என்னை தொடர்ந்து

வாருங்கள், நண்பரே வணக்கம். தங்கள் வருகையை பதிவு செய்யுங்களேன் !அன்புடன் கருணாகரன்6,இடைப்பாடி. அன்பர்களே ! முழுக்க முழுக்க தமிழில் திருக்கணித முறையில் ஜாதகம் கணிக்க வேண்டுமா? உங்கள் பெயர், பெற்றோர் பெயர், பிறந்த தேதி, மாதம் வருடம், பிறந்த இடம் போன்ற விபரங்களை தாருங்கள், உங்கள் ஜாதகம் கூரியர் மூலமாக உங்களுக்கு அனுப்பி வைக்கப்படும்.( நள்ளிரவில் இரவு 12.00 மணிக்கு மேல் காலை 7.00 மணிக்குள் பிறந்திருந்தால் விடிந்தால் என்ன கிழமை என குறிப்பிடவும்.K.செந்தில்குமார்,கணேஷ் கம்ப்யூட்டர்ஸ்,34,கடைவீதி, இடைப்பாடி,சேலம் மாவட்டம்-637101.

Monday, September 18, 2017

மகாளய பட்ச அமாவாசை

ஓம் நமசிவய

வரும் (20.09.2017)அமாவாசை வரையில் நமது பித்ருக்களுக்கு திதி தர்ப்பணம் கொடுக்க வாய்ப்பு உள்ளது .
தவற விடாதீர்கள்.

வாழ்வில் வரும் எதிர்பாராத விபத்துக்கள் , திடீர் வியாதிகள், செலவுகள், குடும்ப பிரிவினைகள் , ஓயாத சண்டைகள் , மனக்கலக்கம் , மரண சம்பவங்கள், தொழிலில் முடக்கம் கடன் , வியாபார நஷ்டம் போன்ற பலவித துன்பங்களையும் தருகின்ற

பிதுர் தோஷம் எனும் மகா துயர்தரும் நிகழ்வினை இல்லாமல் செய்ய இந்த வாய்ப்பு மனிதர்களுக்கு வருடம் ஒருமுறை வழங்கப்படுகின்றது

பயன்படுத்தி தோஷம் நீக்கி மகிழ்ச்சியை பெருக்கி நீங்களும் உங்கள் சந்ததியும் நலமுற்று வாழுங்கள் .

>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>

ஓம் நமசிவய

புரட்டாசி மாத 15 நாட்களும் நமது மூதாதையர் நாம் நிச்சயம் தருவோம் எனும் மாபெரும் நம்பிக்கையில்,
நாம் தரும் திதி தர்ப்பணத்திற்காக -
ஸ்ரீ எம தர்மராஜரால் அனுமதி தரப்பட்டு பூலோகம் வருகின்றார்கள்.
இராமேஸ்வரம் காசி கயா சென்று முறையாக திதி தர்ப்பணம் செய்தவர்கள் தவிர மற்றவர்கள் அனைவரும் நிச்சயமாக இந்த அருமையான வாய்ப்பினை பெரும் பேறாக கருதி
திதி தர்ப்பணம் தாருங்கள்.
------------------------------------------------------------------------------------

பிறப்பின் பயனாக இறப்பினை அடைந்த முன்னோர்களின் ஆன்மா அமைதியை பெற அவரது வழியில் வந்த உறவுகள் அவர்களுக்கு செய்யும் புண்ய கார்யமே திதி தர்ப்பணம் ஆகும்.

புரட்டாசியில் வரும் பௌர்ணமிக்கு மறுநாள் துவங்கி அமாவாசை வரை முன்னோர்களின் ஆன்மாக்களை உறவுகள் தருகின்ற திதி தர்ப்பணத்தை வாங்கிக்கொள்ள அனுமதித்து முன்னோர்களின் ஆன்மாக்கள் பூமி நோக்கி இறங்கி வருவதாக சாஸ்திரங்கள் கூறுகின்றன.

அவ்வேளையிலும் நாம் அவர்களுக்கு திதி தர்ப்பணம் தரவில்லைஎன்றால் அவர்கள் மனம் நொந்து மேலுலகம் சென்று வெஞ்சிறையில் வாடுவார்கள்.

அவர்களின் கோபம் நமது வாழ்வில் பல வழியிலும் துன்பங்களை தரும்.

ஆகவே இந்த மகாளய பட்ச அமாவாசையில் மறந்த முன்னோர்களின் ஆன்மா சாந்தமுற திதி தர்ப்பணம் செய்து அவர்களின் அன்பை பெற முயல்வோம்.

ஓம் நமசிவய.
<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<

வேறு பதிவுகளில் வந்த விளக்கம்.

