என்னை தொடர்ந்து

வாருங்கள், நண்பரே வணக்கம். தங்கள் வருகையை பதிவு செய்யுங்களேன் !அன்புடன் கருணாகரன்6,இடைப்பாடி. அன்பர்களே ! முழுக்க முழுக்க தமிழில் திருக்கணித முறையில் ஜாதகம் கணிக்க வேண்டுமா? உங்கள் பெயர், பெற்றோர் பெயர், பிறந்த தேதி, மாதம் வருடம், பிறந்த இடம் போன்ற விபரங்களை தாருங்கள், உங்கள் ஜாதகம் கூரியர் மூலமாக உங்களுக்கு அனுப்பி வைக்கப்படும்.( நள்ளிரவில் இரவு 12.00 மணிக்கு மேல் காலை 7.00 மணிக்குள் பிறந்திருந்தால் விடிந்தால் என்ன கிழமை என குறிப்பிடவும்.K.செந்தில்குமார்,கணேஷ் கம்ப்யூட்டர்ஸ்,34,கடைவீதி, இடைப்பாடி,சேலம் மாவட்டம்-637101.

Tuesday, March 4, 2014

சகோதர உறவு மேம்பட :

சகோதர உறவு மேம்பட :

செவ்வாய்கிழமை தோறும் ஆஞ்சநேயர் கோவில் சூரிய அஸ்தமனத்திற்கு பின்பு இனிப்பு தானம்செய்ய வேண்டும். (43 முறை).

குடும்பச்சண்டையிருந்து விடுபட :

1.அவர்களுக்கு நடக்கும் திசை எதுவோ அந்த திசையின் வருடத்தின் (உதாரணம் சனி திசை 19) எண்ணிக்கையில் கலரில் இனிப்பு செய்து விதவை பெண்களுக்கு தானம் செய்ய வேண்டும்.

உதாரணம் : சனிதிசை நடப்பவர்களுக்கு 19 இனிப்பு பலகாரம் கருப்பு நிறத்தில் செய்து தானம் தரவேண்டும்.

2.கருப்பு நிற உளுந்து 4 கிலோ ஆற்று நீரில் விடவேண்டும்.


இது அவரவர்களின் ஜாதகத்தை பொறுத்து பரிகாரம் செய்தால் கட்டாயம் நல்ல பலனைத் தரும்.

Tuesday, February 25, 2014

வழக்கு வெற்றி பெற

பாரசீக நாட்டில் உருவாகிய மிக சிறந்த ஜோதிட நூலான
லால்கித்தாப் சொல்லும் எளிய முறை பரிகாரங்கள் - பொதுவானவை - அனைத்து இராசிக்காரர்களும் இதனை செய்யலாம் , சுகமடையலாம்.
-+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

வழக்கு வெற்றி பெற :

1.  கிலோ உடைக்கப்படாத கருப்பு உளுந்து எடுத்துச் சென்று ஆற்று நீரில் விடவும்.

2. சிறிய குடத்தில் தேன் நிரப்பி வீட்டில் வைக்கவும்.


3. சர்க்கரை பொங்கல் அல்லது இனிப்பு பொருள்களை கோவில்களில் தானம் செய்ய வேண்டும்அல்லது ஆற்று நீரில் விட வேண்டும்.

லால்கித்தாப் பரிகாரங்கள் தொடரும் . . . .

++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
உங்களுக்காக . . . . சிவனருள் கருணாகரன்.

Thursday, February 20, 2014

கடன் பிரச்சினை முழுமையாக தீர

கடன் பிரச்சினை முழுமையாக தீர 

பாரசீக நாட்டில் உருவாகிய மிக சிறந்த ஜோதிட நூலான
லால்கிதாப் சொல்லும் எளிய முறை பரிகாரங்கள் - பொதுவானவை - அனைத்து இராசிக்காரர்களும் இதனை செய்யலாம் , சுகமடையலாம்.
-+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
கடன் தொல்லைகள் முழுமையாக தீர :

1.துப்புரவு பணியாளர்களுக்கு தேயிலை இலைகளையும், புகையிலை தொடர்பான பொருட்களையும் தானம்செய்ய வேண்டும். (புகையிலை பொருட்கள் தவிர்க்கும் பட்சத்தில் பருப்பு வகைகளோ, பணமாகவோ கொடுக்கலாம்).

2.மூங்கில் புல்லாங்குழல் முழுவதும் சர்க்கரை நிரப்பி மனித நடமாட்டம் இல்லாத இடத்தில் புதைக்கவேண்டும். (இவ்வாறு புதைப்பதால் யாருக்கும் பயன் இல்லை ஆனால் நடைமுறைக்கு பலன் தருகிறது)

3.கருப்பு நிற பாத்திரத்தில் நல்ல எண்ணெய் ஊற்றி முகம் பார்த்து ஏழைகளுக்கு தானம் தரவேண்டும்.

லால்கிதாப் பரிகாரங்கள் தொடரும் . . . .

++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

உங்களுக்காக . . . . சிவனருள் கருணாகரன்.

Tuesday, February 18, 2014

வருங்கால ATM மிஷின்கள்


வருங்கால ATM மிஷின்கள் 


“ இந்த வருஷம் ஸ்கூல் பங்க்ஷன்ல நீதான் முதல்ல வரணும், எல்லா போட்டியிலும் பரிசு வாங்கணும்” னு சொல்லி குழந்தைகளின் மனதில் பாசமோடு பழக வேண்டிய மற்ற குழந்தைகளை போட்டியாக (எதிரியாக) நினைக்கும் மனப்பான்மையை வீட்டில் உள்ளோர் கொஞ்சம் கொஞ்சமாக ஊட்டி வளர்க்கின்ற காலமிது.

நல்ல மார்க் வாங்கணும் , பெரிய வேலைக்கு போகணும் , கைநிறைய சம்பாதிக்கணும்னு சொல்லி சொல்லியே படிப்பைத் தவிர, மார்க்கைத் தவிர, சம்பாதனையைத் தவிர வேறெதையும் அறியாததாகவே ஒரு குழந்தை வளர்க்கப்படுகிறது .

தாத்தா, பாட்டி, அம்மா , அப்பா , அண்ணன் , தம்பி , அக்காள் , தங்கை போன்ற ஒரு குடும்ப பாசமற்ற ஒரு ஜீவனாக, சம்பாதனை ஒன்றையே குறிவைத்து துரத்தப்பட்ட குதிரையாய் ஓடத் துவங்கிய வாழ்வில், பந்த பாசத்திற்கு இடமின்றி போய் , பின்னாளில் காதலி , மனைவி , குழந்தைகள் என எல்லோரையுமே ரத்தம் சதை எலும்பு கொண்ட உருவமாகவே பார்க்கும் நிலை உருவாகிப்போனது . 

கேள்வியின் தன்மையையே அறியாமல் கேள்விக்குரிய பதிலை மட்டுமே படித்துப் பழகியதால் பதிலின் காரணமும் அறியாமலே போனது. இதுதான் இன்றைய IT – M.B.B.S., போன்ற எல்லாவித படிப்பும் கற்றுத் தரும் அறிவு.

தான் , தன்னுடைய படிப்பு , பதவி , சம்பாத்தியம் என குறுகிவிட்ட மனதில் பாசமும் , நேசமும், அன்பும் , காதலும் பேசுதலுக்குரிய பட்டிமன்ற கருவாகி போனது விந்தையல்லவே.

பெற்று வளர்த்த அப்பா, அம்மாவுக்கு நீ காட்டும் அன்பு , பரிவு இதுதானாப்பா என்று மகனை கேட்கும் பெற்றோரை பார்த்து மகன் கேட்கிறான் ,
 “அப்பிடின்னா என்ன ? நோட்சில் இல்லையே அப்பா ?” உண்மைதானே .

