என்னை தொடர்ந்து

வாருங்கள், நண்பரே வணக்கம். தங்கள் வருகையை பதிவு செய்யுங்களேன் !அன்புடன் கருணாகரன்6,இடைப்பாடி. அன்பர்களே ! முழுக்க முழுக்க தமிழில் திருக்கணித முறையில் ஜாதகம் கணிக்க வேண்டுமா? உங்கள் பெயர், பெற்றோர் பெயர், பிறந்த தேதி, மாதம் வருடம், பிறந்த இடம் போன்ற விபரங்களை தாருங்கள், உங்கள் ஜாதகம் கூரியர் மூலமாக உங்களுக்கு அனுப்பி வைக்கப்படும்.( நள்ளிரவில் இரவு 12.00 மணிக்கு மேல் காலை 7.00 மணிக்குள் பிறந்திருந்தால் விடிந்தால் என்ன கிழமை என குறிப்பிடவும்.K.செந்தில்குமார்,கணேஷ் கம்ப்யூட்டர்ஸ்,34,கடைவீதி, இடைப்பாடி,சேலம் மாவட்டம்-637101.

Monday, February 24, 2020

Tuesday, February 11, 2020

கான்பதற்கரிய தக்ஷிணாமூர்த்தி


ஓம் நமசிவய

காண்பதற்கரிய தட்சிணாமூர்த்தி :

வழக்கமாக 
சனகர்,
சனாதனர்,
சனந்தனர்,
சனத்குமாரர் என
நான்கு சீடர்களுடன்தான் தெட்சிணாமூர்த்தி காட்சி தருவார்.
ஆனால் மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகிலுள்ள
திடியன் கைலாசநாதர் கோயிலில் இவர் 14 சீடர்களுடன் காட்சி தருகிறார். சிவனின் குரு வடிவமான தெட்சிணாமூர்த்தியிடம்
ஆங்கீரசர், அத்திரி, காஷ்யபர், பிருகு, கவுதமர், பரத்வாஜர், விஸ்வாமித்திரர், புலஸ்தியர், மரீசி, ஜமதக்னி, வசிஷ்டர், பார்கவர், மார்க்கண்டேயர், நாரதர்
ஆகியோர் உபதேசம் பெற்றனர்.
இவர்கள் பதினான்கு பேரும் அவரிடம் உபதேசம் பெற்ற கோலத்தில் உள்ளனர்.
இத்தகைய அமைப்பில் தெட்சிணாமூர்த்தியின் அமைப்பை காண்பது மிகவும் அரிது.
மலையடிவாரத்தில் அமைந்த இக்கோயிலில், தெட்சிணாமூர்த்தி நந்தி மீது அமர்ந்திருப்பது மற்றொரு சிறப்பு. இவரிடம் வேண்டிக்கொள்ள கல்வி, கலைகளில் சிறப்பிடம் பெறலாம் என்பது நம்பிக்கை.
இக்கோயிலுக்கு அருகிலேயே ருக்மணி, சத்யபாமாவுடன் கிருஷ்ணர் கோயிலும்,
மலைக்கு மேலே தங்கமலை ராமர் கோயிலும் உள்ளது.
ஒருமுறை சென்று வாருங்களேன்

ஓம் நமசிவய

அன்பால் வீழ்ந்த விலங்கினம் நாய்


*ஓம் நமசிவய*

*அன்பால் வீழ்வது மனிதன் மட்டுமல்ல*

*அன்பால் வீழ்ந்த மற்றொரு விலங்கினம் நாய்...!*

ஏன் தெரு நாய்கள்மட்டும் எங்கும் உள்ளது...?

இந்த உலகில் உள்ள அனைத்து விலங்கினங்களும் தனக்கான உணவைத் தானே தேடிக் கொள்ளும் அல்லது வேட்டையாடி உண்ணும்.