"மகாளயம்’ என்றால் "கூட்டமாக வருதல்’. மறைந்த நம் முன்னோர் மொத்தமாக கூடும் நேரமே மகாளய பட்சம். "பட்சம்’ என்றால் 15 நாட்கள். மறைந்த முன்னோர் 15நாட்கள் (சில சமயங்களில் 16 ஆக மாறுபடும்) நம்மோடு தங்கும் காலமே மகாளய பட்சம்.
இது புரட்டாசி மாத பவுர்ணமிக்கு மறுநாள், பிரதமை திதியில் துவங்கி, அமாவாசை வரை நீடிக்கும். புரட்டாசியில் வரும் அமாவாசையே மகாளய பட்ச அமாவாசை எனப்படுகின்றது.
தை அமாவாசை, ஆடி அமாவாசை ஆகியவற்றை விட உயர்ந்தது இது.
மற்ற மாதங்களில் அமாவாசையன்று முன்னோரை நினைத்து தர்ப்பணம் செய்வோம். அவர்கள் மறைந்த தமிழ் மாதத்தில் வரும் திதியில், சிராத்தம் முதலியன செய்வோம்.

ஆனால்,

மகாளய பட்ச காலத்தில் பிரதமை துவங்கி அமாவாசை வரை தினமும் தர்ப்பணம் செய்ய வேண்டும்.

ஒட்டுமொத்த முன்னோரையும் அப்போது நினைவு கூறவேண்டும். தீர்த்தக்கரைகளுக்கு சென்று புனித நீராடி, நம் முன்னோர் ஆத்மசாந்திக்காக பிரார்த்தித்து வர வேண்டும்.

அந்தணர்களுக்கு ஆடைகள், ஏழைகளுக்கு உணவு, படிக்க சிரமப்படும் மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை என தானமளிக்க வேண்டும்.

நமது தேசத்தின் பல நூற்றாண்டுகளுக்கும் முந்தைய வரலாறைக் கூட தெரிந்து வைத்திருக்கும் பலர்,
தங்கள் மூதாதையரில் மூன்று தலைமுறைகளுக்கு முன்புள்ளவர்கள் பெயரை நினைவில் வைத்திருப்பதில்லை.

அந்த பயிற்சியை இந்த காலத்தில் நமது குழந்தைகளுக்கு அளிக்க வேண்டும்.

தற்போது நினைவில் உள்ள தலைமுறையினர் பெயரை டைரியில் குறிக்கச் சொல்ல வேண்டும்.

அப்படியானால் தான் எதிர்காலத்தில் தர்ப்பணம், சிராத்தம் குறித்த அறிவு நம்மிடையே நீடித்து நிலைத்திருக்கும்.

மகாளய பட்சத்தின் ஒவ்வொரு திதியிலும் தர்ப்பணம் கொடுப்பதன் பலன்கள் தரப்பட்டுள்ளன.

முதல்நாள் – பிரதமை – பணம் சேரும்

2ம் நாள் – துவிதியை – ஒழுக்கமான குழந்தைகள் பிறத்தல்

3ம் நாள் – திரிதியை – நினைத்தது நிறைவேறுதல்

4ம் நாள் – சதுர்த்தி – பகைவர்களிடமிருந்து தப்பித்தல்

5ம் நாள் – பஞ்சமி – வீடு, நிலம் முதலான சொத்து வாங்குதல்

6ம் நாள் – சஷ்டி – புகழ் கிடைத்தல்

7ம்நாள் – சப்தமி – சிறந்த பதவிகளை அடைதல்

8ம் நாள் – அஷ்டமி – சமயோசித புத்தி, அறிவாற்றல் கிடைத்தல்

9ம்நாள் நவமி – சிறந்த வாழ்க்கைத்துணை, குடும்பத்திற்கேற்ற மருமகள் அமைதல், பேத்தி, புத்திசாலியான பெண் குழந்தைகள் பிறத்தல்.

10ம் நாள் – தசமி – நீண்நாள் ஆசை நிறைவேறுதல்

11ம்நாள் – ஏகாதசி – படிப்பு, விளையாட்டு, கலையில் வளர்ச்சி

12ம் நாள் – துவாதசி – தங்கநகை சேர்தல்

13ம்நாள் – திரயோதசி – பசுக்கள், விவசாய அபிவிருத்தி, தீர்க்காயுள், ஆரோக்கியம், சுதந்திரமான வேலை அல்லது தொழில்

14ம்நாள் – சதுர்த்தசி – பாவம் நீங்குதல், எதிர்கால தலைமுறைக்கு நன்மை.

15ம் நாள் – மகாளய அமாவாசை – முன் சொன்ன அத்தனை பலன்களும் நம்மைச் சேர முன்னோர் ஆசி வழங்குதல்.

