என்னை தொடர்ந்து

வாருங்கள், நண்பரே வணக்கம். தங்கள் வருகையை பதிவு செய்யுங்களேன் !அன்புடன் கருணாகரன்6,இடைப்பாடி. அன்பர்களே ! முழுக்க முழுக்க தமிழில் திருக்கணித முறையில் ஜாதகம் கணிக்க வேண்டுமா? உங்கள் பெயர், பெற்றோர் பெயர், பிறந்த தேதி, மாதம் வருடம், பிறந்த இடம் போன்ற விபரங்களை தாருங்கள், உங்கள் ஜாதகம் கூரியர் மூலமாக உங்களுக்கு அனுப்பி வைக்கப்படும்.( நள்ளிரவில் இரவு 12.00 மணிக்கு மேல் காலை 7.00 மணிக்குள் பிறந்திருந்தால் விடிந்தால் என்ன கிழமை என குறிப்பிடவும்.K.செந்தில்குமார்,கணேஷ் கம்ப்யூட்டர்ஸ்,34,கடைவீதி, இடைப்பாடி,சேலம் மாவட்டம்-637101.

Friday, January 3, 2014

உயிரின் வருகையும் – புறப்பாடும்

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்

முகநூலில் திவாகர் ரகுநாதன் : வணக்கம் ஐயா, மேலும் ஒரு விளக்கம் தேவை, நம் உடலை பிரிந்த உயிரின் நிலை என்ன?

அன்பு நண்பர்களே, வணக்கம்.

உயிரின் வருகையும் – புறப்பாடும் .

நம் உடலை பிரிந்த பின் உயிர் அடையும் நிலை என்ன ? என அறிந்து கொள்ள வேண்டுமானால் முதலில் நம் உடலை உயிர் வந்து சேர்வதை அறிய வேண்டும்.

ஒரு உயிர் எப்படி உடலுக்குள் வந்து சேர்கிறது ?
எந்த அடிப்படையில் உயிர் உடலை தேர்ந்தெடுக்கின்றது ?
மண்ணுலகில் இடைவிடாது நடைபெறும் இந்த ரகசிய தேர்ந்தெடுப்பு யாரால் நிறைவேற்றப்படுகிறது ?

புதிய உயிர் என்று ஏதும் இல்லை – இன்று பல்கிப் பெருகி நிற்கும் அத்தனை உயிர்களும் ஆரம்ப உயிரின் பிரதிகளே –

ஒரு மனிதனின் பாபங்கள் தனித்தனி பிறப்பாகவும் , அவன் செய்த புண்ணியங்கள் ஒரே பிறப்பாகவும் உருப்பெறுகின்றது.

பாபங்களும் புண்ணியங்களும் அற்றதான நிலையில்தான் மனிதன் பிறப்பற்ற நிலையைப் பெறுகிறான்.

காரணம் பாபங்கள் இருந்தாலும் , புண்ணியங்கள் இருந்தாலும் அது இல்லாமல் போக பிறப்பெடுத்தே தீரவேண்டும்.

ஒரு உயிரானது தான் வாழ்ந்த உடலைப் பிரிந்த பின் காற்றுடன் காற்றாக கலந்து விடுகின்றது.

காற்றானது இதுபோல தன்னுள் வந்து சேர்ந்த பல்லாயிரக்கணக்கான உயிர்களோடு பெரும் பயணமாக வானவீதியில் பயணித்து அந்த உயிர்களை எல்லாம் இந்த பால்வழியில் (Milky Way) உள்ள வான மண்டலத்தில் சேர்த்து விடுகின்றது. இறந்த உயிர் உடனே பிறப்பதில்லை–(ஒன்றிரண்டைத் தவிர).

