என்னை தொடர்ந்து

வாருங்கள், நண்பரே வணக்கம். தங்கள் வருகையை பதிவு செய்யுங்களேன் !அன்புடன் கருணாகரன்6,இடைப்பாடி. அன்பர்களே ! முழுக்க முழுக்க தமிழில் திருக்கணித முறையில் ஜாதகம் கணிக்க வேண்டுமா? உங்கள் பெயர், பெற்றோர் பெயர், பிறந்த தேதி, மாதம் வருடம், பிறந்த இடம் போன்ற விபரங்களை தாருங்கள், உங்கள் ஜாதகம் கூரியர் மூலமாக உங்களுக்கு அனுப்பி வைக்கப்படும்.( நள்ளிரவில் இரவு 12.00 மணிக்கு மேல் காலை 7.00 மணிக்குள் பிறந்திருந்தால் விடிந்தால் என்ன கிழமை என குறிப்பிடவும்.K.செந்தில்குமார்,கணேஷ் கம்ப்யூட்டர்ஸ்,34,கடைவீதி, இடைப்பாடி,சேலம் மாவட்டம்-637101.

Saturday, January 24, 2015

நித்ய பூஜை

அன்புள்ள நண்பர்களே, வணக்கம்.

நீங்கள் நித்ய பூஜை அதாவது மந்திரங்கள் சொல்லி நைவேத்யம் வைத்து முறைப்படி செய்பவராக இருந்தால் உங்களுக்காக பூஜை செய்வது தொடர்பான சூட்சுமமான தகவல்களை தந்து இருக்கின்றேன் சேகரித்து வைத்துக் கொள்ளுங்கள் . 

பயனுண்டு . 

காலையில் எழுந்தவுடன் முதலில் கண்களை மூடியபடியே வடக்கு நோக்கி அமருங்கள் . 
மனதில் உங்கள் தாய்தந்தையர் முகங்களை கொண்டுவாருங்கள் (அவர்கள் இருந்தாலும் இல்லையென்றாலும்) அவர்களை வணங்கி மனமார அவர்களின் வாழ்த்தை வேண்டுங்கள் , அடுத்து உங்கள் குலதெய்வத்தினை (தெரிந்திருந்தாலும் தெரியாவிட்டாலும்) வணங்கி இந்நாளை நன்னாளாக தருமாறு எண்ணி வணங்குங்கள். 

உங்கள் குழந்தைகள் (சிறியவரோ பெரியவரோ) அவர்களை எல்லா நலமும் பெற்று வாழவேண்டும் என்றெண்ணி நீங்கள் வாழ்த்துங்கள். 

இப்போது உங்கள் இரண்டு கரங்கையும் விரித்து உள்ளங்கைகள் இரண்டையும் பார்த்து கண்களை துடைத்து எழுங்கள் . 
அப்படியே பூஜை அறைக்கு செல்லுங்கள் அங்குள்ள நீங்கள் வணங்கும் அனைத்து தெய்வங்களையும் கைகூப்பி இந்நாளை அனைத்து உயிர்களுக்கும் நலம்பிறக்கும் நாளாக மாற்றி அருள்வாய் இறைவா என மனம் நிறைந்து வேண்டுங்கள்.

