என்னை தொடர்ந்து

வாருங்கள், நண்பரே வணக்கம். தங்கள் வருகையை பதிவு செய்யுங்களேன் !அன்புடன் கருணாகரன்6,இடைப்பாடி. அன்பர்களே ! முழுக்க முழுக்க தமிழில் திருக்கணித முறையில் ஜாதகம் கணிக்க வேண்டுமா? உங்கள் பெயர், பெற்றோர் பெயர், பிறந்த தேதி, மாதம் வருடம், பிறந்த இடம் போன்ற விபரங்களை தாருங்கள், உங்கள் ஜாதகம் கூரியர் மூலமாக உங்களுக்கு அனுப்பி வைக்கப்படும்.( நள்ளிரவில் இரவு 12.00 மணிக்கு மேல் காலை 7.00 மணிக்குள் பிறந்திருந்தால் விடிந்தால் என்ன கிழமை என குறிப்பிடவும்.K.செந்தில்குமார்,கணேஷ் கம்ப்யூட்டர்ஸ்,34,கடைவீதி, இடைப்பாடி,சேலம் மாவட்டம்-637101.

Sunday, December 13, 2015

கிட்னியில் கோளாறா ? எளிய வைத்தியம்

ஓம் நமசிவய.

கிட்னியில் கோளாறு இருக்கின்றதா
கல்லோ - கட்டியோ எதுவானாலும் சரி செய்ய எளியமுறையில் கை வைத்தியம் .
முருங்கைக்காய் சாறு -
முள்ளங்கி சாறு -
அன்னாசி சாறு -
வெங்காய சாறு-
நான்கையும் சம அளவில் எடுத்துக்கொள்ளுங்கள்-
(அதாவது வகைக்கு 25 ML என்பதுபோல )

அதில் கொஞ்சம் ஒரிஜினல் தேன் கலந்து காலை மாலை இரண்டு வேளை என தொடர்ந்து பத்து நாட்கள் குடியுங்கள் .
கிட்னியில் உருவான எல்லாவித பிரச்சினையும் சுமூகமாக தீர்ந்தது.

நலமோடு வாழுங்கள் 
ஓம் நமசிவய.

Monday, December 7, 2015

கூட்டு ப்ரார்த்தனை செய்வோம்


ஓம் நமசிவய : 

அன்பிற்குரியவர்களே,

நாமறிந்ததை உரைப்போம்.

அடுத்த வருடம் டிசம்பர் வரை நம் நாட்டிலும் , அயல்நாட்டிலும் நிகழ இருக்கும் அசம்பாவிதங்கள் மோசமானதாக இருக்கும்.
கிரக சஞ்சாரத்தில் கோட்சார ரீதியாக ஸ்ரீ செவ்வாயுடன் சேரும் ஸ்ரீ சனைச்வரரும் , ஸ்ரீ செவ்வாய் வீட்டில் அமர்ந்துள்ள ஸ்ரீ சனைச்வரரும் மிக மோசமான விளைவுகளை தர வல்லவராக இருப்பதால் மரணங்களும் , துர்சம்பவங்களும், குறிப்பிட்ட சில மாதங்களில் நிகழ்ந்திட வாய்ப்பு உள்ளது.
விருச்சிகத்தில் உள்ள ஸ்ரீ சனைச்வரர், விசாகம், அனுஷம், கேட்டை எனும் மூன்று நட்ச்த்திரங்களை கடக்கின்றார், இதில் அனுஷம் அவரது நட்ச்த்திரமாகும்.
இவர் விருச்சிகத்தில் இருந்து சிம்மத்தை பார்ப்பதால் அரசாங்கத்திற்கு அவப்பெயர் , தடுமாற்றம், அற்ப லாபம் போன்றவையும் ,
மக்களுக்கு திடீர் சங்கடங்களும் , பொருள் நட்டமும், உயிர்சேதமும் மிக குறைந்த லாபமும், மன சோர்வும் , இடப்பெயர்தலும் , கலக்கமும் ஏற்படவும் பெரும் வாய்ப்புள்ளது.
கால புருஷ பஞ்சமத்தில் தேவகுரு அமர்ந்து, தனது வீடான கால புருஷ பாக்கியத்தைப் பார்ப்பதாலும் , கால புருஷ லக்கினத்தை பார்ப்பதாலும் (இவ்விரண்டும் விசேஷ பார்வை) இதற்கு பரிகாரம உண்டு.
பாதிப்புகள் சாதி பார்ப்பதில்லை, மதம் பார்ப்பதில்லை, ஏற்றதாழ்வு பார்ப்பதில்லை, ஏழை பணக்காரன் பார்ப்பதில்லை அனைவரையும் ஒரேயடியாக வெட்டிச் சாய்க்கிறது.
ஆகவே
இந்த பரிகாரங்களை மனிதனாக இருந்து, சாதி , மதம் கடந்து ,
தினசரி அனைவர் வீடுகளிலும் , அவரவர்கள் ஊரில் உள்ள கோவில்களிலும் மசூதிகளிலும் சர்ச்சுகளிலும் , 
கூட்டு பிரார்த்தைனையும் ,
ஸ்ரீ பைரவ காயத்ரி, 
ஸ்ரீ பைரவ மூல மந்த்ர அர்ச்சனையும், 
ஸ்ரீ பைரவ அஷ்டோத்திர அர்ச்சனையும், 
ஸ்ரீ பைரவ அஷ்டோத்திர நாமாவளி ஒலிக்க செய்வதும்,

