என்னை தொடர்ந்து

வாருங்கள், நண்பரே வணக்கம். தங்கள் வருகையை பதிவு செய்யுங்களேன் !அன்புடன் கருணாகரன்6,இடைப்பாடி. அன்பர்களே ! முழுக்க முழுக்க தமிழில் திருக்கணித முறையில் ஜாதகம் கணிக்க வேண்டுமா? உங்கள் பெயர், பெற்றோர் பெயர், பிறந்த தேதி, மாதம் வருடம், பிறந்த இடம் போன்ற விபரங்களை தாருங்கள், உங்கள் ஜாதகம் கூரியர் மூலமாக உங்களுக்கு அனுப்பி வைக்கப்படும்.( நள்ளிரவில் இரவு 12.00 மணிக்கு மேல் காலை 7.00 மணிக்குள் பிறந்திருந்தால் விடிந்தால் என்ன கிழமை என குறிப்பிடவும்.K.செந்தில்குமார்,கணேஷ் கம்ப்யூட்டர்ஸ்,34,கடைவீதி, இடைப்பாடி,சேலம் மாவட்டம்-637101.

Saturday, November 22, 2014

பிறப்பும் இறப்பும் ஏன் ?


பிறப்பும் இறப்பும் ஏன் ?

பிறப்பு எனும் பேரதியத்தை இன்னும் மானிடர் எவரும் புரிந்து கொண்டபாடில்லை எனும் போதிலும் பிறப்பு ஒரு புதிராகவேதான் உள்ளது.
எவ்வளவோ புதிர்கள் விடுவிக்கப்பட்ட நிலையில் பிறப்பின் பேருண்மையை இயற்கை (இறைவன்) இன்னும் தனது ஆதிக்கத்திலேயே வைத்துள்ளதை உணர்கின்றோம்.

எதனால் இந்த பிறப்புகள்? பிறப்பினால் யாருக்கு நன்மை ? ஒரு நொடியும் தவறாமல் தைல தாரையாக நடைபெறும் , இந்த பிறப்பெனும் நிகழ்வினால் விளையும் நன்மை யாது?

பிறப்புக்கும் இறப்புக்கும் யார் அல்லது எது காரணம் ? இதனால் அவர்களுக்கு அல்லது அதற்கு என்ன ஆதாயம் ?

விதிப்படி பிறப்பதும் , விதிப்படி மரணிப்பதும் தொடர்கதையானால் இதன் முடிவு எப்போது ?

இப்படியே போனால் பிறப்பின் மீதும் ,
இறப்பின் மீதும் வெறுப்பு ஏற்படாதா ?

ஒருவித அலுப்பும் சலிப்பும் ஏற்படுமானால் பிறப்பினாலும், பின் வரும் இறப்பினாலும் என்ன பயன் ?

எந்தவித காரணமுமில்லாமல் பிறப்பும் இறப்பும் இருக்குமா ?

அப்படியானால் . . . . . .

இந்த பிரபஞ்ச தோற்றத்தின் காரணமென்ன ? அதற்கும் ஜீவன்களின் பிறப்பிற்கும் ஏதேனும் சம்பந்தமுண்டா ?

. . . . . . . . .என்பது போன்ற எண்ணிக்கையில் அடங்காத கேள்விகள் அலைஅலையாக மனக்கடலில் எழுந்தவண்ணமாக இருந்ததால் இந்த கட்டுரையை எழுத நேர்ந்தது.

இதனை அன்பு நண்பர்கள் முன் பகிர்ந்து கொள்வதில் மகிழ்கின்றேன்.

பிறப்பு என்பது என்ன என்பதை முழுமையாக அறியாத வரையில் பிறப்பின் இரகசியத்தினை அறிந்து கொள்ள முடியாது.

பிறப்பினை அரிதிலும் அரிது என்றனள் ஔவை .
பிறப்பினை எதற்கும் உவமை சொல்லமுடியாதென்றார் மேலோர்.
பிறப்பினை இறப்பாக மாற்றக்கூடாது என்பதில் சமர்த்தர்கள் சித்தர்கள்.

இப்படி பல வகையிலும் சிறந்ததான பிறப்பு ஏன் இறப்பாகவும் மாறுகின்றது?

பிறப்பு சிறந்ததென்றால் இறப்பு வேண்டாமே ?

உத்தமர்களும் மரணிக்கின்றனர் , உன்மத்தர்களும் மரணிக்கின்றனர்.

ஏன் இந்த நேர்தல் ?

உத்தமரும் இறப்பர் என்றால் நான் உன்மத்தனாக இருக்கின்றேன் எனும் மனோபாபம் மனிதர்களுக்கு ஏற்படாதா ?

பிறப்பினை அரிதென்ற ஔவை பிறிதோரிடத்தில் பிறவாமை வேண்டுகின்றார்.
ஏன் இந்த முரண்பாடு ? கேள்விகள் , கேள்விகள் ?!?!

கவியரசர் கண்ணதாசன் அவர்கள் ஒரு திரைப்படப்பாடலில் பள்ளிவரை நாங்கள் , படைக்கிறவன் இறைவன் என்கிறார்.
அதாவது பள்ளியறையில் ஒன்று கலப்பதோடு மனிதனின் முயற்சி முடிந்தது அதன்பின் பிறப்பினை அருள்வது இறைவனின் பேரருள் என்கிறார்.
அது உண்மைதான், பள்ளியறையில் ஒன்று கலந்தவர்கள் அனைவரும் புத்திரபாக்கியம் பெறுவதில்லை.

