என்னை தொடர்ந்து

வாருங்கள், நண்பரே வணக்கம். தங்கள் வருகையை பதிவு செய்யுங்களேன் !அன்புடன் கருணாகரன்6,இடைப்பாடி. அன்பர்களே ! முழுக்க முழுக்க தமிழில் திருக்கணித முறையில் ஜாதகம் கணிக்க வேண்டுமா? உங்கள் பெயர், பெற்றோர் பெயர், பிறந்த தேதி, மாதம் வருடம், பிறந்த இடம் போன்ற விபரங்களை தாருங்கள், உங்கள் ஜாதகம் கூரியர் மூலமாக உங்களுக்கு அனுப்பி வைக்கப்படும்.( நள்ளிரவில் இரவு 12.00 மணிக்கு மேல் காலை 7.00 மணிக்குள் பிறந்திருந்தால் விடிந்தால் என்ன கிழமை என குறிப்பிடவும்.K.செந்தில்குமார்,கணேஷ் கம்ப்யூட்டர்ஸ்,34,கடைவீதி, இடைப்பாடி,சேலம் மாவட்டம்-637101.

Saturday, May 14, 2011

அன்பானவர்களே! சிவன் கோயில் வழிபாட்டு முறைகள் -1

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்
அன்பானவர்களே !

 நாம் தினமும் ஏதேனும் ஒரு வணக்கமுறையை கையாளுகிறோம்.

அந்த முறைகளை - முறையாக செய்கிறோமா ?

என்பதுதான் இந்த பகுதியில் நாம் காண இருப்பது. 

ஸ்ரீ ஸ்ரீ சிவன் கோயிலில் வணங்கும் முறையை காண்போம்.

நம்மில் பலர் தினசரி கோயிலுக்கு செல்வோம், வணங்குவோம். 

ஆனால் அது முறையாக உள்ளதா? என்பதை அறியத் தவறுகிறோம். 

முறையாக இல்லாத வழிபாடு முழுமையான பலன் தருவதில்லை என்பது உண்மை.

நாம் சொல்வோம் கடவுளை கும்பிடுவதில் என்ன முறை, எப்படி கும்பிட்டாலும் கடவுள் ஏற்றுக்கொள்வார். 


உண்மைதான் எப்படி வணங்கினாலும் இறைவன் ஏற்றுக்கொள்வார்.
ஆனால் நமக்கு பலன் கிடைக்க வேண்டுமே
அதற்கு, 


முறையான வணக்கமுறை தேவைதான்.

நமக்கு காபி குடிக்கவேண்டும் என்றால்,
காபி போட்டு அல்லது காபி வாங்கி குடிப்போம்.

எப்படி குடித்தாலும் காபிதானே என்று நினைத்து,

கொஞ்சம் காபித்தூள் வாயில் போட்டுக்கொண்டு,கொஞ்சம் பால் வாயில் ஊற்றிக் கொண்டு, கொஞ்சம் சர்க்கரை வாயில் போட்டு கொப்பளித்து விழுங்குவோமா இல்லை அல்லவா 
அதுபோல் கோயில் சென்று வணங்கும் முறையும் ஏதோ சென்றோம் என்றில்லாமல் சரியான முறையில் சென்று வணங்கி 

முழுமையான பலன்களை பெறுவோமே!!!!!!

திருக்கோவில் சென்று வணங்கும் முறைகளை நாம் இங்கே காண்போம்.

சிவன் கோவில் 

சேக்கிழார் பெருமான்
“ 
நீறணிந்தார் அகத்தருளும் நிறைகங்கில் புறந்தருளும்
மாறவருந் திருப்பள்ளி எழுச்சியினில் மாதவஞ்செய் 
சீறடியார் திருவலகுந் திருமெழுக்குந் தோண்டியுங் கொண்டு
ஆறணிந்தார் கோயிலினுள் அடைந்தவரை கொடுபுக்கார்
 ”

என கூறுகிறார்.

