என்னை தொடர்ந்து

வாருங்கள், நண்பரே வணக்கம். தங்கள் வருகையை பதிவு செய்யுங்களேன் !அன்புடன் கருணாகரன்6,இடைப்பாடி. அன்பர்களே ! முழுக்க முழுக்க தமிழில் திருக்கணித முறையில் ஜாதகம் கணிக்க வேண்டுமா? உங்கள் பெயர், பெற்றோர் பெயர், பிறந்த தேதி, மாதம் வருடம், பிறந்த இடம் போன்ற விபரங்களை தாருங்கள், உங்கள் ஜாதகம் கூரியர் மூலமாக உங்களுக்கு அனுப்பி வைக்கப்படும்.( நள்ளிரவில் இரவு 12.00 மணிக்கு மேல் காலை 7.00 மணிக்குள் பிறந்திருந்தால் விடிந்தால் என்ன கிழமை என குறிப்பிடவும்.K.செந்தில்குமார்,கணேஷ் கம்ப்யூட்டர்ஸ்,34,கடைவீதி, இடைப்பாடி,சேலம் மாவட்டம்-637101.

Monday, October 22, 2012

அன்பானவர்களே! சிவன் கோயில் வழிபாட்டு முறைகள் -2

அன்பானவர்களே! ஸ்ரீ ஸ்ரீ சிவன் கோயில் வழிபாட்டு முறைகள் -2


அன்பு நண்பர்களே, 

ஸ்ரீ ஸ்ரீ சிவன் கோயில் வலம் வருதல் பற்றிய வழிபாட்டு முறையின் தொகுப்பினை தொடர்ந்து காண்போம்.



நாம் இப்போது திருக்கோயில் கொடிமரம் வரை வந்து விட்டோம்.


உள்ளே செல்வதற்கு திருக்கோயில் வாசல் திறந்தே இருக்கும் ஆனாலும் கோயிலின் திருக்காவலராகிய நந்தியம்பெருமானின் உத்திரவு பெறாமல் உள்ளே செல்லக் கூடாது.
     ஸ்ரீ சிவாலயங்களில் வழிபட வருவோரைச் சமயம் பார்த்து உள்ளே விடுவதற்குரிய அதிகாரம் பெற்றவர் திருநந்தித்தேவர். அதனால் அவரை அதிகார நந்தி என்றும் கூறுவர். இவர் நெற்றிக் கண்ணும், நான்கு தோள்களும், இடபத்தின் முகமும், தேவ உடலும் கொண்டு கையில் கத்தியும், பிரம்பும் தாங்கி காட்சி அளிப்பார்.
     இச்சிறப்பெல்லாம் இவர் சிவபெருமானால் என்பதை

 மற்றிணையில் லாக் கயிலைமலை நாதன் நந்திக்கு
  நெற்றியிற்கண் நாலுபுயம் நெருப்புருவம் பிறைகொண்முடி
  சற்றுமொரு குறைவிலாச் சாரூபம் பணிந்தருளிப்
  பெற்றியினா லருட்சுரிகைப் பிரம்புமருள் செய்தனனே

எனவரும் திருவையாற்றுப் புராணம் தெளிவாகக் காட்டுகிறது.

     ஆனால் எல்லாகோயில்களிலும் நந்தியம்பெருமான் மேற்கூறிய தோற்றத்தில் இல்லை என்றாலும் பலிபீடம்,கொடிமரம்,அடுத்துள்ள நந்திதேவராகிய நந்தியிடம் பிரார்த்தித்து பின் உள்ளே செல்ல வேண்டும் உள்ளேயும் நேராக இறைவன் சந்நிதிக்கே சென்று விடாமல் வலம் வந்து செல்ல வேண்டும்.

பிரகார வலம் வருவதால் எல்லாவகையான அச்சங்களும், நோய்களும் விலகி அளவற்ற புண்ணியங்கள் உண்டாகின்றன என்று ஆகமங்கள் கூறுகின்றன.

அக்கூற்றுப்படி வியாதிகள் நீங்க முற்பகலிலும், இஷ்டசித்திகளை அடைய நண்பகலிலும், பாபங்கள் தொலைய பிற்பகலிலும், வீடு பேறடைய அர்த்த ஜாமத்திலும் வலம் வர வேண்டும் என்பதை அறிகிறோம்.

அடுத்து வலம் :

     வலம் வரும்போது மூல மூர்த்திக்கும், நந்தி, பலி பீடங்களுக்கு இடையில் புகுந்து வலம் வருதல் கூடாது. இதைப்பற்றிக் கூறும்போது
நூல்களில்  சமீபத்தில் பிரசவிக்கக் கூடிய பெண் ஒருத்தி நிறைந்த எண்ணெய் குடம் ஒன்றைத்தாங்கி நடந்தால் எப்படி நடப்பாளோ அப்படி நடந்து வலம் வர வேண்டும் என்று தெரிவிக்கின்றன. எப்பொழுதும் திருக்கோவிலை மூன்று முறை வலம் வருதல் நல்லது. வழி பாட்டின் பலனை முழுமையாகப் பெற நாம் சண்டேசுவரர் சந்நிதியில் வேண்டிக்கொள்ள வேண்டும்.  அவர்தான் சிவபூசையின் சிறப்பை உணர்த்தியவர், அதனாலேயே சிவபெருமான் அவருக்கு அடியார்களுக்கு வழிபாட்டு பயனை அளிக்கும் சண்டீச பதத்தை அருளினார். அவர் சதாசர்வ காலமும் சிவா தியானத்திலேயே இருப்பதால் நாம் வந்திருப்பதை அவருக்கு உணர்த்த இடது உள்ளங்கையில் வலது நடு மூன்று விரல்களால் ஓசை வராமல் மூன்று முறை தட்டி (தொட்டு) வருகையை தெரிவிக்கவேண்டும், பின்னர் நமது வேண்டுதல்களை தெரிவிக்க வேண்டும்.
    
ஆலயத்துள்ளே கீழே வீழ்ந்து வணங்குதல் கூடாது. வலம் வரும்போது ஸ்தூபி, கொடிமரம், ஆகியவற்றின் நிழலையும், ஸ்வாமி மீதிருந்து களைந்த நிர்மால்யத்தையும் மிதிக்காமலும், தாண்டாமலும் வலம் வரவேண்டும். தவிர்க்க முடியாத நிலையில் மேலே சொன்ன நிழல்களின் ஐந்தில் மூன்று பாகம் நீக்கி மற்ற இரண்டு பாகத்தில் செல்லலாம்.

 உண்டகலமும் உடுப்பனவும் சூடுவனவும் உனக்காகச் 
சண்டீசனுமாம் பதந் தந்தோம்

என்று சிவபெருமானே இவருக்கு அருள் புரிந்திருப்பதால் சிவபெருமான் திருமேனியிலிருந்து பிரசாதமாகப் பெற்ற நிர்மாலியத்தை ( திருநீறு,பழம்,பூ போன்றவைகளை ) சண்டேசுவரர் முன் சமர்ப்பித்து அவர் திருவருளோடு அதனைப் பெற்று= கொண்டு வணங்கி விடைபெறுதல் வேண்டும். இத்தகைய செயல்களையும், இவைபோன்ற செய்யத்தகாத காரியங்களையும் பெரியோர்கள் வாயிலாக கேட்டறிந்து செய்வது மிகவும் நலமளிக்கும்.

இந்த அளவில் சிவ வழிபாடு நிறைவடைகிறது. விநாயகரிடம் குட்டோடு ஆரம்பிப்பது சண்டீஸ்வரரிடம் தட்டோடு பூர்த்தியாவதாக ஆன்றோர் பெருமக்கள் கூறுவர்.

