என்னை தொடர்ந்து

வாருங்கள், நண்பரே வணக்கம். தங்கள் வருகையை பதிவு செய்யுங்களேன் !அன்புடன் கருணாகரன்6,இடைப்பாடி. அன்பர்களே ! முழுக்க முழுக்க தமிழில் திருக்கணித முறையில் ஜாதகம் கணிக்க வேண்டுமா? உங்கள் பெயர், பெற்றோர் பெயர், பிறந்த தேதி, மாதம் வருடம், பிறந்த இடம் போன்ற விபரங்களை தாருங்கள், உங்கள் ஜாதகம் கூரியர் மூலமாக உங்களுக்கு அனுப்பி வைக்கப்படும்.( நள்ளிரவில் இரவு 12.00 மணிக்கு மேல் காலை 7.00 மணிக்குள் பிறந்திருந்தால் விடிந்தால் என்ன கிழமை என குறிப்பிடவும்.K.செந்தில்குமார்,கணேஷ் கம்ப்யூட்டர்ஸ்,34,கடைவீதி, இடைப்பாடி,சேலம் மாவட்டம்-637101.

மந்த்ரம்


மந்த்ரம் 

அன்பார்ந்த நெஞ்சங்களே !

மந்த்ரம் என்பது நமது வாழ்வின் ஒரு அங்கம் .

ஆமாம், பிறந்து வளர்ந்தது முதல் வாழ்நாள் எல்லாம் நாம் ஏதாவது ஒன்றை திரும்ப திரும்ப சொல்கிறோம்.

சக்திமிகு எழுத்துக்களின் சேர்க்கையே மந்த்ரமாகிறது.

நம் வாழ்வில் நமக்கு துன்பம் வரும்போது இடைவிடாது மந்தர ஜபம் செய்வோமானால் துன்பம் விலகி வளம் பிறக்கும்.

அத்தகைய நலம் தரும் மந்த்ரங்களை உங்களுக்காக தர இருக்கிறேன், முறைப்படி உச்சரித்து பயனடையுங்கள்.

அன்புடன் கருணாகரன்6.இடைப்பாடி.

முதலில் :

கணபதி மந்த்ரம் (காயத்ரி)
"தத்ப்ருஷாய வித்மஹே
வக்ர துண்டாய தீமஹி !
தந்நோ தந்திப் ப்ரஜோதயாத்" 

அன்புடன் கருணாகரன்6.இடைப்பாடி.

"ஓம் கம் (gham)கணபதயே நம"..                    

இது ஸ்ரீ மகா கணபதியின் மூலமாகும். இதனை ஓயாது சொல்லி வந்தால் எல்லாவிதமான பேறும் உண்டாகும்.
தனம் தரும் மகாலக்ஷ்மி மந்த்ரம்.

ஓம் மகாதேவ்யை ச வித்மஹே!
விஷ்ணு பத்ந்யை ச தீமஹி !!
தந்நோ லக்ஷ்மீ ப்ரஜோதயாத்!


குளித்து முடித்து தூய மனதுடன் சுய நலமின்றி அன்னை
ஸ்ரீ ஸ்ரீ மகாலக்ஷ்மியை மனதில் எண்ணி 
காலை மாலை மேற்கண்ட மந்த்ரத்தை ஒரு இலட்ஷமுரு ஜெபிக்க அன்னையின் பிரவாகமான அருள் கிடைக்கும்- தாரித்ரியம் நீங்கும்.

அன்பார்ந்த நெஞ்சங்களே !

நாம் எந்த மந்த்ரம் சொல்லும் முன்னே கீழே சொல்லப்பட்ட மந்த்ரத்தை 10 முறைகள் சொல்லிவிட்டு மற்ற மந்த்ரங்களை சொல்ல துவங்கினால் மந்திர பலிதம் உண்டாகும் என காயத்ரி சஹஸ்ர நாமாவளியில் சொல்லப்பட்டுள்ளது. 

நாமும் முயற்சிக்கலாமே  !!!!!!

"சப்த கோடி மஹா மந்திர மாதா சர்வப் ப்ரதாயினி
சகுன சம்ப்ரமா சாக்ஷி சர்வ சைதன்ய ரூபினி" ;அன்புடன் கருணாகரன்6.இடைப்பாடி.  நம் வாழ்வில் வரும் துன்பங்களை எதிர் கொள்ளும் மனோ தைர்யம் இருந்தால் போதும். ஆனால் துன்பங்கள் தொடர்கதையானால் மனோதைர்யம் காணாமல் போய்விடும்.