நாம் சொல்லித்தரவே இல்லையே ? நமது கவனம் முழுவதும் மார்க் , முதலிடத்தில் வெற்றி, கைநிறைய சம்பளம் இதுதானே .

தெரியாத ஒன்றை அவர்களிடம் எதிர்பார்ப்பது நமது தவறுதானே .

வெறும் பணம் பண்ணும் கருவியாக நாம் உருவாக்கிய பிள்ளைகளிடம் பாசம், நேசம், மரியாதை, பாதுகாப்பு என்றெல்லாம் எதிர்பார்க்கமுடியாது.

வெளிநாட்டில் வாழும் மகனிடம் (மகளிடம்)

கதறி அழுது

 “உடல்நிலை கேட்டுப் போச்சுப்பா கொஞ்சம் வந்து போய்யா” என்று கெஞ்சினாலும் , அங்கிருந்து வரும் பதில் “ பணம் அனுப்பி இருக்கிறேன் , விசா கிடைக்கல , நல்ல டாக்டரா பாருங்க விசா கெடைச்சதும் வரேன் “ அவ்வளவுதான் .

அவர்கள் மனதில் உங்களுக்கு தேவை பணம்தான் என்றாகிப் போனது , இது  உங்கள் தயாரிப்பின் பலன்தான் என்பதை தவிர வேறென்ன சொல்லமுடியும்.

உங்கள் தயாரிப்பில் உருவான ஒரு ATM மனித கருவி அவர்கள் அவ்வளவுதான், கடிதம் போட்டால் பணம் வரும் , பாசம் வராது , ஏனென்றால் அப்படித்தான் நம்மால் ப்ரோக்ராம் (அவர்கள் உருவாக்கம்) செய்யப்பட்டது. 

இனி வருங்காலங்களில் முதியோர் இல்லங்கள் நிறைய உருவாகும் வாய்ப்புகள் பிரகாசமாக தெரிகின்றதை மறுப்பதற்கில்லை. 

மனதளவிலும், உடலளவிலும் இன்றே அந்த வாழ்விற்கு தயாராகிவிட்டால் நாளை விரட்டப்படுமுன் நாமே சென்று விடலாம்.

இதுவும் நாம் பெரிதும் எதிர்பார்த்த மேலைநாட்டு கலாச்சாரம்தான் , எப்போது அம்மாவை “மம்மி” (பிணமே) என்றழைக்க விரும்பினோமோ – அன்றே நாம் மற்ற விஷயத்திற்கும் தயாராக வேண்டியதுதான். 

அன்பையும் , பாசத்தையும் , பரிவையும் , மனிதாபிமானத்தையும், மனித நேயத்தையும், கருணையையும் கற்றுத் தந்து சக மனித உயிர்களையும் தனது உறவாக பார்க்கும் உணர்வை குழந்தைகளுக்கு பாலுடன், சோறுடன் ஊட்டினால் நாளை அவர்கள் ஒரு ATM மிஷினாவதை மாற்றலாம்.

இல்லையென்றால் முக்கிய வீதிகளில் அமைக்கப்படும் ATM சென்டர் போல எல்லா வீடுகளிலும் மனித உருவில் ATM மிஷின்கள் இருக்கும், அதில் பணமும் இருக்கும், 

ஆனால் மருந்துக்கு கூட அன்போ , பாசமோ , கருணையோ , பரிவோ இருக்காது. 

மிஷினுக்கேது பாசம் ?

இன்றைய குழந்தைகள் நாளைய ATM மிஷின்களா இல்லை அன்பு, பாசம், பரிவு, கருணை எல்லாம் கொண்ட மனித இன வழித்தோன்றல்களா ?

பதில் : உங்கள் குழந்தையை நீங்கள் வளர்ப்பதில் உள்ளது .

வளமோடு வாழுங்கள் , வாழும் நாளெல்லாம். 

அன்புடன் கருணாகரன்

Tuesday, January 28, 2014

லால்கித்தாப் (LAL KIDAB) சொல்லும் எளிய முறை பரிகாரங்கள்




பாரசீக நாட்டில் உருவாகிய மிக சிறந்த ஜோதிட நூலான
லால்கித்தாப் (LAL KIDAB) சொல்லும் எளிய முறை பரிகாரங்கள் - பொதுவானவை - அனைத்து இராசிக்காரர்களும் இதனை செய்யலாம் , சுகமடையலாம்.



திருமணம் தாமதமாகி கொண்டுள்ளவர்கள் செய்ய வேண்டிய பரிகாரங்கள் :

1.இரவில் கண்ணாடி டம்ளர் முழுவதும் நீர் நிரப்பி படுக்கச் செல்லும் முன்பு தலையனை அருகில்வைக்க வேண்டும். காலையில் ஏதாவது ஒரு மரத்தின் வேரில் (அரசமரத்தின் வேர்) ஊற்ற வேண்டும். 43முறை செய்ய வேண்டும்.

2.வெள்ளிக்கிழமையன்று புளிப்பு சுவையான உணவு வகைகளை தவிர்க்க வேண்டும்.

3.வெள்ளியிலான செயினை கழுத்தில் அணிய வேண்டும்.


4.பசுமாட்டிற்கு சாமை அல்லது தெனை இவைகளின் பச்சை இலைகளை அவர் கைகளால் தானம்படைக்க வேண்டும்.

சிவனருள் கருணாகரன்.

Tuesday, January 14, 2014

தீராத கடன் தீர எளிய வழி

தீராத கடன் தீர எளிய வழி : 


செவ்வாய்க்கிழமை , அசுவனி நட்சத்திரம் , மேஷம் இலக்கினம் கூடும் நாளில் நமக்கு 

கடன் தந்த நண்பருக்கு ( நாம் தரவேண்டிய தொகை எவ்வளவாக இருந்தாலும் சரி ) 

ஏதேனும் ஒரு சிறு தொகையை திருப்பித் தாருங்கள் , வட்டியில் அல்ல - நாம் 

தரவேண்டிய முதலில் . அப்புறம் பாருங்கள் , அந்த கடன் சிறுக சிறுக அடைபட்டுவிடும். 

இதைப்போலவே ,


விருச்சிக இலக்கினமும் , அனுஷ நட்சத்திரமும் கூடும் நாளில்திருப்பி கொடுத்தாலும் 

விரைவில் அந்த கடன் எவ்வளவு பெரிய தொகையாக இருந்தாலும் அடைபட்டு விடும். 

முயன்றுதான் பாருங்களேன்.(இங்கு எந்த கிழமையாக இருந்தாலும் ஓகே )

***********************
முதலில் குறிப்பிட்ட அந்த நாள் வருகின்ற 01.04.2014 காலையில் 07:06 முதல் காலை 08:06 

வரை இருக்கின்றது .

இரண்டாவது குறிப்பிட்ட விருச்சிக இலக்கினம் - அனுஷ நட்சத்திரம் 15.05.2014 மாலை 

06:40 முதல் இரவு 08:30 வரை உள்ளது .

************************
வாழ்த்துகள் .

அன்புடன் கருணாகரன் .

Friday, January 3, 2014

உயிரின் வருகையும் – புறப்பாடும்


முகநூலில் திவாகர் ரகுநாதன் : வணக்கம் ஐயா, மேலும் ஒரு விளக்கம் தேவை, நம் உடலை பிரிந்த உயிரின் நிலை என்ன?

அன்பு நண்பர்களே, வணக்கம்.

உயிரின் வருகையும் – புறப்பாடும் .

நம் உடலை பிரிந்த பின் உயிர் அடையும் நிலை என்ன ? என அறிந்து கொள்ள வேண்டுமானால் முதலில் நம் உடலை உயிர் வந்து சேர்வதை அறிய வேண்டும்.

