என்னை தொடர்ந்து

வாருங்கள், நண்பரே வணக்கம். தங்கள் வருகையை பதிவு செய்யுங்களேன் !அன்புடன் கருணாகரன்6,இடைப்பாடி. அன்பர்களே ! முழுக்க முழுக்க தமிழில் திருக்கணித முறையில் ஜாதகம் கணிக்க வேண்டுமா? உங்கள் பெயர், பெற்றோர் பெயர், பிறந்த தேதி, மாதம் வருடம், பிறந்த இடம் போன்ற விபரங்களை தாருங்கள், உங்கள் ஜாதகம் கூரியர் மூலமாக உங்களுக்கு அனுப்பி வைக்கப்படும்.( நள்ளிரவில் இரவு 12.00 மணிக்கு மேல் காலை 7.00 மணிக்குள் பிறந்திருந்தால் விடிந்தால் என்ன கிழமை என குறிப்பிடவும்.K.செந்தில்குமார்,கணேஷ் கம்ப்யூட்டர்ஸ்,34,கடைவீதி, இடைப்பாடி,சேலம் மாவட்டம்-637101.

Thursday, October 22, 2015

யாரிடம் எதை கேட்பது ?


ஓம் நமசிவய. 

அன்பிற்குரிய நண்பர்களே, வணக்கம்.


இன்று பலரும் , பல விஷயங்களை அறிந்து கொள்ள விரும்புகின்றார்கள் .


அதனால் பலரையும் நாடி தாங்கள் அறிந்து கொள்ள விரும்பும் விஷயத்தைப் பற்றிய கேள்விகளை கேட்கிறார்கள்.
இவர்களால் கேள்வி கேட்கப்பட்டவர்களும் அவர்களுக்கு தெரிந்ததை பகிர்ந்து கொள்கின்றார்கள் .


இந்த நிலையில் . . .இந்த கட்டுரை பலனுள்ளதாக இருக்கும் என நம்புகின்றேன் .



யாரிடம் எதை கேட்பது , எதை கேட்க வேண்டும் ?

அறிவும் , ஞானமும் , ஆன்மீகமும்.

தண்ணீரைக் கொண்டு பலகாரியங்கள் (உண்பதற்கோ அல்லது மற்ற காரியங்களுக்கோ) செய்யலாம்,
அதுபோலவே எண்ணையைக் கொண்டு பல காரியங்கள் (உண்பதற்கோ அல்லது மற்ற காரியங்களுக்கோ) செய்யலாம் .

ஆனால் தண்ணீரைக் கொண்டு செய்வதை எண்ணையாலோ அல்லது எண்ணையைக் கொண்டு செய்வதை மாற்றி தண்ணீராலோ செய்ய முடியாது.

ஞானமார்க்கம் தெளிந்த ஞானிகள் அறிவாளிகளைப் போல பேசுவதும்,
படித்து அறிந்த அறிவாளிகள் என்பவர்கள் ஞானமார்க்கம் பற்றி பேசுவதும்,
முரண்பாடானது ஆகும்.

படிப்பு அறிவிற்கும் , ஞான தெளிவிற்கும் எந்த தொடர்பும் இல்லை.

அறிவால் சிந்திக்கக்கூட முடியாதவைகளை ஞானத்தால் மிக சாதாரணமாக சொல்ல முடியும்.

அறிவு என்பது எந்த ஒரு விஷயமோ அது தொடர்பான புத்தகங்களை படித்து அறிந்ததுதான்.
படித்து அறிந்ததற்கு மேல் ஒன்றும் சொல்லவோ பேசவோ தெரியாது .
ஏனென்றால் அதனைப் பற்றி படித்தது அவ்வளவுதான்.
படிக்காத ஒரு விஷயத்தை பற்றி எப்படி கூறமுடியும் .
ஆனால் ஒன்று செய்யலாம் ,

