என்னை தொடர்ந்து

வாருங்கள், நண்பரே வணக்கம். தங்கள் வருகையை பதிவு செய்யுங்களேன் !அன்புடன் கருணாகரன்6,இடைப்பாடி. அன்பர்களே ! முழுக்க முழுக்க தமிழில் திருக்கணித முறையில் ஜாதகம் கணிக்க வேண்டுமா? உங்கள் பெயர், பெற்றோர் பெயர், பிறந்த தேதி, மாதம் வருடம், பிறந்த இடம் போன்ற விபரங்களை தாருங்கள், உங்கள் ஜாதகம் கூரியர் மூலமாக உங்களுக்கு அனுப்பி வைக்கப்படும்.( நள்ளிரவில் இரவு 12.00 மணிக்கு மேல் காலை 7.00 மணிக்குள் பிறந்திருந்தால் விடிந்தால் என்ன கிழமை என குறிப்பிடவும்.K.செந்தில்குமார்,கணேஷ் கம்ப்யூட்டர்ஸ்,34,கடைவீதி, இடைப்பாடி,சேலம் மாவட்டம்-637101.

Thursday, December 27, 2012

அன்பிற்குரிய நண்பர்களே , வணக்கம் ஜாதகத்தில் தொடர்ச்சி

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்
அன்பு நண்பர்களே , வணக்கம்.

ஜோதிடம் என்பது குண்டு சட்டிக்குள் குதிரை ஓட்டுவது அல்ல 

அரைகுறை ஜோதிடர்கள் இதனை படித்துவிட்டு "ஐயையோ இதெல்லாம் அசிங்கம் இதை எழுதலாமா ? இதைப் படிப்பவர்கள் ஜோதிடத்தை தவறாக நினைப்பார்களே " என்று புலம்புகின்றார்கள்.

இது ஏதோ நானே ஒரு கற்பனையாக எழுதியதைப்போல எண்ணுகின்றார்கள் , இது அடியேனின் கற்பனை அல்ல -

ஸ்ரீ ஸ்ரீ பராசரரின் அமுத வாக்கு , அவர் தந்த ஜோதிட ஆய்வு .

ஜோதிடம் என்பது மனிதர்களின் வாழ்வின் எல்லா பகுதியையும் பிரித்தாய்வது , குண்டு சட்டிக்குள் குதிரை ஓட்டுவதல்ல.

வீடு என்றிருந்தால் பூஜை அறை மட்டுமல்ல , கழிவறையும் உண்டு.
( அதுதான் முக்கியமானதும் கூட ) 

இது ஜோதிடர்களுக்கான விளக்கம், ஜோதிடர் என்பவர் ஜோதிடக்கலையை முழுவதும் தெரிந்தவராக இருப்பது அவசியமாகின்றது , கத்துக்குட்டித்தனமாக உளறித்திரிவதல்ல ஜோதிடம்.


விமர்சனம் எழுதும் நண்பர்கள் தனது பெயரை எழுதலாம் , விலாசமற்றவர்களின் கருத்துக்கள் ஏற்புடையதல்ல, மேலும் அடியேன் அதனை பிரசுரிப்பதில்லை .

  
பராசரர் சம்ஹிதையில் காணப்படும்
12 பாவங்களிலும் கிரஹங்கள் இருப்பதன் பலன்




நான்காமிடத்தில் சந்திரனிருந்து சத்துருக் கிரஹங்களின் சேர்க்கையையோ, பார்வையையோ அடைந்திருந்தால் அப்பொழுது பிறந்த பாலன் பசுவைப்போல் பிறராலேயே பிறந்தவன் என்பது நிச்சயம்.
3,6,2,5 க்குடைய கிரஹம் இலக்கினத்தில் இருக்குமானால் வேலைக்காரன் முதலிய வேறு புருஷர்களால் உண்டுபண்ணப்பட்டவன் .




இலக்கினத்தில் பாபக்கிரஹமும், 7-ல் சுபக்கிரஹமும், 10-ல் சனியும் இருந்தால் இந்த யோகத்தில் வர்க்கக் கலப்புள்ளவனே உண்டாவான்.



இலக்கினத்தில் செவ்வாயும், சுக்கிரனும் இருந்தால் அப்பொழுதும் பாலன் பிறருக்குப் பிறந்தவனே ஆவான். 