ஸ்ரீ ஹனுமன் காயத்ரி, 
ஸ்ரீ ஹனுமன் சாலிசா ஒலிக்க செய்வதும் , 
ஸ்ரீ ஹனுமன் மூல மந்திர அர்ச்சனையும், 
ஸ்ரீ ஹனுமன் அஷ்டோத்திர அர்ச்சனையும் , 
ஏழை எளியவர்களுக்கு , தன்னால் முடிந்த உதவிகளையும் அன்னதானமும்,
குறிப்பாக காலிழந்தவர்கள் , குஷ்டரோகிகளுக்கு வஸ்திரதானமும் செய்து வந்தால் ,
வரவிருக்கும் மோசமான இடர்களின் பாதிப்பு மிக அதிகம் குறைய வாய்ப்புள்ளது.
நம் மக்களுக்காக.
ஓம் நமசிவய.


ஸ்ரீ ஆஞ்சநேய மந்த்ரம் :


இதனை பாராயணம் செய்து மனதில் சொல்லி வாருங்கள் .


துயர் போக்கும் , வலிமை சேர்க்கும். வளமாக்கும்.


ஆஞ்சநேயமதி பாடலாநநம் 
காஞ்சநாத்ரி கமநீய விக்ரஹம் |
பாரிஜாத தருமூலவாஸிநம் 
பாவயாமி பவமான நந்தனம் ||


யத்ர யத்ர ரகு நாத கீர்த்தனம்
தத்ர தத்ர க்ருதமஸ்தகாஞ்ஜலிம் |
பாஷ்பவாரி பரிபூர்ணலோசனம்
மாருதிம் நமத ராக்ஷஸாந்தகம் ||


மனோஜவம் மாருத துல்ய வேகம்
ஜிதேந்த்ரியம் புத்திமதாம் வரிஷ்டம் |
வாதாத்மஜம் வானரயூத முக்யம்
ஸ்ரீ ராமதூதம் சிரஸா நமாமி || ஸ்ரீ பைரவர் சத நாமாவளி 


பைரவோ பூத நாதஸ்ச - பூதாத்மா - பூதபாவந:
க்ஷேத்ரத: க்ஷேத்ரபாலஸ்ச - க்ஷேத்ரக்ஞ : க்ஷத்ரியோ விராட்

ஸ்மசான வாஸீ மாம்ஸாசீ - ஸர்ப்பராசி : ஸ்மராந்தக்ருத்
ரக்தப : பாநப : ஸித்த : - ஸித்தித : ஸித்தஸேவித :

கங்காள : கால சமந : - கலாகாஷ்டா தநு : கவி :
த்ரிநேத்ரோ பகுநேத்ரஸ்ச - ததா பிங்கல லோசந :

சூலபாணி : கட்கபாணி : - கங்காளீ தூம்ரலோசந :
அபீருர்பைரவோ நாதோ - பூதபோ யோகிநீ பதி :

தநதோ தநஹாரீச : தநவாந் ப்ரீதி பாவந :
நாகஹரோ நாகபாசோ - வ்யோம கேச : கபால ப்ருத்

கால : கபாலமாலீச - கமநீய : கலாநிதி:
த்ரிலோசநோஜ்ஜவலந் நேத்ர : த்ரிசிகீ ச த்ரிலோகப :

