என்னை தொடர்ந்து

வாருங்கள், நண்பரே வணக்கம். தங்கள் வருகையை பதிவு செய்யுங்களேன் !அன்புடன் கருணாகரன்6,இடைப்பாடி. அன்பர்களே ! முழுக்க முழுக்க தமிழில் திருக்கணித முறையில் ஜாதகம் கணிக்க வேண்டுமா? உங்கள் பெயர், பெற்றோர் பெயர், பிறந்த தேதி, மாதம் வருடம், பிறந்த இடம் போன்ற விபரங்களை தாருங்கள், உங்கள் ஜாதகம் கூரியர் மூலமாக உங்களுக்கு அனுப்பி வைக்கப்படும்.( நள்ளிரவில் இரவு 12.00 மணிக்கு மேல் காலை 7.00 மணிக்குள் பிறந்திருந்தால் விடிந்தால் என்ன கிழமை என குறிப்பிடவும்.K.செந்தில்குமார்,கணேஷ் கம்ப்யூட்டர்ஸ்,34,கடைவீதி, இடைப்பாடி,சேலம் மாவட்டம்-637101.

Thursday, December 27, 2012

அன்பிற்குரிய நண்பர்களே , வணக்கம் ஜாதகத்தில் தொடர்ச்சி

அன்பு நண்பர்களே , வணக்கம்.

ஜோதிடம் என்பது குண்டு சட்டிக்குள் குதிரை ஓட்டுவது அல்ல 

அரைகுறை ஜோதிடர்கள் இதனை படித்துவிட்டு "ஐயையோ இதெல்லாம் அசிங்கம் இதை எழுதலாமா ? இதைப் படிப்பவர்கள் ஜோதிடத்தை தவறாக நினைப்பார்களே " என்று புலம்புகின்றார்கள்.

இது ஏதோ நானே ஒரு கற்பனையாக எழுதியதைப்போல எண்ணுகின்றார்கள் , இது அடியேனின் கற்பனை அல்ல -

ஸ்ரீ ஸ்ரீ பராசரரின் அமுத வாக்கு , அவர் தந்த ஜோதிட ஆய்வு .

ஜோதிடம் என்பது மனிதர்களின் வாழ்வின் எல்லா பகுதியையும் பிரித்தாய்வது , குண்டு சட்டிக்குள் குதிரை ஓட்டுவதல்ல.

வீடு என்றிருந்தால் பூஜை அறை மட்டுமல்ல , கழிவறையும் உண்டு.
( அதுதான் முக்கியமானதும் கூட ) 

இது ஜோதிடர்களுக்கான விளக்கம், ஜோதிடர் என்பவர் ஜோதிடக்கலையை முழுவதும் தெரிந்தவராக இருப்பது அவசியமாகின்றது , கத்துக்குட்டித்தனமாக உளறித்திரிவதல்ல ஜோதிடம்.


விமர்சனம் எழுதும் நண்பர்கள் தனது பெயரை எழுதலாம் , விலாசமற்றவர்களின் கருத்துக்கள் ஏற்புடையதல்ல, மேலும் அடியேன் அதனை பிரசுரிப்பதில்லை .

