என்னை தொடர்ந்து

வாருங்கள், நண்பரே வணக்கம். தங்கள் வருகையை பதிவு செய்யுங்களேன் !அன்புடன் கருணாகரன்6,இடைப்பாடி. அன்பர்களே ! முழுக்க முழுக்க தமிழில் திருக்கணித முறையில் ஜாதகம் கணிக்க வேண்டுமா? உங்கள் பெயர், பெற்றோர் பெயர், பிறந்த தேதி, மாதம் வருடம், பிறந்த இடம் போன்ற விபரங்களை தாருங்கள், உங்கள் ஜாதகம் கூரியர் மூலமாக உங்களுக்கு அனுப்பி வைக்கப்படும்.( நள்ளிரவில் இரவு 12.00 மணிக்கு மேல் காலை 7.00 மணிக்குள் பிறந்திருந்தால் விடிந்தால் என்ன கிழமை என குறிப்பிடவும்.K.செந்தில்குமார்,கணேஷ் கம்ப்யூட்டர்ஸ்,34,கடைவீதி, இடைப்பாடி,சேலம் மாவட்டம்-637101.

Saturday, December 31, 2016

உங்கள் கேள்வி அடியேன் பதில்

ஓம் நமசிவய :

கேள்வி :

 உயிர் வேறு ஆன்மா வேறு பின் ஏன் இரண்டும் ஒன்றாக சென்று வருகின்றன விளங்கவில்லை, விளக்கம் தாருங்கள்.

பதில் :

அன்பிற்குரிய அய்யா , உயிர் என்பதும் ஆத்மா என்பதும் ஒன்றே
ஆனால் ஆத்மா வேறு ஆன்மா வேறு.  ஆன்மா என்பது பூமியில் பிறந்துள்ள அனைத்து உயிர்களுக்கும் பொதுவானஒன்றே ஆனது. எம்பெருமான் எனும் மூல ஜோதியில் இருந்து உருவானது. ஆத்மா எனப்படும் உயிரானது பல பிறப்புகளில் தான் பெற்றிருந்த உடலால் செய்த பாபங்களையோ புண்ணியங்களையோ கரைப்பதற்க்காக கர்ம பூமியில்(பூலோகத்தில்) அவதரிக்கின்றது
அவ்வாறு அவதரிக்குங்கால் அதற்கு அதனை அது யார் என நினைவூட்டவும் ,அந்த உயிர் வந்த நோக்கம் தெரிவிக்கவும் அதனுடன்ஆன்மா பயணிக்கின்றது 

ஓம் நமசிவய .

எது தர்மம்? இதை சரியாக புரிந்து கொள்ள முடியவில்லை ஐயனே

தர்மம் எது ?
தர்மத்திற்கு ஒரு சிறு உதாரணம் சொல்கின்றேன் .
ஒரு நண்பரை நம் வீட்டுக்கு அழைக்கின்றோம் அவர் வருகின்றார் . நாம் அவரை அமரச்செய்து அவருக்கு வேண்டியவற்றை செய்கின்றோம்.
இப்போது நமது வீட்டிக்குள் நாம் அங்கும் இங்கும் செல்ல வேண்டியுள்ளதற்காக அவரை அதாவது நம் வீட்டிற்கு வந்துள்ள நண்பரை அவர் அமர்ந்துள்ள இடத்தில இருந்து நகரச் செய்வது , TV தெரியவில்லை கொஞ்சம் சாய்ந்து கொள்ளுங்கள் - அங்கு வேண்டாம் இங்கே வந்து அமர்ந்து கொள்ளுங்கள் என வேறு இடத்தில் அவரை எழுந்து அமரச் செய்வதும் தர்மம் இல்லாத செயலாகும்.