த்ரிநேத்ர தநயோ டிம்ப : சாந்த : சாந்தஜனப்ரிய :
வடுகோ வடுவேஷஸ்ச : கட்வாங்க வர தாரக :

பூதாத்யக்ஷ : பசுபதி : - பிக்ஷúக : பரிசாரக :
தூர்தோ திகம்பர : சூரோ - ஹரிண : பாண்டுலோசந :

ப்ரசாந்த, சாந்தித : ஸித்த : - சங்கர : ப்ரிய பாந்தவ :
அஷ்டமூர்த்திர் நிதீசஸ்ச - ஞான சஷூஸ் தபோமய :

அஷ்டோதார : ஷடாதார : - ஸர்பயுக்த : சிகீஸக :
பூதரோ பூதராதீச : - பூபதிர் பூதராத்மஜ :

கங்காளதாரீ முண்டீச - நாக யக்ஞோபவீதவாந்
ஜ்ரும்பணோ மோஹந : ஸ்தம்பீ மாரண : க்ஷோபணஸ்ததா

சுத்த நீலாஞ்ஜந ப்ரக்ய : - தைத்யஹா முண்டபூஷித
பலி புக்பலி புக் நாதோ - பாலோ பால பராக்ரம :

ஸர்வாபத் தாரணோ துர்கோ - துஷ்டபூதநிஷேவித :
காமீ கலா நிதி காந்த : - காமிநீ வசக்ருத்வசீ

ஸர்வ ஸித்திப்ரதோ வைத்யோ - ப்ரபுர் விஷ்ணு ரிதீ வஹி
அஷ்டோத்தரசதம் நாம் நாம் - ஸ்ரீபைரவஸ்ய மஹாத்மந:

ஓம் நமசிவய.Thursday, October 22, 2015

யாரிடம் எதை கேட்பது ?


ஓம் நமசிவய. 

அன்பிற்குரிய நண்பர்களே, வணக்கம்.


இன்று பலரும் , பல விஷயங்களை அறிந்து கொள்ள விரும்புகின்றார்கள் .


அதனால் பலரையும் நாடி தாங்கள் அறிந்து கொள்ள விரும்பும் விஷயத்தைப் பற்றிய கேள்விகளை கேட்கிறார்கள்.
இவர்களால் கேள்வி கேட்கப்பட்டவர்களும் அவர்களுக்கு தெரிந்ததை பகிர்ந்து கொள்கின்றார்கள் .


இந்த நிலையில் . . .இந்த கட்டுரை பலனுள்ளதாக இருக்கும் என நம்புகின்றேன் .யாரிடம் எதை கேட்பது , எதை கேட்க வேண்டும் ?

அறிவும் , ஞானமும் , ஆன்மீகமும்.

தண்ணீரைக் கொண்டு பலகாரியங்கள் (உண்பதற்கோ அல்லது மற்ற காரியங்களுக்கோ) செய்யலாம்,
அதுபோலவே எண்ணையைக் கொண்டு பல காரியங்கள் (உண்பதற்கோ அல்லது மற்ற காரியங்களுக்கோ) செய்யலாம் .

ஆனால் தண்ணீரைக் கொண்டு செய்வதை எண்ணையாலோ அல்லது எண்ணையைக் கொண்டு செய்வதை மாற்றி தண்ணீராலோ செய்ய முடியாது.

ஞானமார்க்கம் தெளிந்த ஞானிகள் அறிவாளிகளைப் போல பேசுவதும்,
படித்து அறிந்த அறிவாளிகள் என்பவர்கள் ஞானமார்க்கம் பற்றி பேசுவதும்,
முரண்பாடானது ஆகும்.

படிப்பு அறிவிற்கும் , ஞான தெளிவிற்கும் எந்த தொடர்பும் இல்லை.

அறிவால் சிந்திக்கக்கூட முடியாதவைகளை ஞானத்தால் மிக சாதாரணமாக சொல்ல முடியும்.

