என்னை தொடர்ந்து

வாருங்கள், நண்பரே வணக்கம். தங்கள் வருகையை பதிவு செய்யுங்களேன் !அன்புடன் கருணாகரன்6,இடைப்பாடி. அன்பர்களே ! முழுக்க முழுக்க தமிழில் திருக்கணித முறையில் ஜாதகம் கணிக்க வேண்டுமா? உங்கள் பெயர், பெற்றோர் பெயர், பிறந்த தேதி, மாதம் வருடம், பிறந்த இடம் போன்ற விபரங்களை தாருங்கள், உங்கள் ஜாதகம் கூரியர் மூலமாக உங்களுக்கு அனுப்பி வைக்கப்படும்.( நள்ளிரவில் இரவு 12.00 மணிக்கு மேல் காலை 7.00 மணிக்குள் பிறந்திருந்தால் விடிந்தால் என்ன கிழமை என குறிப்பிடவும்.K.செந்தில்குமார்,கணேஷ் கம்ப்யூட்டர்ஸ்,34,கடைவீதி, இடைப்பாடி,சேலம் மாவட்டம்-637101.

Tuesday, February 7, 2017

வலி இனிது

ஓம் நமசிவய .
அன்பிற்குரியோர்களே,

வலி எனும் இன்பம் .

வலி என்பது இன்பமா ?

என்னய்யா  இப்படி சொல்லிட்டீங்கன்னு ... நீங்கள் கேட்பது புரிகின்றது.

உண்மைதான் .

நாம் குழந்தையாக இருந்த காலம் முதலே வலியை இன்பமாவே பார்த்து ஏற்றுக்கொள்ள பழகிக்கொண்டோம்.

மீண்டும் குழப்பமா ??!!

தெளிவாக சொல்கின்றேன் கேளுங்கள்.

உடல்நலக்குறைவுக்காக டாக்டரிடம் செல்கின்றோம் , அவர் ஊசி போடுகின்றார் . வலிக்கின்றது.

வலிக்கின்றது என்று அம்மாவிடம் சொன்னோம்.
அம்மா சொன்னார்கள் தேய்ச்சிவிட்டால் சரியாயிடும் .
ஆனால் தேய்த்தால் வலி அதிகம் ஆனது.
குழந்தையான  பொறுத்துக்கொண்டோம், கொஞ்ச நேரம் நமது கவனம் வேறு திசை திரும்பியதும் வலி மறந்து போனோம்.

வெகு தூரம் நடக்கின்றோம். வீடு வந்து சேர்ந்ததும் மனைவியிடமோ, மகனிடமோ சொல்கின்றோம்.

ரொம்ப தூரம் நடந்தது கால்கள் வலிக்குது கொஞ்சம் அமுக்கி விடறியா??
அவர்கள் கால்களை அமுக்கி விடுகின்றார்கள்.
அழுத்தப்படும்போது கால்கள் இன்னும் அதிகமாக வலிக்கின்றது , நாம் பொறுத்துக் கொள்கின்றோம்.
ஏனெனில் இந்த வலி இன்பமாக இருக்கின்றது.
வலிக்கும் கால்களை அமுக்கியாவிடுவது ? மெல்ல தடவிக் கொடுத்தால்தான் நல்லது, ஆனால் நாம் அமுக்கி விடும்படி சொல்கின்றோம்.
தலைவலி உயிரே போகுது என்போம் , ஆனால் தலையை அழுத்தி விட்டால் நன்றாக இருக்கிறது என்போம்.

காரணம் வலிக்கு வலியே நிவாரணி.

வாழ்க்கையிலும் நாம் பலவித வலிகளை சந்திக்கின்றோம்.
குறிப்பிட்ட காலம் முடிந்ததும் அந்த வலிகளை மறந்து சகஜ வாழ்க்கைக்கு திரும்பி விடுகின்றோம். அந்த வலியை மறந்தும் விடுகின்றோம்.

