என்னை தொடர்ந்து

வாருங்கள், நண்பரே வணக்கம். தங்கள் வருகையை பதிவு செய்யுங்களேன் !அன்புடன் கருணாகரன்6,இடைப்பாடி. அன்பர்களே ! முழுக்க முழுக்க தமிழில் திருக்கணித முறையில் ஜாதகம் கணிக்க வேண்டுமா? உங்கள் பெயர், பெற்றோர் பெயர், பிறந்த தேதி, மாதம் வருடம், பிறந்த இடம் போன்ற விபரங்களை தாருங்கள், உங்கள் ஜாதகம் கூரியர் மூலமாக உங்களுக்கு அனுப்பி வைக்கப்படும்.( நள்ளிரவில் இரவு 12.00 மணிக்கு மேல் காலை 7.00 மணிக்குள் பிறந்திருந்தால் விடிந்தால் என்ன கிழமை என குறிப்பிடவும்.K.செந்தில்குமார்,கணேஷ் கம்ப்யூட்டர்ஸ்,34,கடைவீதி, இடைப்பாடி,சேலம் மாவட்டம்-637101.

Friday, July 31, 2015

சொல்லும் மந்த்ரம் ஜெயம் பெற

ஓம் நமசிவய. 


அன்பிற்குரியவர்களே,

மந்த்ரங்களை உச்சரிக்கும் போது இந்த மந்த்ரம் இத்தனை முறைகள் சொல்லவேண்டும் என்று கணக்கிடாதீர்கள் ,
மேலும்,

ஒருமணி நேரத்தில் இந்த மந்த்ரம் முடிக்கவேண்டும் முடித்தபின் அந்த மந்தரம் சொல்லவேண்டும் என்பது போன்ற கணக்கீடுகளுக்கு உட்படுத்திக் கொள்ளாதீர்கள்.

மந்திர உச்சாடனத்தை (பயிற்சியை) குறிப்பிட்ட நேரத்தில் குறிப்பிட்ட எண்ணிக்கையில் முடிக்கவேண்டுமே என அவசரப்படாதீர்கள் .

மஹா காயத்ரியின் எண்ணிக்கை 24 ஆகும்.

நீங்கள் சொல்வது (காயத்ரி, மூலமந்திரம், மாலா மந்த்ரம் , த்ரிசதி என ) எந்த மந்திரமாக இருந்தாலும் அதனை ஸ்ருதி சுத்தமாக, நிதானமாக , நிறுத்தி , பொறுமையுடன், மந்த்ரத்தினுள் ஆழ்ந்து , மந்த்ரத்தை அனுபவித்து , பொருள் உணர்ந்து , புல்லரிப்புடன் அதன் தன்மை மாறாமல் 24 முறைகள் உச்சரித்தால் போதும்.

பிரபஞ்சம் எங்கும் வியாபித்துள்ள மந்த்ரங்கள் உங்களுள் பிரவாகமாக பாய்ந்து அருள்நிலையைத் தந்து நீங்கள் சொல்லும் மந்த்ரத்திற்கு பூரண பலன்களைத் தரும்.

ஆனால்,

அவசர கதியில் வேகமான நடையில் மந்த்ரதினை மனப்பாடம் போல ஒப்பிப்பதால் எத்தனை இலட்சம் சொன்னாலும் எந்த பலனும் ஏற்படாது.

உங்கள் நன்மைக்காக நீங்கள் சொல்லுகின்ற மந்த்ரத்தில் ஏன் பதட்டம், அவசரம்.

பொறுமையாக நிறுத்தி ஆற அமர மந்தரங்களை சொல்லி ஜெயம் பெற வாழ்த்துக்கள்.

ஓம் நமசிவய.


Wednesday, July 29, 2015

கல்ப காலம் என்றால் என்ன ?

அடியேனின் அன்பிற்குரியவர்களே,

அருள்நிறை Kandasamy Siddhappa Chetty :அவர்களின் கேள்வி :

Pranam Guru Ji .
what is called Kalpa kalam or Kalpantha kalam ?