இதிலிருந்து காலை நேர இறைவழிபாடு மிக உகந்ததாக தெரிகிறது.

தினமும் காலை சுத்தமான நீரில் குளித்துமுடித்து தூய உடை அணிந்து (லுங்கி,கைலி போன்றவை அணியக்கூடாது)சிவநாமம் சொல்லியவாறே ஆலயம் நோக்கி புறப்படவேண்டும். 

வழியில் யாரிடமும் அநாவசியமான பேச்சின்றி மௌனமாக செல்லவேண்டும்.

கோயிலில் சாற்றுவதற்கு மலர், மாலைகள், கற்பூரம், தேங்காய், பழம் ஏதாவது வாங்கியிருந்தால் அதனை மார்போடு அணைத்து எடுத்து செல்லவேண்டும், நமது இடுப்புக்கு கீழே அந்த பொருட்கள் இருக்ககூடாது. 

கைகளை நீட்டி கீழ் வரைக்கும் கொண்டு செல்லும்போது நமது காலணியின் மண் அந்த கூடைக்குள் விழும். 

பாதையில் உள்ள முடி, எச்சில் போன்றவை தெறித்து உள்ளே விழும் அதனால் இடுப்புக்கு மேலே மார்போடணைத்து கொண்டு செல்வது மிகவும் சிறந்தது. 

தினசரி கோயில் போகும் வழக்கம் உள்ளவர்கள் தேங்காய் பழம் வாங்க வேண்டிய அவசியம் இல்லை. அர்ச்சனை செய்யும் காலம் மட்டும் வாங்கிச் சென்றால் போதும். 

மற்ற நாட்களில் சுவாமியை தரிசனம் செய்தால் போதும். இறைவன் கேட்பது பரிசுத்த மனம் மட்டுமே.

தொலைவில் இருந்தே கோபுரம் கண்டுவிட்டால் அதனை இறைவனாகவே கருதி வழிபடவேண்டும். 


அதனால் கோபுரம் கண்டவுடன் "சிவசிவ" என்று சொல்லி வணங்கி பின் செல்லவேண்டும்.

“கோபுர தரிசனம் கோடி புண்ணியம்” ஆன்றோர் வாக்கு.

தரிசனம் இன்னும் உண்டு.ஸ்ரீ சிவன் திருக்கோயில் வணங்கு முறைகளை காண்கிறோம்நாம் இப்பொது திருக்கோயில் திருவாசல் வந்து விட்டோம்.திருகோபுரத்தின் முன் நின்று உச்சியைப்பார்த்து வணங்கி விட்டு இங்கிருந்தே மூலவர் இருக்கும் திசை நோக்கி வணங்கிகோவிலுள்  புக வேண்டும்.
தென்நாட்டில் உள்ள  எல்லா சிவன் கோவிலும் ஒரே அமைப்பில்தான் இருக்கும். வட மாநிலங்களில் சிவன் கோவில்கள் சற்று மாறுபட்டு இருக்கும்.

     சிவாலயத்திற்கு சென்று எப்படி வழிபடவேண்டும் என்பதையும், நற்கதி அடைய என்னவழி என்பதையும் திரு மூலர் பெருமான்,

 ஆய பதிதான் அருட் சிவலிங்கம்
 ஆய பசுவும் அடலேறென நிற்கும்
 ஆய பலிபீடம் ஆகும் நற்பாசமாம்
 ஆய அரன்நிலை அறிந்துகொள்வார் கட்கே

என்று மிகவும் தெளிவாகக் கூறியுள்ளார்கள்.

     இந்த பேருண்மையை நன்கு உணர்ந்துதான் வழிபாடு நிகழ்த்த வேண்டுமாதலால் முதலில் நாம் பலிபீடத்தை வீழ்ந்து வணங்கி நமது ஆணவமாகிய பாசத்தை விட்டு ஒழிக்கவேண்டும். 