இறந்த உயிரின் வாழ்ந்த கால கணக்குப்படி , அதன் பாப புண்ணியங்கள் ஆராயப்பட்டு (இங்கே வேறெதுவும் பார்ப்பதில்லை) இந்த நிலையில் வாழ்ந்த உயிர், தான் செய்த பாபங்கள் அல்லது புண்ணியங்களுக்கான பலன்களை அனுபவிக்க, எந்தெந்த தாய் தந்தையருக்கு பிறந்தால் , உயிர் செய்த அந்த பாபங்கள் , புண்ணியங்களுக்கு ஏற்ப வாழ்க்கை அமையுமோ அந்த அந்த வீட்டில் பிறக்க வைக்கப்படுகிறது.

அது எப்படி என்றால் ....

வானுலகில் சென்று ஒரு ப்ரிஜ்ஜில் வைத்தது போல வைக்கப்பட்ட உயிர்கள் சூல் கொண்ட மேகமாகி – அது இந்தியாவில் இறந்திருந்தாலும் சரி , உலகில் வேறு எந்த இடத்தில்  இறந்திருந்தாலும் சரி – தற்போது எங்கு பிறக்க வைக்க வேண்டுமோ அந்த நாட்டிற்கு , அந்த ஊருக்கு , அந்த தெருவுக்கு , அந்த வீட்டிற்கு , அந்த தம்பதிகள் வாங்க இருக்கும் காய்கறிகள் விளைய இருக்கும் நிலத்திற்கு மழையாக பொழியப்படுகின்றது.     

அந்த மழை நீரின் சக்தியை உறிஞ்சி வளர்ந்த காய் , கீரை , பழங்கள் அந்த குறிப்பிட்ட தம்பதியரால் உண்ணப்பட்டு முதல் நாள் செரித்து , இரண்டாம் நாள் , மூன்றாம் நாள் ரத்தமாகி , பின் நாதமாகி , விந்தாகி அவரவர் உடலில் தங்கி , தம்பதிகள் சேரும் நாளில் ஒன்று கலந்து குழந்தையாக உருவாகின்றது .

இது எனது கற்பனையல்ல – பிரஜோர்பத்தி இப்படித்தான் நடக்கின்றது என ஜோதிட , சாஸ்திர நூல்கள் குறிக்கின்றன.

இப்படி உருவாகும் போதே ஒவ்வொரு மாதமும் , ஒவ்வொரு க்ரஹமும் ஒவ்வொரு உறுப்புகளை உருவாக்குகின்றன.

உடலில் எந்த உறுப்பு அல்லது நிலைப்பாடு அதிகம் ஆதிக்கம் செலுத்துகிறதோ அதற்குரிய க்ரஹம் முழுபலத்துடன் இருப்பதாக புரிந்து கொள்ளல் வேண்டும்.

ஸ்ரீசனி பகவானின் ஆதிக்கத்தில் பிறக்கும் குழந்தைக்கு பிறக்கும்போதே தலையில் முடி அடர்த்தியாக நிறைந்து காணப்படும். இப்படியாக ஒவ்வொரு கிரஹமும் ........................

இப்படியாக வளர்ந்த உயிர் தனது முன் ஜென்ம வினைகளின்படி வாழ்ந்து தனது பிறப்பின் காரணத்தை புரிந்தோ புரியாமலோ , வந்த பணியை முடித்தோ , முடிக்காமலோ , தான் கொண்ட உடலை பிரிய வேண்டிய  காலம் வரும்போது என்ன நடக்கின்றது ?

இந்த உடலை விட்டு , இந்த இடத்தில் உயிர் பிரிய வேண்டும் என முன்பே தீர்மாணிக்கப்பட்டுள்ள இடத்தில்தான் உயிர் உடலை விட்டு பிரியும்.

மனித உடலில் பத்துவித காற்றுகள் உண்டு . இவையே மனிதனின் அனைத்து இயக்கத்தையும் நிர்வகிக்கின்றன.

உயிர் வெளியே புறப்படும் நாள் , நேரம் நெருங்கியுடன் உடலின் அனைத்து செல்களும் முடக்கப்பட்டு , எல்லாவித காற்றின் வழிகளும் ஒவ்வொன்றாக அடைக்கப்பட்டுக் கொண்டே வரும்.