அதற்குரிய பதில் :

ஓம் நமசிவய.

நமது கண்களின் பார்வைக்கு எட்டாத தூரத்தினை நாம் நீலவண்ணமாக உணர்வதுபோல . . . (உதாரணமாக : வானம் )

எண்ணிக்கையில் அடங்காத வருடங்களை நாம் கல்பகாலம் அல்லது கல்பாந்தகாலம் என்று சொல்கின்றோம்.

உதாரணமாக நாம் அறிந்துள்ள விஷயத்தில் இருந்து பார்ப்போம் :

1. யுகங்கள் நான்கு, கிருத (சத்திய) யுகம், திரேதா யுகம், துவாபர யுகம், கலியுகம்.

2. கலியுகத்தின் கால அளவு நான்கு லட்சத்து முப்பத்திரண்டு ஆயிரம் ஆண்டுகள் (4,32,000). துவாபர யுகம் இக்கால அளவைப் போல் இரண்டு பங்கு (8 64,000), திரேதா யுகம் மூன்று பங்கு (12,96,000), கிருத யுகம் நான்கு பங்கு (17,28,000).

3. நான்கு யுகங்கள் சேர்ந்தது ஒரு சதுர்யுகம். இதன் மொத்த கால அளவு நாற்பத்து மூன்று லட்சத்து இருபது ஆயிரம் ஆண்டுகள் (43,20,000).
ஒரு சதுர்யுகம் என்பது ஒரு மஹா யுகமாகின்றது.

4. 71 சதுர்யுகங்களைக் கொண்டது ஒரு 'மன்வந்திரம்' என்று அழைக்கப் பெறும். மன்வந்திரத்தின் அதிகாரியை 'மனு' என்று புராணங்கள் குறிக்கிறது.

14 மன்வந்தரங்களும் முடிந்தவுடன் ஒரு இடைவேளை இருக்கும்.
ஆக,
பிரமனின் ஒரு பகலில், 71 மகாயுகங்களும். 15 ஸந்தியாகாலங்களும் இருக்கும்.

14 மன்வந்தரங்கள் = 71 x 14 மகாயுகங்கள் = 994 மகாயுகங்கள்.
15 ஸந்தியாகாலங்கள் = 15 x 17,28,000 ஆண்டுகள் = 6 x 43,20,000 ஆண்டுகள் = 6 மஹாயுகங்கள்.

ஆக பிரமனின் ஒரு பகலில் ஆயிரம் மகாயுகங்கள்.

ஒரு மகாயுகம் 43,20,000.என்றால் ஆயிரம் மகாயுகங்கள் ................

ஆகவே அதனை நாம் கல்பகாலம் அல்லது கல்பாந்த காலம் என்று ஒரே சொல்லில் சொல்லி விடுகின்றோம்.

5. 14 மன்வந்திரங்களின் கால அளவு ஒரு 'கல்பம்' . இது 1000 சதுர்யுகங்களைக் கொண்டது. இதுவே பிரம்மாவின் ஒரு பகல் பொழுது.

6. பிரம்மாவின் ஒரு நாள் இரு கல்ப காலம்.( 864 கோடி ஆண்டுகள் ).

முதல் கல்பமான பகல் பொழுதின் முடிவில் பிரளயம் வரும்.

பிரயளத்தில் 14 உலகங்களில் மூன்று (பூலோகம், புவர்லோகம், சுவர்லோகம்) மட்டும் முழுவதுமாய் அழியும்.

7. இப்பிரளயம் பிரமனின் இரவுப் பொழுது முழுவதும் நீடிக்கும் (ஒரு கல்ப காலம்). அதாவது அடுத்த 1000 சதுர்யுகங்களுக்கு படைப்பு இல்லை.