இனி உங்கள் காலைக் கடன்களை முடியுங்கள்  .   
பதிவில் சொல்லியபடி நீங்கள் எழுந்து காலைக்கடன்களை முடிக்கும் போது மலஜலம் கழிக்கும் போது ( நீங்கள் குண்டலினி பயிற்சி செய்பவராக இருந்தால் )அதிக அழுத்தம் (முக்கி) கொடுத்து மலம் கழித்தல் கூடாது.
குளியல் . . 
சூரியன் உதிக்கும் முன் குளிப்பதாக இருந்தால் வடக்கு நோக்கியும் , சூரியன் உதித்த பின் குளிப்பதாக இருந்தால் கிழக்கு நோக்கியும் நின்று குளிக்கவேண்டும்.
குளிக்கும் முன் ஒரு செம்பு அல்லது பிளாஸ்டிக் மக்கில் முழுக்க ஜாலம் எடுங்கள் , சொல்லப்பட்ட திசையை நோக்கி நில்லுங்கள் .
அந்த நீரில் ஒரு சிட்டிகை மஞ்சள் தூள் அல்லது விபூதியை போட்டு கலக்கி நீரினுள் ஒரு விரலை விட்டுக் கொண்டு சூரியனை வணங்கி , ஓம் ஸ்ரீ பவசிவ என 18 முறைகள் சொல்லி , குலதெய்வத்தினை எண்ணி வணங்கி , மூன்று தடவைகள் நீரினை தலையில் தெளித்துக்கொள்ளவும் , பின் மூன்று முறைகள் நீரெடுத்து முகம் கழுவவும் , பின் மீண்டும் மூன்றுமுறைகள் நீரினை நீங்கள் குளிக்க வைத்திருக்கும் நீரில் விடவும் .
மீதமுள்ள நீரினை தலையில் வழிய ஊற்றிக் கொள்ளவும் .
இதன்பிறகு குளிக்க துவங்குங்கள் . ஒவ்வொருமுறை நீர் ஊற்றும்போதும் உங்கள் இஷ்ட தெய்வத்தினை பெயர் சொல்லி ஊற்றிக் கொள்ளுங்கள் ( நமசிவய- ஓம் சக்தி-) நன்கு முகம் பின் கைகள் முழங்கைகள் , கால்கள் , பின் கால்கள் , மலபாகம் , மறைவிடங்கள் , குதிகால் உள்ளங்கால்கள் என்று உடலின் எந்த பாகமும் விடாது தேய்த்து நன்கு சுத்தப்படுத்துங்கள் , எல்லாம் மந்த்ரம் சொல்லியபடியே செய்ய வேண்டும்.
தனியறையாக இருந்தாலும் , உள்ளே தாழிட்டு குளித்தாலும் நிர்வாண குளியல் கூடாது . (இது மாத்ரு சாபமும், மாத்ரு தோஷமும் உண்டாக்கும்) சுத்தமாக துடைத்துக் கொண்டு வெளியே வாருங்கள் .
அலங்காரம். . . 
வேடமும் நீரும் விளங்க நிறுத்தி என்கிறார் அவ்வையார்.
அலங்காரத்தினை வேடம் என்று சொல்லும் அவ்வை அதனை அழகாக செய்துகொள்ள சொல்கின்றார்.
காரணம் உபாசகன் அலங்காரமாக இருப்பானேயாகில் சந்துஷ்டியாக (குதூகலமாக) கார்யம் செய்வான், அவன் மனதில் ஆனந்தம் இருக்கும். விரைவில் அவனது கார்யம் சித்திக்கும்.ஆனந்தமயமாக இருக்கும்.
தாய்தந்தையர் உள்ளவர்கள் விபூதியை நீரில் குழைக்கக் கூடாது. ஸ்தூலமாக (பவுடராக) தரிக்க வேண்டும்.
வடக்கு நோக்கி நில்லுங்கள். விபூதி தரிப்பவராக இருந்தால் நடுவிரல், மோதிர விரல், கட்டை விரல் மூன்றையும் கூட்டி விபூதியை எடுத்து வானம் , பூமி ,    குல தெய்வம் , உங்கள் இஷ்டதெய்வம் முதலியவற்றை துதித்து இடது உள்ளங்கையில் வையுங்கள் . வலது கையால் சிறிது நீரை எடுத்து கங்கா, யமுனா, சரஸ்வதி, காவிரி, நர்மதா என்று த்யானித்து சிரம் சுற்றி விபூதியில் விட்டு குழையுங்கள் ( தாய் தந்தையர் உள்ளவர்கள் நீர் விடாமல் மேற்கொண்டு செய்யுங்கள்) உள்ளங்கையில் விபூதியை பரப்பி அதில் ஓம் நமசிவய என மோதிர விரலால் எழுதுங்கள். பின் அதனை ஒன்று சேர்த்து இருகைகளாலும் தேய்த்து ஆள்காட்டி விரல், நடுவிரல், மோதிரவிரல் இம்மூன்று விரல்களாலும் நெற்றியில் நமசிவய என்று சொல்லி மூன்று முறை இடவும்.