உதாரணமாக . . . .

ஒரு வீட்டை நாம் காலி செய்யும்போது எப்படி எல்லா பொருள்களையும் ஒழுங்காக அடுக்கி கட்டி கொண்டுவந்து நடு வீட்டில் வைத்து பின் அங்கிருந்து சரியாக எண்ணி ஒவ்வொன்றாக வெளியே கொண்டு செல்வது போல , நமது அனைத்து அவயங்களும் ஒவ்வொன்றாக முழுச் செயலையும் , ஒவ்வொன்றாக நிறுத்தி , நமது நடுநெஞ்சுக்கு கொண்டு வந்து வைத்து உயிர் வெளியேற வழி வகுத்து கொடுக்கும்.

சிலருக்கு கண்களின் வழியாகவும், சிலருக்கு வாயின் வழியாகவும், வேறு சிலருக்கு உச்சிமண்டையின் வழியாகவும் , இன்னும் சிலருக்கு ஆசன துவாரத்தின் வழியாகவும் , மூத்திர வாசல் வழியாகவும் , காதின் வழியாகவும் , மூக்கின் வழியாகவும், தொப்புள் குழி வழியாகவும் உயிர் வெளியேறும் .

ஒன்பது காற்றும் நிறுத்தப்பட்டு , அவயங்களும் முழு நிறுத்தம் கண்டு , எந்த வழியாக உடலை விட்டு உயிர் வெளியேற வேண்டுமோ அந்த வழிக்கு சொந்தமான பத்தாவது காற்று உயிரை உடலை விட்டு வெளியே அழைத்து செல்லும் , அதனுடனேயே அந்த காற்றும் சென்று விடும் . அந்த காற்று, தன்னுடன் கொண்டு செல்லும் உயிரை காற்று மண்டலத்தில் உள்ள அந்த உயிருக்குரிய இடத்தில் சேர்ப்பித்து விட்டு அதனுடையே தங்கி , மீண்டும் பிறப்பெடுக்கும் காலம் வரும்போது அதற்கென குறிப்பிட்ட தாயின் கர்ப்பத்தில் சேர்ப்பிக்கும் .

அந்த காற்றினைத்தான் நாம் ஆன்மா என்கிறோம். (உயிர் வேறு ஆன்மா வேறு).

ஆன்மா உயிரைவிட்டு எப்போதும் பிரிவதில்லை , உயிர்தான் உடல்களை  விட்டு பிரிகிறது. புனரபி ஜனனம் , புனரபி மரணம் .  

இவ்வாறாக உடலை பிரிந்தபின் உயிரின் நிலை அமைகிறது .
பிறப்பின் துவக்கம் ஆசையின் தூண்டலால் அமைகிறது.

பாபங்களும் , புண்ணியங்களும் அற்ற சம நிலையை அடைவதே பிறப்பற்ற நிலையைத் தரும் , அதுவே ஒவ்வொரு மனிதரும் காண வேண்டிய உன்னதமான நிலையாகும்.

அந்த நிலையை எல்லோரும் இப்பிறப்பிலேயே அடைந்திட விரும்பு கின்றேன்.

வளமோடு வாழுங்கள் , வாழும் நாளெல்லாம்.

அன்புடன் கருணாகரன்.

2 comments:

பாவா ஷரீப் said...

அய்யா
உங்கள் பதிவுகள் மிக அருமை
பஞ்ச பட்சி பற்றி கற்று தாருங்கள்

நன்றி அய்யா

இர.கருணாகரன் said...

பணி நிறைந்துள்ளது , விரைவில் தருகிறேன் , தங்கள் அன்பிற்கு நன்றி . .உங்கள் கருத்துக்களை தயங்காமல் தாருங்கள் , அது அடியேனை அடியேன் அறிய உதவும் .

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...