ஆடு,மாடு உள்ளிட்ட விலங்குகள் மேய்ந்து கொள்ள புற்கள், இலை தழைகள் உள்ளன.
ஆனால் இந்த நாய்கள் மட்டும் மனிதன் கொடுத்தால் தான் உணவு உண்டு உயிர் வாழ முடியும் என்ற நிலை இருக்கிறது ஏன்...?

உங்கள் வீட்டில் மணக்க மணக்க சமையல் தயாராகிக் கொண்டிருக்கும் போது உங்கள் வீட்டையே ஏக்கத்துடன் சுற்றிச் சுற்றி ஏன் வருகிறது???

வீட்டிற்குள் இருந்து யாராவது வந்து அந்த உணவிலிருந்து ஏதாவதும் ஒரு சிறுபங்கை தூக்கி வீச மாட்டார்களா என ஏன் நப்பாசை கொள்கிறது..?

சாலையோரக் கடையிலோ, தள்ளு வண்டிக் கடையிலோ நீங்கள் திண்பண்டங்களை ருசித்துக் கொண்டிருக்கும் போது, கல்லைத் தவிர வேறெதாவதும் வந்து விழாதா என வெறித்து வெறித்து பார்த்து ஏன் இடையூறு செய்கிறது...?

குறிஞ்சி, முல்லை என நகர்ந்து மருத நிலத்திற்கு மனிதகுலம் இடம் பெயருகிறது. மருத நிலத்தில் ஆற்றங்கரையோரம் வயல்களை உருவாக்கி வேளாண்மை செய்து தனக்கான உணவைத் தானே உற்பத்தி செய்கிறது.

குகையில் வாழ்ந்து பழகியவன், வீடு கட்டி வாழப் பழகுகிறான். மனித நாகரீகம் பிறக்கிறது. காடுகளில் இருந்து வந்த மனிதன் இன்று நாகரீக, பொருளாதார, சிந்தனை, அறிவியல், குற்ற வளர்ச்சியில் உச்சத்தை எட்டி விட்டான்.

தெரு நாய்களுக்கும் இதற்கும் என்ன சம்மந்தம்என்ற கேள்வி இந்நேரம் உங்கள் மூளையில் கசிந்திருக்கும்...

தொடர்வோம்...

ஆதிமனிதன் முதன் முதலில் மருத நிலம் நோக்கி வரும் போதும் அவன் மட்டும் வரவில்லை. தனக்குப் பயன்படக்கூடிய, தன்னால் அடக்கி ஆளக்கூடிய காட்டு விலங்குகளான ஆடு, மாடு உள்ளிட்ட விலங்குகளையும் தன்னோடு அழைத்தே வந்தான்.

அவற்றுள் முதன்மையான விலங்கினம் நாய்”. "ஆதி மனிதனுக்கு முதல் நண்பனே நாய் தான்”.

நரி, ஓநாய், செந்நாய் குடும்ப வகையை சேர்ந்தது தான் நாயும். அவற்றைப் போல நாயும் ஒரு வேட்டையாடும் காட்டு விலங்கு தான். அவைகளுக்கு இருந்த எல்லாக் குணமும் நாய்க்கும் இருந்தது.

ஒரு குணம் மட்டும் அதிகமாக இருந்தது. அது தான் நாயை இன்று தெருவில் அலைய விட்டிருக்கிறது. அது தான் அன்பும் நன்றியுணர்வும்….

எலித் தொல்லைகள் நமக்கு இருக்கும் வரை பூனை பாக்கியசாலி தான். ஆனால், அன்பைத் தவிர வேறு எதையுமே கொடுக்க முடியாததால் கைவிடப்பட்டுத் தெருவில் அலையும் தகுதியை நாய் பெற்று விட்டது.

வேளாண்மை நேரம் போக மீதமுள்ள நேரத்தில் முயல், காட்டுப் பூனை போன்றவற்றை மனிதன் வேட்டையாட, பொழுது போக்கிற்காக நாய் தேவைப்பட்டது.

இன்று வேளாண் செய்வதே போராட்டமாகவும் மீத்தேன், கெயில், ஹைட்ரோ கார்பன், காவிரி உரிமை என போராட்டமே வேளாண் குடிகளுக்குப் பொழுது போக்காகவும் ஆகி விட்டது.