பின் புஜம், முன் கை, முழங்கை, பின் தோள்கள், இடுப்பு , மார்பின் மேல், நெஞ்சு , வயிறு போன்ற இடங்களில் மூன்றங்குலத்திற்கு மேல் நீளமில்லாதவாறு இடவும். நெற்றியில் மட்டுமே ஐந்து அல்லது ஆறு அங்குலம் இருக்கலாம். (பெண்கள் நெற்றியில் மட்டும் இட்டால போதும் மீதியை வயிற்றில் பூசிக் கொள்ளலாம்)
இப்போது குனிந்தமர்ந்து கீழே சிந்தியுள்ள விபூதியை நன்கு துணியால் துடைக்கவும் , பாதம் படலாகாது.
பின்னர் உங்கள் வழக்கப்படி சந்தனமோ குங்குமமோ இட்டுக் கொள்ளுங்கள்.
இனி நீங்கள் வைத்திருக்கும் ஸ்வாமி மூர்த்தங்களை அலங்கரியுங்கள் .
பூ வைத்து , பொட்டிட்டு , பழம் , கல்கண்டு , போன்ற நைவேத்தியங்கள் வைத்து அலங்காரம் செய்து பூஜையை துவங்குங்கள்.
(நீங்கள் குரு உபதேசம் பெற்றிருந்தால் அதன்படியே செய்யுங்கள். இதனையும் சேர்த்துக் கொள்ளுங்கள். எக்காரணம் கொண்டும் குருவிடம் பெற்றதை நிறுத்தக் கூடாது.)
.
தினசரி பூஜை செய்பவர்கள் தேங்காய் உடைத்து படைக்க வேண்டியதில்லை. 
ஆனால் தேங்காய் உடைத்து செய்யவேண்டும் என்பது குரு உத்திரவாக இருந்தால் செய்யலாம்.
வழக்கமான பூஜை முறைகளை செய்து ஊதுபத்தி , சாம்பிராணி தூபம் காட்டி விட்டு , ஊதுபத்தியை (குறைந்தது 5) மட்டும் எடுத்து வீடு முழுவதும் காண்பியுங்கள் , உதடு மட்டும் தெய்வ நாமம் சொல்வதை நிறுத்தக்கூடாது. வாசல் , சமையல் அறை , பணம் வைக்கும் பெட்டி இருக்கும் அறை என எல்லா இடங்களுக்கும் காண்பித்து பின் பூஜை அறைக்கு வாருங்கள் . ஒவ்வொரு அறைக்கும் ஒரு ஊதுபத்தி வையுங்கள். இரண்டு ஊதுபத்தி பூஜை அறையில் வைத்தால் போதும்.
வடக்கு நோக்கி அமருங்கள் அல்லது கிழக்கு நோக்கி அமருங்கள்.   
பூஜையை முதலில் விநாயகரில் துவங்க வேண்டும். கணபதியின் துதி சொல்லலாம் . “சுக்லாம் பரதம்“ சொல்வதானால் அதற்கு சில சடங்குகள் உண்டு , அதன்படிதான் சொல்லவேண்டும் .அதனால் எல்லோரும் அதனை சொல்லமுடியாது .  “ஐந்து கரத்தனை”  அல்லது கணபதி காயத்ரி தத் புருஷாய வித்மஹே“ சொல்லலாம் . வேறு ஏதாவது தெரிந்தால் சொல்லுங்கள்.
பின் உங்கள் பூஜை சிறந்து விளங்க வேண்டுமல்லவா ? அதற்கு எந்த தடையும் வரலாகாது அதனால் ஏதேனும் ஒரு கட்டு மந்த்ரம் சொல்லுங்கள்
உங்களுக்கு கட்டு மந்த்ரம் தெரியாது என்றால் அடியேனின் இ மெயிலில்  gurukaruna2006@gmail.com கேளுங்கள் தருகின்றேன் .
இனி  
உங்களுக்கு கொடுக்கப்பட்ட வழக்கமான மந்தரங்களை சொல்லுங்கள்.
மந்த்ரங்களை சொல்லும் போது ஓடாதீர்கள் மந்த்ரத்துக்குள்ளே ஆழ்ந்து சென்று உணர்ந்து அனுபவித்து சொல்லி மகிழுங்கள்.
அனைத்து மந்த்ரங்களும் சொல்லி முடித்த பின் ஸ்ரீ ஆஞ்சநேயர் மந்த்ரம் சொல்லி முடிக்க வேண்டும் .
எந்த காரியமும் கணபதியில் துவங்கி ஆஞ்சநேயரில் முடிக்கவேண்டும் .
இதனை வேடிக்கையாக பிள்ளையார் பிடிக்க குரங்காய் முடிந்தது என்பார்கள்.
ஸ்ரீ ராம ஆஞ்சநேயாய நமஹ என்று ஐந்து முறைகள் சொல்லி முடிக்கலாம்.
தீப ஆராதனை காட்டி பூஜையை முடியுங்கள்.