அப்படியென்றால் பிறப்பினை தந்தருள்வது இறைவன்தான் (இயற்கைதான்) என்பதில் வேறு கருத்தில்லை.

அவரவர் வம்சம் தழைக்கவும் , வம்சம் தடைபட்டு போகவும் இறைவனே (இயற்கையே) முன் நின்று வழி நடத்துகின்றார்.
எத்துணை பெண் குழந்தைகள் இருந்தாலும் வம்சாவழி தோன்றாது, ஆனால் ஒரு ஆண் குழந்தை இருந்தால் வம்சம் பல்கி பெருகும்.

இந்த தோன்றலையும் , தோன்றா நிலையையும் இறைவன் (இயற்கை) அவரவர் விதிப்படி மிகச் சரியாக அமைத்து தருகின்றது.
இதில் எந்த ஐயப்பாடும் இல்லை.

ஆனால் இந்த பிறப்பினாலும் அதன்பின் வரும் இறப்பினாலும் 
என்னபயன் ?
ஒரு வம்சம் தழைப்பதனாலும் , வம்சம் அழிந்து போனாலும் யாருக்கு என்ன பயன் ?
பகவான் கிருஷ்ணனாக இருந்தாலும் , மகாத்மாவாக இருந்தாலும் பூமியிலேயே தங்கிவிட முடியாது .
ஹிட்லராக இருந்தாலும் , கொடுங்கோலனாக இருந்தாலும் இங்கேயே தங்கிவிட முடியாது என்றால் . . . . . .
பிறப்பு எதற்கு ? இறப்பு எதற்கு ?

இறந்துதான் போகும் என்றால் பிறப்பே இல்லாமல் இருக்கலாமே !!!!!!!
பிறந்து அதன்பின் ஏன் இறப்பு நேரவேண்டும் ?

1. பிறப்பின் பின் அடையும் நாவின் சுவை , தேக சுகம் , பதவி , புகழ் தரும் மயக்கம் .
மது , மாது என வருகின்ற போக சுகங்களும் . . . . . பின் மரணம்.

2. பிறப்பின் பின் மனிதன் , யோகி , ஞானி , தீர்க்கதரிசி , மகரிஷி பின் மரணம் .
என்ன இது ? ஏதோ ஒன்று இடிக்கின்றதே ? என்ன அது ?  

பிறப்பின் காரணம் புரியாத ஒன்றுதான். ஆனால் அதில் ஏதோ ஒன்று மறைந்திருக்கின்றது .

அது என்ன ?

பிறப்பு என்பதனை சற்று ஆழ்ந்து ஆய்ந்தால் ஒன்று விளங்குகின்றது , அதாவது ஜீவராசிகளின் பாப , புண்ணிய பலனாகவே பிறப்பு ஏற்படுகின்றது.
முற்பிறப்பிலும் , இப்பிறப்பிலும் செய்த பாப , புண்ணியங்களின் பலனாகவே இறப்பு நேர்கின்றது.
மீண்டும் பாப , புண்ணிய பலனாக பிறப்பு , மீண்டும் முற்பிறப்பின் , இப்பிறப்பின் பலனாக இறப்பு .
இதுவே தொடர்கதையாகி இன்றுவரை மட்டுமல்ல , இனி வரும் காலமும் தொடரும் கதை.
இதன் பொருளென்ன ? இதற்கு விடைதான் என்ன ?

இதோ விடை .....

ஒரு காரியத்தின் நிமித்தமாக நாம் வெளியூருக்கு சென்றால் , அந்த காரியம் நடைபெறவில்லையென்றால் என்ன செய்வோம் ? மீண்டும் அந்த ஊருக்கு சென்று அந்த காரியத்தினை செய்து முடிப்போம்.

அப்போதும் முடியாது போனால் மீண்டும் ஒருநாள் சென்று அந்த காரியத்தினை செய்வோம்.

இப்படி அந்த குறிப்பிட்ட காரியம் முடியும் வரை அந்த ஊருக்கு மீண்டும் மீண்டும் செல்வோம் அல்லவா ?

அது போலவே நாம் நமது ஒவ்வொரு பிறப்பின்போதும் அறிந்தும் , அறியாமலும் நாம் செய்த பாப , புண்ணிய காரியங்களின் தொகுப்பை கரைப்பதற்காக மீண்டும் புவியில் பிறப்பிக்கப்படுகின்றோம் ,

ஆனால் . . . .   

பிறப்பினை , அதன் சிறப்பினை உணராமல் மீண்டும் மீண்டும் பாபங்களையும் , புண்ணியங்களையும் செய்து மரணித்து மீண்டும் இறைவனின்(இயற்கையின்)பேரருள் கருணையால் பிறப்பிக்கப்படுகின்றோம்.

நாம் எதற்காக பிறப்பிக்கப்பட்டோமோ அதனை முற்றிலுமாக மறந்து , வெறும் கேளிக்கை , பதவி , புகழ் , பணபலம் , பெண் சுகம் அல்லது ஆண் சுகம் என புறச் சுக ஆவலிலேயே வாழ்நாளை கழிக்கின்றோம், மரணிக்கின்றோம்.