அச்சமயத்தில் ஆன்மாக்கள் உருவமற்று, செயலற்று மாயையாகிய கோளத்தில் கட்டுண்டு இருக்கும்.

8. பிரமனின் இரவுப் பொழுது முடிந்தவுடன் மீண்டும் மூன்று உலகங்களின் படைப்பு துவங்கும்.

இக்கால அளவின் படி, பிரமனின் ஒரு நாள்,வாரமாகி, வாரம் மாதமாகி, மாதம் வருடமாகி, அவ்வருடங்கள் நூறு கடந்தால் பிரமனின் ஆயுள் முடிவுறும்.

தற்பொழுது இருக்கும் பிரம்மாவுக்கு இவ்வகையில் 50 ஆண்டுகள் கடந்து விட்டது.

9. தற்பொழுது நடப்பது 'சுவேத வராக கல்பம்'.

இதன் 14 மன்வந்திரங்களில் இப்பொழுது நடைபெறுவது 7 ஆம் (வைவசுவத) மன்வந்திரம். 

இம்மன்வந்திரத்தின் 71 சதுர்யுகங்களில்
நாம் இருப்பது 28 ஆம் சதுர்யுகத்தில்.

10. தற்பொழுது நடைபெறும் கலியுகத்தில் சுமார் 5100 ஆண்டுகள் கடந்துள்ளது.

இக்கலியுகம் முடிவுற சுமார் 4,27,000 ஆண்டுகள் மீதமுள்ளது.

ஆக கல்பம்காலம் அல்லது கல்பாந்த காலம் என்பது கணக்கிலடங்காதது எனப் பொருள்.

ஓம் நமசிவய.

Thursday, July 23, 2015

ஒரு முக ருத்ராட்சம்ஒரு முக ருத்ராட்சம்
அடர்ந்த காடுகளில் கிடைக்கும் ஒரு வகை கடினமான மெழுகில் ஒரு முக ருத்ராட்சம் (கிராப்ட்) சிறிய கத்தி கொண்டு உருவாக்கம் செய்யப்படுகின்றது.
இதுபோல ஒரு ஒருமுக ருத்ராட்சம் கிராப்ட் செய்ய சுமார் 300/- வரை தருகின்றார்கள்.
மெழுகாக இருப்பதால் கனத்தின் காரணமாக நீரில் மூழ்கி விடும்.
நீங்கள் ஒரு முக ருத்ராட்சம் வாங்கினால் அதனை லேசாக விளக்கின் தீபத்தில் காண்பியுங்கள் , மெழுகாக இருந்தால் உருகி விடும்.
பச்சையான ருத்ராட்ச காய்களை வாங்கி வந்தும் இதுபோல வடிவங்கள் அமைத்து உருவாக்கம் செய்கின்றார்கள் .
ஏமாற வேண்டாம் , உஷார்.
ஓம் நமசிவய.

ஒரு முக ருத்ராட்சம் இறைவனுக்கு நிகரானதாக கருதப்படுகின்றது. 

ஒரு முக ருத்ராட்சத்துக்கு ஜின் போன்ற பூத கணங்களை விரட்டும் சக்தி அபரிதமாக இருக்கிறது.

ஒரு முக ருத்ராட்சத்தை ஓடும் நீரில் போட்டால் நீரை எதிர்த்து எதிர்த்திசையில் செல்லும் என்பது ஒரு பரிசோதனை;
ஒரு முக ருத்ராட்சத்தை பூமிக்கடியில் வெகு ஆழத்தில் புதைத்தாலும் அது மேலே வந்துவிடும்.

பெரிய பால் பீப்பாயில் அதைப்போட்டு பஞ்சாட்சர மந்திரம் சொன்னால் பால் பூராவும் உறிஞ்சப்பட்டுவிடும்.
பஞ்சபூதங்களை வெல்லும் சக்தி ஒரு முக ருத்ராட்சத்துக்கு உண்டு.
நவக்கிரகங்களையும் கட்டுப்படுத்தும் சக்தி அதற்கு உண்டு.
ஒரு செம்பு தாம்பாளத்தில் ஒரு முக ருத்ராட்சம் வைத்து அதன்மேல் சாதாரண ருத்ராட்சங்களை போட்டால் பதினைந்து நிமிடத்தில் ஒரு முக ருத்ராட்சம் சாதாரண ருத்ராட்சங்களை விலக்கிக்கொண்டு மேலே வந்துவிடும். 