அப்படி நாம் மனோபலம் இழக்கும் போது இந்த சரபேஸ்வரர் மந்த்ரம் தொடர்ந்து ஜபிப்போமானால் மனோபலம் கூடுவதுடன் நமது கார்யமும் சித்தியாகும் என்கின்றனர் ஞானிகள். இதோ அந்த மந்த்ரம்.

ஓம் ஐம் கேம் காம் கம் பட் ;
ப்ராணக்ரஹாசி ப்ராணக்ரஹாசி ஹூம்பட் 
சர்வ சத்ரு சம்ஹாரணாய ; சரப ஸாலுவாய ;
பக்ஷி ராஜாய ஹூம்பட் ஸ்வாஹா :

இந்த அற்புதமான மகாமந்தரத்தினை தீபம் கிழக்கு நோக்கி வைத்து நாம் வடக்கு நோக்கி அமர்ந்து காலை மாலை இருவேளையும் 108 முறைகள் ஒரு மண்டல நாட்கள் (41) பக்திசிரத்தையுடன் ஜெபம் செய்வோமானால் நிச்சயமாக எதிர்பார்த்த மாற்றங்கள் வருவது திண்ணம். 


அன்புடன் கருணாகரன்6.இடைப்பாடி.  
தனம் தரும் மந்த்ரம் 


கமலே, கமலாலையே, கமலவாசின்யே மகாலக்ஷ்மி
குபேராய, நரவாஹனாய, தனஹர்ஷ்னியாய 
நமோ நமஹ;.


இந்த குபேர லக்ஷ்மி மகாமந்த்ரத்தை ஒரு மனதாக 
குருவடி ஜெபித்து - செவ்வாய் - வெள்ளி - காலை மாலை சொல்லி வர ஸ்ரீ ஸ்ரீ மகாலக்ஷ்மியின் அருட்பார்வை நம் குடும்பத்தின் மேல் பாயும். 


இன்னும் வரும்


நமது பிள்ளைகள்  கல்வியில் சிறந்து விளங்க செய்யும் மந்த்ரங்கள். 

இந்த மந்த்ரங்களை குளித்து முடித்து தூய ஆடை அணிந்து ஏதேனும் ஒரு இறைவன் படத்தின் முன் (விநாயகர் ஓகே ) அமர்ந்து ஜெபம் செய்யவேண்டும். இந்த மந்த்ரங்களை எட்டின் அடிப்படையில் அதாவது எட்டு முறை எட்டு முறை சொல்லவேண்டும்.

வரிசைக்கிரமமாக சொல்லவேண்டும் :

வித்யா ராஜ கோபால மந்த்ரம் 

1. க்ருஷ்ண க்ருஷ்ண மஹா யோகின் ;
    பக்தானாம் அபயம் கரா தேஹிமே ;
    சகலாம் வித்யாம் க்ருபையாம் ஸம் ரக்ஷ்ந்து .

சூர்ய ஸ்துதி 

2. ஓம் ஸ்ரீம் ஆதித்யம் ஸப்தாரூடம்,
    ஸர்வ லோகைகநாதம்கோடிக்ரஹணம் 
    ஏக சக்ராதிபதிம்; ஸர்வ ஸாஸ்த்ர,
    ஸர்வ லோக, ஸர்வ ஜன தன வசீகரம், ஜீவனாத்புதம்
     பாஸ்கரம் நமாமி நமஸ்துப்யம்.

சாரஸ்வதி ஸ்லோகம் (சரஸ்வதி)

3. ஓம் ஐம் ஹ்ரீம், ஓம் ஹ்ரீம், ஸ்ரீம் ஹ்ரீம்
    மஹா தேவி ஸாரஸ்வதி வாக்தேவி;
    காவ்யகாரணி யேக யேகி,
    ஸர்வ ஸம்பத் சௌபாக்யம் தேஹிமே
    மகா ஸாரஸ்வதம் குரு குரு மம ரக்ஷந்து. 


இந்த அரிய மூன்று மந்த்ரங்களையும் விடாமல் காலையும் மாலையும் ஜெபம் செய்ய கல்வியில் மிகசிறந்து விளங்குவார்கள். பெரும் புலமை அவர்களை தேடி வரும்.


மந்த்ரங்கள் இன்னும் வரும்.


1 comment:

babujee007 said...

Dear Guruji,


This is babujee from chennai. I want to Learn Black Magic (Maha Kali) and i want know the details where Black magic taught. babujee cell # 9884635430.

babujee007@gmail.com

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...