அறிவு என்பது எந்த ஒரு விஷயமோ அது தொடர்பான புத்தகங்களை படித்து அறிந்ததுதான்.
படித்து அறிந்ததற்கு மேல் ஒன்றும் சொல்லவோ பேசவோ தெரியாது .
ஏனென்றால் அதனைப் பற்றி படித்தது அவ்வளவுதான்.
படிக்காத ஒரு விஷயத்தை பற்றி எப்படி கூறமுடியும் .
ஆனால் ஒன்று செய்யலாம் ,

என்ன அது ?
அப்படி ஒன்று இல்லவே இல்லை என்று ஒரேயடியாக கண்மூடித்தனமாக மறுக்கலாம்.
அதற்கு ஆதாரமாக தான் படித்த பல புத்தகங்களிலிருந்து மேற்கோள்களை அள்ளி விட்டு தனது படிப்பறிவை பறை சாற்றலாம் .
சித்தர்களை , ஞானிகளை , யோகிகளை , முனிவர்களை அல்லது அவர்களின் கருத்தை மறுக்கலாம்.
ஏனென்றால் அவர்கள் படித்த புத்தகங்களில் இவர்களைப் பற்றி ஏதும் சொல்லப்படவில்லை,
மேலும் அவர்களைப்பற்றி சொன்ன புத்தகங்களை இவர்கள் படிக்கவில்லை.

ஆனால் ஞானம் என்பது படித்து வருவதில்லை. ஒரு மனிதன் , தனது மனதின் , உடலின் தீவிர பயிற்சியினாலும் , தவத்தாலும், த்யானத்தாலும் இறைவனின் பேரருள் கருணையாலும் தன்னுள் பெறுவது , அது அவனுள் வியாபிப்பது.
இது இருந்த இடத்தில் இருந்தே அனைத்தையும் விளங்கிக் கொள்வது , மற்றவருக்கும் விளங்கச் செய்வது.

இது மேஜிக் அல்ல , மற்றவருக்கு நிகழ்ச்சியாக நடத்திக் காட்டுவதற்கு.
மனித மனது , தன் சுய உணர்தலின் உச்ச கட்டம்.
இதனை பெரிதுபடுத்த வேண்டிய அவசியமே இல்லை .

எங்கோ ஒருவர் தன்னை ஞானி என்றோ , யோகி என்றோ , முனிவர் என்றோ, சித்தர் என்றோ சொல்லி ஏமாற்றினார் என்பதற்காக எல்லோரையும் ஒரே மாதிரி பார்ப்பது நீதியாகாது.

கல்வியிற் சிறந்த கல்விமான்கள் , பேராசிரியர்கள் , ஆய்வாளர்கள் என்று சொல்லிக் கொள்பவர்கள், பெயருக்கு பின் இரண்டு முழம் அளவிற்கு பட்டங்களை போட்டுக் கொள்பவர்கள் எல்லாம் தவறு செய்யவில்லையா?

உடனே படித்தவர்கள் அனைவரும் தவறானவர்கள் எனப் பொருள் கொள்வது சரியான முடிவாகாது அல்லவா !! 

ஆகவே அறிவால் அறிய வேண்டியதை அறிவில் சிறந்தவர்களையும் ,
ஞானத்தால் உணர வேண்டியதை மெய்ஞானம் உணர்ந்தவர்களோடும் கேட்டு அறிந்துகொள்ளுங்கள்.
மாறாக . . .
அவரிடம் கேட்க வேண்டியதை இவரிடமும் , இவரிடம் கேட்க வேண்டியதை அவரிடமும் கேட்டால் ,

எங்கே தெரியாது என்று சொன்னால் தம்மை குறைத்து மதிப்பிட்டு விடுவார்களோ என எண்ணி அவர்கள் தங்களது எண்ணத்தை முடிவாக வெளியிடுவார்கள் .

பின் அதையே தனது வழக்கமாக்கி பின்னர் அதை தனது கொள்கையாக கொள்வார்கள்.

அதனால் நீங்கள் இனிமேல்
தண்ணீரால் செய்ய வேண்டியதை தண்ணீராலும்,
எண்ணையால் செய்ய வேண்டியதை எண்ணையாலும் செய்யுங்கள்

மாற்றி செய்தால் பொருளும் வீணாகி , நேரமும் , பணமும் வீணாவதைபோல –
நமக்கு இருக்கும் கொஞ்ச நஞ்ச அறிவும் , பக்தியும் , ஆன்மீக உணர்வும் வீணாகி போகும்.

ஓம் நமசிவய.

Tuesday, August 25, 2015

மாந்தியை கணிக்கும் அட்டவணை

அன்பிற்குரியவர்களே, வணக்கம்.
மாந்தியை கணிக்கும் அட்டவணை 


மாந்தியை ஜாதகத்தில் அமைப்பது எப்படி ?