இவ்வாறான மகா பெரிய சக்திவாய்ந்த , மகத்தான , இறைவனுக்கு நிகரான ஒரு முக ருத்ராட்சதை வைத்திருப்பவர்கள் , ஏழ்மையில் இருப்பார்களா ? 
அதனை விற்று பிழைக்கும் நிலை அதனை வைத்திருப்பவர்களுக்கு வருமா ? 
பல கோடி ருபாய் தந்தாலும் இறைவனை இழக்க யாராவது சம்மதிப்பார்களா ? 
அல்லது ஒரு நாள் தங்களது வீட்டில் வைத்து பூஜை செய்த ஸ்வாமியின் விக்ரஹத்தை மற்றவருக்கு விற்பார்களா ?

ஆகவே ஒரு முக ருத்ராட்சம் என்பது மனிதனின் ஆசையை பணமாக்கும் ஏமாற்று வேலை 


ஏமாற வேண்டாம் , உஷார்.
ஓம் நமசிவய.

Saturday, July 18, 2015

தலை சுற்றல் மறையமிகவும் சோர்வாகவும் , தலை சுற்றலாகவும் இருந்தால் ,


ஒரு பதினைந்து கருவேப்பிலையை எடுத்து சுத்தம் செய்து , அதனுடன் கொஞ்சம் சோம்பும் , சீரகமும் , தண்ணீரும் சேர்த்து மிக்ஸியில் நன்கு அரைத்து அந்த நீரை வடிகட்டி ஒரு தம்ளர் குடியுங்கள் .

பத்து , பதினைந்து நொடியில் உடல் சோர்வு நீங்கி தலை சுற்றல் நின்று புத்துணர்ச்சி தோன்றுவதை உணர்வீர்கள்.

ஓம் நமசிவய.

Tuesday, July 14, 2015

கடன் தீர ஒரு யோசனை

இந்த ஆண்டின் மைத்ரேய முகூர்த்தம் 

Face Book
    https://www.facebook.com/karunakaran.rathinasamy


மோகினி சேட்டை

சிலர் இரவில் உறக்கத்தில் பேசுவார்கள், சப்தமிடுவார்கள், உரக்க கத்தியபடி எழுந்து கொள்வார்கள், பெண்ணோடு உறவு கொண்டது போல் கனவும் , உடல் சோர்வும் , சக்தி வேளியேறுதலும் உண்டாகும்.

இதனை மோகினி பிடித்திருக்கின்றது என்பார்கள் .

இவர்களை இதிலிருந்து காக்கும் வழி .
நல்லெண்ணையை - நல்லெண்ணெய் என்று கேட்காமல் வேறு பெயர் சொல்லி வாங்கி வரவும். அந்த எண்ணையை ஒரு பாட்டிலில் ஊற்றி வெயிலில் மூன்று நாட்கள் வைக்கவும்.
பிறகு அதனை எடுத்து பத்திரப்படுத்தி கொள்ளவும்.

அந்த எண்ணையை சம்பந்தப்பட்ட நபர் இரவில் உறங்கும் போது அவர் அறியாமல் அவரது வலது உள்ளங்காலில் மயிலிறகால் தடவி விடவும் .

தொடர்ந்து ஐந்து நாட்கள் தடவி வந்தால் அதன் பின் அவர் அவ்வாறு நடந்து கொள்ள மாட்டார். அவருக்கு அவ்வாறு நடைபெறாது.

ஓம் நமசிவய.
Related Posts Plugin for WordPress, Blogger...