இவ்வாறு ஆலயத்துள் வழிபாடு நிகழ்த்தி பூர்த்தி செய்ததும் சிவ சிந்தனையோடு திரும்பி மீண்டும் பலிபீடத்தருகில் வீழ்ந்து வணங்கி வரவேண்டும். வணங்கி முடிந்ததும் உடனே வந்து விடக் கூடாது. ஏனென்றால் நாம் கோயிலுள் நுழைந்த உடன் நந்தியம்பெருமான்   அருளாணைப்படி நந்தி கணத்தவர் நமக்கு உடனிருந்து வழிபாடு செய்வித்தார்கள் அல்லவா? அவர்களை நாம் அலட்சியம் செய்ததாக எண்ணுவர். ஆகையால் சற்று நேரம் அங்கேயே அமர்ந்து பஞ்சாட்சரம் ஜபித்து நந்தி கணத்தவரை வணங்கி விடை பெற்று தூய மனத்துடன் வீட்டிற்கு வருதல் வேண்டும்.


இனி சிவன் கோயிலில் முறையாக வலம் வருவோமே,பயன் அடைவோமே.


அன்புடன் கருணாகரன்6 , இடைப்பாடி 


Saturday, October 20, 2012

நாம் யாரென்றே விளங்காத


அன்புள்ள நண்பர்களே, வணக்கம்.

இன்றுள்ள நிறைய ப்ளாக்குகளில் இந்து மதத்தையும் , அதனுடைய தோற்றம் , அதன் வழிபாடு , அதன் வழிமுறைகள் , அதன் இறையாண்மை போன்ற பலவற்றையும், கிண்டலும், கேலியும் செய்வதை சில அரைவேக்காட்டு மனிதர்கள் வழக்கப்படுத்திக் கொண்டுள்ளார்கள் .

இதில் அவர்களுக்கு என்ன சந்தோஷமோ தெரியவில்லை ! 

தான் வந்த ஒரு மதத்தை தானே கேவலமாக எழுதுவதும் , பேசுவதும் , தன்னை பெற்ற தாயை மகனே தரம் தாழ்த்தி விமர்சிப்பதும் ஒன்றே அன்றோ ! 

தான் மிகவும் நியாயமான மனிதன் பிற மதத்தார் மதிப்பர் என 
எண்ணுகின்றனறோ என்னவோ !

எந்த ஒரு வேற்று மதத்தாரும்  தன்னுடைய மதத்தை இந்துக்களைப் போல் பரிகசிப்பதில்லை , ஆய்வுக்கு உட்படுத்துவதில்லை .

எந்த ஒரு விஷயத்தையும் விமர்சிக்குமுன் அதனுடைய முழுமையையும் அறியாமல் தன்னுடைய புத்திக்கு எட்டியதை எழுதுவதும் , விமர்சிப்பதுவும் ஏதோ கூகுளில் நமக்கு ஒரு இலவச ப்ளாக் தந்துவிட்டார்கள் என்ற நினைப்பில் உளறிக் கொட்டும் மறைகழண்ட மண்டையர்களாகத்தான் நினைக்க வைக்கின்றது.

இந்துக்கள் பொறுமையின் இலக்கணத்திற்கு உட்பட்டு உள்ளதால் எதை வேண்டுமானாலும் எழுதலாம் - நாம் எங்கிருந்து எழுதுகிறோம் என்று தெரியவாபோகின்றது என்றெண்ணி கன்னாபின்னா என்று எழுதுகின்றார்கள் போலும் .

கண்ணை மறைத்தோ , தன்னை மறைத்தோ எதை செய்தாலும் பூமிக்குள் போட்ட விதை பூமியை துளைத்து வெளி வருவது போல் - 

இன்றில்லாவிட்டாலும்  ஒருநாள் உங்கள் வினைகளுக்கு உண்டான பலனை , இயற்கையே , எங்கு அடித்தால் உங்களுக்கு வலிக்குமோ அங்கு அடி தரும். 
அப்போதுதான்  மதம் என்றால் என்ன , மானுடம் என்றால் என்ன என்று புரியும்.


அன்புடன் உங்கள் 

Wednesday, October 17, 2012

ஆழ்மனத்தின் அற்புதசக்திகள்

திரு.என். கணேசன் அவர்கள் எழுதிய ஆழ்மனத்தின் அற்புத சக்திகள் தொடரை 

கீழ்காணும் 

இணைப்புச் சுட்டி 

யை சொடுக்கி காணுங்கள் , படித்து பயன்பெறுங்கள்.

இந்த தொடரில் மொத்தம் அறுபது அற்புதமான கட்டுரைகள் உள்ளது .

மனித மனதின் அசாதாரணமான சக்தியை படம் பிடித்துக் காட்டும் அனைத்து கட்டுரைகளையும் பொறுமையாக படியுங்கள்.

நமது மனம் பற்றிய அதிசயமான சக்திகளை காணுங்கள் .

நீங்களும் உங்களை மேம்படுத்திக் கொள்ள விரும்புங்கள்.  



அன்புடன் உங்கள் 

Saturday, November 26, 2011

ஜேசுதாஸ் பாடிய 180 பாடல்கள்

நண்பர்களே , மயக்கும் குரல் மன்னன் திரு ஜேசுதாஸ் அவர்களின் 180 பாடல்கள் உங்களுக்காக

ஜேசுதாஸ் பாடல்கள்

Monday, September 26, 2011

காயத்ரி மந்த்ரங்கள்

அன்பானவர்களே , நலமும் வளமும் தரும் அனைத்து தெய்வ , தேவதைகளின் காயத்ரி மந்த்ரங்கள்.



துர்கை
(
ராகுதோஷ நிவர்த்திக்காக)
ஓம் காத்யாயனாய வித்மஹே
கன்யகுமரி தீமஹி
தன்னோ துர்கிஹ் ப்ரசோதயாத்

ஓம் சிம்மத் வஜாய வித்மஹே
சூல ஹஸ்தாய தீமஹி
தன்னோ மாரி ப்ரசோதயாத்

அன்னபூரணி தேவி
(
நித்தியான்ன பிராப்திக்காக)
ஓம் பக்வத்யைஹ் வித்மஹே
மஹேஸ்வர்யைஹ் தீமஹி
தன்னோ அன்னபூர்ண ப்ரசோதயாத்

சிவதூதி
ஓம் சிவதூத்யை ச வித்மஹே
சிவங்கர்யைச தீமஹி
தன்னோ நித்யஹ் ப்ரசோதயாத்

பாலா
ஓம் திருபுரசுந்தரீ வித்மஹே
காமேஸ்வரீ ச தீமஹி
தன்னோ பாலா ப்ரசோதயாத்

அம்ருதேஸ்வரி தேவி
(
ஆயுள் ஆரோக்கியம் பெற)
ஓம் சௌஹ் த்ரிபுரதேவி ச வித்மஹே
சக்தீஸ்வரீ ச தீமஹி
தன்னோ அம்ருத ப்ரசோதயாத்

வாக்பலா
(
பேச்சுபிழை சரியாக)
ஓம் ஐம் திரிபிராதேவீ வித்மஹே
வாக்பவேஸ்வரீ தீமஹி
தன்னோ முக்திஹ் ப்ரசோதயாத்
சர்வமங்கள
(
நல் பயணத்திற்கு)
ஓம் சர்வமங்களை வித்மஹே
மஹாச் சந்த்ரத்மிகயை தீமஹி
தன்னோ நித்ய ப்ரசோதயாத்

கன்னிகா பரமேஸ்வரி
(மாங்கல்ய பிராப்தம் கிடைக்க)
ஓம் பாலாரூபிணி வித்மஹே
பரமேஸ்வரி தீமஹி
தன்னோ கந்யா ப்ரசோதயாத்

ஓம் த்ரிபுராதேவீ வித்மஹே
கந்யாரூபிணீ தீமஹி
தன்னோ கந்யா ப்ரசோதயாத்

காமேச்வரி
(
மங்களம் உண்டாக)
ஓம் க்லீம் த்ரிபுரதேவீ வித்மஹே
காமேச்வர்யை தீமஹி
தன்னோ க்லிண்ணே ப்ரசோதயாத்

ஓம் காமேஸ்வர்யை வித்மஹே
நித்யக்லிந்நாய தீமஹி
தன்னோ நித்யஹ் ப்ரசோதயாத்

காமதேனு
(
கேட்டது கிடைக்க)
ஓம் சுபகாமாயை வித்மஹே
காமதாத்ரை ச தீமஹி
தன்னோ தேனுஹ் ப்ரசோதயாத்