ஓம் நமசிவய

அப்படியானால் இன்று உலகில் நடைபெறும் அனைத்து காரியங்களுமே அதர்ம செயலே ஆகும்.
இது கலியின் பாதையில் செல்லும் லோக வர்த்தமான செயலாகும்.
இதிலிருந்தும் தப்புகின்றவனே மெய்ஞானவான் . துஷ்டர்களின் மத்தியில் இருந்த விதுரனைபோல 
.
ஒரே வரியில் சொல்வதென்றால் மனசாட்சிக்கு த்ரோகம் அதாவது உறுத்தாத விசயத்தை செய்வதே தர்மமாக எடுத்துக்கொள்ளாலாமா இந்த கலியில் .

நிச்சயமாக ... அருமை மிக சரியாக சொல்லிவிட்டீர்கள் ஓம் நமசிவய .
மிக்க நன்றி ஜி. திருச்சிற்றம்பலம்



ஓம் நமசிவய

உங்களால் உங்களுக்கு மாற்றம் உண்டு

ஓம் நமசிவய
அன்பிற்குரியோர்களே,
மகனின் கேள்வி
Prasah JM :

அந்த மூலவித்துவுக்கு தெரியுமல்லவா நான் என்பது யார் என்று..
அப்படி எனில் என் தவறுகளை என்னிடமிருந்தே மறைக்கின்றேனா..
என் தவறுக்களுக்கான காரணங்களை நானே உருவாக்கி நியாயப்படுத்திக்கொள்கின்றேனா..
என் தவறுகளும் தெரிந்தே செய்த தப்புகளுமே மனதில் தோன்றுகின்றது அப்பா..
தெளிவில்லாமல் தவிக்கின்றேன் அப்பா.
பதில் :

மகனே , இதில் குழப்பம் கொள்ள எதுவுமில்லை , மனிதனின் நற்செயலோ , தீயசெயலோ அவனால் ஏற்படுவதில்லை,

இயற்கையின் நீதியில் மனிதமனத்தின் ஆசைகள் எதுவாயினும் அது நிறைவேற்றப்படவேண்டும் .

ஒரு மனிதனோ வேறு ஜீவனோ ஏதேதோ ஆசைகளை உள்ளடக்கி வைத்திருக்கும்.

அவைகள் நிறைவேறாமலே அந்த ஜீவனின் ஆத்மா அதனிடமிருந்து பிரிந்திருக்கும்.

அவ்வாறான ஆத்மாக்களின் மறு பிறப்பில் அவைகளை நிறைவேற்றவேண்டிய கட்டாயத்தில் இயற்கை இருக்கின்றது.

ஆதலால்,

அந்த ஆத்மா தனது தீராத ஆசைகளை நிறைவேற்றிக் கொள்வதற்கான பூரண வாய்ப்பையும் உருவாக்கித் தருகின்றது.

தனது ஆசையானது இறைவழியைச் சார்ந்ததாக இருந்து அந்த ஆத்மா அந்த வாய்ப்பினை தனக்கு சாதகமாக பயன்படுத்தி தன்னை உயர்த்திக்கொண்டாலும்,

அல்லது

தனது ஆசையானது காம க்ரோத மார்க்கமாக இருந்து அதனை கடுமையை கையாண்டு நிறைவேற்றிக் கொண்டாலும் இயற்கை எவ்விதத்திலும் தடுக்காமல் நிறைவேற்றி வைக்கும் .

ஆனால் அதற்குண்டான மன சங்கடங்களையும், வேதனைகளையும், துன்பங்களையும், பிரிவையும் அந்த ஆத்மாவிற்குரிய மனிதன்,

மனைவி, குழந்தைகள், பெற்றோர், உற்றார், நண்பர்கள் மூலமாக கட்டாயம் அனுபவித்தே தீரவேண்டும்.

உதாரணமாக :

நாம் நமக்கு ஆசையாக இருக்கின்றதற்காக சில உணவுவகைகளை அவை நமக்கு ஒவ்வாது என்று தெரிந்தே உண்டுவிடுகின்றோம்.

ஆனால் அந்த செயலை நமது வயிறு எக்காரணம் கொண்டும்- செய்யாதே!! என்று நம்மை தடுப்பதில்லை – நம்மை நம் போக்கிலேயே விட்டு விடுகின்றது.