ஒரு உயிர் எப்படி உடலுக்குள் வந்து சேர்கிறது ?
எந்த அடிப்படையில் உயிர் உடலை தேர்ந்தெடுக்கின்றது ?
மண்ணுலகில் இடைவிடாது நடைபெறும் இந்த ரகசிய தேர்ந்தெடுப்பு யாரால் நிறைவேற்றப்படுகிறது ?

புதிய உயிர் என்று ஏதும் இல்லை – இன்று பல்கிப் பெருகி நிற்கும் அத்தனை உயிர்களும் ஆரம்ப உயிரின் பிரதிகளே –

ஒரு மனிதனின் பாபங்கள் தனித்தனி பிறப்பாகவும் , அவன் செய்த புண்ணியங்கள் ஒரே பிறப்பாகவும் உருப்பெறுகின்றது.

பாபங்களும் புண்ணியங்களும் அற்றதான நிலையில்தான் மனிதன் பிறப்பற்ற நிலையைப் பெறுகிறான்.

காரணம் பாபங்கள் இருந்தாலும் , புண்ணியங்கள் இருந்தாலும் அது இல்லாமல் போக பிறப்பெடுத்தே தீரவேண்டும்.

ஒரு உயிரானது தான் வாழ்ந்த உடலைப் பிரிந்த பின் காற்றுடன் காற்றாக கலந்து விடுகின்றது.

காற்றானது இதுபோல தன்னுள் வந்து சேர்ந்த பல்லாயிரக்கணக்கான உயிர்களோடு பெரும் பயணமாக வானவீதியில் பயணித்து அந்த உயிர்களை எல்லாம் இந்த பால்வழியில் (Milky Way) உள்ள வான மண்டலத்தில் சேர்த்து விடுகின்றது. இறந்த உயிர் உடனே பிறப்பதில்லை–(ஒன்றிரண்டைத் தவிர).

இறந்த உயிரின் வாழ்ந்த கால கணக்குப்படி , அதன் பாப புண்ணியங்கள் ஆராயப்பட்டு (இங்கே வேறெதுவும் பார்ப்பதில்லை) இந்த நிலையில் வாழ்ந்த உயிர், தான் செய்த பாபங்கள் அல்லது புண்ணியங்களுக்கான பலன்களை அனுபவிக்க, எந்தெந்த தாய் தந்தையருக்கு பிறந்தால் , உயிர் செய்த அந்த பாபங்கள் , புண்ணியங்களுக்கு ஏற்ப வாழ்க்கை அமையுமோ அந்த அந்த வீட்டில் பிறக்க வைக்கப்படுகிறது.

அது எப்படி என்றால் ....

வானுலகில் சென்று ஒரு ப்ரிஜ்ஜில் வைத்தது போல வைக்கப்பட்ட உயிர்கள் சூல் கொண்ட மேகமாகி – அது இந்தியாவில் இறந்திருந்தாலும் சரி , உலகில் வேறு எந்த இடத்தில்  இறந்திருந்தாலும் சரி – தற்போது எங்கு பிறக்க வைக்க வேண்டுமோ அந்த நாட்டிற்கு , அந்த ஊருக்கு , அந்த தெருவுக்கு , அந்த வீட்டிற்கு , அந்த தம்பதிகள் வாங்க இருக்கும் காய்கறிகள் விளைய இருக்கும் நிலத்திற்கு மழையாக பொழியப்படுகின்றது.     

அந்த மழை நீரின் சக்தியை உறிஞ்சி வளர்ந்த காய் , கீரை , பழங்கள் அந்த குறிப்பிட்ட தம்பதியரால் உண்ணப்பட்டு முதல் நாள் செரித்து , இரண்டாம் நாள் , மூன்றாம் நாள் ரத்தமாகி , பின் நாதமாகி , விந்தாகி அவரவர் உடலில் தங்கி , தம்பதிகள் சேரும் நாளில் ஒன்று கலந்து குழந்தையாக உருவாகின்றது .

இது எனது கற்பனையல்ல – பிரஜோர்பத்தி இப்படித்தான் நடக்கின்றது என ஜோதிட , சாஸ்திர நூல்கள் குறிக்கின்றன.

இப்படி உருவாகும் போதே ஒவ்வொரு மாதமும் , ஒவ்வொரு க்ரஹமும் ஒவ்வொரு உறுப்புகளை உருவாக்குகின்றன.

உடலில் எந்த உறுப்பு அல்லது நிலைப்பாடு அதிகம் ஆதிக்கம் செலுத்துகிறதோ அதற்குரிய க்ரஹம் முழுபலத்துடன் இருப்பதாக புரிந்து கொள்ளல் வேண்டும்.

ஸ்ரீசனி பகவானின் ஆதிக்கத்தில் பிறக்கும் குழந்தைக்கு பிறக்கும்போதே தலையில் முடி அடர்த்தியாக நிறைந்து காணப்படும். இப்படியாக ஒவ்வொரு கிரஹமும் ........................

இப்படியாக வளர்ந்த உயிர் தனது முன் ஜென்ம வினைகளின்படி வாழ்ந்து தனது பிறப்பின் காரணத்தை புரிந்தோ புரியாமலோ , வந்த பணியை முடித்தோ , முடிக்காமலோ , தான் கொண்ட உடலை பிரிய வேண்டிய  காலம் வரும்போது என்ன நடக்கின்றது ?

இந்த உடலை விட்டு , இந்த இடத்தில் உயிர் பிரிய வேண்டும் என முன்பே தீர்மாணிக்கப்பட்டுள்ள இடத்தில்தான் உயிர் உடலை விட்டு பிரியும்.

மனித உடலில் பத்துவித காற்றுகள் உண்டு . இவையே மனிதனின் அனைத்து இயக்கத்தையும் நிர்வகிக்கின்றன.

உயிர் வெளியே புறப்படும் நாள் , நேரம் நெருங்கியுடன் உடலின் அனைத்து செல்களும் முடக்கப்பட்டு , எல்லாவித காற்றின் வழிகளும் ஒவ்வொன்றாக அடைக்கப்பட்டுக் கொண்டே வரும்.

உதாரணமாக . . . .

ஒரு வீட்டை நாம் காலி செய்யும்போது எப்படி எல்லா பொருள்களையும் ஒழுங்காக அடுக்கி கட்டி கொண்டுவந்து நடு வீட்டில் வைத்து பின் அங்கிருந்து சரியாக எண்ணி ஒவ்வொன்றாக வெளியே கொண்டு செல்வது போல , நமது அனைத்து அவயங்களும் ஒவ்வொன்றாக முழுச் செயலையும் , ஒவ்வொன்றாக நிறுத்தி , நமது நடுநெஞ்சுக்கு கொண்டு வந்து வைத்து உயிர் வெளியேற வழி வகுத்து கொடுக்கும்.

சிலருக்கு கண்களின் வழியாகவும், சிலருக்கு வாயின் வழியாகவும், வேறு சிலருக்கு உச்சிமண்டையின் வழியாகவும் , இன்னும் சிலருக்கு ஆசன துவாரத்தின் வழியாகவும் , மூத்திர வாசல் வழியாகவும் , காதின் வழியாகவும் , மூக்கின் வழியாகவும், தொப்புள் குழி வழியாகவும் உயிர் வெளியேறும் .

ஒன்பது காற்றும் நிறுத்தப்பட்டு , அவயங்களும் முழு நிறுத்தம் கண்டு , எந்த வழியாக உடலை விட்டு உயிர் வெளியேற வேண்டுமோ அந்த வழிக்கு சொந்தமான பத்தாவது காற்று உயிரை உடலை விட்டு வெளியே அழைத்து செல்லும் , அதனுடனேயே அந்த காற்றும் சென்று விடும் . அந்த காற்று, தன்னுடன் கொண்டு செல்லும் உயிரை காற்று மண்டலத்தில் உள்ள அந்த உயிருக்குரிய இடத்தில் சேர்ப்பித்து விட்டு அதனுடையே தங்கி , மீண்டும் பிறப்பெடுக்கும் காலம் வரும்போது அதற்கென குறிப்பிட்ட தாயின் கர்ப்பத்தில் சேர்ப்பிக்கும் .