எனவே, மகாளய பட்சம் என்னும் அரிய சந்தர்ப்பத்தை நழுவ விடாமல் இருந்தால் லாபம் நமக்கு மட்டுமல்ல!
நம் தலைமுறைக்கும் சேர்த்து தான்.

இதைவிட பெரிய ஆனந்தம் நமது முன்னோர்கள் நம்மோடு அடிக்கடி வந்து நன்மைகளை செய்து மகிழ்வார்கள்.

ஓம் நமசிவய.

Wednesday, March 15, 2017

தீராத கடன்களை தீர்க்க

ஓம் நமசிவய 

அன்பிற்குரியோர்களே 

மைத்ரேய முகூர்த்தம்


மிகவும் விசேஷமான இந்த முகூர்த்தம் – எவ்வளவு பெரிய கடன் இருந்தாலும் எளிமையாக தீர்த்து வைக்கும் கால நேரமாகும்.

செவ்வாய்க்கிழமையும் அசுவனி நட்சத்திரமும் சேருகின்ற நாளில் மேஷ லக்கினம் அமைந்துள்ள நேரம் மைத்ரேய முகூர்த்தம் எனப்படும்.

செவ்வாய்க்கிழமையும், அனுஷ நட்சத்திரமும் சேருகின்ற நாளில் விருச்சிக லக்கினம் அமைந்துள்ள நேரமும் மைத்ரேய முகூர்த்தமாகின்றது.

மேற்படி காலங்களில் லக்கினமும் நட்சத்திரமும் அமைந்து செவ்வாய்க்கிழமை அமையாது போனாலும் 75 % பலன்களை பெறலாம்.

செவ்வாய்க்கிழமை அமைந்தால் நிச்சயமாக 100 % பலன்களை பெறுவது திண்ணம்.

நீங்கள் செய்யவேண்டியது என்னவென்றால் .....

மேற்குறித்த நாட்களில் நீங்கள் பெருந்தொகையாக தரவேண்டிய கடன் தொகையில் கொஞ்சம் இந்த குறிப்பிட்ட நேரத்தில் சம்பந்தப்பட்டவருக்கு திருப்பி தரவேண்டும், அவ்வளவுதான் அந்த பெரும் தொகையானது சிறுக சிறுக அடைபட்டுவிடும். நமக்கு சிரமம் இல்லாமலே.

இவ்வளவு சிறப்பு மிக்க நாட்களும் , நேரமும் இந்த ஆண்டில் (2017-2018) எப்போதெல்லாம் சம்பவிக்கின்றது என்பதனை காண்போம்.

திருக்கணித பஞ்சாங்க முறை.


இந்த நேரம் சேலம் மாவட்டம் சூரிய உதயமாகும்


Tuesday, February 7, 2017

வலி இனிது

ஓம் நமசிவய .
அன்பிற்குரியோர்களே,

வலி எனும் இன்பம் .

வலி என்பது இன்பமா ?

என்னய்யா  இப்படி சொல்லிட்டீங்கன்னு ... நீங்கள் கேட்பது புரிகின்றது.

உண்மைதான் .

நாம் குழந்தையாக இருந்த காலம் முதலே வலியை இன்பமாவே பார்த்து ஏற்றுக்கொள்ள பழகிக்கொண்டோம்.

மீண்டும் குழப்பமா ??!!

தெளிவாக சொல்கின்றேன் கேளுங்கள்.

உடல்நலக்குறைவுக்காக டாக்டரிடம் செல்கின்றோம் , அவர் ஊசி போடுகின்றார் . வலிக்கின்றது.

வலிக்கின்றது என்று அம்மாவிடம் சொன்னோம்.
அம்மா சொன்னார்கள் தேய்ச்சிவிட்டால் சரியாயிடும் .
ஆனால் தேய்த்தால் வலி அதிகம் ஆனது.
குழந்தையான  பொறுத்துக்கொண்டோம், கொஞ்ச நேரம் நமது கவனம் வேறு திசை திரும்பியதும் வலி மறந்து போனோம்.

வெகு தூரம் நடக்கின்றோம். வீடு வந்து சேர்ந்ததும் மனைவியிடமோ, மகனிடமோ சொல்கின்றோம்.

ரொம்ப தூரம் நடந்தது கால்கள் வலிக்குது கொஞ்சம் அமுக்கி விடறியா??
அவர்கள் கால்களை அமுக்கி விடுகின்றார்கள்.
அழுத்தப்படும்போது கால்கள் இன்னும் அதிகமாக வலிக்கின்றது , நாம் பொறுத்துக் கொள்கின்றோம்.
ஏனெனில் இந்த வலி இன்பமாக இருக்கின்றது.
வலிக்கும் கால்களை அமுக்கியாவிடுவது ? மெல்ல தடவிக் கொடுத்தால்தான் நல்லது, ஆனால் நாம் அமுக்கி விடும்படி சொல்கின்றோம்.
தலைவலி உயிரே போகுது என்போம் , ஆனால் தலையை அழுத்தி விட்டால் நன்றாக இருக்கிறது என்போம்.