பராசரர் சம்ஹிதையில் காணப்படும்
12 பாவங்களிலும் கிரஹங்கள் இருப்பதன் பலன் தொடர்ச்சி.......




சூரியன் லக்கினத்திலும் , 4ல் ராகுவும் இருந்தால் தனது பர்த்தாவின் சகோதரர் மூலம் புத்திரோற்பத்தி எனச்சொல்லுவதில் ஸந்தேகமில்லை .



லக்கினத்தில் ராகுவும் செவ்வாயும் 7ல் சந்திரனும் சூரியனும் இருக்கப்பிறந்தவன் அவனுடைய தாயானவள் ராஜ பத்னியாயினும் தாழ்ந்தவனுக்குப் பிறந்தவனே ஆவான் : இதில் ஐயமில்லை. சூரியனுடன் கூடின சந்திரன் லக்கினத்திலும் , 7ல் செவ்வாயும் சுக்கிரனும் இருக்கப் பிறந்தவன் பிறருக்கு பிறந்தவனே ஆவான்.




எவனுடைய ஜாதகத்தில் 1, 4, 7, 10 மிடங்கள் ஒரு கிரஹமும் இல்லாதிருக்குமோ அவனும் பிறருக்கு பிறந்தவனே ஆகிறான்.




2, 6, 8, 12மிடங்களில் கிரஹங்கள் யாவும் எவனது ஜாதகத்தில் இருக்கின்றனவோ அவன் பிறருக்கு பிறந்தவன் என்பது ஸத்தியமே.




லக்கினத்தை தவிர்த்து எல்லாக் கிரஹங்களும் எந்த இடத்திலேனும் இதே மாதிரியாகவே ஒன்றுக்கொன்று 2,6,8,12 மிடங்களுக்குள்ளேயே இருக்குமானால் அந்த ஜாதகன் பிறருக்குப் பிறந்தவனே ஆவான்.




ஒரே இடத்தில் தனித்து 7க்குடையவனும் , லக்னாபதியும் சேர்ந்திருந்தாலும் அவன் பிறருக்கு பிறந்தவனே ஆவான்.




குரு சந்திரனையோ ஜன்ம லக்கினத்தையோ பார்க்காவிட்டாலும் , ஜீவ வர்க்கம் பெறாவிட்டாலும் பிறருக்கு பிறந்தவனே ஆவான். ஒன்றுக்கொன்று சத்ருக்களான இரண்டு கிரஹங்கள் வேறு கிரஹங்களின் சேர்க்கையில்லாமல் ஒரே கேந்திரத்தில் இருந்தால் பிறருக்கு பிறந்தவனே ஆவான். அவ்விதம் பிறந்த லக்கினம் ஸ்திரமாக அமைந்தால் மேற்சொன்ன பலன் மிக்க உறுதியாக ஏற்படும் . 




1, 4, 10 மிடங்களில் பாபர் இருந்து சந்திரனுடைய சேர்க்கையும் இருந்து லக்கினேசனால் லக்னம் பார்க்கப்படாவிட்டால் அப்பொழுதும் பிறருக்கு பிறந்தவனே ஆவான். லக்னேசன் லக்கினத்தில் இல்லாதிருந்தால் சில இடங்களில் பிறருக்கு பிறந்ததாகவும் ஏற்படுகிறது . 



*இந்த யோகமானது ஜாதகத்தில் உள்ள மற்ற எல்லா யோகங்களுக்கும் 

பங்கத்தைத் தரக்கூடியதாக ஆகும்.




இனி ஒவ்வொரு பாவத்திற்கும் தனித்தனியாக பார்ப்போம் fires 



அன்புடன் உங்கள்

2 comments:

Dr.kr said...

மேற்கண்ட விதிகள் எதுவும் இல்லாமல் பிறர்க்கு ஜாதகம் உள்ளது விதிகள் சரியில்லை.நன்றி Dr.kanakaraj.cbe -31

http://lifestyle-jothidam.blogspot.com/ said...

மேற்கண்ட விதிகளில்லாமலும் பிறப்புகள் இருக்கலாம் ஆனால் விதிகள் சரியில்லை என்பது தவறு , ஸ்ரீ பராசரரை விடவும் நாம் அனைத்தும் தெரிந்தவரில்லை , தெளிந்தவரில்லை .

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...