அந்த காற்றினைத்தான் நாம் ஆன்மா என்கிறோம். (உயிர் வேறு ஆன்மா வேறு).

ஆன்மா உயிரைவிட்டு எப்போதும் பிரிவதில்லை , உயிர்தான் உடல்களை  விட்டு பிரிகிறது. புனரபி ஜனனம் , புனரபி மரணம் .  

இவ்வாறாக உடலை பிரிந்தபின் உயிரின் நிலை அமைகிறது .
பிறப்பின் துவக்கம் ஆசையின் தூண்டலால் அமைகிறது.

பாபங்களும் , புண்ணியங்களும் அற்ற சம நிலையை அடைவதே பிறப்பற்ற நிலையைத் தரும் , அதுவே ஒவ்வொரு மனிதரும் காண வேண்டிய உன்னதமான நிலையாகும்.

அந்த நிலையை எல்லோரும் இப்பிறப்பிலேயே அடைந்திட விரும்பு கின்றேன்.

வளமோடு வாழுங்கள் , வாழும் நாளெல்லாம்.

அன்புடன் கருணாகரன்.

Wednesday, January 1, 2014

ஸ்படிகமணி மாலை அணிவது நல்லதா ?

அன்பு நண்பர்களே , வணக்கம்.
ஸ்படிகமணி மாலை அணிவது நல்லதா ?

கோவில்களிலும் , மணிமாலை விற்பனை செய்யும் கடைகளிலும் , காதி கிராப்ட் , பூம்புகார் போன்ற விற்பனை நிலையங்களிலும் ஸ்படிகமணி மாலைகள் விற்பனை செய்யப்படுகின்றன.
ஸ்படிகம் எப்படி உற்பத்தி ஆகின்றது ? அதை மாலையாக்கி அணிந்து கொள்வதால் என்ன பயன் ? அதனை ஏன் அணிய வேண்டும் ? பார்க்கலாம்.
படிகாரம் என்பதும் ஸ்படிகம் என்பதும் வேறு வேறு.
சிறு சிறு காயங்கள் படும் இடத்தில் படிகாரத்தை நீரில் தொட்டு லேசாக தடவினால் காயமான இடம் செப்டிக் ஆகாமல் தடுக்கப்படும். இதனை பெரும்பாலும் சலூன்களில் பயன்படுத்துவதை பார்க்கலாம்.
சில இடங்களில் படிகாரத்தை திருஷ்டிக்காக கருப்பு கயிற்றில் கட்டி வாசலில் தொங்க விட்டிருப்பார்கள். மேலும் சில சித்த வைத்திய தேவைகளுக்கும் படிகாரம் பயன்படுத்தப்படுகிறது .
ஆனால் ஸ்படிகம் முற்றிலுமாக மாறுபட்டது.
பலநூறு ஆண்டுகளாக பூமிக்கு அடியில் உறைந்து போகும் நீர் பாறைகளாக உருப்பெற்று விடும். அந்த நீர்ப்பாறைகளை வெட்டி எடுத்து அதில் உள்ளே அழுக்கில்லாத, தூசிகள் இல்லாத, கம்பிகள் இல்லாத, உடைசல்கள் இல்லாத, தூய்மையான கற்களை தேர்ந்தெடுத்து அதனை பலவித அளவுகளில் , உருண்டையாகவும் , பட்டைதீட்டியும் தயாரித்து அதில் துவாரமிட்டு மாலையாக்கி விற்பனை செய்யப்படுகிறது. இதுவே ஸ்படிக மாலை எனப்படுகிறது.
இந்த பாறைகள் , பெரும் பெரும் மலையின் பாறைகள் போலில்லாமல் ஆறு பட்டை கொண்ட தூண்கள் போலவும் , ஏழு பட்டைகள் கொண்ட குச்சிகள் போலவும் பூமிக்கு அடியில் கொட்டிக் கிடப்பதுண்டு. அதில் எல்லாம் தேர்ந்தெடுத்து கொஞ்சமும் பழுதில்லாத உள்ளே புகையோ , கருப்போ இல்லாத சுத்தமான ஸ்படிகங்களை மாலையாக்கி விற்பனை செய்கிறார்கள் .
இந்த ஸ்படிக குச்சி வகைகளை பாலிஷ் செய்து ரெய்க்கி , ஹீலிங் பயிற்சிக்கு பயன்படுத்துவதும் உண்டு.
உயர்ந்த தான ஸ்படிகமணி மாலையை நீரில் போட்டால் தெரியாது , நீரோடு நீராக ஒன்றி இருக்கும் , தனியாக தெரியாது.

முதல் தரம் , இரண்டாம் தரம் , மூன்றாம் தரம் என பத்தாம் தரம் வரை ஸ்படிக மாலைகள் கிடைக்கின்றன.
முதல் தரமாலை 108 மணிகளைக் கொண்டது சுமாரான அளவு உள்ளது ரூ.300 முதல் கிடைக்கிறது.
அதில் உள்ள 108 மணிகளும் ஒரே மாதிரியான அளவிலும் , மிகவும் துல்லியமானதாகவும், நீர்த்துளிகளை கோர்த்தது போல் இருக்கும் , முதல்தர ஸ்படிகமணி மாலைதான் நல்லது.  
பூம்புகார் , காதி கிராப்ட் , மற்றும் சில கடைகள் நல்ல ஸ்படிகமணிகளுக்கு இடையில் மிக சாதாரணமான ஸ்படிகமணிகளை இணைத்து விற்கின்றார்கள். அது நல்லதல்ல.
துல்லியமற்றதும் , ஊடுருவும் தன்மையற்றதும் , வெள்ளையாகவும் இருக்கும் ஸ்படிகமணி மாலைகள் எதற்கும் உபயோகமற்றதாகும்.
அப்படி என்னதான் இருக்கின்றது அந்த உயர்ந்த ஸ்படிகமணி மாலையில் ?

மனிதர்காகிய நாம் ஒருநாளில் விடும் மூச்சு எண்ணிக்கை என்ன தெரியுமா?
சராசரியாக 21,600 மூச்சாகும்.
நாம் சரியான விகிதத்தில் மூச்சு விடுவோமானால் ஒருநாளில் 21600 மூச்சு விடுவோம். ஆனால் இன்றைய பரபரப்பு உலகில் முப்பதாயிரம் வரை விடுவதாக சொல்கிறார்கள். (இதனால் ஆயுள் குறையும்).
இந்த ஸ்படிக மணி ஒன்று, ஒரு மணி நேரத்திற்கு 21600 அதிர்வலைகளை வெளிப்படுத்துவதாக கண்டறிந்திருக்கின்றார்கள்.
அப்படியானால் நம் கழுத்தில் அணியும் 108 ஸ்படிகமணிகள் கொண்ட மாலை எவ்வளவு அதிர்வலைகளை நம்மைச் சுற்றிலும் பரவிடச் செய்யும் என்று எண்ணிப் பாருங்கள்.
ஒரு அரண்போல நம்மை பாதுகாக்கும் முழுமையான கவசமாக முதல்தர ஸ்படிகமணி மாலை விளங்குகிறது.
அதனால் என்ன ?
தெய்வ அருள் , மனஅமைதி, சாந்தம் , நல்ல சிந்தனை , பரோபகார செயல்கள், தெளிவான அறிவு , தீர்க்கமான முடிவு போன்ற அற்புதங்களை நம்முள் நிகழ்த்தும் அதிசய கருவியாகும்.
மேலும் ..
ஸ்படிகமணி மாலை அணிந்து கொண்டவர்களுக்கு , அவர்களிடம் சொல்லப்படும் , அவர்கள் கேள்விப்படும் , பார்க்கும் எந்த சோகமான செய்தியும் , காட்சியும் அவர்களுக்கு உள்ளே புகமுடியாது , அதனால் அவர்களை பாதிக்காது. இல்லாவிடில் ஒருவர்  கேள்விப்படும் அல்லது அவரிடம் சொல்லப்படும் , அவர் பார்க்கும் எந்த சோகமான செய்தியும் அவரை பல நாட்களுக்கு மனவேதனை அடையச் செய்யும். (இது உபாசகர்களுக்கு பொருந்தும்.)
இது ஒரிஜனலான முதல்தர ஸ்படிகமணி மாலைக்கு மட்டுமே பொருந்தும்.
ஸ்படிகமணி மாலையுடன் வேறு எந்த மணிகளையும் சேர்த்து மாலை அணியக்கூடாது .(ருத்ராட்சமாக இருந்தாலும் சேர்க்கக் கூடாது அதனை தனியாக அணிந்து கொள்ளலாம்) கீழே உள்ளது போல் அணிவது தவறு. 