நாம் வந்த காரியத்தினை முடிக்காததினால் மீண்டும் ஒரு பிறவி தரப்பட்டு  இப்பிறவியிலாவது நாம் மாறுவோம் என எதிர்பார்க்கப்படுகின்றது .

ஆனால் மனிதன் அதைப்பற்றி கொஞ்சமும் கவலையின்றி மீண்டும் சிற்றின்ப வேட்கையில் சிக்கி சீரழிகின்றான் , மரணிக்கின்றான்.

இப்படியே பிறந்து இறந்து , பிறந்து இறந்து தொடர்கதையாகி போகின்றான்.
ஆக
பிறப்பு என்பது மீண்டும் ஒரு சந்தர்ப்பம்.
பிறப்பு என்பது மீண்டும் ஒரு வாய்ப்பு ,
பிறப்பு என்பது மீண்டும் ஒரு வரம் ,
பிறப்பு என்பது மீண்டும் ஒரு அருள்கொடை ,
பிறப்பு என்பது மீண்டும் தரப்படும் இறைவனின் (இயற்கையின்) பேரருள்.
பிறப்பின் வாய்ப்பினை பயன்படுத்தி பிறப்பற்ற நிலையை ஜீவன்கள் பெற கொடுக்கப்படும் இறைவனின் பெருந்தயை.

இதனை ஸ்ரீ நாரத மகரிஷி கண்ட ஒரு சம்பவம் விளக்குகிறது .

நாரத மகரிஷி ஒருமுறை ஒரு பன்றி குட்டி போடுவதை காண்கின்றார்.
இவரைக் கண்டதும் பன்றியின் குட்டி ம்ரணிக்கின்றது.
பதறிப்போன மகரிஷி வேறுபக்கம் போகின்றார் , அங்கே ஒரு ஆடு குட்டி போடுகின்றது அதனைக் காணுகின்றார் மகரிஷி , பிறந்த அந்த ஆட்டுக்குட்டி இவரைக் கண்டதும் இறந்து போகின்றது , மேலும் பதறிப்போன நாரதர் வேறொரு இடத்தில் காராம்பசு கன்று போடுவதை பார்க்கின்றார் , அந்த கன்றும் பார்க்கின்றது , பார்த்தவுடன் கன்று மரணம் அடைகின்றது .

மிகவும் கவலை அடைந்த நாரத மகரிஷி மகாவிஷ்ணுவிடம் சென்று முறையிடுகின்றார் , அவரை சமாதானப்படுத்தும் 

மகாவிஷ்ணு , நாரதா ,   “ நீ சென்று அதோ அந்த நாட்டு மன்னனுக்கு ஒரு மகன் பிறக்கப் போகின்றான் அவனை சென்று கண்டுவா  என்கின்றார்.
ஸ்வாமீ , ஏதும் விபரீதம் நடைபெறாதே என வினவுகின்றார் , நாரதர். கவலைப்படாதே சென்று பார் என்கின்றார் மகாவிஷ்ணு.

நாரத மகரிஷி சென்றார் அந்த குழந்தையை கண்டார் , கண்டவுடன் சட்டென்று திரும்பினார் , 
அப்போது அந்த குழந்தை பேசியது “ மகரிஷி அவர்களே , கொஞ்சம் நில்லுங்கள்.
நான் பன்றியின் குட்டியாக பிறந்தேன் தங்களின் திருப்பார்வை என்மீது பட ஆட்டின் குட்டியாக மறுபிறப்பெடுத்தேன், மீண்டும் தங்களின் பார்வையை என்மீது செலுத்தி என்னை காராம்பசுவின் கன்றாக பிறக்கச் செய்தீர்கள் , மறுபடியும் தங்களின் திவ்ய திருஷ்டியைப் பெரும் பாக்கியம் பெற்ற நான் இன்று மன்னனின் வாரிசாக பிறக்கும் வாய்ப்பினை பெற்றேன் தங்களின் நற்கருணைப் பார்வையைப் பெற்ற நான் புவியில் நல்லவனாக வாழும் பேற்றினை அருள்வீர்களாக என வேண்டிக் கொண்டது.

இதிலிருந்து புரிவது என்னவென்றால் ஒவ்வொரு ஜீவனின் பிறப்பும் மேன்மையை நோக்கிய பயணமாக அமையவேண்டியது , ஆனால் மன மாயையினால் கீழ்மையை நோக்கிய பயணமாக மாற்றம் கண்டு இன்று பல்லாயிரம் கோடி உயிரினங்களாக பல்கி பெருகி நிற்கின்றது .
பிறப்பின் அவசியமும் , பெருமையும் ஜீவராசிகளை மேல்நிலையை அடையச் செய்வதற்காக இறைவன்(இயற்கை) தரும் சந்தர்ப்பம்.

பிறப்பு ஜீவன்களுக்குத்தான் ஆதாயம்.

ஆகவே பிறப்பினை கேவலப்படுத்தி வாழ்ந்து மரிக்காமல் , பிறப்பினை உணர்ந்து மேன்மையான வாழ்நிலையை அடைந்திட பயன்படுத்தினால் , நிச்சயம் , மீண்டும் பிறக்கும் நிலை அற்றுபோகும் வாய்ப்பினை பெறலாம் என்பது சர்வ நிச்சயம்.