ஆனால் நாம் உண்டதின் பலனாக நமக்கு வரும் வயிறு சம்பந்தமான அல்லது உடல் சம்பந்தமான வலிகளையும் வேதனைகளையும்
நம்மோடு சேர்ந்து நமது வயிறும் அனுபவிக்கின்றதைப் போல என சொல்லலாம்.

பார்த்தது கண்கள், 

ஆசை கொண்டது மனது, 

எடுத்தாண்டது கைகள், 

உண்டது வாய், 

அனைத்தையும் செயலாக்கம் செய்தது மூளை ,

ஆனால் வேதனை அவைகளுக்கில்லை.

வேதனை முழுவதும் உடலுக்கு மட்டும் அல்லவா ?

இதைபோலவே இயற்கை நம்மை நம்போக்கில் விட்டு நம்மோடு சேர்ந்து அதுவும் துன்பப்படுகின்றது.

மாற்றம் காண்பது மனிதனிடமே உள்ளது. சீரிய சிந்தனைத்திறன் கொண்ட மனிதன் தன்னை முழுவதுமாக மாற்றிக் கொள்ளமுடியும்.

நாம் நமது மனதினை எக்காரணம் கொண்டும்
காம க்ரோத மதமாச்சர்யங்களில் சிக்கிகொள்ளாமல்
சிந்தையை சிதறவிடாமல்

எதுவரினும் சத்யமான பாதையை
நோக்கியே பயணித்தால்
எல்லாம் நலமாகவே முடியும் .

ஓம் நமசிவய.

Saturday, February 27, 2016

தீராத கடன்களை தீர்க்க எளிய வழி

மைத்ரேய முகூர்த்தம்

மிகவும் விசேஷமான இந்த முகூர்த்தம் – எவ்வளவு பெரிய கடன் இருந்தாலும் எளிமையாக தீர்த்து வைக்கும் கால நேரமாகும்.

செவ்வாய்க்கிழமையும் அசுவனி நட்சத்திரமும் சேருகின்ற நாளில் மேஷ லக்கினம் அமைந்துள்ள நேரம் மைத்ரேய முகூர்த்தம் எனப்படும்.

செவ்வாய்க்கிழமையும், அனுஷ நட்சத்திரமும் சேருகின்ற நாளில் விருச்சிக லக்கினம் அமைந்துள்ள நேரமும் மைத்ரேய முகூர்த்தமாகின்றது.

மேற்படி காலங்களில் லக்கினமும் நட்சத்திரமும் அமைந்து செவ்வாய்க்கிழமை அமையாது போனாலும் 75 % பலன்களை பெறலாம்.

செவ்வாய்க்கிழமை அமைந்தால் நிச்சயமாக 100 % பலன்களை பெறுவது திண்ணம்.
நீங்கள் செய்யவேண்டியது என்னவென்றால் .....

மேற்குறித்த நாட்களில் நீங்கள் பெருந்தொகையாக தரவேண்டிய கடன் தொகையில் கொஞ்சம் இந்த குறிப்பிட்ட நேரத்தில் சம்பந்தப்பட்டவருக்கு திருப்பி தரவேண்டும், அவ்வளவுதான் அந்த பெரும் தொகையானது சிறுக சிறுக அடைபட்டுவிடும். நமக்கு சிரமம் இல்லாமலே.

இவ்வளவு சிறப்பு மிக்க நாட்களும் , நேரமும் இந்த ஆண்டில் எப்போதெல்லாம் சம்பவிக்கின்றது என்பதனை காண்போம்.
விரைவில் உங்கள் கடன்கள் அடைய வாழ்த்துக்கள். ஓம் நமசிவய.

Sunday, December 13, 2015

கிட்னியில் கோளாறா ? எளிய வைத்தியம்

ஓம் நமசிவய.