கொஞ்சம் தரமற்ற ஸ்படிகமணி மாலையாக இருந்தாலும் அது செயல்படாது.
கவனித்து பார்த்து வாங்குங்கள் , நிறைவான பலன் பெறுங்கள்.
வளமோடு வாழுங்கள் , வாழும் நாளெல்லாம்.

அன்புடன் கருணாகரன்.  

Saturday, December 21, 2013

ஆசையின் திருமுகம்


அன்பு நண்பர்களே , வணக்கம்.
ஆசையின் திருமுகம்

ஆசையின் திருமுகம் என்பது எல்லோருக்கும் அறிமுகமானது , ஆசையின் விளைவினால் உருவாகும் கோரமுகம் என்பது எல்லோரும் உணர்ந்தது.

திருமுகம் என்பதற்கும் கோரமுகம் என்பதற்கும் உள்ள வித்தியாசம் அனுபவப்பட்டவர்களுக்கு மிக தெளிவாக விளங்கும்.

ஆசையின் ஆரம்பம் எல்லோருக்கும் சுகமாக இருந்தாலும் , ஆசையின் முடிவு பலருக்கு சுகமாக இருப்பதில்லை.

காரணம், ஆசையின் பின்னே பயணம் போகும்போது, மனிதர்கள் அதனால் ஏற்படும் பின் விளைவுகளை பற்றி சிந்திப்பதில்லை . பின் விளைவுகளை சந்திக்கும் போது “அடாடா இப்படியாகிவிட்டதே இனிமேல் அம்மாதிரி நடக்கக்கூடாது என்று தீர்மானிப்பதும் இல்லை – மாறாக – “விடு விடு அடுத்த முறை பார்த்துக் கொள்ளலாம் என்று எண்ணி மீண்டும் ஒரு கோர விளைவுக்கு தங்களை தயார் செய்து கொள்கின்றார்கள்.

ஆசையின் செயல் எவ்வாறு நிகழ்கின்றது ?
ஏன் நம்மை அது பாதிப்பது நமக்கே தெரிவதில்லை ?

ஆசையின் செயல் எவ்வாறு நிகழ்கின்றது ?
பார்ப்போமா !....

ஆசை என்பது எப்போதும் நம்மிடம் உள்ள எதன் மீதும் நமக்கு துளியும் வருவதில்லை (அதுதான் நம்மிடம் இருக்கின்றதே) எது நம்மிடம் இல்லையோ அதன் மீதே நாம் பெரும்பாலும் ஆசையுறுகிறோம்.
நமது ஆளுகைக்கு உட்பட்ட எதனையும் நாம் ஆசைப்படுவதில்லை . அதற்காக சிரமப்படுவதில்லை ஆனால் நம்மிடம் இல்லாத, மற்றவர்களிடம் உள்ள “எதையும் நாம் ஆசைப்பட கொஞ்சமும் தயங்குவதில்லை

இந்த பழக்கம் நமக்கு இப்போது வந்ததல்ல , மனிதர்கள் ஒவ்வொருவரும் அவர்கள் குழந்தையாக இருந்த போதே அவர்களுள் உருவானதாகும்.
குழந்தைகள் எப்போதும் தன்னிடமுள்ள விளையாட்டு பொருளைக்காட்டிலும் தனது சகோதரன் அல்லது பக்கத்து வீட்டு குழந்தைகளிடம் உள்ள விளையாட்டு பொருளையே கேட்டு அடம்பிடித்து அழும்.

அது மலிவுவிலை பொருளாக இருந்தாலும் அதனையே விடாமல் கேட்கும். அப்பாவோ , அம்மாவோ எவ்வளவு சமாதானம் சொன்னாலும் சமாதானம் ஆகாது. அதனை வாங்கித் தந்தோ அல்லது குழந்தையை அடித்தோ அதன் ஆசையை மறக்கச் அல்லது மாறச் செய்வார்கள்.

இந்த சிறுவயது ஆசை  எல்லா வயதிலும் விடாமல் துரத்தி இளமைக் காலம் , முதுமைக்காலம் என தொடர்ந்து பேராசையாக வளர்ச்சி பெற்று உருமாறி வருகின்றது.

மேலும் எளிதில் கிடைக்கக்கூடிய எதையும் மனிதர்கள் ஆசைப் படுவதில்லை, அது லௌகீகமாக இருந்தாலும் , ஆன்மீக , ஞான மார்க்கமாக இருந்தாலும் மனிதர்கள் ஆசைப்படுவது நடக்கவோ, கிடைக்கவோ, பெறமுடியாததாகவே இருப்பதைத்தான் ஆசைப்படுகிறார்கள்.

மனிதர்கள் ஆசைப்படுவதை தவறென்று சொல்லமுடியாது. ஆனால் கிடைக்க முடியாமல் போனால் ஏற்படும் மனவேதனையும் , மன உளைச்சலும் மனிதர்களின் எல்லாவித முன்னேற்றத்தினையும் தடுக்கும் பின்னாளில் மிகவும் பாதிக்கும்.

அடுத்து . .

ஏன் ஆசை நம்மை பாதிப்பது நமக்கே தெரிவதில்லை ?

ஒரு உதாரணம் பார்ப்போம் .

உலகம் உருண்டையாக இருப்பதாக விஞ்ஞானம் சொல்வதை எல்லோரும் ஒப்புக்கொண்டிருக்கின்றோம் உண்மையும் அதுதான்.

ஆனால் நாம் நடந்தே உலகை சுற்றி வந்தாலும் எங்குமே வழுக்கிக்கொண்டு கீழே விழ முடியாது அல்லவா ? காரணம் என்ன ? நாம் அந்த உருண்டையின் மேலேயே நிற்கிறோம் – உலகை தாண்டி நின்றால்தான் உலகம் உருண்டையாக தெரியும் – அதனால்தான் நமக்கு உலகம் உருண்டை வடிவமாக எங்குமே தெரியாமல் ஒரு நீண்ட சதுரமாக தெரிகிறது.

அதுபோலவே முழுக்க முழுக்க ஆசையின் வடிவமாக நாமே மாறி விட்டதால் , அதீதமான ஆசையின்பால் நாம் ஈர்க்கப்படுவதை உணரவே முடியவில்லை. மேலும் நமக்கு ஆசையை முறைபடுத்துவதும் இயலாமல் போகின்றது.

நாம் ஆசையோடு இருப்பதையே நாம் உணராமல் இருப்பது அப்படித்தான்.
இதனைப் படிக்க நேரும் நண்பர்கள் தங்களது ஆசையை தங்களது கட்டுக்குள் வைப்பார்கள் எனும் அடியேனது எண்ணமும் ஒருவித ஆசைதானே . 
ஆசை என்பது ஒவ்வொரு உயிருள்ள ஜீவனுக்கும் கண்டிப்பாக வேண்டும்.
ஆசையில்லையேல் எதையும் சாதிக்கமுடியாது , ஆனால் ஆசையை வகைப்படுத்த தெரிந்தவர்கள் ஆசைப்படுவதே சிறந்ததாகும்.