இல்லையானால் மீண்டும் மகாபாரதம் போல ஒரு பேரழிவினை காண்பது திண்ணம்.
கொத்துகொத்தாக ஜீவன்கள் கொல்லப்படும் , சுனாமி, பெருந்தீ போன்ற அதனை இறைவனே (இயற்கையே) முன் நின்று நடத்தும் என்பதும் நிச்சயம்.

பிறந்து பிறப்பினை உயர்த்துவோம், இறந்து பிறப்பினை தவிர்ப்போம்.

அன்புடன் கருணாகரன்.

ஓம் நமசிவய.  

Wednesday, August 13, 2014

தன ஆகர்ஷணம்


உங்கள் வாழ்க்கை முறையை மாற்றி அமைக்கும் பரிகாரங்கள்

அய்யா அவர்களுக்கு நன்றி :

தன ஆகர்ஷனம் செய்யும் அமானுஷ்ய பரிகாரம்.


பணத்தை வசீகரிக்கும் தன்மை கொண்டது இந்த பரிகார முறை.

இதை வியாழக்கிழமைகளில் மட்டுமே செய்ய வேண்டும்.

எதிர்பாராத பண வரவு (சிறு தொகையானாலும் கூட)வந்தால் அதை கொண்டு மட்டுமே செய்ய பலன் தரும்.

குறிப்பிட்ட நேரம் எதுவும் இதற்கில்லை.

பணம் வந்தவுடன் செய்யலாம். எந்த நேரமானாலும். ஆண் பெண் இருவரும் செய்யலாம்

(பெண்கள் மாத விடாய் காலங்களில் தவிர்க்கவும்)

வியாழக்கிழமைகளில் எதிர்பாராத பணவரவு, சிறு தொகையாக இருப்பினும் சரி, அல்லது பெரும் தொகையாக இருப்பின் அதில் சிறு பகுதியை தனியாக எடுத்து ஒரு வெள்ளை நிற கவரில் அதை போட்டு வைத்து, கிழக்கு நோக்கி ஏதேனும் ஆசனத்தில் சம்மணமிட்டு அமர்ந்து கவரில் ஏதேனும் ஒரு கை வைத்து 108 முறை தாமரை மணி மாலை கொண்டு காயத்ரி மந்திரம் ஜெபிக்கவும்.

பின்பு அதை அப்படியே எடுத்து பூஜை செய்யும் இடத்திலோ அறையிலோ வைத்து விடவும்.

ஒரு முறை செய்தால் போதும். இது நம் இல்லம் தேடி பணத்தை வரச்செய்யும் முறையாகும்.

காயத்ரி மந்திரம் :

ஓம் பூர் புவஸ்ஸூவ
தத்ச விதுர்வரேண்யம்
பர்கோ தேவஸ்ய தீமஹி
த்யோ யோ ந: ப்ரசோதயாத் ||

உச்சரிப்பு முறை தகுந்த நபரிடம் கேட்டு தெரிந்து கொள்ளவும்.

(கோவில்களில் உள்ள அந்தணரிடம் கேட்டு தெரிந்து கொள்ளலாம்-

இப்பொழுது ஸீடீ வடிவிலேயே கிடைக்கிறது)


Vamanan Sesshadri  அய்யா அவர்களுக்கு நன்றி

எல்லோரும் கடைபிடித்து பயன் பெற வாழ்த்துகள்

ஓம் நமசிவய.

Wednesday, July 23, 2014

தீராப் பெருங்கடன் தீர எளிமையான வழி

மைத்ரேய முகூர்த்தம்


மிகவும் விசேஷமான இந்த முகூர்த்தம் – எவ்வளவு பெரிய கடன் இருந்தாலும் எளிமையாக தீர்த்து வைக்கும் கால நேரமாகும்.

செவ்வாய்க்கிழமையும் அசுவனி நட்சத்திரமும் சேருகின்ற நாளில் மேஷ லக்கினம் அமைந்துள்ள நேரம் மைத்ரேய முகூர்த்தம் எனப்படும்.

செவ்வாய்க்கிழமையும், அனுஷ நட்சத்திரமும் சேருகின்ற நாளில் விருச்சிக லக்கினம் அமைந்துள்ள நேரமும் மைத்ரேய முகூர்த்தமாகின்றது.

மேற்படி காலங்களில் லக்கினமும் நட்சத்திரமும் அமைந்து செவ்வாய்க்கிழமை அமையாது போனாலும் 75 % பலன்களை பெறலாம்.

செவ்வாய்க்கிழமை அமைந்தால் நிச்சயமாக 100 % பலன்களை பெறுவது திண்ணம்.

நீங்கள் செய்யவேண்டியது என்னவென்றால் .....

மேற்குறித்த நாட்களில் நீங்கள் பெருந்தொகையாக தரவேண்டிய கடன் தொகையில் கொஞ்சம் இந்த குறிப்பிட்ட நேரத்தில் சம்பந்தப்பட்டவருக்கு திருப்பி தரவேண்டும், அவ்வளவுதான் அந்த பெரும் தொகையானது சிறுக சிறுக அடைபட்டுவிடும். நமக்கு சிரமம் இல்லாமலே.

இவ்வளவு சிறப்பு மிக்க நாட்களும் , நேரமும் இந்த ஆண்டில் எப்போதெல்லாம் சம்பவிக்கின்றது என்பதனை காண்போம்.