காளிகா தேவி
(
கேட்ட வரம் கிடைக்க)
ஓம் காளிகாயை ச வித்மஹே
ஸ்மசான வாசின்யை தீமஹி
தன்னோ கோரா ப்ரசோதயாத்

வாராஹி
(
நினைத்தது நிறைவேற)
ஓம் வராஹமுகி வித்மஹே
ஆந்த்ராஸனீ தீமஹி
தன்னோ யமுனா ப்ரசோதயாத்

குலசுந்தரி
(
சொத்து, கவுரவம் அடைய)
ஓம் குலசுந்தர்யை வித்மஹே
காமேஸ்வர்யை தீமஹி
தன்னோ நித்யஹ் ப்ரசோதயாத்

சந்தோஷி மாதா
(
திருமண தடை நீங்க)
ஓம் ருபாதேவீ ச வித்மஹே
சக்திரூபிணி தீமஹி
தன்னோ சந்தோஷி ப்ரசோதயாத்

கவுமாரி தேவி
(
சக்தி பெற)
ஓம் சிகித்வஜாயை வித்மஹே
வஜ்ர (சக்தி) ஹஸ்தாயை தீமஹி
தன்னோ கௌமாரீ ப்ரசோதயாத்

கவுரிதேவி
(
தியானம் சித்தி அடைய)
ஓம் சுவபாகாயை வித்மஹே
காம மாளினை தீமஹி
தன்னோ கௌரீஹ் ப்ரசோதயாத்

ஓம் மஹாதேவ்யை ச வித்மஹே
ருத்ரபத்ன்யை ச தீமஹி
தன்னோ கௌரீஹ் ப்ரசோதயாத்

ஓம் கணாம்பிகாய வித்மஹே
மஹாதபாய தீமஹி
தன்னோ கௌரீஹ் ப்ரசோதயாத்

ஓம் சௌபாக்யதாயை வித்மஹே
காம மாலாய தீமஹி
தன்னோ கௌரீஹ் ப்ரசோதயாத்

ஓம் ஸோஹம்ச வித்மஹே
பரமஹம்ஸாய தீமஹி
தன்னோ கௌரீஹ் ப்ரசோதயாத்

கங்காதேவி
(
ஞாபக சக்தி பெற)
ஓம் த்ரிபதகாமினி வித்மஹே
ருத்ரபத்ன்யை ச தீமஹி
தன்னோ கங்கா ப்ரசோதயாத்

சாமுண்டி
ஓம் பிசாசத்வஜாய வித்மஹே
சூலஹஸ்தாய தீமஹி
தன்னோ காளி ப்ரசோதயாத்

ஓம் சாமுண்டேஸ்வரி வித்மஹே
சக்ரதாரிணி தீமஹி
தன்னோ சாமுண்டிஹ் ப்ரசோதயாத்

சித்ரா
(
கலைகளில் தேர்ச்சி பெற)
ஓம் ஸ்ரீசித்ர்யை ச வித்மஹே
மஹாநித்யை ச தீமஹி
தன்னோ நித்ய ப்ர சோதயாத்

சின்னமஸ்தா
(
எதிரிகளை வெல்ல)
ஓம் வைரேசான்யை ச வித்மஹே
சின்னமஸ்தாயை ச தீமஹி
தன்னோ தேவி ப்ரசோதயாத்

சண்டீஸ்வரி
(
நவகிரக தோஷங்கள் விலக)
ஓம் சண்டீஸ்வரி ச வித்மஹே
மஹாதேவீ ச தீமஹி
தன்னோ சண்டீ ப்ரசோதயாத்

ஓம் அப்ஜஹஸ்தாய வித்மஹே
கௌரீஸித்தாய தீமஹி
தன்னோ சண்டீ ப்ரசோதயாத்

ஜெயதுர்கா
(
வெற்றி கிடைக்க)
ஓம் மஹாதேவ்யை ச வித்மஹே
துர்காயை ச தீமஹி
தன்னோ தேவீ ப்ரசோதயாத்

ஓம் நாராண்யை வித்மஹே
துர்காயை ச தீமஹி
தன்னோ கேணீ ப்ரசோதயாத்

ஜானகிதேவி
(
கணவன் மனைவி ஒற்றுமை நிலைக்க)
ஓம் ஜனகனாயை வித்மஹே
ராமபிரியாய தீமஹி
தன்னோ சீதா ப்ரசோதயாத்

ஓம் அயோநிஜாயை வித்மஹே
ராமபத்ன்யை ச தீமஹி
தன்னோ சீதா ப்ரசோதயாத்

ஓம் மஹாதேவ்யை ச வித்மஹே
ராமபத்ன்யை ச தீமஹி
தன்னோ சீதா ப்ரசோதயாத்

ஜ்வாலாமாலினி
(
பகைவரை வெல்ல)
1ஓம் ஜ்வாலாமாலினி வித்மஹே
மஹா ஜ்வாலாயை தீமஹி
தன்னோ நித்ய ப்ரசோதயாத்

ஜேஷ்டலக்ஷ்மி
(
மந்திர சக்தி பெற)
ஓம் ரக்த ஜேஷ்டாயை வித்மஹே
நீலஜேஷ்டாயை தீமஹி
தன்னோ லக்ஷ்மீஹ் ப்ரசோதயாத்

துவரிதா
ஓம் த்வரிதாயை வித்மஹே
மஹாநித்யாய தீமஹி
தன்னோ தேவீ ப்ரசோதயாத்

தாராதேவி
ஓம் தாராயை ச வித்மஹே
மனோக்ரஹாயை தீமஹி
தன்னோ தேவீ ப்ரசோதயாத்

திரிபுரசுந்தரி
ஓம் ஐம் திரிருபுரதேவ்யை வித்மஹே
க்ளீம் காமேஸ்வர்யை தீமஹி
சௌஹ் தன்னோ க்ளின்னே ப்ரசோதயாத்

ஓம் ஹைம் திரிபுரதேவி வித்மஹே
க்ளீம் காமேஸ்வரீ தீமஹி
சௌஹ் தன்னோ க்ளின்வியை ப்ரசோதயாத்

மஹா திரிபுரசுந்தரி
ஓம் ஹைம் திரிபுராதேவி வித்மஹே
சௌஹ் சக்தீஸ்வரி ச தீமஹி
தன்னோ சக்திஹ் ப்ரசோதயாத்

ஓம் வாக்பவேஸ்வரி வித்மஹே
காமேஸ்வரி ச தீமஹி
தன்னோ சக்திஹ் ப்ரசோதயாத்

ஓம் க்ளீம் திரிபுராதேவி வித்மஹே
காமேஸ்வரி ச தீமஹி
தன்னோ க்ளிண்ணெ ப்ரசோதயாத்

தனலட்சுமி
(
செல்வம் பெற)
ஓம் தம்தனதாயை வித்மஹே
ஸ்ரீம் ரதிபிரியாயை தீமஹி
ஹ்ரீம் ஸ்வாஹா சக்தி ப்ரசோதயாத்

பராசக்தி
(
வாக்குவன்மை பெற)
ஓம் தசவனாய வித்மஹே
ஜ்வாமாலாயை ச தீமஹி
தன்னோ பராசக்தி ப்ரசோதயாத்

பிரணவதேவி
ஓம் ஓம்காராய வித்மஹே
பவதாராய தீமஹி
தன்னோ ப்ரணவஹ் ப்ரசோதயாத்



தாரா
ஓம் தனுர்தைர்யை ச வித்மஹே
சர்வ சித்தை ச தீமஹி
தன்னோ தாரா ப்ரசோதயாத்

தூமாவதி
ஓம் தூமாவத்யை ச வித்மஹே
சம்ஹாரின்யை ச தீமஹி
தன்னோ தூம ப்ரசோதயாத்

நீலபதாகை
(
தேர்தலில் மற்றும் பரீட்சையில் வெற்றி பெற)
ஓம் நீலபதாகை வித்மஹே
மஹாநித்யாயை தீமஹி
தன்னோ நித்ய ப்ரசோதயாத்