  
பராசரர் சம்ஹிதையில் காணப்படும்
12 பாவங்களிலும் கிரஹங்கள் இருப்பதன் பலன்
நான்காமிடத்தில் சந்திரனிருந்து சத்துருக் கிரஹங்களின் சேர்க்கையையோ, பார்வையையோ அடைந்திருந்தால் அப்பொழுது பிறந்த பாலன் பசுவைப்போல் பிறராலேயே பிறந்தவன் என்பது நிச்சயம்.
3,6,2,5 க்குடைய கிரஹம் இலக்கினத்தில் இருக்குமானால் வேலைக்காரன் முதலிய வேறு புருஷர்களால் உண்டுபண்ணப்பட்டவன் .
இலக்கினத்தில் பாபக்கிரஹமும், 7-ல் சுபக்கிரஹமும், 10-ல் சனியும் இருந்தால் இந்த யோகத்தில் வர்க்கக் கலப்புள்ளவனே உண்டாவான்.இலக்கினத்தில் செவ்வாயும், சுக்கிரனும் இருந்தால் அப்பொழுதும் பாலன் பிறருக்குப் பிறந்தவனே ஆவான். பராசரர் சம்ஹிதையில் காணப்படும்
12 பாவங்களிலும் கிரஹங்கள் இருப்பதன் பலன் தொடர்ச்சி.......
சூரியன் லக்கினத்திலும் , 4ல் ராகுவும் இருந்தால் தனது பர்த்தாவின் சகோதரர் மூலம் புத்திரோற்பத்தி எனச்சொல்லுவதில் ஸந்தேகமில்லை .லக்கினத்தில் ராகுவும் செவ்வாயும் 7ல் சந்திரனும் சூரியனும் இருக்கப்பிறந்தவன் அவனுடைய தாயானவள் ராஜ பத்னியாயினும் தாழ்ந்தவனுக்குப் பிறந்தவனே ஆவான் : இதில் ஐயமில்லை. சூரியனுடன் கூடின சந்திரன் லக்கினத்திலும் , 7ல் செவ்வாயும் சுக்கிரனும் இருக்கப் பிறந்தவன் பிறருக்கு பிறந்தவனே ஆவான்.
எவனுடைய ஜாதகத்தில் 1, 4, 7, 10 மிடங்கள் ஒரு கிரஹமும் இல்லாதிருக்குமோ அவனும் பிறருக்கு பிறந்தவனே ஆகிறான்.
2, 6, 8, 12மிடங்களில் கிரஹங்கள் யாவும் எவனது ஜாதகத்தில் இருக்கின்றனவோ அவன் பிறருக்கு பிறந்தவன் என்பது ஸத்தியமே.
லக்கினத்தை தவிர்த்து எல்லாக் கிரஹங்களும் எந்த இடத்திலேனும் இதே மாதிரியாகவே ஒன்றுக்கொன்று 2,6,8,12 மிடங்களுக்குள்ளேயே இருக்குமானால் அந்த ஜாதகன் பிறருக்குப் பிறந்தவனே ஆவான்.
ஒரே இடத்தில் தனித்து 7க்குடையவனும் , லக்னாபதியும் சேர்ந்திருந்தாலும் அவன் பிறருக்கு பிறந்தவனே ஆவான்.
குரு சந்திரனையோ ஜன்ம லக்கினத்தையோ பார்க்காவிட்டாலும் , ஜீவ வர்க்கம் பெறாவிட்டாலும் பிறருக்கு பிறந்தவனே ஆவான். ஒன்றுக்கொன்று சத்ருக்களான இரண்டு கிரஹங்கள் வேறு கிரஹங்களின் சேர்க்கையில்லாமல் ஒரே கேந்திரத்தில் இருந்தால் பிறருக்கு பிறந்தவனே ஆவான். அவ்விதம் பிறந்த லக்கினம் ஸ்திரமாக அமைந்தால் மேற்சொன்ன பலன் மிக்க உறுதியாக ஏற்படும் . 
1, 4, 10 மிடங்களில் பாபர் இருந்து சந்திரனுடைய சேர்க்கையும் இருந்து லக்கினேசனால் லக்னம் பார்க்கப்படாவிட்டால் அப்பொழுதும் பிறருக்கு பிறந்தவனே ஆவான். லக்னேசன் லக்கினத்தில் இல்லாதிருந்தால் சில இடங்களில் பிறருக்கு பிறந்ததாகவும் ஏற்படுகிறது . *இந்த யோகமானது ஜாதகத்தில் உள்ள மற்ற எல்லா யோகங்களுக்கும் 

பங்கத்தைத் தரக்கூடியதாக ஆகும்.
இனி ஒவ்வொரு பாவத்திற்கும் தனித்தனியாக பார்ப்போம் fires அன்புடன் உங்கள்

அன்பிற்குரிய நண்பர்களே , வணக்கம் ஜாதகத்தில்

அன்பிற்குரிய நண்பர்களே , வணக்கம்.

ஒரு ஜாதகத்தில் காணப்படும் ஒரு சில க்ரஹங்களின் சேர்க்கையினால் அந்த ஜாதகருக்கு ஏற்படும் 

நன்மை மற்றும் தீமைகளை சுருக்கமாக சிறு சிறு வார்த்தைகளில் இந்தப்பகுதியில் காண்போம் 


முதலில் 


ஒரு சின்ன விபரம் :எந்த ஜாதகத்திலும் லக்கினம் என்பது ஒன்றாம் இடமாகும் . 