சூரிய உதயத்திற்குப்பின் பிறந்தவர்களுக்கு என்றும் –
சூரிய அஸ்தமனத்திற்கு பின் பிறந்தவர்களுக்கு என்றும் 

இரண்டு வகையாக பிரித்து மாந்தியை கட்டத்தில் அமைக்க வேண்டும்.

சூரிய உதயத்திற்கு பின் பிறந்தவர்களுக்கு :
ஞாயிறு : 26 நாழிகைப் பின் உதயம்
திங்கள் : 22 நாழிகைப் பின் உதயம்
செவ்வாய் : 18 நாழிகைப் பின் உதயம்
புதன் : 14 நாழிகைப் பின் உதயம்
வியாழன் : 10 நாழிகைப் பின் உதயம்
வெள்ளி : 6 நாழிகைப் பின் உதயம்
சனி : 2 நாழிகைப் பின் உதயம்.

அதாவது ஜாதகத்தில் சூரியனிருக்கும் இடத்திலிருந்து மேலே சொல்லப்பட்ட நாழிகையை கூட்டி வரும் கட்டத்தில் மாந்தியை சேர்க்க வேண்டும்.

சூரிய அஸ்தமனத்திற்கு பின் பிறந்தவர்களுக்கு :

ஞாயிறு : 10 நாழிகைப் பின் உதயம்
திங்கள் : 6 நாழிகைப் பின் உதயம்
செவ்வாய் : 2 நாழிகைப் பின் உதயம்
புதன் : 26 நாழிகைப் பின் உதயம்
வியாழன் : 22 நாழிகைப் பின் உதயம்
வெள்ளி : 18 நாழிகைப் பின் உதயம்
சனி : 14 நாழிகைப் பின் உதயம்.

அதாவது ஜாதகத்தில் சூரியனிருக்கும் இடத்திலிருந்து ஏழு வீடுகள் தள்ளி மேலே சொல்லப்பட்ட நாழிகையை கூட்டி வரும் கட்டத்தில் மாந்தியை சேர்க்க வேண்டும்.
அல்லது பகல் நேர 30 நாழிகைகளை இதனுடன் கூட்டிக் கொள்ளலாம்.

இனி நீங்களே உங்கள் ஜாதகத்தில் மாந்தியை அமைத்துக் கொள்வீர்கள் என நம்புகின்றேன் .

ஓம் நமசிவய.

Monday, August 24, 2015

மாந்தி பன்னிரு பாவங்களில் நின்ற பலன்

அன்பிற்குரியவர்களே, வணக்கம்.

ஜாதகத்தில் " மா " அல்லது "குளி" என குறிப்பிடப்படும் மாந்தி எனும் காரகம் (கிரகம் அல்ல ) எம் மாதிரியான பலன்களை அந்த ஜாதகருக்கு தர வல்லது என்று பார்ப்போம்.
மாந்தி என்பதுதான் சரியான பதமாகும்.

குளிகன் அல்லது குளிகை என்பது வேறு , மாந்தி என்பது வேறு என்பதனை நினைவில் கொள்ளுங்கள்.

மாந்தி தான் இருக்குமிடம் அதற்கு நேர் ஏழாமிடம் தான் இருக்குமிடத்திற்கு முன்னே உள்ள இடத்தையும் (2ம வீடு ) தான் இருக்குமிடத்திற்கு பின்னே உள்ள இடத்தையும் (12ம் வீடு) பார்க்கும் வலிமையை பெற்றவராகும்.

தான் இருக்குமிடம் , பார்க்கும் இடம் இவைகளுக்கு தனது நிலையைப் பொறுத்து , பாவகத்தின் தன்மையை முழுமையாக மாற்றி அமைக்கும் பலம் படைத்தவர் .

உதாரணமாக : அழகு தரும் லக்கினமாக இருந்து இவர் முழு பலத்துடன் இருந்துவிட்டால் அவலட்சணமான உருவத்தை தந்துவிடுவார்.

பன்னிரெண்டு பாவங்களில் இவர் இருந்தால் எம்மாதிரியான பலன்களைத் தருவார் என பொதுவான பலன்கள் இங்கே தரப்படுகின்றது

இது பொதுப்பலனே தவிர முழுபலன் அல்ல.
காரணம் ஜாதகத்தில் உள்ளபலம்பொருந்திய சுபக் கிரஹ பார்வை , மாந்தியின் தாக்கத்தினை குறைக்கலாம் .