நீளா
ஓம் மஹாதேவ்யை ச வித்மஹே
விஷ்ணுபத்ன்யை ச தீமஹி
தன்னோ நீளாஹ் ப்ரசோதயாத்

ஓம் விஷ்ணுபத்ன்யை ச வித்மஹே
ஸ்ரீ பூ சகை ச தீமஹி
தன்னோ நீளாஹ் ப்ரசோதயாத்


ஸ்ரீ(மகாலட்சுமி)

ஓம் தேஜோரூப்யை ச வித்மஹே
விஷ்ணுபத்ன்யை ச தீமஹி
தன்னோ ஸ்ரீஹ் ப்ரசோதயாத்

ஸ்ரீதேவி

ஓம் தேவீமனௌஜ ச வித்மஹே
மஹாசக்த்யை தீமஹி
தன்னோ தேவீஹ் ப்ரசோதயாத்

தேவி பிராஹ்மணி

ஓம் தேவீ பிராஹ்மணி வித்மஹே
மஹாசக்த்யை ச தீமஹி
தன்னோ தேவீ ப்ரசோதயாத்

சூலினிதேவி
(தீய சக்திகளிலிருந்து காக்க)
ஓம் ஜ்வாலாமாலினி வித்மஹே
மஹாசூலினி தீமஹி
தன்னோ துர்கா ப்ரசோதயாத்

ஓம் ஜ்வாலாமாலினி வித்மஹே
மஹாசூலினி தீமஹி
தன்னோ துர்கஹ் ப்ரசோதயாத்

சரஸ்வதி
(
கல்வியும், விவேகமும் பெருக)
ஓம் வாக்தேவ்யை ச வித்மஹே
விரிஞ்சிபத்ன்யை ச தீமஹி
தன்னோ வாணீஹ் ப்ரசோதயாத்

ஓம் வாக்தேவ்யை ச வித்மஹே
ஸர்வ ஸித்தீச தீமஹி
தன்னோ வாணீஹ் ப்ரசோதயாத்

ஓம் வாக்தேவ்யை ச வித்மஹே
பிரஹ்மபத்ன்யை ச தீமஹி
தன்னோ வாணீஹ் ப்ரசோதயாத்

 ஓம் யேயே சர்வபிரியவாக் வித்மஹே
ப்ரீம் வாகீஸ்வரீ தீமஹி
தன்னோ சக்திஹ் ப்ரசோதயாத்

ஓம் ஐம் வாக்தேவ்யை ச வித்மஹே
காமராஜாய தீமஹி
தன்னோ தேவீ ப்ரசோதயாத்

ஓம் சரஸ்வத்யை ச வித்மஹே
பிரஹ்ம பத்ன்யை ச தீமஹி
தன்னோ தேவீ ப்ரசோதயாத்

ஓம் வாகீஸ்வர்யை ச வித்மஹே
பிரஹ்ம பத்ன்யை ச தீமஹி
தன்னோ வாணீ ப்ரசோதயாத்

லட்சுமி
(
சகல செல்வங்களையும் அடைய)
ஓம் மஹாலக்ஷ்மை ச வித்மஹே
விஷ்ணுபத்ன்யை ச தீமஹி
தன்னோ லக்ஷ்மீஹ் ப்ரசோதயாத்

ஓம் லக்ஷ்மிர் பூர்புவஹ் லக்ஷ்மி
ஸ்வஹ் காலகம் தீமஹி
தன்னோ மஹாலக்ஷ்மீஹ் ப்ரசோதயாத்

ஓம் மஹாதேவ்யை ச வித்மஹே
விஷ்ணுபந்தாய ச தீமஹி
தன்னோ லக்ஷ்மீஹ் ப்ரசோதயாத்

ஓம் பூ ஸக்யைச வித்மஹே
விஷ்ணுபத்னீ ச தீமஹி
தன்னோ லக்ஷ்மீஹ் ப்ரசோதயாத்
ஓம் அமிர்தவாசினி வித்மஹே
பத்மலோசனீ தீமஹி
தன்னோ லக்ஷ்மீஹ் ப்ரசோதயாத்

சப்தமாத்ருகா தேவி
ஓம் ஹம்சத்வஜாய வித்மஹே
கூர்ச்ச ஹஸ்தாய தீமஹி
தன்னோ பிராஹ்மீ ப்ரசோதயாத்

பகமாளினி
(
சுக பிரசவத்திற்காக)
ஓம் பகமாளிணி வித்மஹே
சர்வ வசங்கர்யை தீமஹி
தன்னோ நித்ய ப்ரசோதயாத்

பகளாதேவி
ஓம் ஜம்பகளாமுகீ வித்மஹே
ஓம் க்ளீம் காந்தேஸ்வரீ தீமஹி
தன்னோ ஸெளஹ் தந்தஹ் ப்ரஹ்லீம் ப்ரசோதயாத்

ஓம் குலகுமாரை வித்மஹே
பீதாம்பராயை தீமஹி
தன்னோ பகளா ப்ரசோதயாத்

பகளாமுகி
ஓம் பகளாமுக்யை ச வித்மஹே
சதம்பின்யை ச தீமஹி
தன்னோ தேவ ப்ரசோதயாத்

ஓம் ப்ரஹ்மாஸ்த்ராய வித்மஹே
மஹாஸ்தம்பிணி தீமஹி
தன்னோ பகளா ப்ரசோதயாத்

ஓம் மஹாதேவ்யை ச வித்மஹே
பகளாமுகி தீமஹி
தன்னோ அஸ்த்ரஹ் ப்ரசோதயாத்

பாரதிதேவி
ஓம் நாகாராயை ச வித்மஹே
மஹா வித்யாயை தீமஹி
தன்னோ பாரதீ ப்ரசோதயாத்

புவனேஸ்வரி தேவி
ஓம் நாராயந்யை வித்மஹே
புவநேஸ்வர்யை தீமஹி
தன்னோ தேவி ப்ரசோதயாத்

பூமா தேவி
(
வீடு, நிலம் வாங்க)
ஓம் தநுர்தராயை ச வித்மஹே
சர்வஸித்தைச தீமஹி
தன்னோ தராஹ் ப்ரசோதயாத்
பைரவி தேவி
ஓம் த்ரிபுராதேவி வித்மஹே
காமேஸ்வரி ச தீமஹி
தன்னோ பைரவீ ப்ரசோதயாத்

ஓம் த்ரிபுராயை வித்மஹே
பைரவைச தீமஹி
தன்னோ தேவி ப்ரசோதயாத்

மகாமாரி
(
அம்மை வியாதி குணமடைய)
ஓம் பிசாசத்வஜாய வித்மஹே
கட்க ஹஸ்தாய தீமஹி
தன்னோ மாரி ப்ரசோதயாத்

மஹா வஜ்ரேஸ்வரி
(
பிரச்சனைகளில் தீர்வு காண)
ஓம் மஹா வஜ்ரேஸ்வராய வித்மஹே
வஜ்ரநித்யாய தீமஹி
தன்னோ நித்ய ப்ரசோதயாத்

மகாசக்தி
(
மந்திர சக்தியில் வல்லமை பெற)
ஓம் தபோமயை வித்மஹே
காமத்ருஷ்ணை ச தீமஹி
தன்னோ மஹாசக்தி ப்ரசோதயாத்

மஹிஷாஸுரமர்தினி
(
பகைவர்கள் சரணாகதி அடைய)
ஓம் மஹிஷமர்தின்யை வித்மஹே
துர்காதேவ்யை ச தீமஹி
தன்னோ தேவீ ப்ரசோதயாத்

மகேஸ்வரி
(
சர்ப தோஷம் நீங்க)
ஓம் வ்ருஷத்வஜாய வித்மஹே
மிருக ஹஸ்தாய தீமஹி
தன்னோ ரௌத்ரீ ப்ரசோதயாத்

