என்னை தொடர்ந்து

வாருங்கள், நண்பரே வணக்கம். தங்கள் வருகையை பதிவு செய்யுங்களேன் !அன்புடன் கருணாகரன்6,இடைப்பாடி. அன்பர்களே ! முழுக்க முழுக்க தமிழில் திருக்கணித முறையில் ஜாதகம் கணிக்க வேண்டுமா? உங்கள் பெயர், பெற்றோர் பெயர், பிறந்த தேதி, மாதம் வருடம், பிறந்த இடம் போன்ற விபரங்களை தாருங்கள், உங்கள் ஜாதகம் கூரியர் மூலமாக உங்களுக்கு அனுப்பி வைக்கப்படும்.( நள்ளிரவில் இரவு 12.00 மணிக்கு மேல் காலை 7.00 மணிக்குள் பிறந்திருந்தால் விடிந்தால் என்ன கிழமை என குறிப்பிடவும்.K.செந்தில்குமார்,கணேஷ் கம்ப்யூட்டர்ஸ்,34,கடைவீதி, இடைப்பாடி,சேலம் மாவட்டம்-637101.

Tuesday, October 12, 2010

விதியோடு கைசேர்த்து

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்
அன்பார்ந்தவர்களே!விதியோடு கைசேர்த்து நடப்பதில் நமக்கு (மனிதருக்கு) இணை வேறுயாருமில்லை, நன்றாக இருப்பவரைப் பார்த்து அவருக்கு நேரம் உச்சத்திலே .....என்போம், அதுவே கஷ்டம்னு வந்தால் அவர் விதி என்போம். 

இப்படி எழுதப்படாத பலவித நியாயங்களை நாம் நமக்கென உருவாக்கி வைத்துக் கொண்டுள்ளோம். தேவைப்படும்போது வேண்டுவதை எடுத்து அங்கே வைத்துக் கொள்வோம்.
     விதி என்ற ஒன்று என்னவென்றே தெரியாதபோது ஏனிந்த மயக்கம்? நமக்கு முன்பாக உள்ள இரண்டு அல்லது மூன்று பாதைகளில் ஒன்றைத்தான் தேர்ந்து எடுக்கவேண்டும் என்ற நிலை வந்தால் மூன்றின் வழியிலும் உள்ள கஷ்ட, நஷ்ட, சாதக,பாதகங்களை கண்டு, விசாரித்து, உணர்ந்து தெளிந்து பின் நாமே ஒரு   தேர்ந்தெடுத்த வழியில் சென்றாலும் சரி ,

இல்லை எனக்கு எல்லாமே தெரியும் ஏற்கனவே நான் சென்ற வழிதான் என்று ஒரு பாதையை நாமாகவே தேர்ந்தெடுத்து சென்றாலும் சரி ,

இல்லையில்லை இந்த மூன்றுமே சரியில்லை என நமக்கென  ஒரு பாதையை உருவாக்கி அதிலே பயணித்தாலும் சரி - அதுவரை சும்மா இருந்த விதி ஆமாம் அதுவரை நமது நடவடிக்கையை ரசித்து பார்த்துக்கொண்டிருந்த விதி நம் பயணம் துவங்கிய உடனே அதற்கான லிங்க்கு (தொடர்பு)களை ஏற்படுத்த ஆரம்பிக்கிறது,

இப்போது விதி பாதையை தேர்ந்தெடுக்கும் போதும் நம்  பொறுப்பில் விட்டுவிட்டது. பயண துவக்கத்தையும் நமது பொறுப்பில்தான் விட்டுவிட்டது. நாமே தான் முழுபொறுப்பில் ஏற்றுக் கொண்டோம்.

ஆனால் நமது தீர்மானம் சிறந்ததாகி வெற்றிபெற்றால் அது எனது உழைப்புக்கு கிடைத்த வெற்றியாகவும், நமது  கணிப்பு தவறாகி நாம்  தோல்வியை தழுவினால் எல்லாம் என் விதி அல்லது எல்லாம் என் தலையெழுத்து, நான் என்ன செய்வேன் என்றும் சொல்கிறோம்.

ஏனிந்த மயக்கம்?

காரணம் எனது கணிப்பு தவறாகாது என்ற எனது எண்ணம் முதல் காரணம்.

இரண்டாவது எனக்கு புத்திமதி சொல்லும் அளவிற்கு உனக்கு என்ன தெரியும் எனும் மனோபாவம்.

மூன்றாவது வேறு ஒருவர் எனது வழியில் வந்து செல்வது பிடிக்காதது.

நான்காவது இன்பமோ, துன்பமோ என்னால் வந்ததாகவே இருக்கட்டும் என்ற எண்ணமும் ஒரு காரணமாகிறது.

ஆனால் வெற்றியும், புகழும் , சாதனையும், தனி மனிதனால் செய்யமுடியாது எந்த சாதனைக்கும் உடன் யாராவது ஒருவர் கண்டிப்பாக துணை இருப்பர்.

காபி குடிப்பது மிக சாதாரண ஒரு காரியம்தான், ஆனால் அதற்கும் மூன்று, நான்கு நபர்களின் ஒத்தாசை தேவைப்படுகிறது அல்லவா?  

நமது எண்ணம் சிறந்ததாகவும், உயர்ந்ததாகவும் இருந்தால் மட்டும் போதாது, மனமும், மனம் சார்ந்த செயலும் உயர்ந்தாகவும் பொதுநல நோக்கோடும் இருத்தல் அவசியமாகிறது.

இப்போதும் விதி நமக்கு குறுக்கே நிற்பதில்லை, அது நமது செயல்களை பதிவு செய்து கொண்டே வருகிறது அவ்வளவே, நலமாக முடிந்தால் நமது செயல், இல்லையென்றால் விதி என்று சொல்லும் போதுதான் விதி சிரிக்கிறது.

அன்புடன் கருணாகரன்6.இடைப்பாடி

2 comments:

ஆர்.கே.சதீஷ்குமார் said...

சிறப்பான கருத்து..

இர.கருணாகரன் said...

அன்பு ஆர்.கே.சதீஷ்குமார் அவர்களுக்கு,

உங்களின் மேலான வருகைக்கும் கருத்துக்கும் நன்றி,


கருணாகரன்6.இடைப்பாடி.

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...