வீட்டைக் காவல் காக்கும் இடத்தை சி.சி.டிவிகள் நிரப்பியதால், வீட்டின் மதிப்பிற்கேற்ப சில வீடுகளில் நாய் வீட்டிற்கு உள்ளேயும், சில நாய் வீட்டிற்கு வெளியேயும் போனது. பல நாய்களுக்குத் தெருவே வீடாகிப் போனது.

மனிதன் social animal (சமூக விலங்கு) என்றால் நாய் கிட்டத்தட்ட semi social animal ஆகி விட்டது. உங்களோடு அதற்குப் பேச மட்டும் தான் தெரியாது. உங்கள் மொழியைப் புரிந்து கொள்ளும்,. நீங்கள் பேசுவதைப் புரிந்து கொள்ளும்.


உங்கள் நண்பர் யார், பகைவர் யார் என அதற்குத் தெரியும். உங்கள் வண்டியின் சத்தத்தை இரண்டு கிலோ மீட்டருக்கு முன்பே கணித்து வாலாட்டத் தெரியும். உங்கள் குழந்தை அழுதால் ஓடிவந்து சன்னல் ஓரத்தில் அவ்...,அவ்…,அவ்என சிணுங்கத் தெரியும்.

உங்கள் வீட்டு வாண்டுகள் அடித்தால் திருப்பித் தாக்காமல் விளையாட்டுக் காட்டத் தெரியும்.

உங்கள் வீட்டில் அக்காவோ தங்கச்சியோ அவள் வரைந்த கோலத்தை மிதித்துவிட்டுத் திட்டு வாங்கியிருக்கும். ஆனால், அவள் திருமணமாகிச் சென்று விட்டால் மூலையில் படுத்துக் கவலைப்படும்.

வெளியூருக்குப் போய் வந்த நம் அப்பாவை பார்த்ததும் முன்னங் கால்களைத் தூக்கி மாரில் வைத்துத் தாடையை நக்கும். வாலை ஆட்டிக் கொண்டு மளிகைக் கடைக்கு அம்மாவோடு கூடவே போய்வரும்.

உங்களுக்கு யார் மூலமாவதும் தீங்கா?...
ஒருகை பார்த்துவிடும். இவை அத்தனையையும் செய்ய அடைக்கலமாக ஒரு வீடு எல்லா நாய்களுக்கும் கிடைப்பதில்லை.

அப்படியானால், வீடு இல்லாத நாய்களின் நிலை???

வீடு கிடைத்தவை செல்லப் பிராணியாகி விடுகிறது.
வீடு கிடைக்காதவை சமூகத்தால் தொல்லை எனப் பார்க்கப்படுகிறது. பார்க்கும் இடமெல்லாம் கல்லடி படுகிறது.

தெருநாய்கள் அடி வாங்குவதற்காகவும், வண்டியில் அடிபட்டுச் சாகவும் படைக்கப்பட்டதாகப் பார்க்கப்படுகிறது.

பெரிய நாய் தெருவில் அடிபட்டுச் சாக, நாய்க்குட்டிகள் அதைத் தேடி அலைந்து கொண்டேயிருக்கும்.

தெருவில் அலைந்து அலைந்து
வியர்வையை விட இரத்தமே அதன் உடம்பின் மீது வழிகிறது. உணவுக்கு வழியின்றி பசியில் ஏங்கி ஏங்கி எச்சிலே அதற்கு இரத்தமாக உடம்பில் ஓடுகிறது.

இது அத்தனையும் நடந்து கொண்டிருக்கும் அதே தெருவில் காட்டிலிருந்து வரும்போது அது எந்த மனிதகுலத்தை நம்பி வந்ததோ, அந்த மனிதகுலம் எந்தச் சம்பந்தமும் இல்லாமல் பரபரப்பாகப் போய்க் கொண்டிருக்கும்.