மேலும் வீழ்ந்து வணங்கும் போது நமது கால்களை மேற்குஅல்லது தெற்கு திசையில்தான் நீட்டவேண்டும் , வடக்கு மற்றும் கிழக்கில் எக்காரணம் கொண்டும் கால்களை நீட்டக்கூடாது என்பதை கருத்தில் கொள்ளவேண்டும்.

ஏனென்றால் மேற்கு, தெற்கில் எந்த ஸ்வாமியின் சிலாரூபங்களும் இருக்காது. நமது கால்கள் அவர்களை நோக்கி இருக்காது.

(உணமையில் கோயில் அமைப்பில் உள்ளிருக்கும் தெய்வீக அருள் சக்தி நம் மேல் முழுவதுமாக படரவே இந்த முறைகளை கையாள்கிறோம். நாம் தெற்கு நோக்கியோ, மேற்கு நோக்கியோ வீழ்ந்தால் அருள்சக்தி கிடைப்பதில்லை)
இவ்வாறு வீழ்ந்து வணங்கிய பின் எழுந்து மேல் நோக்கி கொடிமரத்தை வணங்கவேண்டும். 

த்வஜஸ்தம்பம் எனப்படும் கோபுரவாசலில் உள்ள கொடிமரம் சிவபெருமானது பரங்கருணையை அறிவிப்பது. உயிர்கள் மேல் உள்ள பெருங்கருணையினாலேயே சிவபெருமான் படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல் ஆகிய ஐந்து தொழில்களையும் ஆற்றுகிறான். 

இவ்வைந்து தொழில் மாட்சியை உணர்த்துவதுதான் பஞ்சாட்சர மந்த்ரம். சைவ,சித்தாந்த சாத்திரங்களால் இப்பேருண்மையை அறியலாம், அம் மந்திரங்களை தாங்கியே ஓங்கி நிற்கின்றது கொடிமரம்.
     இவ்வுண்மையை,
    
     அஞ்செழுத்தும் எட்டெழுத்தும் ஆறெழுத்தும் நாலெழுத்தும்
     பிஞ்செழுத்தும் மேலைப்பெருஎழுத்தும்  நெஞ்சழுத்திப்
     பேசும் எழுத்துடனே பேசா எழுத்தினையும்
     கூசா மற் காட்டக் கொடி             கொடிக்கவி (4).

     என்னும் உமாபதி சிவாச்சாரிய ஸ்வாமிகளின் திருவாக்கால் உணரலாம். இந்த பேருண்மையை உணர்ந்து எண்ணி கொடிமரத்தை
சிரமேற் கரங் கொண்டு கூப்பித் தொழ வேண்டும்.

தரிசனம் இன்னுமுண்டு.

அன்பின் உள்ளங்களே உங்கள் அனைவருக்கும் கருணாகரனின் அன்பு வணக்கங்கள்.
ஸ்ரீ சிவன் திருக்கோயில் வணங்கு முறைகளை காண்கிறோம்

நாம் இப்போது திருக்கோயில் கொடிமரம் வரை வந்து விட்டோம்.

உள்ளே செல்வதற்கு திருக்கோயில் வாசல் திறந்தே இருக்கும் ஆனாலும் கோயிலின் திருக்காவலராகிய நந்தியம்பெருமானின் உத்திரவு பெறாமல் உள்ளே செல்லக் கூடாது.
     ஸ்ரீ சிவாலயங்களில் வழிபட வருவோரைச் சமயம் பார்த்து உள்ளே விடுவதற்குரிய அதிகாரம் பெற்றவர் திருநந்தித்தேவர். அதனால் அவரை அதிகார நந்தி என்றும் கூறுவர். இவர் நெற்றிக் கண்ணும், நான்கு தோள்களும், இடபத்தின் முகமும், தேவ உடலும் கொண்டு கையில் கத்தியும், பிரம்பும் தாங்கி காட்சி அளிப்பார்.
     இச்சிறப்பெல்லாம் இவர் சிவபெருமானால் என்பதை
    மற்றிணையில் லாக் கயிலைமலை நாதன் நந்திக்கு
     நெற்றியிற்கண் நாலுபுயம் நெருப்புருவம் பிறைகொண்முடி
     சற்றுமொரு குறைவிலாச் சாரூபம் பணிந்தருளிப்
     பெற்றியினா லருட்சுரிகைப் பிரம்புமருள் செய்தனனே

எனவரும் திருவையாற்றுப் புராணம் தெளிவாகக் காட்டுகிறது.