வருகின்ற 05.08.2014 அன்று 01.10PM  to 03.10PM இது செவ்வாய்க்கிழமையில் வருகின்றது. 
(லக்கினம் விருச்சிகம்-நட்சத்திரம் அனுஷம்.)

வருகின்ற 02.09.2014 அன்று 11.30 AM  to 01.30 PM –(01.20)*
இது செவ்வாய்க்கிழமையில் வருகின்றது. 
(லக்கினம் விருச்சிகம்-நட்சத்திரம் அனுஷம்.) *திருக்கணிதம்.


வருகின்ற 29.09.2014 அன்று 09.45 AM  to t11.45 AM –(11.35)*
இது திங்கள்கிழமையில் வருகின்றது. 
(லக்கினம் விருச்சிகம்-நட்சத்திரம் அனுஷம்.) *திருக்கணிதம்.

வருகின்ற 09.10.2014 அன்று 06.50 PM  to 08.30 PPM – (08.10)*
இது வியாழக்கிழமையில் வருகின்றது. 
(லக்கினம் மேஷம்-நட்சத்திரம் அஸ்வினி) *திருக்கணிதம்.


வருகின்ற 26.10.2014 அன்று 09.45 AM  to t11.45 AM –(11.35)*
இது ஞாயிற்றுக்கிழமையில் வருகின்றது. 
(லக்கினம் விருச்சிகம்-நட்சத்திரம் அனுஷம்.) *திருக்கணிதம்.

வருகின்ற 05.11.2014 அன்று 06.00 PPM  to t06.45 PM –(06.30)*
இது புதன்கிழமையில் வருகின்றது. 
(லக்கினம் மேஷம்-நட்சத்திரம் அஸ்வினி) *திருக்கணிதம்.

வருகின்ற 23.11.2014 அன்று 06.30 AM  to t08.15 AM –(06.00-to 08.00)*
இது ஞாயிற்றுக்கிழமையில் வருகின்றது. 
(லக்கினம் விருச்சிகம்-நட்சத்திரம் அனுஷம்.) *திருக்கணிதம்.

வருகின்ற 03.12.2014 அன்று 03.15 PPM  to 04.45 PM–(03.10 to 04.40  )*
இது புதன்கிழமையில் வருகின்றது. 
(லக்கினம் மேஷம்-நட்சத்திரம் அஸ்வினி) *திருக்கணிதம்.

வருகின்ற 30.12.2014 அன்று 01.15 PM  to 02.45 PM – (01.10-to 002.50)*
இது செவ்வாய்க்கிழமையில் வருகின்றது. 
(லக்கினம் மேஷம்-நட்சத்திரம் அஸ்வினி.) *திருக்கணிதம்.


05.08.2014 , 02.09.2014 , 30.12.2014 ஆகிய நாட்கள் மிக விசேஷமான நாட்களாகும்.

*திருக்கணித பஞ்சாங்க முறை ( பொதுவாக உள்ளது வாக்கிய பஞ்சாங்க முறை )

இந்த நேரம் சேலம் மாவட்டம் இடைப்பாடியின் சூரிய உதயமாகும்.


உங்கள் தீராக்கடன் தீர வாழ்த்துகள்.

ஓம் நமசிவய.

Sunday, May 4, 2014

மந்த்ரமும் உச்சரிப்பும்

அன்பிற்குரிய நண்பர்களே , வணக்கம்.

ஒரு மந்த்ரத்தினை எழுதி இந்த மந்திரத்தை , தீப தூப படையலிட்டு ஒரு இலட்சத்திஎட்டு ஜபித்தால் உடனே இந்த தெய்வம் உங்களுக்கு முன் தோன்றி உங்களுக்கு எல்லாவித வரங்களையும் அருளி எக்காலமும் உங்களுக்கு பாதுகாப்பாக இருக்கும். 

என்பது போன்ற வாசகங்களை மந்த்ர , மாந்த்ரீக புத்தகங்களிலும் , ஒரு சில குருமார்கள் சொல்வதையும் கேட்டிருப்பீர்கள்.

இது உண்மையா ? 

அப்படி பூஜைகள் செய்து , மந்திரத்தை இலட்சத்திஎட்டு சொல்வதால் அந்த குறிப்பிட்ட தெய்வம் நேரில் வருமா ? 
வரம் தருமா ? 
சாத்தியமா ?

சாத்தியமில்லைதான்.

அப்படி எல்லாம் நடக்காது . 

ஆனால்,

தன் வாழ்வை முழுமையாக பொதுநலமான ஆன்மீக வாழ்விற்கே அர்ப்பணித்து அதற்கெனவே வாழ்பவர்களுக்கு அது சாத்தியமே .

அன்றாட வாழ்வில் சிக்கித் தவிக்கும் ஒருவர் உட்கார்ந்து என்னதான் மெனக்கெட்டு ஒரு இலட்சம் , இரண்டு இலட்சம் சொன்னாலும் எதுவும் வராது.

ஒரு காரியத்தை செய்ய எண்ணுபவர் முதலில் தன்னை அந்த காரியத்திற்கு முழுமையாக முழுமனதோடு அர்பணிக்கவேண்டும்.
ஒருவர் மருத்துவ பணியாற்ற நினைப்பாரேயானால் முதலில் அது தொடர்பான படிப்பினை சில வருடங்கள் படிக்கவேண்டும்.