பொதுவாக ஐந்தாம் வீட்டில் என்று கூறப்படுவது இலக்கினத்தையும் சேர்த்து எண்ண வருகின்ற இடமாகும். 

ஆக இங்கே கூறப்படும் இடங்களை நீங்கள் சரிபார்க்க வேண்டுமானால் முதல் இடமாக இலக்கினத்தை கணக்கிடுங்கள் , 

இனி வரும் பகுதிகளில் கூறப்படும் தகவல்களை உங்கள் ஜாதகத்துடன் பொருத்திப் பாருங்கள் குறிப்பு :


அவரவர் ஜாதகங்களில் அவ்வப்போது நடைபெறும் திசா , புக்தியைப் பொறுத்து பலன்கள் சற்று மாற்றம் காணும் , மனம் குழப்பம் வேண்டாம் .

நன்றி ,

Monday, October 22, 2012

அன்பானவர்களே! சிவன் கோயில் வழிபாட்டு முறைகள் -2

அன்பானவர்களே! ஸ்ரீ ஸ்ரீ சிவன் கோயில் வழிபாட்டு முறைகள் -2


அன்பு நண்பர்களே, 

ஸ்ரீ ஸ்ரீ சிவன் கோயில் வலம் வருதல் பற்றிய வழிபாட்டு முறையின் தொகுப்பினை தொடர்ந்து காண்போம்.நாம் இப்போது திருக்கோயில் கொடிமரம் வரை வந்து விட்டோம்.


உள்ளே செல்வதற்கு திருக்கோயில் வாசல் திறந்தே இருக்கும் ஆனாலும் கோயிலின் திருக்காவலராகிய நந்தியம்பெருமானின் உத்திரவு பெறாமல் உள்ளே செல்லக் கூடாது.
     ஸ்ரீ சிவாலயங்களில் வழிபட வருவோரைச் சமயம் பார்த்து உள்ளே விடுவதற்குரிய அதிகாரம் பெற்றவர் திருநந்தித்தேவர். அதனால் அவரை அதிகார நந்தி என்றும் கூறுவர். இவர் நெற்றிக் கண்ணும், நான்கு தோள்களும், இடபத்தின் முகமும், தேவ உடலும் கொண்டு கையில் கத்தியும், பிரம்பும் தாங்கி காட்சி அளிப்பார்.
     இச்சிறப்பெல்லாம் இவர் சிவபெருமானால் என்பதை

 மற்றிணையில் லாக் கயிலைமலை நாதன் நந்திக்கு
  நெற்றியிற்கண் நாலுபுயம் நெருப்புருவம் பிறைகொண்முடி
  சற்றுமொரு குறைவிலாச் சாரூபம் பணிந்தருளிப்
  பெற்றியினா லருட்சுரிகைப் பிரம்புமருள் செய்தனனே

எனவரும் திருவையாற்றுப் புராணம் தெளிவாகக் காட்டுகிறது.

     ஆனால் எல்லாகோயில்களிலும் நந்தியம்பெருமான் மேற்கூறிய தோற்றத்தில் இல்லை என்றாலும் பலிபீடம்,கொடிமரம்,அடுத்துள்ள நந்திதேவராகிய நந்தியிடம் பிரார்த்தித்து பின் உள்ளே செல்ல வேண்டும் உள்ளேயும் நேராக இறைவன் சந்நிதிக்கே சென்று விடாமல் வலம் வந்து செல்ல வேண்டும்.

பிரகார வலம் வருவதால் எல்லாவகையான அச்சங்களும், நோய்களும் விலகி அளவற்ற புண்ணியங்கள் உண்டாகின்றன என்று ஆகமங்கள் கூறுகின்றன.

அக்கூற்றுப்படி வியாதிகள் நீங்க முற்பகலிலும், இஷ்டசித்திகளை அடைய நண்பகலிலும், பாபங்கள் தொலைய பிற்பகலிலும், வீடு பேறடைய அர்த்த ஜாமத்திலும் வலம் வர வேண்டும் என்பதை அறிகிறோம்.