     ஆனால் எல்லாகோயில்களிலும் நந்தியம்பெருமான் மேற்கூறிய தோற்றத்தில் இல்லை என்றாலும் பலிபீடம்,கொடிமரம்,அடுத்துள்ள நந்திதேவராகிய நந்தியிடம் பிரார்த்தித்து பின் உள்ளே செல்ல வேண்டும் உள்ளேயும் நேராக இறைவன் சந்நிதிக்கே சென்று விடாமல் வலம் வந்து செல்ல வேண்டும்.

பிரகார வலம் வருவதால் எல்லாவகையான அச்சங்களும், நோய்களும் விலகி அளவற்ற புண்ணியங்கள் உண்டாகின்றன என்று ஆகமங்கள் கூறுகின்றன.

அக்கூற்றுப்படி வியாதிகள் நீங்க முற்பகலிலும், இஷ்டசித்திகளை அடைய நண்பகலிலும், பாபங்கள் தொலைய பிற்பகலிலும், வீடு பேறடைய அர்த்த ஜாமத்திலும் வலம் வர வேண்டும் என்பதை அறிகிறோம்.

அடுத்து வலம் :
     வலம் வரும்போது மூல மூர்த்திக்கும், நந்தி, பலி பீடங்களுக்கு இடையில் புகுந்து வலம் வருதல் கூடாது. இதைப்பற்றிக் கூறும்போது
நூல்களில்  சமீபத்தில் பிரசவிக்கக் கூடிய பெண் ஒருத்தி நிறைந்த எண்ணெய் குடம் ஒன்றைத்தாங்கி நடந்தால் எப்படி நடப்பாளோ அப்படி நடந்து வலம் வர வேண்டும் என்று தெரிவிக்கின்றன. எப்பொழுதும் திருக்கோவிலை மூன்று முறை வலம் வருதல் நல்லது. வழி பாட்டின் பலனை முழுமையாகப் பெற நாம் சண்டேசுவரர் சந்நிதியில் வேண்டிக்கொள்ள வேண்டும்.  அவர்தான் சிவபூசையின் சிறப்பை உணர்த்தியவர், அதனாலேயே சிவபெருமான் அவருக்கு அடியார்களுக்கு வழிபாட்டு பயனை அளிக்கும் சண்டீச பதத்தை அருளினார். அவர் சதாசர்வ காலமும் சிவா தியானத்திலேயே இருப்பதால் நாம் வந்திருப்பதை அவருக்கு உணர்த்த இடது உள்ளங்கையில் வலது நடு மூன்று விரல்களால் ஓசை வராமல் மூன்று முறை தட்டி (தொட்டு) வருகையை தெரிவிக்கவேண்டும், பின்னர் நமது வேண்டுதல்களை தெரிவிக்க வேண்டும்.
    
ஆலயத்துள்ளே கீழே வீழ்ந்து வணங்குதல் கூடாது. வலம் வரும்போது ஸ்தூபி, கொடிமரம், ஆகியவற்றின் நிழலையும், ஸ்வாமி மீதிருந்து களைந்த நிர்மால்யத்தையும் மிதிக்காமலும், தாண்டாமலும் வலம் வரவேண்டும். தவிர்க்க முடியாத நிலையில் மேலே சொன்ன நிழல்களின் ஐந்தில் மூன்று பாகம் நீக்கி மற்ற இரண்டு பாகத்தில் செல்லலாம்.