 அதில் தேர்ச்சி பெறவேண்டும். படிப்பு முடித்தவுடன் அந்த படிப்பு சம்பந்தமான பயிற்சியை பயில வேண்டும். அதிலும் தேர்ச்சி பெறவேண்டும். 

அப்புறம்தான் அவர் மருத்துவர் என சொல்லிக் கொள்ள முடியும். பலருக்கும் வைத்தியம் பார்க்கலாம்.

ஆனால் அதெல்லாம் வேண்டாம் , எனக்கு நல்ல ஆங்கில புலமை உண்டு, அதனால் நான் மருத்துவம் சம்பந்தப்பட்ட புத்தகங்களையும் , அறுவை சிகிச்சை தொடர்பான புத்தகங்களையும் நன்கு படித்தாலே போதும் , மருத்துவராகிவிடுவேன் என்பது சரியா ? 

இவரைத்தானே போலி டாக்டர் என்கின்றார்கள்.

அப்படித்தான் மேலே சொல்லப்பட்ட கருத்துக்களும்.

ஒருவர் தனது வாழ் நாளை முழுமையாக மந்த்ரம் கற்றுக்கொள்ள அல்லது மாந்தரீகம் கற்றுக்கொள்ள பயன் படுத்தவேண்டும் .

தனது வாழ்வில் சிரமங்கள் வந்ததும் , இந்த மந்த்ரம் , அந்த மந்த்ரம் என்று கற்றுக்கொள்வது , அவரது தலைமுறைக்கே சுமைகளை ஏற்றி வைக்கும் காரியம் போன்றது. 

இப்படி சொல்வதற்கு நிறைய காரணங்கள் இருக்கின்றது. 

காரணம் ஒன்று : 
உலகில் உள்ளோருக்காக தரப்பட்டுள்ள மந்த்ரங்கள் அனைத்துமே ஜீவனுள்ளவை (உயிருள்ளவை).

காரணம் இரண்டு :
குறிப்பிட்ட எண்ணிக்கையில் சொல்லப்பட்டவுடன் அந்த மந்திரம் ஜீவன் பெறப்பட்டு விடுகிறது.

காரணம் மூன்று:
ஜீவனை பெற்ற மந்த்ரத்தின் தெய்வம் அவ்விடத்தினை வந்து அடைந்து விடும் .

காரணம் நான்கு :
எந்தவிதமான பயிற்சியும் இல்லாமல் போனதால் அந்த தெய்வம் வந்ததையே அறியாமல் மேலும் மேலும் மந்த்ரத்தை உச்சரித்துக் கொண்டே இருப்பீர்கள்.

காரணம் ஐந்து :
நீங்கள் உச்சரிக்க உச்சரிக்க உச்சநிலை கோபம் அடைந்த அந்த தெய்வம் அல்லது தேவதை உங்கள் மேல் அளவு கடந்த உக்கிரமாகி உங்களுக்கோ  உங்கள் குடும்பத்திற்கோ மிக அதிகமான துன்பங்களை உருவாக்கி விடும்.

இதுபோன்ற காரியங்களை செய்து சிக்கிக்கொண்டவர்கள் ஏராளம்.

காரணம் என்னவென்றால் முறையான பயிற்சி இருந்தால் அந்த மந்த்ரத்திகுரிய தெய்வமோ தேவதையோ வந்ததை அறிந்த கொள்ள முடியும்.

அல்லது வேறு தெய்வமோ தேவதையோ வந்திருந்தால் அதனை அப்புறப்படுத்த தெரிந்திருக்கும். 

வந்த தெய்வம் அல்லது தேவதையை சமாளிக்கவும் , சாந்தப்படுத்தவும், சந்தோஷப்படுத்தவும் , வந்திருக்கும் தெய்வமோ தேவதையோ சந்தோஷமாக இருக்கும் போதே தனக்கு வேண்டிய காரியங்களை அதனிடம் கேட்டு பெறவும் அனுபவமிருந்தால் மட்டுமே முடியும்.

இதெல்லாம் எதுவுமே தெரியாமல் வெறும் புத்தகத்தை படித்தேன் , எதுவும் வரவில்லை , கஷ்டம்தான் வந்தது என்றால் கஷ்டம்தான் வரும்.

நமக்குதான் தெய்வம் இங்கு வந்ததே தெரியாதே .

ஆகவே முன் அனுபவம் பெற்று பயிற்சியை துவங்குங்கள் .

சிலருக்கு குருவானவர் சொல்லித்தந்த மந்த்ரங்களை சொல்லியும் பலன்கள் கிட்டுவதில்லை .

இதற்கென்ன காரணம் ? 

குருவானவர் ஒரு மந்த்ரத்தினை தந்து அதனை மூன்று முறைகள் நமது காதிலோ , முன்புறம் அமரச் செய்து நேரிலோ சொல்லித் தருவார்கள்.

நாம் அதனை எத்தனை முறைகள் உச்சரிக்க வேண்டும் என்பதனையும் கூறுவார்கள்.

சரி என்று வாங்கி கொண்டு வந்தபின் ஒரு நல்ல நாளில் துவக்குவோம்.

ஆனால் ,

நாட்கள் செல்லச்செல்ல மந்த்ரம் சொல்லும் உச்சரிப்பு மாற்றம் கண்டு நம்மை அறியாமலே வேறு மாதிரி உச்சரிக்க துவங்கியிருப்போம்.