மனம் எண்ணும் எதன்மீதும் ஆசையை வைத்தால் ஆசை நிறைவேறாததுடன் வாழ்வும் வளமற்று போகும்.

மனதில் உண்டாகும் ஆசையை வரையறைக்குள் வைப்பது நம் வாழ்வை வளப்படுத்த நாம் எடுக்கும் முயற்சி.

மனதில் தோன்றும் வரைமுறையற்ற ஆசையின் பின்னே போவது நம் வாழ்வை சீரழிக்க நாமே எடுக்கும் முயற்சி.

மண்ணாசை , பொன்னாசை , பெண்ணாசை மட்டுமல்ல , இறைவா, உன் பதம் தந்தருள்வாய் எனும் ஞானியின் வேண்டுதலும் ஆசையே அல்லவா?

ஆகவே , ஆசை எதுவானாலும் அதனை நெறியுடனும் , முறையுடனும் , யாரையும் , எந்த வகையிலும் , உடலோ, மனமோ பாதிக்காத வகையில் மனிதர்கள் ஆசைகொண்டு நடப்பார்களேயானால் , அவர்களது ஆசை நிறைவேறுவது மட்டுமல்ல , ஆசையின் விளைவு திருமுகமாக நிலைத்து நிற்கும் என்பது உண்மை.

முறையற்ற ஆசையின் விளைவுகள் கோரமுகம் காட்டுவது மட்டுமல்ல , மனித வாழ்வின் இறுதியை நாடச்செய்யும் பேராபத்தை விளைவித்து விடும் என்பதும் மாறாத உண்மையே.

ஆசைப்படுங்கள் , அது உங்கள் கட்டுக்குள் இருக்கட்டும். ஆசையின் கட்டுக்குள் நீங்கள் போகாதீர்கள் .

ஆசைப்படுங்கள் , அது உங்கள் அவசியமானதாக இருக்கட்டும். எதற்கும் இருக்கட்டுமே என்று ஆசைப்படாதீர்கள்.

ஆசைப்படுங்கள் , அந்த ஆசை குறைந்த ஆயுள் உள்ளதாக இருக்கட்டும் , ஆசை உங்கள் ஆயுளை குறைப்பதாக இருக்கவேண்டாம்.

ஆசைப்படுங்கள் , அது பொது நலமாக இருக்கட்டும் , ஆசை உங்கள் சுயநலமாக இருந்தால் கண்டிப்பாக அது கோரமுகத்தினை காட்டிவிடும்.

வளமோடு வாழுங்கள் , வாழும் நாளெல்லாம் .
அன்புடன் கருணாகரன்.

Monday, December 9, 2013

மந்த்ரமும் மாந்த்ரீகமும் தொடர்ச்சி . . . 6


அன்பு நண்பர்களே, வணக்கம்.
மந்த்ரமும் மாந்த்ரீகமும் தொடர்ச்சி . . . 6

நாம் அறிந்து கொள்ள முற்படும் யோகம் மூலிகை மந்த்ரம் பகுதியில் மூலிகைகளை பயன்படுத்தும் விதம் பற்றிய பாகத்தை காணப் போகின்றோம்.

சென்ற பதிவின் இறுதியில் நாம் கண்டது . . . .
ஒவ்வொரு மூலிகைக்கும் அதனை நாம் எடுத்துக்கொள்வதற்கு குறிப்பிட்ட நாளும் , நட்சத்திரமும், மந்திரமும் உண்டு .

மூலிகை சாபம் நீக்கவும் , எடுக்கவும் என்ன செய்ய வேண்டும் , எப்போது செய்ய வேண்டும் , எப்படி செய்ய வேண்டும் என்பதனை விரிவாக பார்ப்போம். “ . . .

ஸ்ரீ ஸ்ரீ மகா குருவான கருவூரார் மூலிகைகளையும் `அதற்குரிய மந்த்ரங்களையும் தெளிவாக குறிப்பிடுகின்றார்.

அவையாவன :

வசிய மூலிகையில் ஒன்றான சீதாதேவி செங்கழுநீர் எனும் மூலிகையை பறிக்கும் முன் “ஓம் ஸ்ரீம் லட்சுமி தேவி “ என்று செடியின் முன் நின்று மந்த்ரம் ஜபித்து , அந்தச் செடியின் ஆணிவேரை அறுத்து விடாமல் எடுத்து பயன்படுத்த வேண்டும் .

வசிய மூலிகையில் ஒன்றான பொன்னூமத்தை எனும் மூலிகையை பறிக்கும் முன் “கிறீணி வருணியாரே மதர்நாமி சீவி வசியம் பவ் வே  “ என்று செடியின் முன் நின்று மந்த்ரம் ஜபித்து , அந்தச் செடியின் ஆணிவேரை அறுத்து விடாமல் எடுத்து பயன்படுத்த வேண்டும் .

வசிய மூலிகையில் ஒன்றான கரும் செம்பை எனும் மூலிகையை பறிக்கும் முன் அதற்கு தாமரை அல்லது கற்றாழை நூலில் காப்புக்கட்டி பூஜைகள் செய்து “ஓம் ஓம் சியாமள ரூபி சாம்பவி கிறீங்கி விலிங் கிறிஞ்சாதகி “ என்ற மந்திரம் உருவேற்றி மூன்றாம் நாள் அந்தச் செடியின் ஆணிவேரை அறுத்து விடாமல் எடுத்து பயன்படுத்த வேண்டும் .

வசிய மூலிகையில் ஒன்றான வெண் குன்றிமணிக் கொடி எனும் மூலிகையை பறிக்கும் முன் அமாவாசையன்று காப்புக்கட்டி பூஜை செய்து “வம்மம் வசவிச நிறை மிருக வசீகரி ஓம் “ என்று செடியின் முன் நின்று மந்த்ரம் ஜபித்து , அந்தச் செடியின் ஆணிவேரை அறுத்து விடாமல் எடுத்து பயன்படுத்த வேண்டும் .

வசிய மூலிகையில் ஒன்றான மஞ்சள் கரிசலாங்கண்ணி எனும் மூலிகையை பறிக்கும் முன் ஒரு வெள்ளிக்கிழமையன்று காப்புக்கட்டி மறு வெள்ளிகிழமை     “ ஓம் கிலியுஞ் சவ்வு மஹி “ என்று செடியின் முன் நின்று மந்த்ரம் ஜபித்து , அந்தச் செடியின் ஆணிவேரை அறுத்து விடாமல் எடுத்து பயன்படுத்த வேண்டும் .

******

மோகன மூலிகையில் ஒன்றான வெண் ஊமத்தை எனும் மூலிகையின் இலையை  பறிக்கும் முன் “ மா இதான் மத்தம் தொன்மத்தி ஓம் ஆம் இலீஞ் சத்திசன மோகினி “ என்று செடியின் முன் நின்று மந்த்ரம் ஜபித்து , அந்தச் செடியின் ஆணிவேரை அறுத்து விடாமல் எடுத்து பயன்படுத்த வேண்டும் .

மோகன மூலிகையில் ஒன்றான மருளுமத்தை எனும் மூலிகையை  பறிக்கும் முன் “ ஓம் தேவ மோகம் வருக வருக “ என்று செடியின் முன் நின்று மந்த்ரம் ஜபித்து , அந்தச் செடியின் ஆணிவேரை அறுத்து விடாமல் எடுத்து பயன்படுத்த வேண்டும் .

மோகன மூலிகையில் ஒன்றான ஆலம் விழுது எனும் மூலிகையை  பறிக்கும் முன் “ ஓம் தேவ மோகம் வருக வருக “ என்று செடியின் முன் நின்று மந்த்ரம் ஜபித்து , அந்தச் செடியின் ஆணிவேரை அறுத்து விடாமல் எடுத்து பயன்படுத்த வேண்டும் .

