என்னை தொடர்ந்து

வாருங்கள், நண்பரே வணக்கம். தங்கள் வருகையை பதிவு செய்யுங்களேன் !அன்புடன் கருணாகரன்6,இடைப்பாடி. அன்பர்களே ! முழுக்க முழுக்க தமிழில் திருக்கணித முறையில் ஜாதகம் கணிக்க வேண்டுமா? உங்கள் பெயர், பெற்றோர் பெயர், பிறந்த தேதி, மாதம் வருடம், பிறந்த இடம் போன்ற விபரங்களை தாருங்கள், உங்கள் ஜாதகம் கூரியர் மூலமாக உங்களுக்கு அனுப்பி வைக்கப்படும்.( நள்ளிரவில் இரவு 12.00 மணிக்கு மேல் காலை 7.00 மணிக்குள் பிறந்திருந்தால் விடிந்தால் என்ன கிழமை என குறிப்பிடவும்.K.செந்தில்குமார்,கணேஷ் கம்ப்யூட்டர்ஸ்,34,கடைவீதி, இடைப்பாடி,சேலம் மாவட்டம்-637101.

Thursday, October 14, 2010

இல்லறவாசியும் இறையுணர்வுஞானியும் ஓர் ஒப்பீடு (சும்மாதான்)

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்அன்பார்ந்தவர்களே! இல்லறவாசியும், இறையுணர்வுஞானியும் ஓர் ஒப்பீடு (சும்மாதான்)
அது என்ன இல்லறவாசியை முதலில் சொல்லி பின் இறையுணர்வுஞானியை இரண்டாவதாக சொல்வது என்கிறீர்களா?


விஷயம் இருக்கிறது, சொல்கிறேன்.


கவலைகளில் பலவிதங்கள் உள்ளன, பையன் அல்லது பெண்ணுக்கு படிப்பு, திருமணம், வேலை, உடல்நலம் என ஒரு பக்கம்.

மனைவிக்கு உடல்நலம், மனம் ஒத்துபோகாமை, வேலை செய்யும் இடத்தில் சிறு, பெறு சங்கடங்கள், தனக்கே உடல்நலம், மனநலம், முயற்சியின் தோல்வி, நஷ்டம், கஷ்டம் என பல்வேறு கவலைகள்.

பெற்றோருக்கு உடல்நலம், அவர்களை சரியாக கவனிக்க முடியாமை இப்படி இல்லறவாசிக்கு அடுக்குமலைத் தொடரென கவலை அலைகள்.

ஆனால் இறையுணர்வுஞானிக்கு அதெல்லாம் இல்லை அவரது நோக்கமெல்லாம் தான் இறைவனை சேருவது எப்படி எனும் ஒரே கவலைதான். அதில் அவருக்கு தனது மனம் அடங்காமை, தனது யோகநிலை பலிதம், தனது பூஜை, தனது த்யானம் என எல்லாம் தனது எனும் சுயநோக்கம்தான் அதிகம் காணப்படுகிறது.

இந்த விஷயத்தில் இல்லறவாசி தன்னை நாடிவந்த பெண்ணையும், தனக்கு பிறந்த குழந்தைகளையும், தன்னை பெற்றோர்களையும் என தன் உயிரையும், தனக்கு உயிர் தந்தவர்களையும், தன்னால் உயிர் பெற்றவர்களையும், தன்னையே நம்பியவளையும் காக்கும் மிகப் பெரிய பொறுப்பை ஏற்கிறான்.

நமது இறையுணர்வுஞானிக்கு இந்த விஷயங்கள் ஏதும் கிடையாது. எனக்கு ஞானம் வந்து நான் ஞானியாகிவிட்டேன் என எல்லாவற்றையும் உதறித் புறந்தள்ளி விட்டு புறப்பட்டுவிடுகிறார்.

அதனால்தான் இல்லறவாசியை முதலிலும், இறையுணர்வுஞானியை அடுத்தும் அமைத்தேன்.

இந்த இருவரையும் ஓர் ஒப்பீடு செய்தால் பலவித கவலைகளில் உழன்று தானும் வாழ்ந்து, தன்னை நம்பிய உயிர்களையும் காப்பாற்றும் இல்லறவாசி ஒருபடி மேலே தெரிகிறான்.

தனக்கு மட்டுமே, தனது ஆன்மா மட்டுமே உயர்வு பெற, உடலை வருத்தும் இறையுணர்வுஞானி என்னதான் ஞானியாக இருந்தாலும் ஒருபடி கீழே இருப்பதாகதான் தெரிகிறது.

இன்னும் இல்லறவாசி என்பவன், இறைவனின் பணியை அதாவது உயிர்களை காக்கும் பணியை மனைவி,குழந்தைகள்,பெற்றோர் ஆகியோரை இல்லறவாசி காப்பதால் இறைவனுக்கு (இந்த நபர்களை) காக்கும் வேலை பளு குறைகிறது.

ஆக இல்லறவாசி இறைவனை வணங்காமலே இருந்தாலும் கூட இறைவனுக்கு சகாயம் செய்கிறான்.

இறையுணர்வுஞானியோ தான் என்ன பாபங்கள் செய்திருந்தாலும் என்னை ஏற்று எனக்கு ஞானம் தந்து என்னை ஏற்றுக்கொள் என இறையவனுக்கு கொஞ்சம் தர்ம சங்கடத்தை உண்டு பண்ணுகிறார் என்பதும் புலனாகிறது.


ஆக, மானிடர்களான நாம் வாழும் இந்த பரந்த பூமியில் இல்லறவாசியே ஞானியைக்காட்டிலும் உயர்ந்தவனாக(ராக) அடியேனின் பார்வையில் தெரிகிறார்.


அன்புடன் கருணாகரன்6.இடைப்பாடி.             
                         

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...