அடுத்து வலம் :

     வலம் வரும்போது மூல மூர்த்திக்கும், நந்தி, பலி பீடங்களுக்கு இடையில் புகுந்து வலம் வருதல் கூடாது. இதைப்பற்றிக் கூறும்போது
நூல்களில்  சமீபத்தில் பிரசவிக்கக் கூடிய பெண் ஒருத்தி நிறைந்த எண்ணெய் குடம் ஒன்றைத்தாங்கி நடந்தால் எப்படி நடப்பாளோ அப்படி நடந்து வலம் வர வேண்டும் என்று தெரிவிக்கின்றன. எப்பொழுதும் திருக்கோவிலை மூன்று முறை வலம் வருதல் நல்லது. வழி பாட்டின் பலனை முழுமையாகப் பெற நாம் சண்டேசுவரர் சந்நிதியில் வேண்டிக்கொள்ள வேண்டும்.  அவர்தான் சிவபூசையின் சிறப்பை உணர்த்தியவர், அதனாலேயே சிவபெருமான் அவருக்கு அடியார்களுக்கு வழிபாட்டு பயனை அளிக்கும் சண்டீச பதத்தை அருளினார். அவர் சதாசர்வ காலமும் சிவா தியானத்திலேயே இருப்பதால் நாம் வந்திருப்பதை அவருக்கு உணர்த்த இடது உள்ளங்கையில் வலது நடு மூன்று விரல்களால் ஓசை வராமல் மூன்று முறை தட்டி (தொட்டு) வருகையை தெரிவிக்கவேண்டும், பின்னர் நமது வேண்டுதல்களை தெரிவிக்க வேண்டும்.
    
ஆலயத்துள்ளே கீழே வீழ்ந்து வணங்குதல் கூடாது. வலம் வரும்போது ஸ்தூபி, கொடிமரம், ஆகியவற்றின் நிழலையும், ஸ்வாமி மீதிருந்து களைந்த நிர்மால்யத்தையும் மிதிக்காமலும், தாண்டாமலும் வலம் வரவேண்டும். தவிர்க்க முடியாத நிலையில் மேலே சொன்ன நிழல்களின் ஐந்தில் மூன்று பாகம் நீக்கி மற்ற இரண்டு பாகத்தில் செல்லலாம்.

 உண்டகலமும் உடுப்பனவும் சூடுவனவும் உனக்காகச் 
சண்டீசனுமாம் பதந் தந்தோம்

என்று சிவபெருமானே இவருக்கு அருள் புரிந்திருப்பதால் சிவபெருமான் திருமேனியிலிருந்து பிரசாதமாகப் பெற்ற நிர்மாலியத்தை ( திருநீறு,பழம்,பூ போன்றவைகளை ) சண்டேசுவரர் முன் சமர்ப்பித்து அவர் திருவருளோடு அதனைப் பெற்று= கொண்டு வணங்கி விடைபெறுதல் வேண்டும். இத்தகைய செயல்களையும், இவைபோன்ற செய்யத்தகாத காரியங்களையும் பெரியோர்கள் வாயிலாக கேட்டறிந்து செய்வது மிகவும் நலமளிக்கும்.

இந்த அளவில் சிவ வழிபாடு நிறைவடைகிறது. விநாயகரிடம் குட்டோடு ஆரம்பிப்பது சண்டீஸ்வரரிடம் தட்டோடு பூர்த்தியாவதாக ஆன்றோர் பெருமக்கள் கூறுவர்.

இவ்வாறு ஆலயத்துள் வழிபாடு நிகழ்த்தி பூர்த்தி செய்ததும் சிவ சிந்தனையோடு திரும்பி மீண்டும் பலிபீடத்தருகில் வீழ்ந்து வணங்கி வரவேண்டும். வணங்கி முடிந்ததும் உடனே வந்து விடக் கூடாது. ஏனென்றால் நாம் கோயிலுள் நுழைந்த உடன் நந்தியம்பெருமான்   அருளாணைப்படி நந்தி கணத்தவர் நமக்கு உடனிருந்து வழிபாடு செய்வித்தார்கள் அல்லவா? அவர்களை நாம் அலட்சியம் செய்ததாக எண்ணுவர். ஆகையால் சற்று நேரம் அங்கேயே அமர்ந்து பஞ்சாட்சரம் ஜபித்து நந்தி கணத்தவரை வணங்கி விடை பெற்று தூய மனத்துடன் வீட்டிற்கு வருதல் வேண்டும்.