ஒரு மணி நேரத்திற்கு இத்தனை என்று எண்ணிக்கையை மட்டுமே குறியாக கொண்டு மந்த்ரத்தின் தன்மையையே மாற்றி இருப்போம்.

ஒரு இலட்சத்திஎட்டு மந்த்ர ஜபம் என்பது , முழுக்க முழுக்க மந்த்ரமானது நம் உடலை சுற்றி ஒரு கவசம் போல மாயமான தோற்றத்தோடு சூழ்ந்திருப்பதாகும். 

ஒரு மந்த்ரத்தினை உச்சாடனம் செய்யும் போது நாம் அந்த மந்த்ரத்தில் கரைவதுபோல உணர்வு பிரவாகத்தில் ஆழ்ந்து உச்சரிக்க வேண்டும்.

உதடுகள் மந்திரத்தை உச்சரிக்க ,கண்கள் கடிகாரத்தை பார்க்க , மனம் அடுத்து என்ன செய்யலாம் என்று சிந்திக்க இது போல் சொல்லப்பட்ட மந்த்ரங்கள் ஒரு கோடியை தொட்டாலும் புண்ணியமில்லை.

மனம் , சிந்தனை , செயல் அனைத்தும் மந்த்ரமே நிறைந்திருக்க வேண்டும்.

உதாரணமாக ஓம் நமசிவய எனும் மந்த்ரம் என்றால் ஓம் ந ம சி வ ய என்று ஆழ்ந்து உள்ளார்ந்து சொல்ல வேண்டும் , 

அதை விட்டு விட்டு ஓம் நமசிவய ஓம் நமசிவய ஓம் நமசிவய ஓம் நமசிவய ஓம் நமசிவய என்று ஓட ஆரம்பித்தால் மந்த்ரம் பலனற்று போகும்.

மந்த்ரம் சொல்லும் போதே நாம் அந்த மந்த்ரத்தின் முழு அர்த்தத்தையும் உணர்ந்து அதனுள் பொதிந்து ஆழ்ந்து நாமே மந்த்ரடுள் கரைந்து போக வேண்டும் . 

நாமே அந்த மந்த்ரத்தின் முழு சொரூபமாக நம்மை உணர்ந்து மாற வேண்டும்.

மந்த்ர சொரூபமாக நாம் நின்று செய்யும் எந்த நற்காரியமும் வீணாகாது.

ஆகவே , மந்த்ரம் கற்பது என்றால் உங்களை முழுமையாக ( வேறு வேலையை செய்யாமல்) அதற்கே செலவிடுங்கள் , இல்லை அப்படி முடியாது என்றால் விட்டு விடுங்கள். 

வீணாக அவஸ்தைப்படவேண்டாம். 

குருமூலமாக கற்றிருந்தால் ,

எண்ணிக்கையின் பின்னே போகாமல் , மந்த்ரத்தின் தன்மையை மாற்றாமல், மந்த்ரத்தினை உணர்ந்து பூரணமாக உங்களை அந்த மந்த்ரத்துள் ஆழ்த்துங்கள் , மந்த்ரமாக நீங்களே மாறுங்கள். 

முயற்சியை விடாதீர்கள், வெற்றியை எட்டுங்கள், 
வெற்றி உங்களுக்கு மிக அருகில்.

வளமோடு வாழுங்கள் , வாழும் நாளெல்லாம்.
சிவனருள் கருணாகரன். 

Sunday, April 27, 2014

யுகாதி என்றால் என்ன ? அன்று என்ன செய்யலாம் ?


யுகாதி என்றால் என்ன ? அன்று என்ன செய்யலாம் ?

யுக ஆதியின் சிறப்பு (யுகாதி – யுக ஆரம்ப நாள்)

அன்பான நண்பர்களே , நமது வாழ்வின் பாதையில் நாம் சந்திக்கும் பலவிதமான தடங்கல்களுக்கும் , தோல்விகளுக்கும் , துயரங்களுக்கும் , மன உளைச்சலுக்கும் நாம் நமது முன்னோர்களுக்கு அல்லது பெற்றோருக்கு திதி தர்ப்பணம் தராமல் போனதே முக்கியமான காரணமாகின்றது என்பதனை எல்லோரும் அறிந்திருப்பீர்கள் .

நாம் சில இடங்களில் காசி , ராமேஸ்வரம் இன்னும் இது போன்ற பல இடங்களில் திதிதந்தும் எந்தவிதமான பயனும் இல்லாமல் இருந்திருக்கும்.
அதற்கு நிறைய காரணங்கள் இருக்கலாம்.

சரியான முறையின்றி தரப்பட்ட திதிகள் பித்ருக்களை சென்றடைவதில்லை, காரணம் அவர்களால் அதனை ஏற்றுக்கொள்ள முடியாது போகும்.

உரிய முறையோடு தரப்படும் திதிகள் அவர்களை மகிழ்வடைய  செய்வதோடு அமைதியையும் தரும்.   

திதிகள் தருவதற்கு எத்தனையோ நாட்களை ரிஷிகளும் , முனிவர்களும்  நமக்கென அருளியிருக்கின்றார்கள்.

ஆடி அமாவாசை, தை மாத முதல் நாள், தை அமாவாசை, புரட்டாசியில் வரும் மகாளய அமாவாசை , இது இல்லாமல் அவரவர்கள் இறந்த திதிகள் .