இப்போது பன்னிரண்டு பாவங்களிலும் மாந்தி இருந்தால் என்ன பலன் என்று பார்ப்போம்.

1ம் இடத்தில( லக்கினத்தில்) மாந்தி இருந்தால் குண்டான உடல‌மைப்பு, உடல் உபாதைகளும், மறைமுக நோய்களும், அடக்கம் மற்றும் வெட்கம் இல்லாதவராகவும், மனக்கவலை அதிகம் கொண்டவராகவும், குறும்புத்தனம் கொண்டவராகவும், சுறுசுறுப்பானவராகவும் இருப்பார்கள். சுபகிரக சேர்க்கை மற்றும் பார்வை இருந்தால் பொன், பொருள் சேர்க்கை உண்டாகும்.

2 ம் இடத்தில் மாந்தி அமைந்திருந்தால் குடும்ப வாழ்க்கை நிம்மதி இல்லாதவராகவும், பேச்சில் தடுமாற்றமும், கீழ்த்தரமான புத்தி கொண்டவராகவும், வீண் பொருள் விரயம் செய்பவராகவும், கண்களில் நோய், தீய பழக்கம் கொண்டவராகவும் இருப்பர்.

3ம் இடத்தில் மாந்தி அமைந்திருந்தால் நல்ல உடலமைப்பு, தைரியம், துணிவு, பலரை வழிநடத்தும் திறன், புதிய முயற்சிகளில் ஈடுபட்டு வெற்றிகளை குவிக்கும் சூழ்நிலை ஆகியவை உண்டாகும்.

4ம் இடத்தில் மாந்தி அமைந்திருந்தால் நிம்மதியற்ற நிலை, உடல் நிலை பாதிப்பு, வீட்டு மனை சேர்க்கை உண்டாகத் தடை, தாயாருடன் சுமூக நிலை இல்லாமை ஆகியவை ஏற்ப்படும்.

5ம் இடத்தில் மாந்தி அமைந்திருந்தால் மனநிலை பாதிப்பு, புத்திர தோஷம் பாதிப்பு, குறைந்த வயதில் கண்டம், செல்வம் செல்வாக்கை இழக்கும் நிலை, கடவுள் நம்பிக்கை இல்லாத்வராகவும், சுய இன்பப்பழக்கம் அல்லது முறையற்ற உறவு கொண்டவராகவும் இருப்பார்கள்.

6ம் இடத்தில் மாந்தி அமைந்திருந்தால் நீண்ட ஆயுள், பிற‌ருக்கு உதவி செய்யும் மனோபாவம், ஆரோக்கியமான வாழ்வு, எதிர்கள் இல்லாத நிலை அல்லது எதிரிகளிடம் எப்போதும் வெற்றி, வாழ்வில் படிப்படியான உயர்வு பெறுவார்கள்.

7 ம் இடத்தில் மாந்தி அமைந்திருந்தால் மெலிந்த உடல், இல்லற வாழ்வில் நிம்மதியற்ற நிலை, குறைவான நட்பு, மனைவியின் சொத்தை அழிக்கும் நிலை, நம்பியவர்களால் ஏமாற்றப்படுதல் ஆகியன ஏற்படும்.

8 ம் இடத்தில் மாந்தி அமைந்திருந்தால் அதிக பசி கொண்டவராகவும், மறைமுக நோய் கொண்டவராகவும், அதிக கவலை கொண்டவராகவும், எதிலும் தோல்வியே ஏற்படும் நிலையும், வீண் விரயம் செய்பவராகவும் இருப்பர்.

9ம் இடத்தில் மாந்தி அமைந்திருந்தால் மெலிந்த உடலமைப்பு கொண்டவராகவும், தந்தைக்கு தோஷம் உடையவராகவும், தவறான பாதைக்கு செல்பவராகவும், அதனால் தவறான பழக்கவழக்கங்களும்,முறையற்ற பாலுணர்வு உடையவராகவும், எப்பொழுதும் சோதனை உடையவராகவும், பணக்கஷ்டம் உடையவராகவும் இருப்பர்.