 உண்டகலமும் உடுப்பனவும் சூடுவனவும் உனக்காகச் சண்டீசனுமாம் பதந் தந்தோம்

என்று சிவபெருமானே இவருக்கு அருள் புரிந்திருப்பதால் சிவபெருமான் திருமேனியிலிருந்து பிரசாதமாகப் பெற்ற நிர்மாலியத்தை ( திருநீறு,பழம்,பூ போன்றவைகளை ) சண்டேசுவரர் முன் சமர்ப்பித்து அவர் திருவருளோடு அதனைப் பெற்று= கொண்டு வணங்கி விடைபெறுதல் வேண்டும். இத்தகைய செயல்களையும், இவைபோன்ற செய்யத்தகாத காரியங்களையும் பெரியோர்கள் வாயிலாக கேட்டறிந்து செய்வது மிகவும் நலமளிக்கும்.
இந்த அளவில் சிவ வழிபாடு நிறைவடைகிறது. விநாயகரிடம் குட்டோடு ஆரம்பிப்பது சண்டீஸ்வரரிடம் தட்டோடு பூர்த்தியாவதாக ஆன்றோர் பெருமக்கள் கூறுவர்.

இவ்வாறு ஆலயத்துள் வழிபாடு நிகழ்த்தி பூர்த்தி செய்ததும் சிவ சிந்தனையோடு திரும்பி மீண்டும் பலிபீடத்தருகில் வீழ்ந்து வணங்கி வரவேண்டும். வணங்கி முடிந்ததும் உடனே வந்து விடக் கூடாது. ஏனென்றால் நாம் கோயிலுள் நுழைந்த உடன் நந்தியம்பெருமான்   அருளாணைப்படி நந்தி கணத்தவர் நமக்கு உடனிருந்து வழிபாடு செய்வித்தார்கள் அல்லவா? அவர்களை நாம் அலட்சியம் செய்ததாக எண்ணுவர். ஆகையால் சற்று நேரம் அங்கேயே அமர்ந்து பஞ்சாட்சரம் ஜபித்து நந்தி கணத்தவரை வணங்கி விடை பெற்று தூய மனத்துடன் வீட்டிற்கு வருதல் வேண்டும்.

இவ்வாறாக சிவாலய தினசரி வழிபாடு இனிதே முற்றுப்பெறுகிறது. 

சிவாலயங்களில் செய்யத் தகாதவைகள்.

v  ஆலயத்தில்  வழிபாடு செய்யுங்கால் இறைவனைத் தவிரவும் வேறு எவரையும் வணங்கலாகாது. நாம் வழிபடும் குருவேயானாலும் சந்நிதியில் அவரை வீழ்ந்து வணங்குதல் ஆகாது. கோவிலுக்குள்ளும் யாரையும் வீழ்ந்து வணங்கக் கூடாது.

ஆசாரக்கோவை எனும் நூலில் ,
  
   பெரியார் மனையகத்தும் தேவகுலத்தும்
  வணங்கார் குரவரையும் கண்டால் அணங்கொடு
  நேர் பெரியார் செல்லுமிடத்து

என்று அறிவுறுத்துவதை சிந்தித்தல் வேண்டும்.

தங்கள் குடும்பங்களில், பிறப்பு,இறப்பு நேர்ந்தால் அதற்குரிய தீட்டு காலங்கள் முடியும் வரை கோயிலினுள் சென்று வழிபடக் கூடாது.

பேசிக் கொண்டும், தாம்பூலம் மென்று கொண்டும்,  தலைப்பாகை கட்டிக்கொண்டும் இறைவணக்கம் நிகழ்த்துவது பெரும் குற்றமாகும்..       

2 comments:

இராஜராஜேஸ்வரி said...

மிகப்பயனுள்ள தகவல்கள்.பாராட்டுக்கள்.

இர.கருணாகரன் said...

பகிர்வுக்கு மிகவும் நன்றி

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...