மாதங்கி
(
அஷ்ட ஐஸ்வர்யங்களை அடைய)
ஓம் மாதங்க்யை வித்மஹே
உச்சிஷ்ட சாண்டால்யை தீமஹி
தன்னோ தேவி ப்ரசோதயாத்

மாத்ரு (கா)
ஓம் சர்வசக்திஸ்ச வித்மஹே
ஸப்தரூப ச தீமஹி
தன்னோ தேவீ ப்ரசோதயாத்


மீனாக்ஷி
(
சகல சவுபாக்கயங்களை பெற)
ஓம் உன்னித்ரியை ச வித்மஹே
சுந்தபப்ரியாயை ச தீமஹி
தன்னோ மீனாக்ஷீ ப்ரசோதயாத்

முக்தீஸ்வரி
ஓம் த்ரிபுரதேவி வித்மஹே
முக்தீஸ்வரி ச தீமஹி
தன்னோ முக்திஹ் ப்ரசோதயாத்

யமுனா
ஓம் யமுனா தேவ்யை ச வித்மஹே
தீர்தவாசினி தீமஹி
தன்னோ யமுனா ப்ரசோதயாத்

ராதா
(
அனுகிரகஹம் பெற)
ஓம் விருஷபானுஜாயை வித்மஹே
கிருஷ்ணப்ரியாயை தீமஹி
தன்னோ ராதிகா ப்ரசோதயாத்

ஓம் ஸர்வ ஸம்மோஹின்யை வித்மஹே
விஸ்வஜனன்யை தீமஹி
தன்னோ சக்தி ப்ரசோதயாத்

வாணி
(
கலைகளில் தேர்ச்சி பெற)
ஓம் நாதமயை ச வித்மஹே
வீணாதராயை தீமஹி
தன்னோ வாணீ ப்ரசோதயாத்

வாசவி
ஓம் வாசவ்யை ச வித்மஹே
குசுமபுத்ர்யை ச தீமஹி
தன்னோ கண்யகா ப்ரசோதயாத்

விஜயா
(
வழக்குகளில் வெற்றி பெற)
ஓம் விஜயதேவ்யை வித்மஹே
மஹாநித்யாய தீமஹி
தன்னோ நித்ய ப்ரசோதயாத்

வைஷ்ணவி தேவி
(
திருமண தடை நீங்க)
ஓம் தார்க்ஷ்யத்வஜாய வித்மஹே
சக்ர ஹஸ்தாய தீமஹி
தன்னோ வைஷ்ணவீ ப்ரசோதயாத்

ஓம் சக்ரதாரிணீ வித்மஹே
வைஷ்ணவீதேவீ தீமஹி
தன்னோ சக்திஹ் ப்ரசோதயாத்
சியாமளா
(
சகல சவுபாக்யங்களும் கிடைக்க)
ஓம் ஐம் சுகப்பிரியாயை வித்மஹே
க்லீம் காமேஸ்வரி தீமஹி
தன்னோ சியாமா ப்ரசோதயாத்

ஓம் மாதங்கேஸ்வரி வித்மஹே
காமேஸ்வரி ச தீமஹி
தன்னோ க்லின்னே ப்ரசோதயாத்

நவ துர்கா
துர்கா தேவி
ஓம் காத்யாயனாய வித்மஹே
கன்யகுமரி தீமஹி
தன்னோ துர்கிஹ் ப்ரசோதயாத்

வனதுர்கா
ஓம் உத்திஷ்ட புருஷ்யை வித்மஹே
மகாசக்த்யை தீமஹி
தன்னோ வனதுர்கா ப்ரசோதயாத்

ஆஸூரி துர்கா
ஓம் மகா காம்பீர்யை வித்மஹே
சத்ரு பக்ஷிண்யை தீமஹி
தன்னோ ஆஸூரி துர்கா ப்ரசோதயாத்

திருஷ்டி துர்கா
ஓம் ஹ்ரீம் தும் திருஷ்டிநாசின்யை வித்மஹே
தும் ஹ்ரீம் ஓம் துஷ்ட நாசின்யை தீமஹி
தன்னோ திருஷ்டி துர்கா ப்ரசோதயாத் 
    
ஜாதவேதா துர்கா
ஓம் ஜாதவேதாயை வித்மஹே
வந்தி ரூபாயை தீமஹி
தன்னோ ஜாதவேதோ ப்ரசோதயாத்

வனதுர்கா
ஓம் ஹ்ரீம் தும் லவந்தராயை வித்மஹே
தும் ஹ்ரீம் ஓம் பயநாசிந்யை தீமஹி
தன்னோ வந துர்கா ப்ரசோதயாத்

சந்தான துர்கா
ஓம் காத்யாயண்யை வித்மஹே
கர்பரக்ஷிண்யை தீமஹி
தன்னோ சந்தான துர்கா ப்ரசோதயாத்

சபரி துர்கா
ஓம் காத்யாயண்யை வித்மஹே
கால ராத்ர்யை தீமஹி
தன்னோ சபரி துர்கா ப்ரசோதயாத்


சாந்தி துர்கா
ஓம் மஹாதேவ்யை ச வித்மஹே
ஜயவரதாயை தீமஹி
தன்னோ சாந்தி துர்கா ப்ரசோதயாத்

ஜலம்
(
ஜலகண்டத்தை போக்கிட)
ஓம் ஜலபிம்பாய வித்மஹே
நீலபுருஷாய தீமஹி
தன்னோ அம்பு ப்ரசோதயாத்

ஓம் ஜீவதேவாய வித்மஹே
கந்தர் பகளாய தீமஹி
தன்னோ ஜலம் ப்ரசோதயாத்

ஓம் ஜலாதிபாய வித்மஹே
தீர்த்ராஜாய தீமஹி
தன்னோ பாசின் ப்ரசோதயாத்

நைருதி
ஓம் நிசாசராய வித்மஹே
கட்க ஹஸ்தய தீமஹி
தன்னோ நைருதிஹ் ப்ரசோதயாத்

ஓம் கடகாயுதாய வித்மஹே
கோணஸ்திதாய தீமஹி
தன்னோ நிருதிஹ் ப்ரசோதயாத்

ஆதித்யன் (சூரியன்)
(
கண்பார்வை மற்றும் புத்தி கூர்மை பெற)
ஓம் அஸ்வத்வஜாய வித்மஹே
பாசஹஸ்தாய தீமஹி
தன்னோ சூர்யஹ் ப்ரசோதயாத்

ஓம் பாஸ்கராய வித்மஹே
திவாகராய தீமஹி
தன்னோ சூர்யஹ் ப்ரசோதயாத்

ஓம் பாஸ்கராய வித்மஹே
மஹா ஜ்யோதிஸ்சக்ராய தீமஹி
தன்னோ சூர்யஹ் ப்ரசோதயாத்

ஓம் பாஸ்கராய வித்மஹே
மஹாத்யுதிகராய தீமஹி
தன்னோ ஆதித்யஹ் ப்ரசோதயாத்

ஓம் பாஸ்கராய வித்மஹே
மஹாதேஜாய தீமஹி
தன்னோ சூர்யஹ் ப்ரசோதயாத்

ஓம் ஆதித்யாய வித்மஹே
மார்தாண்டாய தீமஹி
தன்னோ சூர்யஹ் ப்ரசோதயாத்

ஓம் லீலாலாய வித்மஹே
மஹா த்யுதிகராய தீமஹி
தன்னோ ஆதித்யாய ப்ரசோதயாத்

ஓம் பிரபாகராய வித்மஹே
மஹா த்யுதிகராய தீமஹி
தன்னோ ஆதித்யாய ப்ரசோதயாத்

சந்திரன்
(
ஞானம் வளர)
ஓம் பத்மத்வஜாய வித்மஹே
ஹேமரூபாய தீமஹி
தன்னோ சோமஹ் ப்ரசோதயாத்