கிட்னியில் கோளாறு இருக்கின்றதா
கல்லோ - கட்டியோ எதுவானாலும் சரி செய்ய எளியமுறையில் கை வைத்தியம் .
முருங்கைக்காய் சாறு -
முள்ளங்கி சாறு -
அன்னாசி சாறு -
வெங்காய சாறு-
நான்கையும் சம அளவில் எடுத்துக்கொள்ளுங்கள்-
(அதாவது வகைக்கு 25 ML என்பதுபோல )

அதில் கொஞ்சம் ஒரிஜினல் தேன் கலந்து காலை மாலை இரண்டு வேளை என தொடர்ந்து பத்து நாட்கள் குடியுங்கள் .
கிட்னியில் உருவான எல்லாவித பிரச்சினையும் சுமூகமாக தீர்ந்தது.

நலமோடு வாழுங்கள் 
ஓம் நமசிவய.

Monday, December 7, 2015

கூட்டு ப்ரார்த்தனை செய்வோம்


ஓம் நமசிவய : 

அன்பிற்குரியவர்களே,

நாமறிந்ததை உரைப்போம்.

அடுத்த வருடம் டிசம்பர் வரை நம் நாட்டிலும் , அயல்நாட்டிலும் நிகழ இருக்கும் அசம்பாவிதங்கள் மோசமானதாக இருக்கும்.
கிரக சஞ்சாரத்தில் கோட்சார ரீதியாக ஸ்ரீ செவ்வாயுடன் சேரும் ஸ்ரீ சனைச்வரரும் , ஸ்ரீ செவ்வாய் வீட்டில் அமர்ந்துள்ள ஸ்ரீ சனைச்வரரும் மிக மோசமான விளைவுகளை தர வல்லவராக இருப்பதால் மரணங்களும் , துர்சம்பவங்களும், குறிப்பிட்ட சில மாதங்களில் நிகழ்ந்திட வாய்ப்பு உள்ளது.
விருச்சிகத்தில் உள்ள ஸ்ரீ சனைச்வரர், விசாகம், அனுஷம், கேட்டை எனும் மூன்று நட்ச்த்திரங்களை கடக்கின்றார், இதில் அனுஷம் அவரது நட்ச்த்திரமாகும்.
இவர் விருச்சிகத்தில் இருந்து சிம்மத்தை பார்ப்பதால் அரசாங்கத்திற்கு அவப்பெயர் , தடுமாற்றம், அற்ப லாபம் போன்றவையும் ,
மக்களுக்கு திடீர் சங்கடங்களும் , பொருள் நட்டமும், உயிர்சேதமும் மிக குறைந்த லாபமும், மன சோர்வும் , இடப்பெயர்தலும் , கலக்கமும் ஏற்படவும் பெரும் வாய்ப்புள்ளது.
கால புருஷ பஞ்சமத்தில் தேவகுரு அமர்ந்து, தனது வீடான கால புருஷ பாக்கியத்தைப் பார்ப்பதாலும் , கால புருஷ லக்கினத்தை பார்ப்பதாலும் (இவ்விரண்டும் விசேஷ பார்வை) இதற்கு பரிகாரம உண்டு.
பாதிப்புகள் சாதி பார்ப்பதில்லை, மதம் பார்ப்பதில்லை, ஏற்றதாழ்வு பார்ப்பதில்லை, ஏழை பணக்காரன் பார்ப்பதில்லை அனைவரையும் ஒரேயடியாக வெட்டிச் சாய்க்கிறது.
ஆகவே
இந்த பரிகாரங்களை மனிதனாக இருந்து, சாதி , மதம் கடந்து ,
தினசரி அனைவர் வீடுகளிலும் , அவரவர்கள் ஊரில் உள்ள கோவில்களிலும் மசூதிகளிலும் சர்ச்சுகளிலும் , 
கூட்டு பிரார்த்தைனையும் ,
ஸ்ரீ பைரவ காயத்ரி, 
ஸ்ரீ பைரவ மூல மந்த்ர அர்ச்சனையும், 
ஸ்ரீ பைரவ அஷ்டோத்திர அர்ச்சனையும், 
ஸ்ரீ பைரவ அஷ்டோத்திர நாமாவளி ஒலிக்க செய்வதும்,