அவர்களுக்கு ஏறெடுத்துப் பார்க்கக் கூட நேரமில்லை என்பதை விட ஏறெடுத்துப் பார்த்தாலும் அலட்சியமே மறுமொழியாக இருக்கும் என்பதை உணராத தெரு நாயின் நிலை என்னவாக இருக்கும்?...

ஒரு விலங்கை வேறோடு இடம் பெயர்த்து, அடியோடு அதன் குணத்தை, உணவு முறையை மாற்றி வைத்தது யார் தவறு?...

அதற்கும் மாட்டுப் பாலுக்கும் என்ன சம்மந்தம்? அதை அவைகளுக்கு உணவாகக் கொடுத்தது யார்??...

தற்போது அவைகளுக்கு அதைத் தர மறுப்பது யார்??

ஆனால் பாருங்கள்...
நன்றி கெட்ட நாய் என்ற சொல்லாடலை நாம் வைத்திருக்கிறோம்.
என்ன ஒரு நகைமுரண்?

அவைகளுக்கு ஆதரவாக இருக்க வேண்டியது யார் கடமை?...

சுற்றுலாவிற்குச் செல்லும் போது அங்குள்ள விலங்குகளுக்கு உணவு கொடுக்க வேண்டாம் எனச் சொல்வது இதற்காகத் தான்.

தெருநாய்களால் இன்று காட்டிற்குச் சென்று வாழவும் முடியாது. நாட்டிற்குள் வாழ ஆதரவும் கிடையாது. தனக்கான உணவை அடைந்து கொள்ளவும் தெரியாது.

அதனால் தான் நீங்கள் சாப்பிடும் போது தெருவில் நின்று உங்கள் தட்டையே வெறித்துப் பார்த்து நாக்கைத் தொங்க போட்டுக் கொண்டிருக்கிறது.

அதன் நாக்கில் இருந்து சொட்டச் சொட்ட வழிவது எச்சில் அல்ல.

கைவிடப்பட்ட ஒரு விலங்கின் கண்ணீர்.
உங்கள் உணவைப் பரிமாறி அதைத் துடையுங்கள்.

*மனதை தொட்ட முகநூல் பதிவு*
*ஓம் நமசிவய*

Tuesday, April 10, 2018

கிரிவலமாகும் திருவலம்

திருவலம்.

உலகத்தின் தந்தையாகிய எம்பிரான் ஸ்ரீ சிவபெருமான் எழுந்தருளியுள்ள கோவில்களில் திருவண்ணாமலை மிக உயர்ந்ததாக கருதப்படுகின்றது.

காரணம் பஞ்சபூதங்களில் ஒன்றான அக்னியின் ஸ்தலமாக மேன்மைமிகு திருவண்ணாமலை விளங்குகின்றது .

பஞ்சபூதங்களில் அக்னிக்கு என்ன தனி சிறப்பு ?

பஞ்சபூதங்களில் மற்ற நான்கும் (காற்று,நீர்,ஆகாயம்,நிலம்) எதனுடன் சேர்கின்றதோ அதுவாகவே மாறிவிடும் தன்மைகளை கொண்டது.

நீர் கெட்ட நீருடன் கலக்கும்போது கெட்டநீர் ஆகின்றது.

நிலமும் அவ்வாறே கழிவுகளோடு கலக்கும் போது அசிங்கமடைகின்றது.

வானம் மேகங்களோடு சேரும் போது களங்கப்படுகின்றது.

காற்று எதன் மீது தழுவி தவழ்ந்து வருகின்றதோ அதன் வாசனையை சுமந்து செல்லும் . அதனால் காற்றும் மாசடைகின்றது 
.
ஆனால் அக்னி மட்டும் எதனோடு சேர்ந்தாலும் சேர்ந்ததை அக்னியாகவே மாற்றி விடும் தன்மையை கொண்டது.

அது மட்டுமல்ல எப்படி இருந்தாலும் மேல் நோக்கியே நிற்கும் நிலையை தன்னகத்தே கொண்டது. 