ஓம் க்ஷீரபுத்ராய வித்மஹே
அமிர்தாய தீமஹி
தன்னோ சந்திரஹ் ப்ரசோதயாத்

ஓம் அமிர்தேசாய வித்மஹே
ராத்ரிஞ்சராய தீமஹி
தன்னோ சந்திரஹ் ப்ரசோதயாத்

ஓம் சுதாகராய வித்மஹே
மஹாஓஷதீஸாய தீமஹி
தன்னோ சோமஹ் ப்ரசோதயாத்

ஓம் ஆத்ரேயாய வித்மஹே
தண்டஹஸ்தாய தீமஹி
தன்னோ சந்திரஹ் ப்ரசோதயாத்

ஓம் சங்கஹஸ்தாய வித்மஹே
நிதீச்வராய தீமஹி
தன்னோ ஹோமஹ் ப்ரசோதயாத்

அங்காரகன்
(
செவ்வாய் தோஷம் நிவர்த்தி அடைய)
ஓம் வீரத்வஜாய வித்மஹே
விக்ன ஹஸ்தாய தீமஹி
தன்னோ பௌமஹ் ப்ரசோதயாத்

ஓம் அங்காரகாய வித்மஹே
சக்திஹஸ்தாய தீமஹி
தன்னோ பௌம்ஹ் ப்ரசோதயாத்

ஓம் அங்காரகாய வித்மஹே
சக்திஹஸ்தாய தீமஹி
தன்னோ குஜஹ் ப்ரசோதயாத்
ஓம் லோஹிதாங்காய வித்மஹே
பூமிபுத்ராய தீமஹி
தன்னோ குஜஹ் ப்ரசோதயாத்

புதன்
(
படிப்பும், அறிவும் பெற)
ஓம் கஜத்வஜாய வித்மஹே
சுகஹஸ்தாய தீமஹி
தன்னோ புதஹ் ப்ரசோதயாத்

ஓம் சோமபுத்ராய வித்மஹே
மஹாப்ரஜ்ஞாய தீமஹி
தன்னோ புதஹ் ப்ரசோதயாத்

ஓம் சந்திரசுதாய வித்மஹே
சௌம்யக்ரஹாய தீமஹி
தன்னோ புதஹ் ப்ரசோதயாத்

ஓம் ஆத்ரேயாய வித்மஹே
சோமபுத்ராய தீமஹி
தன்னோ புதஹ் ப்ரசோதயாத்

குரு
(
நல்ல மனைவி அமைய)
ஓம் குருதேவாய வித்மஹே
பரப்ரஹ்மாய தீமஹி
தன்னோ குருஹ் ப்ரசோதயாத்

ஓம் சுராசார்யாய வித்மஹே
தேவபூஜ்யாய தீமஹி
தன்னோ குருஹ் ப்ரசோதயாத்

ஓம் குருதேவாய வித்மஹே
பரம் குருப்யோம் தீமஹி
தன்னோ குருஹ் ப்ரசோதயாத்

ஓம் சுராசார்யாய வித்மஹே
மஹாவித்யாய தீமஹி
தன்னோ கருஹ் ப்ரசோதயாத்

ஓம் அங்கிரஸாய வித்மஹே
சுராசார்யாய தீமஹி
தன்னோ ஜீவஹ் ப்ரசோதயாத்

சுக்கிரன்
(
தடைபட்ட திருமணம் நடக்க)
ஓம் அஸ்வத்வஜாய வித்மஹே
தனு ஹஸ்தாய தீமஹி
தன்னோ சுக்ரஹ் ப்ரசோதயாத்

ஓம் தைத்யாசார்யாய வித்மஹே
ஸ்வேதவர்ணாய தீமஹி
தன்னோ சுக்ரஹ் ப்ரசோதயாத்

ஓம் பார்கவாய வித்மஹே
தைத்யாசார்யாய தீமஹி
தன்னோ சுக்ரஹ் ப்ரசோதயாத்

ஓம் தைத்யபூஜ்யாய வித்மஹே
ப்ருகுப் புத்ராய தீமஹி
தன்னோ சுக்ரஹ் ப்ரசோதயாத்

சனி பகவான்
(
வீடு, மனை வாங்க)
ஓம் காகத்வஜாய வித்மஹே
கட்கஹஸ்தாய தீமஹி
தன்னோ மந்தஹ் ப்ரசோதயாத்

ஓம் ரவிசுதாய வித்மஹே
மந்தக்ரஹாய தீமஹி
தன்னோ சனிஹ் ப்ரசோதயாத்

ஓம் காகத்வஜாய வித்மஹே
கட்கஹஸ்தாய தீமஹி
தன்னோ சனிஹ் ப்ரசோதயாத்

ஓம் வைவஸ்வதாய வித்மஹே
பங்குபாதாய தீமஹி
தன்னோ மந்தஹ் ப்ரசோதயாத்

ஓம் சனீஸ்வராய வித்மஹே
சாயாபுத்ராய தீமஹி
தன்னோ சனிஹ் ப்ரசோதயாத்

ஓம் சதுர்புஜாய வித்மஹே
தண்டஹஸ்தாய தீமஹி
தன்னோ மந்தஹ் ப்ரசோதயாத்

ராகு
(
நாகதோஷத்திலிருந்து நிவிர்த்தி அடைய)
ஓம் சிரரூபாய வித்மஹே
அமிருதேசாய தீமஹி
தன்னோ ராஹுஹ் ப்ரசோதயாத்

ஓம் நகத்வஜாய வித்மஹே
பத்மஹஸ்தாய தீமஹி
தன்னோ ராஹுஹ் ப்ரசோதயாத்

ஓம் நீலவர்ணாய வித்மஹே
சிம்ஹிகேசாய தீமஹி
தன்னோ ராஹுஹ் ப்ரசோதயாத்
ஓம் பைடினசாய வித்மஹே
சர்மதராய தீமஹி
தன்னோ ராஹுஹ் ப்ரசோதயாத்

கேது
(
துஷ்ட சக்திகளை விரட்டிட)
ஓம் அம்வத்வஜாய வித்மஹே
சூலஹஸ்தாய தீமஹி
தன்னோ கேது ப்ரசோதயாத்

ஓம் கேதுக்ரஹாய வித்மஹே
மஹாவக்த்ராய தீமஹி
தன்னோ கேது ப்ரசோதயாத்

ஓம் விக்ருத்தானநாய வித்மஹே
ஜேமிநிஜாய தீமஹி
தன்னோ கேதுஹ் ப்ரசோதயாத்

ஓம் தமோக்ரஹாய வித்மஹே
த்வஜஸ்திதாய தீமஹி
தன்னோ கேதுஹ் ப்ரசோதயாத்

ஓம் அஸ்வத்வஜாய வித்மஹே
சூலஹஸ்தாய தீமஹி
தன்னோ கேதுஹ் ப்ரசோதயாத்

இந்திரன்
(
சகல இன்பங்கள் பெற)
ஓம் தத்புரஷாய வித்மஹே
சஹஸ்ராக்ஷõய தீமஹி
தன்னோ இந்திரஹ ப்ரசோதயாத்

ஓம் தேவராஜாய வித்மஹே
வஜ்ரஹஸ்தாய தீமஹி
தன்னோச் சகரஹ் ப்ரசோதயாத்

ஓம் தேவராஜாய வித்மஹே
வஜ்ரஹஸ்தாய தீமஹி
தன்னோ இந்த்ரஹ் ப்ரசோதயாத்

இந்திராணி
(
அழகு பெற)
ஓம் கஜத்வஜாயை வித்மஹே
வஜ்ரஹஸ்தாய தீமஹி
தன்னோ இந்த்ராணி ப்ரசோதயாத்

குபேரன்
(
செல்வங்கள் நிலையாக இருக்க)
ஓம் யக்ஷராஜாய வித்மஹே
வைஸ்ரவணாய தீமஹி
தன்னோ குபேர ப்ரசோதயாத்
எமன்
(
துர் மரணம் நிகழாமல் இருக்க)
ஓம் வைவஸ்வதாய வித்மஹே
தண்டஹ்ஸ்தாய தீமஹி
தன்னோ எமஹ் ப்ரசோதயாத்