மீண்டும் ஒரு வலியை சந்திக்க தயாராகின்றோம்.

ஏனெனில் வலி என்பது வாழ்வில் ஒரு அங்கம்.

எந்த உருவிலாவது வலி எல்லோருக்கும் வந்திருக்கின்றது .

ஆனால் நமக்கு வரும்போதுதான் அதன் வலி நமக்கு பெரிதாக தெரிகின்றது.

பிள்ளைப்பேறு (பிரசவம்) என்பது பெண்ணின் மறுபிறப்பு என்பார்கள்.
அந்த வலிக்கு ஈடான வலியே இல்லை என்பார்கள்.
பிரசவம் முடிந்தவுடன் மயங்கிவிடுவாள் அந்த பெண் அவ்வளவு மோசமான உயிர்போகும் வலியை கண்ட அந்த பெண் , மயக்கம் தெளிந்தபின் முதலில் கேட்பது எங்கே என் குழந்தை என்பதுதானே.

சிறுபிஞ்சு முகத்தோடு குழந்தையை அருகில் கண்டபின் தான் அடைந்த மரண வலியை மறப்பதுபோல,

குடும்பபாரம் சுமப்பது என்பது சாதாரணம் அல்ல . அந்த வலியைப்பற்றி  நிறைய சொல்லலாம்,
அந்த வலியை பெறுகின்ற மனிதன்,
தனது மனைவியின் இதழோர சிறு சிரிப்பும், தனது பிள்ளைகளின் கபடமில்லாத அன்பும் கண்டு தான் சுமக்கும் வலியை மறக்கும் தந்தையைபோல ,

சீடர்களின் பலதரப்பட்ட கோரிக்கைகளும், தேவைகளும் , சங்கடங்களும் கேட்டு குருவானவர் பெறுகின்ற மனவலி என்பது கொஞ்ச நஞ்சமல்ல,

அதனை சொன்னால் புரியாது .

தன்னையே உயிரினும் பெரிதாக எண்ணும் இந்த குழந்தைகளுக்கு ஏதேனும் தரவேண்டும் என்கின்ற பேராவலில் அவர்களுக்காக பிரார்த்தித்து, அவர்களுக்கு ஆசிகள் வழங்கி,  மந்த்ரோபதேசம் தந்து அவர்களை சந்தோஷப்படச் செய்து ,
பின்னொரு நாளில் எப்படி இருக்கின்றீர்கள் , முன்னேற்றம் உண்டா என்று அவர்களை கேட்டு , அவர்கள், ஆமாம் அப்பா ஒரு மாறுதலை உணருகின்றோம் என்று சொல்ல அவர்களின் முன்னேற்றம் தருகின்ற அந்த இன்பம்,

அதுவரை தான் பெற்ற வலிகளை எல்லாம் மறக்கசெய்வது மட்டுமல்ல மீண்டும் வலிகளை சுமக்க குருவானவர் தயார் ஆவதைப்போல,           

இவ்வாறான வலிகள் எல்லாம் சுகமானவையே என்போம்.

ஆகவே,

வலி என்பது எவ்வழியிலாவது நம்மை வந்தடையும் நாம்தான் அதனை புரிந்து ஏற்றுக் கொள்ளவேண்டும்.

வலியில்லாத வாழ்க்கை என்பது இல்லவே இல்லை என்பதை புரிந்து கொண்டால் வலி என்பது மிகவும் இன்பமே.

இனி வலியை பெரிதுபடுத்தாமல் வலி வருவது இயற்கையே என ஏற்றுக்கொண்டால் (அதுதான் நமக்கு பழக்கமாயிற்றே ) வலி சுகமானது மட்டுமல்ல , இன்பமானதும் கூட.

இப்போ தெரியுதா வலி என்பது இன்பமே.

ஓம் நமசிவய. 
Related Posts Plugin for WordPress, Blogger...