ஆகவேதான் உயர்நிலையை அடைய விரும்பும் ஆன்மாக்கள் அக்னியின் ஸ்தலமான திருவண்ணாமலையை விரும்பி நாடுகின்றது.

இருந்தபோதிலும் அனைத்து சிவபெருமான் கோவில்களும் அக்னியின் தன்மையையும் பெற்றே இருக்கின்றது.

பலரும் கிரிவலம் செல்கின்றார்கள். கிரி என்றல் மலை, வலம் என்றால் சுற்றி வருதல், 

ஆகவே மலையை சுற்றி வருவதை வலம் வருதல் என்கின்றோம்

திருவண்ணாமலை சென்று கிரிவலம் செய்ய முடியாதவர்கள்.

தங்களது ஊரில் இருக்கும் ஸ்ரீ ஸ்ரீ சிவபெருமான் கோவில் உள்ள வீதியை சுற்றி வலம் வருவது சிறப்பாகும்.

இதற்கு திருவலம் என்று பெயர் .

இறைவனார் அமைந்துள்ள கோவிலை சுற்றிலும் உள்ள வீதி திரு வீதியாகும். திருவீதியை வலம்வருதல் திருவலமாகும்.

கிரிவலத்திற்கு நிகரான பலன்தரும் இந்த திருவலத்தினை உங்கள் ஊரிலும் செய்யலாமே.

பௌர்ணமி அன்று சிவனடியார்கள் ஒன்று சேர்ந்து ஊர்வலமாக 
கைகளில் ஏற்றிய ஊதுபத்திகளின் மனம் கமழ ஏந்தியபடி ஸ்ரீ ஸ்ரீ சிவபுராணம் பாடிக்கொண்டு மெல்ல நடந்து 

தங்களது ஊரில் உள்ள
ஸ்ரீ ஸ்ரீ சிவபெருமானின் திருக்கோவிலை மூன்றுமுறை வலம் வருவது மிகவும் சிறந்தது.

கிரிவலம் ஒருமுறை வலம் வரும்வோம், திருவலம் மூன்று முறைகள் வலம் வரவேண்டும்.

திருவண்ணாமலையின் எம்பிரான் ஸ்ரீ ஸ்ரீ அருணாசலேஸ்வரர் எம்மாதிரியான வரம் தருவாரோ அதனை 

உங்கள் ஊர் சிவபெருமானும் தந்து மகிழ்வார்.

ஓடாமல் மெல்ல நடந்து 
ஸ்ரீஸ்ரீ சிவபுராணம் சொல்லி 
வலம் வந்து சகல நலமும் வளமும் பெற்று 
நிம்மதியுடன் சிவனருள் பெற்று வாழ வாழ்த்துகள்.

ஓம் நமசிவய. 
            