என்ன அது ?
அப்படி ஒன்று இல்லவே இல்லை என்று ஒரேயடியாக கண்மூடித்தனமாக மறுக்கலாம்.
அதற்கு ஆதாரமாக தான் படித்த பல புத்தகங்களிலிருந்து மேற்கோள்களை அள்ளி விட்டு தனது படிப்பறிவை பறை சாற்றலாம் .
சித்தர்களை , ஞானிகளை , யோகிகளை , முனிவர்களை அல்லது அவர்களின் கருத்தை மறுக்கலாம்.
ஏனென்றால் அவர்கள் படித்த புத்தகங்களில் இவர்களைப் பற்றி ஏதும் சொல்லப்படவில்லை,
மேலும் அவர்களைப்பற்றி சொன்ன புத்தகங்களை இவர்கள் படிக்கவில்லை.

ஆனால் ஞானம் என்பது படித்து வருவதில்லை. ஒரு மனிதன் , தனது மனதின் , உடலின் தீவிர பயிற்சியினாலும் , தவத்தாலும், த்யானத்தாலும் இறைவனின் பேரருள் கருணையாலும் தன்னுள் பெறுவது , அது அவனுள் வியாபிப்பது.
இது இருந்த இடத்தில் இருந்தே அனைத்தையும் விளங்கிக் கொள்வது , மற்றவருக்கும் விளங்கச் செய்வது.

இது மேஜிக் அல்ல , மற்றவருக்கு நிகழ்ச்சியாக நடத்திக் காட்டுவதற்கு.
மனித மனது , தன் சுய உணர்தலின் உச்ச கட்டம்.
இதனை பெரிதுபடுத்த வேண்டிய அவசியமே இல்லை .

எங்கோ ஒருவர் தன்னை ஞானி என்றோ , யோகி என்றோ , முனிவர் என்றோ, சித்தர் என்றோ சொல்லி ஏமாற்றினார் என்பதற்காக எல்லோரையும் ஒரே மாதிரி பார்ப்பது நீதியாகாது.

கல்வியிற் சிறந்த கல்விமான்கள் , பேராசிரியர்கள் , ஆய்வாளர்கள் என்று சொல்லிக் கொள்பவர்கள், பெயருக்கு பின் இரண்டு முழம் அளவிற்கு பட்டங்களை போட்டுக் கொள்பவர்கள் எல்லாம் தவறு செய்யவில்லையா?

உடனே படித்தவர்கள் அனைவரும் தவறானவர்கள் எனப் பொருள் கொள்வது சரியான முடிவாகாது அல்லவா !! 

ஆகவே அறிவால் அறிய வேண்டியதை அறிவில் சிறந்தவர்களையும் ,
ஞானத்தால் உணர வேண்டியதை மெய்ஞானம் உணர்ந்தவர்களோடும் கேட்டு அறிந்துகொள்ளுங்கள்.
மாறாக . . .
அவரிடம் கேட்க வேண்டியதை இவரிடமும் , இவரிடம் கேட்க வேண்டியதை அவரிடமும் கேட்டால் ,

எங்கே தெரியாது என்று சொன்னால் தம்மை குறைத்து மதிப்பிட்டு விடுவார்களோ என எண்ணி அவர்கள் தங்களது எண்ணத்தை முடிவாக வெளியிடுவார்கள் .

பின் அதையே தனது வழக்கமாக்கி பின்னர் அதை தனது கொள்கையாக கொள்வார்கள்.

அதனால் நீங்கள் இனிமேல்
தண்ணீரால் செய்ய வேண்டியதை தண்ணீராலும்,
எண்ணையால் செய்ய வேண்டியதை எண்ணையாலும் செய்யுங்கள்

மாற்றி செய்தால் பொருளும் வீணாகி , நேரமும் , பணமும் வீணாவதைபோல –
நமக்கு இருக்கும் கொஞ்ச நஞ்ச அறிவும் , பக்தியும் , ஆன்மீக உணர்வும் வீணாகி போகும்.

ஓம் நமசிவய.
Related Posts Plugin for WordPress, Blogger...