******

உச்சாடன மூலிகையில் ஒன்றான நரி மிரட்டி எனும் மூலிகையை  பறிக்கும் முன் செடிக்கு வியாழனன்று காப்புக்கட்டி “ சடாய் சடாய் தும்ம சடாய் சடாய் “ என்று செடியின் முன் நின்று மந்த்ரம் ஜபித்து , அந்தச் செடியின் ஆணிவேரை அறுத்து விடாமல் எடுத்து பயன்படுத்த வேண்டும் .

உச்சாடன மூலிகையில் ஒன்றான மான் செவி கள்ளி எனும் மூலிகையை  பறிக்கும் முன் செடிக்கு மன மகிழ்வுடன் வாசனை மலர்கள் தூவி தூபமிட்டு , தீபம் காட்டி  “ அருணகிரி ஆங்கார சத்தி சத்தி தாய் உச்சாடி “ என்று செடியின் முன் நின்று மந்த்ரம் ஜபித்து , அந்தச் செடியின் ஆணிவேரை அறுத்து விடாமல் எடுத்து பயன்படுத்த வேண்டும் .

உச்சாடன மூலிகையில் ஒன்றான ஆரண முரி எனும் மூலிகையை  பறிக்கும் முன் செடியின் வேருக்கு காப்புகட்டி ,  “ ஓம் கோர கோர ரூபி மாயி சடாய் சடாய் “ என்று செடியின் முன் நின்று மந்த்ரம் ஜபித்து , அந்தச் செடியின் ஆணிவேரை அறுத்து விடாமல் எடுத்து பயன்படுத்த வேண்டும் .

*******

ஸ்தம்பனம் மூலிகையில் ஒன்றான கட்டுக் கொடி எனும் மூலிகையை  பறிக்கும் முன் செடியின் வேருக்கு காப்புகட்டி ,  “ சீலிகிளால் பேத்துலால் பேத்து சிவசிவா“ என்று செடியின் முன் நின்று மந்த்ரம் ஜபித்து , அந்தச் செடியின் ஆணிவேரை அறுத்து விடாமல் எடுத்து பயன்படுத்த வேண்டும் .(ஜலஸ்தம்பனம்)


ஸ்தம்பனம் மூலிகையில் ஒன்றான பால்பிரண்டி (பாற் குரண்டி)  எனும் மூலிகையை  பறிக்கும் முன் ,  “ நீலகண்டி விசைய விசைய உயர்திற அத்திற் அகலந் தோபா “ என்று செடியின் முன் நின்று மந்த்ரம் ஜபித்து , அந்தச் செடியின் ஆணிவேரை அறுத்து விடாமல் எடுத்து பயன்படுத்த வேண்டும் .(சுக்லஸ்தம்பனம்)

ஸ்தம்பனம் மூலிகையில் ஒன்றான நத்தை சூரி எனும் மூலிகையை  பறிக்கும் முன் செடியின் வேருக்கு காப்புகட்டி ,  “ ஓம் வச்சிர ரூபி சூரி சூரிம, காவீரி சுவாகா “ என்று செடியின் முன் நின்று மந்த்ரம் ஜபித்து , அந்தச் செடியின் ஆணிவேரை அறுத்து விடாமல் எடுத்து பயன்படுத்த வேண்டும் .(ஜெயஸ்தம்பனம்)

*******


ஆகர்ஷனம் மூலிகையில் ஒன்றான சிறு முன்னை எனும் மூலிகையை  பறிக்கும் முன் செடியின் வேருக்கு காப்புகட்டி ,  “ சர்வ ஆகமுஷ்ணி சுவாகா “ என்று செடியின் முன் நின்று மந்த்ரம் ஜபித்து , அந்தச் செடியின் ஆணிவேரை அறுத்து விடாமல் எடுத்து பயன்படுத்த வேண்டும் .

ஆகர்ஷனம் மூலிகையில் ஒன்றான சிறியா நங்கை எனும் மூலிகையை  பறிக்கும் முன் செடிக்கு கரி நாளில் காப்புகட்டி ,  “ சர்வ பிசாகர்ஷனி சர்வ மோகினி சூழ் கிருஷ்ணி வா வா  “ என்று செடியின் முன் நின்று மந்த்ரம் ஜபித்து , அந்தச் செடியின் ஆணிவேரை அறுத்து விடாமல் எடுத்து பயன்படுத்த வேண்டும்.


ஆகர்ஷனம் மூலிகையில் ஒன்றான அழுகண்ணி எனும் மூலிகையை  பறிக்கும் முன் செடிக்கு திங்கள் கிழமை காப்புகட்டி ,  “ சர்வ சித்த மோகினி , சர்வா கிருஷ்ணி சாம்பஷ சுவாகா “ என்று செடியின் முன் நின்று மந்த்ரம் ஜபித்து , அந்தச் செடியின் ஆணிவேரை அறுத்து விடாமல் எடுத்து பயன்படுத்த வேண்டும்.

*******

பேதனம் மூலிகையில் ஒன்றான கோழியவரை எனும் மூலிகையை  பறிக்கும் முன் செடிக்கு திங்கள் கிழமை காப்புகட்டி சித்திரை நட்சத்திரத்தன்று  “ அரி அர தேவி , பிரம தேவி சர்வ தேவியே தீர் “ என்று செடியின் முன் நின்று மந்த்ரம் ஜபித்து , அந்தச் செடியின் ஆணிவேரை அறுத்து விடாமல் எடுத்து பயன்படுத்த வேண்டும்.

பேதனம் மூலிகையில் ஒன்றான செம்பசலை கீரை எனும் மூலிகையை  திருவாதிரை அன்று காப்பு கட்டி,  “ சீறியுங்  கீறியுங் சீறியும் “ என்று செடியின் முன் நின்று மந்த்ரம் ஜபித்து , அந்தச் செடியின் ஆணிவேரை அறுத்து விடாமல் எடுத்து பயன்படுத்த வேண்டும்.

பேதனம் மூலிகையில் ஒன்றான கீழாநெல்லி எனும் மூலிகையை  புதன் கிழமை  அன்று காப்பு கட்டி வியாழன் அன்று தேங்காய் உடைத்து அளமை பெறும் ,       “ பூமி வித்தேஷணி அஞ்சணி மூலி சகல சர்வ பழமை பல பதார்த்தத் தெரிய சுவாகா “ என்று செடியின் முன் நின்று மந்த்ரம் ஜபித்து , அந்தச் செடியின் ஆணிவேரை அறுத்து விடாமல் எடுத்து பயன்படுத்த வேண்டும்.

*******

மாரணம் மூலிகையில் ஒன்றான கார்த்திகை கிழங்கு எனும் மூலிகையை  கார்த்திகை நட்சத்திரத்தன்று மஞ்சள் நூல் காப்பு கட்டி ஆடு பலி கொடுத்து ,      “ சரவணபவா நமா “ என்று செடியின் முன் நின்று மந்த்ரம் ஜபித்து , அந்தச் செடியின் ஆணிவேரை அறுத்து விடாமல் எடுத்து பயன்படுத்த வேண்டும்.


மாரணம் மூலிகையில் ஒன்றான காஞ் சொறி வேர் எனும் மூலிகையை  பௌர்ணமிக்குப் பின் வரும் முதல் திதியில் காப்பு கட்டி மறுநாள் மத்தியானம்  அந்தச் செடியின் ஆணிவேரை அறுத்து விடாமல் எடுத்து நீரில் ஆட்டி சுத்தப்படுத்தி பயன்படுத்த வேண்டும். (மந்திரமில்லை)

மாரணம் மூலிகையில் ஒன்றான நச்சுப்புல் எனும் மூலிகையை  மன மகிழ்வுடன்  பூஜை செய்து காப்பு கட்டி , “ விருகனீ விஷதரி “ என்று செடியின் முன் நின்று மந்த்ரம் ஜபித்து , அந்தச் செடியின் ஆணிவேரை அறுத்து விடாமல் எடுத்து பயன்படுத்த வேண்டும்.