Tuesday, February 6, 2018

உணவு கட்டுப்பாடு ஏன்



ஓம் நமசிவய ,
உணவுக்கட்டுப்பாடு விரிவான விளக்கம் :
உணவு கட்டுப்பாடு என்பது சைவ உணவை மட்டுமே உட்கொள்ள வேண்டும் என்பதாகின்றது.
அசைவ உணவை அறவே விட்டொழிக்க வேண்டும் அப்போதுதான் ஆன்ம பலம் ஏற்படும்.
காரணம் என்ன ?
அசைவ உணவில் சேர்க்கப்படும் மசாலா பொருட்கள் நம்மை நம் நிலையில் இருந்து மேலேற விடாமல் செய்யும்..
ஞான ஸித்தி கிடைக்கப்பெறாமலே போய்விடும்.
வேறென்ன நடக்கும் ?
மேலும் நமது கலாச்சாரமும், தர்மமும் மறுபிறப்பையும், யாரும் விதியின்படி எதுவாகவும் பிறக்கலாம் என்பதையும் போதிக்கின்றது.
அதன்படி நமது உற்றார், உறவினரே நாம் உண்ணும் இறைச்சியாக இருப்பதற்கு வாய்ப்புள்ளதால் நாம் இறைச்சி உண்பதை தவிர்ப்பது நம்மை மேலும் பல பாபங்களிலிருந்து காக்கும்.
ஆகவே மாமிசம் உண்பது தவிர்க்கவேண்டும். சைவபிரியாணி போன்றவற்றையும் உண்பது ஆகாது.
சமரசம் என்பது எவ்வாறெனில்,
நம்மை விட மற்றவர்களை நன்றாக வைத்துள்ளார் எனும் குணம் கூடாது .
எல்லோரையும் நன்றாகவே இறவன் வைத்துள்ளார்.
இறைவனார் அவரவர்களுக்கு உரியதை கொடுத்துள்ளார் .
மதம் என்பது நம்மை சமணப்படுத்துவது மட்டுமே.
மதமே, ஞானம் தருவதோ , ஆன்மீக முதிர்ச்சி தருவதோ இல்லை.
மதம் என்பது காலண்டரில் உள்ள கிழமைகளைப்போல அவ்வளவே .
அதை மீறி அதில் வேறொன்றும் இல்லை.
இன்று திங்கள் கிழமை அலுவலகம் செல்லும் நாள் ஆனால் எல்லோரும் போவதில்லை, பணியாளர்கள்அலுவலகம் போகின்றார்கள், மற்றவர்கள் அவரவர் வேலையை பார்க்கின்றார்கள்.
ஞாயிறு விடுமுறைநாள் ஆனால் எத்தனை பேர் விடுமுறையில் இருக்கின்றார்கள்.
வண்டி இழுப்பவரும் சுமை தூக்குவோரும் என்றைக்கு ஞாயிறு விடுமுறையை கொண்டாடினார்கள்.
அதுபோலவே மதமும் மனிதனுக்கு எதையும் போதிப்பதோ மாற்றுவதோ இல்லை.
மாற்றம் மனிதனிடம் உருவாகவேண்டும்.
ஆக மதம் மனிதனை சமணப்படுத்துவது.
எப்படி சமரசம் கொள்வது ?
குதர்க்க மற்ற மனநிலையை மனிதன் பெறவே மனிதன் முயலவேண்டும்.
எல்லோரையும் சமமாக எண்ணும் எண்ணங்களால் மனம் நிறைய வேண்டும்.
இறைவனார் யாரையும் பிரித்துப்பார்ப்பதில்லை எல்லோரையும் சமமாகவே பார்க்கின்றார், நடத்துகின்றார் .
ஞானம் பெறவும், மோட்சம் பெற்று அவரை அடையவும்,
மனிதனும் சமரசமாகவும் மனம் சமாதானமாகவும் இருப்பது அவசியமாகின்றது.
பொறாமையோ துர்குணங்களோ அற்ற இறைவனாரை நாட வேண்டுமானால்,
நாம் அவ்வாறு இருப்பது அவஸ்யமாகின்றது.
நாம் துர்குணங்களோடு உள்ளவரை இறைவனாரை சேர்வது என்பது,
பகலில் முழு நிலவை காண எண்ணுவது போலாகும்.
ஆகவே சமரசம் நமது குணமாகவேண்டியது மிக அவஸ்யம்.
பூர்ண ஸ்வசதந்திரமே சமரசமாகும்.
நம்முள் எந்த தீயஎண்ணமோ,
செய்கையோ ,
சொல்லோ இல்லாதிருத்தலே
முழுமையான ஸ்வசதந்திரம் ஆகும்.
முழுமையான ஸ்வதந்திரம் என்பது முழுமையான சமரசம்.
சமரசம் உள்ள நெஞ்சில் ஆனந்தம் ஆட்சி கொள்கின்றது.
அங்கே ஏக்கம் இல்லை
துக்கம் இல்லை
தேவை இல்லை அதனால்
துரோக சிந்தனை இல்லை.
எதிலும் சமரசம் கொள் மனமே.
இறைவனாரை உன்னுள் காண்பாய். ஓம் நமசிவய. 
Related Posts Plugin for WordPress, Blogger...