காரணம் வலிக்கு வலியே நிவாரணி.

வாழ்க்கையிலும் நாம் பலவித வலிகளை சந்திக்கின்றோம்.
குறிப்பிட்ட காலம் முடிந்ததும் அந்த வலிகளை மறந்து சகஜ வாழ்க்கைக்கு திரும்பி விடுகின்றோம். அந்த வலியை மறந்தும் விடுகின்றோம்.

மீண்டும் ஒரு வலியை சந்திக்க தயாராகின்றோம்.

ஏனெனில் வலி என்பது வாழ்வில் ஒரு அங்கம்.

எந்த உருவிலாவது வலி எல்லோருக்கும் வந்திருக்கின்றது .

ஆனால் நமக்கு வரும்போதுதான் அதன் வலி நமக்கு பெரிதாக தெரிகின்றது.

பிள்ளைப்பேறு (பிரசவம்) என்பது பெண்ணின் மறுபிறப்பு என்பார்கள்.
அந்த வலிக்கு ஈடான வலியே இல்லை என்பார்கள்.
பிரசவம் முடிந்தவுடன் மயங்கிவிடுவாள் அந்த பெண் அவ்வளவு மோசமான உயிர்போகும் வலியை கண்ட அந்த பெண் , மயக்கம் தெளிந்தபின் முதலில் கேட்பது எங்கே என் குழந்தை என்பதுதானே.

சிறுபிஞ்சு முகத்தோடு குழந்தையை அருகில் கண்டபின் தான் அடைந்த மரண வலியை மறப்பதுபோல,

குடும்பபாரம் சுமப்பது என்பது சாதாரணம் அல்ல . அந்த வலியைப்பற்றி  நிறைய சொல்லலாம்,
அந்த வலியை பெறுகின்ற மனிதன்,
தனது மனைவியின் இதழோர சிறு சிரிப்பும், தனது பிள்ளைகளின் கபடமில்லாத அன்பும் கண்டு தான் சுமக்கும் வலியை மறக்கும் தந்தையைபோல ,

சீடர்களின் பலதரப்பட்ட கோரிக்கைகளும், தேவைகளும் , சங்கடங்களும் கேட்டு குருவானவர் பெறுகின்ற மனவலி என்பது கொஞ்ச நஞ்சமல்ல,

அதனை சொன்னால் புரியாது .

தன்னையே உயிரினும் பெரிதாக எண்ணும் இந்த குழந்தைகளுக்கு ஏதேனும் தரவேண்டும் என்கின்ற பேராவலில் அவர்களுக்காக பிரார்த்தித்து, அவர்களுக்கு ஆசிகள் வழங்கி,  மந்த்ரோபதேசம் தந்து அவர்களை சந்தோஷப்படச் செய்து ,
பின்னொரு நாளில் எப்படி இருக்கின்றீர்கள் , முன்னேற்றம் உண்டா என்று அவர்களை கேட்டு , அவர்கள், ஆமாம் அப்பா ஒரு மாறுதலை உணருகின்றோம் என்று சொல்ல அவர்களின் முன்னேற்றம் தருகின்ற அந்த இன்பம்,

அதுவரை தான் பெற்ற வலிகளை எல்லாம் மறக்கசெய்வது மட்டுமல்ல மீண்டும் வலிகளை சுமக்க குருவானவர் தயார் ஆவதைப்போல,           

இவ்வாறான வலிகள் எல்லாம் சுகமானவையே என்போம்.

ஆகவே,

வலி என்பது எவ்வழியிலாவது நம்மை வந்தடையும் நாம்தான் அதனை புரிந்து ஏற்றுக் கொள்ளவேண்டும்.

வலியில்லாத வாழ்க்கை என்பது இல்லவே இல்லை என்பதை புரிந்து கொண்டால் வலி என்பது மிகவும் இன்பமே.

இனி வலியை பெரிதுபடுத்தாமல் வலி வருவது இயற்கையே என ஏற்றுக்கொண்டால் (அதுதான் நமக்கு பழக்கமாயிற்றே ) வலி சுகமானது மட்டுமல்ல , இன்பமானதும் கூட.

இப்போ தெரியுதா வலி என்பது இன்பமே.

ஓம் நமசிவய. 
Related Posts Plugin for WordPress, Blogger...