பூஜைக்கு பின் . . .

பூஜை முடிந்தது . இப்போது உங்கள் தெய்வங்கள் உங்கள் முன்னே மிக ஆனந்தமாக அமர்ந்துள்ளார்கள் .
நீங்கள் இப்போது த்யானம் செய்ய துவங்கலாம்.
உங்கள் வழக்கப்படி அமர்ந்து கொள்ளுங்கள்.
மிக மெதுவாக மூச்சினை இழுத்து மூன்றுமுறை விடுங்கள் . அமைதியாகுங்கள்.
உங்களுக்கு தெரிந்த த்யான ஸ்லோகங்கள் மனதிற்குள் சொல்லுங்கள் உங்கள் வேண்டுதல்களை அது எதுவாக இருந்தாலும் சொல்லுங்கள் .
அவர்களின் ஆசீர்வாதம் வேண்டுங்கள் , மன்றாடுங்கள் , எனக்கு வேறுயார் தருவார்கள் என உரிமையோடு கேளுங்கள் .
(உங்கள் வேண்டுதலில் நியாயமும் , சத்தியமும் இருக்கவேண்டும்)
இனி உங்கள் பூஜையின் பலன் உங்களைத் தேடி வருவதை பாருங்கள்.
நமது மனமே நமது செயல்களை வெற்றியாக்கி தரும் மாயாஜாலக்கன்னாடி.
அதனை நம் பிரியப்படி நடக்க நாம்தான் பழக்கவேண்டும் .
இப்படி சுமார் 15 அல்லது 20 நிமிடங்கள் அமர்ந்திருங்கள். பின் பூஜையை சிறப்புடன் செய்ததை எண்ணி மகிழ்ந்து எழுங்கள்.
இவ்வாறாக நித்ய பூஜை செய்தால் உங்கள் கோரிக்கைகள் ஏற்றுக்கொள்ளப்பட்டு விருப்பம் நிறைவேறும்.


ஓம் நமசிவய.

Tuesday, January 13, 2015

உயர்நிலைகுமரவேல் வைத்தியநாதன் அவர்களின் மிக அருமையான கேள்வி :
.நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலு புட்பம் சாத்தியே
சுற்றி வந்து முணுமுணுத்துச் சொல்லும் மந்திரம் ஏதடா
நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
சுட்ட சட்டி சட்டுவம் கறிச்சுவை அறியுமோ ?

அய்யா இந்த பாடலின் படி பார்த்தால் நாம் செய்யும் அனைத்தும் வீண் போல் அல்லவா தெரிகிறது இதன் கூற்று படி பார்த்தோமேயானால் கோவிலே தேவையில்லை என்றல்லவா வருகிறது .

ஆனால் இதே சிவவாக்கியர் நிச்சயம் ஈசனை சிலை வடிவில் தொழாமல் இருந்திருக்கமாட்டார் அப்படி இருக்க ஏன் இந்த முரண்பாடு?

விள்க்கௌம்.

அன்புள்ள குமரவேல் வைத்தியநாதன் , வணக்கம் , மிகவும் நல்ல கேள்வியைக் கேட்டிருகின்றீர்கள் , காரணம் ஆன்மீக மார்க்கத்தை அடைந்தவர்களும் இதே கேள்வியை மனதில் கொண்டிருக்கின்றார்கள் என்பதனை அறிந்துள்ளேன் என்பதானால் கூறுகின்றேன்.

நாமும் பெருமானாரான சிவவாக்கியரும் ஒன்றா ? சரி இருக்கட்டும் .

உங்கள் கேள்விக்கு வருவோம்.