மேலும் ஒவ்வொரு யுகமும் தோன்றிய காலாமான யுகாதி எனப்படும் நாளும் இந்த வகையில் முதன்மை பெறுகிறது. யுகம் + ஆதி = யுகாதி , அதாவது யுகம் பிறந்த நாள் எனப்படும். 

இவைகள் முறையே , கிருதயுகம் , திரேதயுகம் , துவாபரயுகம் மற்றும் கலியுகம் .

இந்த யுகங்களின் ஆரம்ப நாட்களும் மறைந்த மூதாதையர்களுக்கு திதி தருவதற்கு மிகவும் ஏற்ற புண்ணிய தினங்களாக கொள்ளப்படுகிறது.

முதலில் கிருதயுகாதி : 
இந்த நாள் ஒவ்வொரு தமிழ் ஆண்டும் சித்திரை மாத அமாவாசைக்குப் பின்னர் வரக்கூடிய திருதியை திதியில் வரும். 
அதாவது வைசாக சுத்த மாதத்தில் சுக்ல பட்ச திருதியை திதியில் வரும்.

இரண்டாவது திரேதயுகாதி : 
இந்த நாள் ஐப்பசி மாத அமாவாசைக்குப் பின்னர் வரக்கூடிய நவமி திதியில் வரும். அதாவது கார்த்திக்க சுத்தமாததில் சுக்ல பட்ச நவமி திதியில் வரும்.

மூன்றாவது துவாபரயுகாதி :
ஆவணி மாத பௌர்ணமிக்குப் பின்னர் வரக்கூடிய திரயோதசி திதியில் வரும். அதாவது பாத்ரபத பகுளத்தில் க்ருஷ்ண பட்ச திரயோதசி திதியில் வரும்.

நான்காவதான கலியுகாதி : 
மாசி மாத அமாவாசையன்று வரும்.

இந்த நான்கு தினங்களும் மகவும் புண்ணிய காலம் என்று புராணங்களும் கூறுகின்றன.

மேலேசொல்லப்பட்ட தினங்களில் எள்ளுடன் கூடிய தண்ணீரை பிதுர்க்களை நினைத்து ஒருவன் பக்தியுடன் விடுவானாகில் அவன் ஆயிரம் ஆண்டுகள் சிரார்த்தம் செய்த பயனை அடைகிறான் என்று விஷ்ணு புராணம் கூறுகின்றது.

மாசி மாதத்து அமாவாசையன்று சதய நட்சத்திரம் வருமாயின் அது பிதுர்க்களுக்கு மிகவும் திருப்தியை அளிக்கக்கூடிய காலமாகும்.

மாசி மாதத்து அமாவாசையானது அவிட்ட நட்சத்திரத்தில் வரும் வேளையில் பிதுருக்களை நினைத்து அன்னம் அல்லது தண்ணீரைக் கொடுப்பவனுக்கு பதினாயிரம் ஆண்டுகள் பிதுருக்களை திருப்தி செய்த புண்ணியம் கிடைக்கும்.

மாசி மாதத்து அமாவாசை பூரட்டாதி நட்சத்திரத்தில் வரும் வேளையில் சிரார்த்தம் செய்தால் பித்ருக்கள் திருத்தி அடைந்து ஆயிரம் யுகங்கள் சுகமாகத் தூங்குவார்கள் .

மாசி மாதத்து அமாவாசையானது அனுஷம், விசாகம், சுவாதி முதலான நட்சத்திரத்தில் வரும் வேளையில் அப்போது செய்கின்ற சிரார்த்தம் பித்ருக்களுக்கு ஒரு வருடத்திற்கு திருப்தியை தருகின்றது.

மாசி மாதத்து அமாவாசையானது திருவாதிரை, புனர்பூசம்,பூசம் முதலான நட்சத்திரத்தில் வரும் வேளையில் அப்போது செய்கின்ற சிரார்த்தம், பித்ருக்களுக்கு பன்னிரண்டு வருடத்திற்கு திருப்தியை தருகின்றது.

மாசி மாதத்து அமாவாசையானது அவிட்டம், சதயம், பூரட்டாதி முதலான நட்சத்திரத்தில் வரும் நாள் என்பது தேவர்களுக்கும் கிடைக்காத புண்ணிய காலமாகும்.

இந்த ஒன்பது நட்சத்திரங்களிலும் மாசிமாத அமாவாசை கூடும்போது செய்கின்ற சிரார்த்தம் பித்ருக்களுக்கு திருப்தியை தருகின்றது.
சரியான முறையில் செய்யப்படும் சிரார்த்தங்கள் மூதாதையரை திருப்தி அடைய செய்கின்றன.

அவர்களின் ஆத்மா சுகமடைகிறது , அதனால் நமக்கு வளம் கிடைக்கிறது.

எதையும் முறையாக செய்வோம், ஆனந்தமான வாழ்வைப் பெறுவோம்.

இந்த ஆண்டில் மாசிமாத அமாவாசை அவிட்டம் நட்சத்திரத்தில் வருகிறது.

வாழுங்கள் வளமோடு , வாழும் நாளெல்லாம்.
சிவனருள் கருணாகரன்.  
.


  
  

  
Related Posts Plugin for WordPress, Blogger...