10ம் இடத்தில் மாந்தி அமைந்திருந்தால் சுயநலம் மிக்கவராகவும், மற்றவர்களைப் பற்றி கவலை இல்லாதவர்களாகவும், நன்றாக உழைக்கக்கூடியவராகவும், வாழ்வில் படிப்படியாக முன்னேற்றம் ஏற்ப்படும்.

11ம் இடத்தில் மாந்தி அமைந்திருந்தால் செல்வம், செல்வாக்குடன், நல்ல மனைவி, மிகுந்த புகழ், நெருங்கியவர்களுக்கு உதவி புரியும் தன்மை, தெய்வ நம்பிக்கை கொண்டவராகவும், குறுகிய கால்களை கொண்டவராகவும் இருப்பர்.

12ம் இடத்தில் மாந்தி அமைந்திருந்தால் வீண் விரயம் செய்பவராகவும், இழிவான செயல்களை செய்பவராகவும், உடலில் குறையுடன், குறைவான சந்தோசம் கொண்டவராகவும், குடும்பவாழ்வில் சோகம், சோதனை கொண்டவராகவும், சோம்பல் கொண்டவராகவும் இருப்பர்.

மற்றபடி மற்ற கிரகங்களின் பார்வை சேர்க்கை பொறுத்து பலன்கள் வேறுபடலாம் 
பெரும்பாலானோருக்கு பொருந்தும்.

மீண்டும் நினைவில் கொள்ளுங்கள் இது பொதுவான பலனே.

ஓம் நமசிவய

மாந்தி என்ன செய்யும் ?

அன்பிற்குரியவர்களே , வணக்கம் 

மாந்தியும் ஜாதகமும்.

ஜாதகத்தில் மாந்தி எனும் காரகம் இருக்கும் இடத்தை வைத்து நம் பிறப்பின் காரணத்தை நாம் அறிய முடியும் .

அதாவது

ஒருவரின் ஜாதகத்தில் இராசி அல்லது நவாம்சத்தில் 1 4 7 10 எனும் ஸ்தானங்களில் மாந்தி இருக்குமானால்
அந்த ஜாதகர் இந்த பிறவியில் பல தவறுகளை தெரிந்தே செய்வார் . அதற்குரிய தண்டனையையும் உடனுக்குடனோ அல்லது அவரது ஜாதகத்தில் உள்ள மறைவு கிரஹ திசையிலோ அல்லது அவரது ஜாதகத்தில் உள்ள அஸ்தங்க கிரஹ திசையிலோ பெறுவார். அதனை இந்த பிறவியிலேயே பெறுவார்.

இந்த ஜாதகருக்கு மறுபிறப்பற்ற நிலை என கொள்ளலாம்.

ஒருவரின் ஜாதகத்தில் இராசி அல்லது நவாம்சத்தில் 2 5 8 11 எனும் ஸ்தானங்களில் மாந்தி இருக்குமானால்
அந்த ஜாதகர் இப்பிறப்பில் நிறைய தவறுகளை செய்வார் ஆனால் அதற்குரிய தண்டனையை அடுத்த பிறப்பில் அனுபவிப்பார் . ஆனால் அவர் மறுபிறப்பில் நல்லவராக இருப்பார்.

இந்த ஜாதகருக்கு மறுபிறப்பு உண்டு என கொள்ளவேண்டும் .

ஒருவரின் ஜாதகத்தில் இராசி அல்லது நவாம்சத்தில் 3 6 9 12 எனும் ஸ்தானங்களில் மாந்தி இருக்குமானால்
அந்த ஜாதகர் சென்ற பிறப்பில் செய்த தவறுகளுக்கான தண்டனையை இந்த பிறப்பில் அனுபவித்துக்கொண்டிருப்பார். அவர் இந்த பிறப்பில் நல்லவராகவும் வசதியோடும் இருப்பார்.

ஜாதகரை மறுபிறப்பற்ற நிலைக்கு கொண்டு செல்லும் , கர்மாவை தீர்த்துக் கொள்ளும் பிறப்பு என கொள்ளவேண்டும் .

மாந்தியை கணிக்காமல் ஒரு ஜாதகத்தை பார்த்து கேரளத்தில் பலன் சொல்வதில்லை .
பொதுவாக மாந்தியை தீய காரகமாகவே பார்க்க முடிகின்றது .

ஆனால் அந்த மாந்தியைக் கொண்டுதான் பிறப்பின் ரகசியத்தினை அறிந்து கொள்ள முடியும்.