ஓம் காலரூபாய வித்மஹே
தண்டதராய தீமஹி
தன்னோ எமஹ் ப்ரசோதயாத்

அனந்தன்
(
நாக) ராகு தோசம் நீங்க)
ஓம் சர்பராஜாய வித்மஹே
நாகராஜாய தீமஹி
தன்னோ னந்தஹ் ப்ரசோதயாத்

ஓம் அனந்ததேசாய வித்மஹே
மஹாபோகாய தீமஹி
தன்னோ னந்தஹ் ப்ரசோதயாத்

ஆதிசேஷன்
(
மரணபயத்தை போக்கிட)
ஓம் சஹஸ்ர சீர்ஷாய வித்மஹே
விஷ்ணு தல்பாய தீமஹி
தன்னோ சேஷஹ் ப்ரசோதயாத்

ஓம் சர்பராஜாய வித்மஹே
ப்தம ஹஸ்தாய தீமஹி
தன்னோ வாசுகி ப்ரசோதயாத்

நாகர்
(
ஸர்ப்ப தோஷம் நீங்க)
ஓம் நாகராஜாய வித்மஹே
சக்ஷúஸ்ஸ்ரவணாய தீமஹி
தன்னோ சர்பஹ் ப்ரசோதயாத்

கருப்பண சுவாமி
(
பாதுகாப்பு கிடைக்க)
ஓம் அலிதாங்காய வித்மஹே
மஹாசாஸ்த பரிவாராய தீமஹி
தன்னோ கருப்பஸ்வாமி ப்ரசோதயாத்

கஜ (ஐராவத)
ஓம் ச்வேதவர்ணாய வித்மஹே
வக்ரதுண்டாய தீமஹி
தன்னோ கஜஹ் ப்ரசோதயாத்

கருடர்
(
மரணபயத்தை போக்கிட)
ஓம் தத்புருஷாய வித்மஹே
சுவர்ணபக்ஷõ  தீமஹி
தன்னோ கருடஹ் ப்ரசோதயாத்

ஓம் பக்ஷிராஜாய வித்மஹே
சுவர்ண பக்ஷõய தீமஹி
தன்னோ கருடஹ் ப்ரசோதயாத்

ஓம் தக்ஷபத்ராய வித்மஹே
தனாயுபுத்ராய தீமஹி
தன்னோ கருடஹ் ப்ரசோதயாத்

சக்கரத்தாழ்வார்
(
எதிரிகளை வெல்ல)
ஓம் சுதர்ஸனாய வித்மஹே
ஜ்வாலா சகராய தீமஹி
தன்னோ சக்ரஹ் ப்ரசோதயாத்

ஓம் சுதர்சனாய வித்மஹே
மஹாஜ்வாலாய தீமஹி
தன்னோ சக்ரஹ் ப்ரசோதயாத்

ஓம் சுதர்சனாய வித்மஹே
ஹேதிராஜாய தீமஹி
தன்னோ சக்ரஹ் ப்ரசோதயாத்

ஓம் சுதர்சனாய வித்மஹே
மஹாமந்த்ராய தீமஹி
தன்னோ சக்ரஹ் ப்ரசோதயாத்

ஓம் சுதர்சனாய வித்மஹே
சக்ரராஜாய தீமஹி
தன்னோ சக்ரஹ் ப்ரசோதயாத்

சண்டேசன்
(
உடல் நலத்துடன் ஆயுளும் பெருக)
ஓம் சண்ட சண்டாய வித்மஹே
மஹா சண்டாய தீமஹி
தன்னோ சண்டஹ் ப்ரசோதயாத்

ஓம் சண்ட சண்டாய வித்மஹே
சண்டேஸ்வராய தீமஹி
தன்னோ சண்டஹ் ப்ரசோதயாத்

ஓம் த்வாரஸ்திதாய வித்மஹே
சிவபக்தாய தீமஹி
தன்னோ சண்டஹ் ப்ரசோதயாத்

சண்டேஸ்வரர்
(
வஸ்திரங்கள் கிடைக்க)
ஓம் சண்டீஸ்வராய வித்மஹே
சிவபக்தாய தீமஹி
தன்னோ சண்டஹ் ப்ரசோதயாத்
ஓம் டங்கஹஸ்தாய வித்மஹே
சிவசித்யாய தீமஹி
தன்னோ சண்டஹ் ப்ரசோதயாத்

ஜுவரஹ்
ஓம் பச்மாயுதாய வித்மஹே
சூலஹஸ்தாய தீமஹி
தன்னோ ஜ்வரஹ் ப்ரசோதயாத்

ஓம் பச்மாயுதாய வித்மஹே
ஏகதம்ஷ்ட்ராய தீமஹி
தன்னோ ஜ்வரஹ் ப்ரசோதயாத்

ஓம் பஸ்மாயுதாய வித்மஹே
ரக்தநேத்ராய தீமஹி
தன்னோ ஜ்வரஹ் ப்ரசோதயாத்

திரிசூலம்
ஓம் அஸ்த்ரராஜாய வித்மஹே
தீக்ஷ்ணசுருங்காய தீமஹி
தன்னோ சூலஹ் ப்ரசோதயாத்

துளசி
(
மனத்தூய்மை பெற)
ஓம் துளசீயாய வித்மஹே
திருபுராரியாய தீமஹி
தன்னோ துளசி ப்ரசோதயாத்

ஓம் ஸ்ரீ திரிபுராய வித்மஹே
துளசீ பத்ராய தீமஹி
தன்னோ துளசீ ப்ரசோதயாத்

தத்தாத்ரேயர்
(
மும்மூர்த்திகளின் அருள் கிடைக்க)
ஓம் திகம்பராய வித்மஹே
யோகாரூடாய தீமஹி
தன்னோ தத்தஹ் ப்ரசோதயாத்

ஓம் தத்தாத்ரேயாய வித்மஹே
திகம்பராய தீமஹி
தன்னோ தத்தஹ் ப்ரசோதயாத்

ஓம் தத்தாத்ரேயாய வித்மஹே
அத்ரிபுத்ராய தீமஹி
தன்னோ தத்தஹ் ப்ரசோதயாத்

ஓம் திகம்பராய வித்மஹே
அவதூதாய தீமஹி
தன்னோ தத்தஹ் ப்ரசோதயாத்


தன்வந்திரி
(
சகல நோய்களும் குணமடைய)
ஓம் ஆதிவைத்யாய வித்மஹே
ஆரோக்ய அநுக்ரஹாய தீமஹி
தன்னோ தன்வந்தரீ ப்ரசோதயாத்

ஓம் தன்வந்தராய வித்மஹே
அமிர்த கலச ஹஸ்தாய தீமஹி
தன்னோ விஷ்ணுஹ் ப்ரசோதயாத்

ஓம் தன்வந்தராய வித்மஹே
சுதா ஹஸ்தாய தீமஹி
தன்னோ விஷ்ணுஹ் ப்ரசோதயாத்

நந்தீஸ்வரர்
(
சிவபெருமான் அருள் கிடைக்க)
ஓம் தத்புருஷாய வித்மஹே
சக்ரதுண்டாய தீமஹி
தன்னோ நந்திஹ் ப்ரசோதயாத்

ஓம் வேத்ர ஹஸ்தாய வித்மஹே
டங்க ஹஸ்தாய தீமஹி
தன்னோ நந்தீ ப்ரசோதயாத்

பரமஹம்சர்
(
தீட்சை அடைய)
ஓம் ஹம்ஸ ஹம்ஸாய வித்மஹே
பரமஹம்ஸாய தீமஹி
தன்னோ ஹம்ஸஹ் ப்ரசோதயாத்