இனி சிவன் கோயிலில் முறையாக வலம் வருவோமே,பயன் அடைவோமே.


அன்புடன் கருணாகரன்6 , இடைப்பாடி 


Saturday, October 20, 2012

நாம் யாரென்றே விளங்காத


அன்புள்ள நண்பர்களே, வணக்கம்.

இன்றுள்ள நிறைய ப்ளாக்குகளில் இந்து மதத்தையும் , அதனுடைய தோற்றம் , அதன் வழிபாடு , அதன் வழிமுறைகள் , அதன் இறையாண்மை போன்ற பலவற்றையும், கிண்டலும், கேலியும் செய்வதை சில அரைவேக்காட்டு மனிதர்கள் வழக்கப்படுத்திக் கொண்டுள்ளார்கள் .

இதில் அவர்களுக்கு என்ன சந்தோஷமோ தெரியவில்லை ! 

தான் வந்த ஒரு மதத்தை தானே கேவலமாக எழுதுவதும் , பேசுவதும் , தன்னை பெற்ற தாயை மகனே தரம் தாழ்த்தி விமர்சிப்பதும் ஒன்றே அன்றோ ! 

தான் மிகவும் நியாயமான மனிதன் பிற மதத்தார் மதிப்பர் என 
எண்ணுகின்றனறோ என்னவோ !

எந்த ஒரு வேற்று மதத்தாரும்  தன்னுடைய மதத்தை இந்துக்களைப் போல் பரிகசிப்பதில்லை , ஆய்வுக்கு உட்படுத்துவதில்லை .

எந்த ஒரு விஷயத்தையும் விமர்சிக்குமுன் அதனுடைய முழுமையையும் அறியாமல் தன்னுடைய புத்திக்கு எட்டியதை எழுதுவதும் , விமர்சிப்பதுவும் ஏதோ கூகுளில் நமக்கு ஒரு இலவச ப்ளாக் தந்துவிட்டார்கள் என்ற நினைப்பில் உளறிக் கொட்டும் மறைகழண்ட மண்டையர்களாகத்தான் நினைக்க வைக்கின்றது.

இந்துக்கள் பொறுமையின் இலக்கணத்திற்கு உட்பட்டு உள்ளதால் எதை வேண்டுமானாலும் எழுதலாம் - நாம் எங்கிருந்து எழுதுகிறோம் என்று தெரியவாபோகின்றது என்றெண்ணி கன்னாபின்னா என்று எழுதுகின்றார்கள் போலும் .

கண்ணை மறைத்தோ , தன்னை மறைத்தோ எதை செய்தாலும் பூமிக்குள் போட்ட விதை பூமியை துளைத்து வெளி வருவது போல் - 

இன்றில்லாவிட்டாலும்  ஒருநாள் உங்கள் வினைகளுக்கு உண்டான பலனை , இயற்கையே , எங்கு அடித்தால் உங்களுக்கு வலிக்குமோ அங்கு அடி தரும். 
அப்போதுதான்  மதம் என்றால் என்ன , மானுடம் என்றால் என்ன என்று புரியும்.


அன்புடன் உங்கள் 

Wednesday, October 17, 2012

ஆழ்மனத்தின் அற்புதசக்திகள்

திரு.என். கணேசன் அவர்கள் எழுதிய ஆழ்மனத்தின் அற்புத சக்திகள் தொடரை 

கீழ்காணும் 

இணைப்புச் சுட்டி 

யை சொடுக்கி காணுங்கள் , படித்து பயன்பெறுங்கள்.

இந்த தொடரில் மொத்தம் அறுபது அற்புதமான கட்டுரைகள் உள்ளது .

மனித மனதின் அசாதாரணமான சக்தியை படம் பிடித்துக் காட்டும் அனைத்து கட்டுரைகளையும் பொறுமையாக படியுங்கள்.

நமது மனம் பற்றிய அதிசயமான சக்திகளை காணுங்கள் .

நீங்களும் உங்களை மேம்படுத்திக் கொள்ள விரும்புங்கள்.  அன்புடன் உங்கள் 
Related Posts Plugin for WordPress, Blogger...