மகா பெரியவரான பெருமானார் சிவவாக்கியர் அறியாததா ? அல்லது அவர்களாலேயே அறிய முடியாததை நம்மால் அறிந்து கொள்ளத்தான் கூடுமா ?

அவர்களின் ஒவ்வொரு சொல்லுக்குள்ளும் பல ஆயிரம் அர்த்தங்கள் பொதிந்துள்ளது , ஆனால் நாம் மற்றவர்கள் சொல்லும் எந்த ஒரு சொல்லையும் , விஷயத்தையும் நாம் நமது அறிவினாலேயே தெரிந்து கொள்ள முயல்கின்றோம் , விளங்கிக் கொள்கின்றோம் – காரணம் அதற்குமேல் சிந்திக்க நம்மால் – நாம் கற்ற அறிவால் முடியாததுதான்.

பெருமானார் சிவவாக்கியர் அவர்கள் சொன்னதை அவர் எப்போது சொன்னார் , யாருக்காக சொன்னார் என்பதை பார்க்கவேண்டும் .

நாம் முதல் பக்கத்தையும் இறுதி பக்கத்தையும் ஒரு சேர படித்துவிட்டு எப்படித்தான் இருக்கும் என முடிவெடுக்கின்றோம்.

அவ்வையார் மானிட பிறப்பினை அறிதென்கின்றார் ஓரிடத்தில் , பிறிதோரிடத்தில் பிறவாமை வேண்டும் என்கின்றார்.

ஏன் இந்த மாறுபாடு.

அதனை பதிலாக சொன்னது மகனிடம் (முருகன்) இதைக் வரமாகக் கேட்டது தந்தையிடம் (சிவபெருமான்).

நாம் உடனே அவ்வையார் பிறவாமை கேட்கிறார் அப்பறம் பிறப்பே அரிது என்கிறாரே என்றெண்ணகூடாது.

அது அந்த இடத்திற்கான பதில் , அடுத்தது இந்த இடத்திற்கான வேண்டல்.

இரண்டுமே பேருண்மை.

மனித பிறப்பில்லாமல் வேறு எப்பிறப்பினாலும் தமது வினைகளை மனிதர்கள் தீர்க்கவே முடியாது.

மிக உயர்ந்த நிலையை அடைந்த பின்னும் மனமானது உருவ வழிபாட்டிலேயே இருக்குமானால் அதற்கு உய்யும் நிலையே கிட்டாது போகும்.
அதனாலேயே பெருமானார் சிவவாக்கியர் மிக விளக்கமாக, மனிதர்களுக்கு புரியும் விதமாக,  எளிமையாக அருளிச் செய்த பாடலாகும் .

ஆனால் அதனை மட்டும் படிப்பவர்களுக்கு அது நாத்திகவாதம் போன்று தோன்றும் .

உதாரணமாக :

பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு சிலேட்டு என்பதும் , அ ஆ அட்டையும் இன்றி அமையாதது.

ஆனால் phd செய்பவர் , அ ஆ அட்டையும், சிலேட்டுமே போதும் என்றிருந்தால் அது சரியா ?

அதுபோலவே

பக்தி மார்க்கம் துவங்கும் ஒருவரின் ஆரம்பகால பக்திக்கு , பாடல்களும் , உருவ வழிபாடும் மிக அவசியமான தேவையாகும்.

ஆனால் . . . .

பக்தி நெறியில் நின்று இறைவனின் மிக மேலான அழகையும் , இந்த பிரபஞ்சத்தை அவர் நடத்தும் அற்புதத்தையும் , அவரையும் உணர்ந்த பின்னும், உருவ வழிபாட்டை தொடர்ந்தால் அது நாம் இன்னும் நமது இறைவழிபாட்டின் முழுமையையும் , இறைவனையும் அறிந்ததற்கு அடையாளம் இல்லை.

அதனால்  

அப்படி உயர்நிலை கண்டு கொண்டவர்கள் இன்னும் உருவ வழிபாட்டிலே இருப்பதால் அவர்களையே மகா பெரியவரான சிவவாக்கிய பெருமானார் சாடுகின்றார்.

இதனை மேல்நிலையை அடைந்து , இறைவனை உணர்ந்தவர்களே உணர்வர் .(அறிவர் இல்லை).

ஓம் நமசிவய. 
Related Posts Plugin for WordPress, Blogger...