ஓம் பரமஹம்ஸாய வித்மஹே
மஹாஹம்ஸாய தீமஹி
தன்னோ ஹம்ஸஹ் ப்ரசோதயாத்

ஓம் மஹாதேவ்யை வித்மஹே
மஹாதத்வாய தீமஹி
தன்னோ ஹம்ஸஹ் ப்ரசோதயாத்

ஓம் ஹம்ஸோ ஹம்ஸஹ் வித்மஹே
சச்சிதானந்த சுவரூபி தீமஹி
தன்னோ ஹம்ஸஹ் ப்ரசோதயாத்

ஓம் ஹம்ஸ ஹம்ஸாய வித்மஹே
சோஹம் ஹம்ஸாய தீமஹி
தன்னோ ஹம்ஸஹ் ப்ரசோதயாத்

மன்மதன்
(
நல்ல கணவன் அமைய)
ஓம் காமதேவாய வித்மஹே
புஷ்ப பாணாய தீமஹி
தன்னோ நங்கஹ் ப்ரசோதயாத்
ஓம் மன்மதேசாய வித்மஹே
காமதேவாய தீமஹி
தன்னோ நங்கஹ் ப்ரசோதயாத்

மயூர
ஓம் பக்ஷிராஜாய வித்மஹே
சுக்லபாதாய தீமஹி
தன்னோ சிகிஹ் ப்ரசோதயாத்

யந்திரம்
(
யந்திர பூஜையில் சித்தி பெற)
ஓம் யந்த்ரராஜாய வித்மஹே
மஹா யந்த்ராய தீமஹி
தன்னோ யந்த்ரஹ் ப்ரசோதயாத்

லட்சுமணர்
(
சகோதர்களுக்கிடையே ஒற்றுமை நிலவ)
ஓம் தஸரதாய வித்மஹே
அலவேலாய தீமஹி
தன்னோ லக்ஷ்மணஹ் ப்ரசோதயாத்

ஓம் ராமாநுஜாய வித்மஹே
ஊர்மிளா நாதாய வித்மஹே
தன்னோ லக்ஷ்மணஹ் ப்ரசோதயாத்

ஓம் ராமாநுஜாய வித்மஹே
தஸரதாய தீமஹி
தன்னோ சேஷஹ் ப்ரசோதயாத்

வாஸ்து
(
வாஸ்து தோஷத்திலிருந்து நிவர்த்தி அடைய)
ஓம் தத்புருஷாய வித்மஹே
யோகமூர்த்யாய தீமஹி
தன்னோ வாஸ்துமூர்தி ப்ரசோதயாத்

ஓம் வாஸ்துநாதாய வித்மஹே
சதுர்புஜாய தீமஹி
தன்னோ வாஸ்துதேவ ப்ரசோதயாத்

வியாக்ரபாதர்
(
குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவ)
ஓம் ஆனந்த சொரூபாய வித்மஹே
ஈஸ்வர சிஷ்யாய தீமஹி
தன்னோ வ்யாகரபாத ப்ரசோதயாத்

விஷ்வக்ஸேனர்
(
வியாபாரம் வளர்ச்சி அடைய)
ஓம் விஷ்வக்ஸேனாய வித்மஹே
வேத்ரஹ்தாய தீமஹி
தன்னோ விஷ்வக்ஸேனாய ப்ரசோதயாத்



ஓம் சேனாநாதாய வித்மஹே
விஷ்வக்ஸேனாய தீமஹி
தன்னோ சாந்தஹ் ப்ரசோதயாத்

வீரபத்திரர்
(
தைரியம் கிடைக்க)
ஓம் காலவர்ணாய வித்மஹே
மஹாகோபாய தீமஹி
தன்னோ பத்ரஹ் ப்ரசோதயாத்

ஓம் சண்டகோபாய வித்மஹே
வீரபத்ராய தீமஹி
தன்னோ பத்ரஹ் ப்ரசோதயாத்

ஓம் ஈசபுத்ராய வித்மஹே
மஹா தபாய தீமஹி
தன்னோ பத்ரஹ் ப்ரசோதயாத்

ரிஷபம்
(
சகல தோஷங்கள் விலக)
ஓம் திக்ஷ்ண ஸ்ருங்காய வித்மஹே
வேதபாதாய தீமஹி
தன்னோ ரிஷபஹ் ப்ரசோதயாத்

ஓம் தத்புருஷாய வித்மஹே
வேதபாதாய தீமஹி
தன்னோ ரிஷபஹ் ப்ரசோதயாத்

வேல்
(
பயம் தீர)
ஓம் ஜ்வல-ஜ்வாலாய வித்மஹே
கோடிசூர்யப்ரகாசாய தீமஹி
தன்னோச் சக்திஹ் ப்ரசோதயாத்

வைகானஸ முனி
(
விஷ்ணுவின் அருள் கிடைக்க)
ஓம் வைகானஸாய வித்மஹே
விஷ்ணுஜாதாய தீமஹி
தன்னோ விகநஸஹ் ப்ரசோதயாத்

சரபேஸ்வரர்
(
விரோதிகளை தோற்கடிக்க)
ஓம் சாலுவேசாய வித்மஹே
பக்ஷிராஜாய தீமஹி
தன்னோ சரபஹ் ப்ரசோதயாத்

சார்ஜா
ஓம் முஷ்டிஹஸ்தாய வித்மஹே
மஹாசாராய தீமஹி
தன்னோ சார்ஜஹ் ப்ரசோதயாத்


சிகரம்
ஓம் சீர்ஷருபாய வித்மஹே
சிகரேசாய தீமஹி
தன்னோ தூபஹ் ப்ரசோதயாத்

சங்கு
(
மகாலட்சுமி கடாஷம் கிடைக்க)
ஓம் பாஞ்சஜன்யாய வித்மஹே
பவமானாய தீமஹி
தன்னோ சங்கஹ் ப்ரசோதயாத்

ஓம் வார்திஜதாய வித்மஹே
மஹாசங்காய தீமஹி
தன்னோ சங்கஹ் ப்ரசோதயாத்

ஓம் பாஞ்சஜன்யாய வித்மஹே
பவனராஜாய தீமஹி
தன்னோ சங்கஹ் ப்ரசோதயாத்

சாய்பாபா
(
மன சாந்தி பெற)
ஓம் சாயிராமாய வித்மஹே
ஆத்மாராமாய தீமஹி
தன்னோ பாபா ப்ரசோதயாத்

ஓம் ஷிர்டீவாசாய வித்மஹே
சட்சிதானந்தாய தீமஹி
தன்னோ சாயி ப்ரசோதயாத்

ஓம் ஞானரூபாய வித்மஹே
அவதூதாய தீமஹி
தன்னோசாயீ ப்ரசோதயாத்

அனுமான்
(
புத்தி, பலம், தைரியம் பெருக)
ஓம் ஆஞ்சநேயாய வித்மஹே
வாயுபுத்ராய தீமஹி
தன்னோ ஹனுமன் ப்ரசோதயாத்

ஓம் ஆஞ்சநேயாய வித்மஹே
ராமதூதாய தீமஹி
தன்னோ கபிஹி ப்ரசோதயாத்

ஓம் ஆஞ்சநேயாய வித்மஹே
மஹாபாலாய தீமஹி
தன்னோ கபிஹி ப்ரசோதயாத்

ஓம் பவநாத்மஜாய வித்மஹே
ராமபக்தாய தீமஹி
தன்னோ கபிஹி ப்ரசோதயாத்


ஹிரண்யகர்பர்
ஓம் வேதாத்மாநாய வித்மஹே
ஹிரண்யகர்பாய தீமஹி
தன்னோ பிரம்மஹ் ப்ரசோதயாத்

க்ஷேத்ரபாலர்
ஓம் ஸ்வானத்வஜாய வித்மஹே
சூலஹஸ்தாய தீமஹி
தன்னோ க்ஷேத்ரஹ் ப்ரசோதயாத்

ஓம் க்ஷேத்ரபாலாய வித்மஹே
க்ஷேத்ரஸ்திதாய தீமஹி
தன்னோ க்ஷேத்ரஹ் ப்ரசோதயாத்

சண்டேச்வர காயத்ரி
(
கடன் தொல்லை நீங்க)
ஓம் டங்க்க ஹஸ்தாய வித்மஹே
சிவசித்தாய தீமஹி
தன்னோ சண்ட ப்ரசோதயாத்


இன்னும் வரும் 

உங்கள் 



Related Posts Plugin for WordPress, Blogger...