இதற்கு பரிகாரங்கள் ஏதும் சொல்லப்படவில்லை ,
என்றாலும் ஸ்ரீ ஆஞ்சநேயரை வணங்கி வர சுபம் வரும் எனும் கருத்துண்டு 

நாம் எப்படி என்பதை தெரிந்து கொண்டு நாம் நம்மை மாற்றிக் கொள்ள வேண்டும்.
உதாரணமாக முதல் வீடு ,நான்காம் வீடு ,ஏழாம் வீடு மற்றும் பத்தாம் வீட்டில் மாந்தி அமரப் பெற்றவர்கள் மீண்டும் பிறப்பற்றவர்கள் என தெரிகிறது .
ஆகவே அவர்கள் தனது தவறுகளை திருத்திக்கொள்ள முயலவேண்டும்.
மேலும் தவறுகளை செய்யாமல் இருக்கப் பழக வேண்டும். 

இதுவே சிறந்த பரிகாரம்.

ஆனால் நமக்குதான் பிறப்பில்லையே என தன்னை தவறுகளின் கூடாரமாக்கிக் கொள்ள கூடாது.

காரணம் அதுவே பிறப்பற்று பேயுறு கொண்டு அலையும் நிலையை தந்து விடலாம்.
மாந்தியை பற்றி விரிவாக மற்றொரு பதிவில் தருகின்றேன்.

ஓம் நமசிவய.

Friday, August 14, 2015

பித்ரு தோஷ நிவர்த்தி -1

பிதுர் கடன் ஸ்லோகம்     (ஆவிகள் உலகம் 2002 இல் பிரசுரமானது )
நமசிவய சிவாய நம ஓம்
சரவணபவ ஓம்  சக்தி ஓம்
எங்கள்  குல தெய்வம் முதலான *
*தாய் , *தந்தை ,* மனைவி ஈறாக ( * எதை சொல்ல வேண்டுமோ அதை மட்டும் சொன்னால் போதும் )
உள்ள பிதுர்க்கள் மூதாதையர்கள் அனைவரும்
உயர்நிலையடைய ஏக பிரம்மமே
திருவருள் புரிவாயாக !!!!!
நமசிவய சிவாய நம ஓம்
சரவணபவ ஓம்  சக்தி ஓம்
( அமாவாசை தினங்களில் சொல்லி வந்தால் முன்னோர்களின் நல்ஆசிர்வாதம் கிடைக்கப் பெறுவீர்கள் )

பித்ரு தோஷ நிவர்த்தி -2

ஏஷாம் ந    பிதா  ந ப்ராத ந பந்து ஹ ;
நான்ய  கோத்ரேணஹ  தேஷாவே  
த்ருப்த் மகிலாயாம்து மயாத் பத்தை ஹ குசைஸ்திலை"  


என் தந்தை , என் சகோதரர்,என் உறவினர் என்ற எந்த வகை  பந்தத்துக்கும்  உள்ளாகாத என் கோத்திர பிரிவுக்குள்ளும்  உள் வராத 
எனக்கு முகம் தெரியாத என்னையும்
எனக்கு தெரியாத  எத்தனையோ புண்ணிய ஆத்மாக்கள் 
இந்த பூவுலகை விட்டு போயிருக்கின்றனர் .
அந்த ஆத்மாக்கள்  எல்லாம் மேல்உலகத்தில் எந்த துன்பமும் அனுபவிக்காமல் இருக்கவும்  புதிதாக பிறப்பெடுக்கும் போது அந்த வாழ்க்கையிலும் எல்லா நன்மைகளையும்பெற நான் ப்பிரார்த்தித்து கொள்கிறேன் .

அந்த ஆத்மாக்களுக்கு எள்ளும்  தண்ணீரும் கொண்டு  நான் செய்யும் இந்த தர்ப்பணத்தால் திருப்தி அடையட்டும்.

இந்த ஸ்லோகத்தை அமாவாசையன்று சொல்லி வந்தால் 
நமக்கு எந்த வகையிலுவகையிலும் சம்மந்தமே இல்லாத 
புண்ணிய ஆத்மாக்கள் சாந்தியடைந்து 

நம் முன்னேற்றத்துக்கான ஆசிகள் கிடைக்க பெறுவர் .
Related Posts Plugin for WordPress, Blogger...