்வொரு மாதிரி சொல்வதன் காரணம் என்ன ?
முழுமையாக க்ரஹங்களையும், முழுமையாக ஜோதிடத்தையும் அறியாததே காரணமாகும். 
ஆகவே பெயரையும், பந்தாவையும், பரம்பரையையும், ஆளின் தோற்றத்தையும் வைத்து ஜோதிடம் பார்க்க செல்லாமல் அந்த ஜோதிடருக்கு முதலில் ஜோதிடம் தெரியுமா? என்று தெரிந்துகொண்டு ஜாதகம் பார்க்க செல்வது சிறந்ததாகும்.  

அன்புடன் கருணாகரன்6.இடைப்பாடி.  

ஜோதிடம் காட்டும் நல்வழிகள்

அன்பானவர்களே!
              ஒருவரின் ஜாதகத்தில் அவர் பிறந்த வேளையில் வானவெளியில் அமைந்திருந்த கிரகங்களின் அமைப்பினை வைத்து அந்த ஜாதகர் வாழ்வு எவ்வாறு அமையும் ? அவர் என்னென்ன சாதனைகள் செய்வார்? கல்வி, திருமணம், தொழில் போன்ற அனைத்து விபரங்களையும் அறியமுடியும் என்பது தெரிந்ததே.

ஆனால் இன்னும் பலபடிகள் மேலே போய் வாழ்வின் சகல உண்மைகளையும் அறியலாம் என்பதும், பலவிதத்திலும் நல்ல வழிகளையும், ஆன்மீக பலம் , தெய்வீக பலம் பெற்று பலருக்கும் நல்ல தலைமையாளனாக, 
வழிகாட்டுபவனாகவும் வாழ முடியும் என்பதுவும் உண்மை.



அன்புடன் கருணாகரன்6.இடைப்பாடி.      

Monday, August 23, 2010

உண்மையை சொல்லும் நட்சத்திரங்கள்.

அன்பானவர்களே !!!



விண்ணகத்தில் கோடானுகோடி நட்சத்திரங்கள் இருந்தபோதிலும் மனிதர் வாழ்வில்,



ஆதாரங்களையும் மாற்றங்களையும் சில குறிப்பிட்ட நட்சத்திரங்களே உண்டாக்குகின்றன. என்பதை நமது முன்னோர்கள் கண்டுணர்ந்தார்கள். நமக்கும் உணர்த்தினார்கள்.



மொத்தம் 27 நட்சத்திரங்களுக்கும், நமக்கும் (மனிதருக்கு) தொடர்புள்ளதை கண்டு ஆய்ந்து நமக்கு பகுத்து தந்துள்ளார்கள்.


இருபத்தேழு என்றால் வெறும் இருபத்தேழு அல்ல ஒவ்வொன்றிலும் உட் கூறுகளாக நிறைய உள்ளது.


அதில்


அசுவனி, மிருகசீரிடம்,புனர்பூசம்,பூசம்,அஸ்தம், சுவாதி,அனுஷம், திருவோணம்,ரேவதி இவைகள் ஒன்பதும் தேவ கணம் என்றும்,


பரணி,ரோஹிணி,திருவாதிரை,பூரம், உத்திரம்,பூராடம்,உத்திராடம்,பூரட்டாதி,உத்திரட்டாதி ஒன்பதும் மானுஷ கணம் என்றும்,


மீதி இருக்கும்


கிருத்திகை,ஆயில்யம்,மகம்,சித்திரை,விசாகம்,
கேட்டை, மூலம், அவிட்டம், சதயம் என்பவை ஒன்பதும் ராக்ஷஸ கணம் என்றும் வகுத்துள்ளார்கள்.


பொறுமை,அடக்கம்,மூர்க்கம் இம் மூன்றும் மனிதர்களின் பொதுவான குணாதிசயமாகும்.

நீங்கள் எந்த நட்சத்திரம் என்று கண்டு உங்களுக்கு அந்த குணம் உண்டா இல்லையா என கண்டு கொள்ளுங்கள்.




அன்புடன் இர.கருணாகரன்.இடைப்பாடி.
Related Posts Plugin for WordPress, Blogger...