சில காரணங்களுக்காக எல்லாவித  மூலிகைகளுக்கும் மந்திரங்கள் சொல்லப் படவில்லை.
முழு விபரமும் அறியவும் , பயன்படுத்தும் முறை தெரியவும்  தகுந்த குரு வேண்டும்.
பயிற்சியில் முழுமை கண்டால் குருவே உங்களை வந்தடைவார் .


ஸ்ரீ ஸ்ரீ மகா குரு அகஸ்திய பெருமானானவர் அஷ்ட கர்மாக்களுக்கும் உரிய கிழமைகளை சொல்லும் போது ...

வசியம் – ஞாயிறு , மோஹனம் – திங்கள் , பேதனம் – செவ்வாய் , ஸ்தம்பனம் - புதன் , உச்சாடனம் – வியாழன் , ஆக்ருஷ்ணம் – வெள்ளி , மாரணம் – சனி உகந்ததென்கிறார்.

ஸ்ரீ ஸ்ரீ மகா குரு அகஸ்திய பெருமானானவர் அஷ்ட கர்மாக்களுக்கும் உரிய திக்குகளை குறிப்பிடும் போது ...

வசியம் – கிழக்கு , மோகனம் – வடக்கு  , பேதனம்  - வடகிழக்கு , ஸ்தம்பனம் – தென்மேற்கு , உச்சாடனம் – வடமேற்கு , ஆக்ருஷ்னம் – மேற்கு , மாரணம் – தெற்கு என உபதேசிக்கின்றார்.

·         மேலும் எல்லாவித கர்மங்களுக்கும் ஈசான்யம் சிறந்ததெனவும் அருள்பாலிக்கின்றார். 

தீபங்களையும் , மந்த்ரங்களையும் குறிப்பிடும்போது :

கிழமை : ஞாயிறு , வஸ்திரம் : சிவப்பு பட்டு , திசை : கிழக்கு நோக்கி  வில்வ மரப் பலகையில் அமர்ந்து , திரி : தாமரை நூல் ,நெய் : காராம் பசு (கருத்த நிற முள்ள பசு ) நெய் : தீபம் ஏற்றி யநமசிவ என்ற மந்த்ரத்தை லட்சத்தி எட்டு முறைகள் சொல்லி  ஜபம் செய்ய வசியம் சித்திக்கும் .

கிழமை : திங்கள்  , வஸ்திரம் : மஞ்சள் பட்டு , திசை : வடக்கு நோக்கி  மான் தோலில் அமர்ந்து , திரி : கன்னி நூல் , எண்ணை : நல்லெண்ணெய் : தீபம் ஏற்றி மசிவயந என்ற மந்த்ரத்தை லட்சத்தி எட்டு சொல்லி முறைகள் ஜபம் செய்ய மோகனம் சித்திக்கும் .

கிழமை : செவ்வாய் , வஸ்திரம் : சாதாரண வெள்ளை  , திசை : வடகிழக்கு நோக்கி  பளிங்கு கல்லினால் ஆன ஆசனத்தில் அமர்ந்து , திரி : கந்தல் துணி  , எண்ணை : புன்னை எண்ணை : தீபம் ஏற்றி யவசிநம என்ற மந்த்ரத்தை லட்சத்தி எட்டு முறைகள் சொல்லி  ஜபம் செய்ய பேதனம் சித்திக்கும் .

கிழமை : புதன் , வஸ்திரம் : சாதாரண பட்டு  , திசை : தென்மேற்கு நோக்கி  ஆல மர பலகையில் அமர்ந்து , திரி : எவ்விதமான திரியும் , எண்ணை : ஆதளைக் கொட்டை  எண்ணை : தீபம் ஏற்றி நமசிவய என்ற மந்த்ரத்தை லட்சத்தி எட்டு முறைகள் சொல்லி  ஜபம் செய்ய ஸ்தம்பனம் சித்திக்கும் .

கிழமை : வியாழன் , வஸ்திரம் : பச்சை பட்டு  , திசை : வடமேற்கு நோக்கி பலா மர பலகையில் அமர்ந்து , திரி : இலவம்பஞ்சு , எண்ணை : புங்க எண்ணை : தீபம் ஏற்றி வயநமசி என்ற மந்த்ரத்தை லட்சத்தி எட்டு முறைகள் சொல்லி  ஜபம் செய்ய உச்சாடனம் சித்திக்கும் .

கிழமை : வெள்ளி , வஸ்திரம் : சாதாரண பட்டு  , திசை : மேற்கு நோக்கி  சண்பக மர பலகையில் அமர்ந்து , திரி : வெள்ளெருக்கு நார் , எண்ணை : ஏரண்டத்தெண்ணை : தீபம் ஏற்றி வசியநம என்ற மந்த்ரத்தை லட்சத்தி எட்டு முறைகள் சொல்லி  ஜபம் செய்ய ஆக்ருஷ்ணம் சித்திக்கும் .

கிழமை : சனி , வஸ்திரம் : சாதாரண பட்டு  , திசை : தெற்கு நோக்கி  அத்தி மரத்தால் ஆன பலகையில் அமர்ந்து , திரி : வேலிப்பருத்தி , எண்ணை : வேப்ப எண்ணை : தீபம் ஏற்றி யசிவநம என்ற மந்த்ரத்தை லட்சத்திஎட்டு முறைகள் சொல்லி  ஜபம் செய்ய மாரணம் சித்திக்கும்.

சில சூட்சும வார்த்தை விளக்கங்கள் :
கன்னி நூல் காப்பு கட்டி  என்பது தாமரை மொட்டு உள்ள (பூ பூக்கும் முன் )  தண்டினை எடுத்து அதிலிருந்து எடுக்கும் (மகரந்த இழை) நூலினால் குறிப்பிட்ட மூலிகையில் மூன்று முறை சுற்றுவது .

மஞ்சள் நூலால் காப்பு கட்டி என்றால் விரலி மஞ்சளை முனை முறியாமல் எடுத்து அறைத்து , அதில் மேற்படி கன்னி நூலை புரட்டி எடுத்து  பின்னர் உலர்த்தி வைத்துக் கொண்டு பயன்படுத்துவதாகும்.

பொதுவான மூலிகை சாப விமோசன மந்திரம் .

 "ஓம் ஸ்ரீம் ஹ்ரீம், ஐம் க்லீம் ஸெளம், ஸர்வ மூலி சாபம் நாசய நாசய, சித்தர் சாபம் நாசய நாசய , தேவ முனி , அசுர முனி சாபம் நாசய நாசய, ஸர்வ ஸர்ப்ப சாபம் நாசய நாசய ஹூம்பட் ஸ்வாஹா , என்பதாகும்.

அன்பிற்குரிய நண்பர்களே ,

யோகமும், சித்தும், மந்த்ரமும் , மாந்த்ரீகமும் நம் நலனுக்காக இறைவனால் உருவாக்கப்பட்டதேயன்றி பிறருக்கு தொல்லை கொடுக்க அல்ல என்பதனை உணர்ந்து செயல்படுங்கள்.

“ இன்றைய விதைப்பு நாளைய அறுவடை என்பதை
எப்போதும் , எந்த நிலையிலும் மறக்கவேண்டாம்

மந்த்ரமும் மாந்த்ரீகமும் தொடர்ச்சி முடிவுற்றது .

வளமோடு வாழுங்கள் , வாழும் நாளெல்லாம்.

அன்புடன் கருணாகரன்.
Related Posts Plugin for WordPress, Blogger...