ஸ்ரீ ஹனுமன் காயத்ரி, 
ஸ்ரீ ஹனுமன் சாலிசா ஒலிக்க செய்வதும் , 
ஸ்ரீ ஹனுமன் மூல மந்திர அர்ச்சனையும், 
ஸ்ரீ ஹனுமன் அஷ்டோத்திர அர்ச்சனையும் , 
ஏழை எளியவர்களுக்கு , தன்னால் முடிந்த உதவிகளையும் அன்னதானமும்,
குறிப்பாக காலிழந்தவர்கள் , குஷ்டரோகிகளுக்கு வஸ்திரதானமும் செய்து வந்தால் ,
வரவிருக்கும் மோசமான இடர்களின் பாதிப்பு மிக அதிகம் குறைய வாய்ப்புள்ளது.
நம் மக்களுக்காக.
ஓம் நமசிவய.


ஸ்ரீ ஆஞ்சநேய மந்த்ரம் :


இதனை பாராயணம் செய்து மனதில் சொல்லி வாருங்கள் .


துயர் போக்கும் , வலிமை சேர்க்கும். வளமாக்கும்.


ஆஞ்சநேயமதி பாடலாநநம் 
காஞ்சநாத்ரி கமநீய விக்ரஹம் |
பாரிஜாத தருமூலவாஸிநம் 
பாவயாமி பவமான நந்தனம் ||


யத்ர யத்ர ரகு நாத கீர்த்தனம்
தத்ர தத்ர க்ருதமஸ்தகாஞ்ஜலிம் |
பாஷ்பவாரி பரிபூர்ணலோசனம்
மாருதிம் நமத ராக்ஷஸாந்தகம் ||


மனோஜவம் மாருத துல்ய வேகம்
ஜிதேந்த்ரியம் புத்திமதாம் வரிஷ்டம் |
வாதாத்மஜம் வானரயூத முக்யம்
ஸ்ரீ ராமதூதம் சிரஸா நமாமி ||



 ஸ்ரீ பைரவர் சத நாமாவளி 


பைரவோ பூத நாதஸ்ச - பூதாத்மா - பூதபாவந:
க்ஷேத்ரத: க்ஷேத்ரபாலஸ்ச - க்ஷேத்ரக்ஞ : க்ஷத்ரியோ விராட்

ஸ்மசான வாஸீ மாம்ஸாசீ - ஸர்ப்பராசி : ஸ்மராந்தக்ருத்
ரக்தப : பாநப : ஸித்த : - ஸித்தித : ஸித்தஸேவித :

கங்காள : கால சமந : - கலாகாஷ்டா தநு : கவி :
த்ரிநேத்ரோ பகுநேத்ரஸ்ச - ததா பிங்கல லோசந :

சூலபாணி : கட்கபாணி : - கங்காளீ தூம்ரலோசந :
அபீருர்பைரவோ நாதோ - பூதபோ யோகிநீ பதி :

தநதோ தநஹாரீச : தநவாந் ப்ரீதி பாவந :
நாகஹரோ நாகபாசோ - வ்யோம கேச : கபால ப்ருத்

கால : கபாலமாலீச - கமநீய : கலாநிதி:
த்ரிலோசநோஜ்ஜவலந் நேத்ர : த்ரிசிகீ ச த்ரிலோகப :

த்ரிநேத்ர தநயோ டிம்ப : சாந்த : சாந்தஜனப்ரிய :
வடுகோ வடுவேஷஸ்ச : கட்வாங்க வர தாரக :

பூதாத்யக்ஷ : பசுபதி : - பிக்ஷúக : பரிசாரக :
தூர்தோ திகம்பர : சூரோ - ஹரிண : பாண்டுலோசந :

ப்ரசாந்த, சாந்தித : ஸித்த : - சங்கர : ப்ரிய பாந்தவ :
அஷ்டமூர்த்திர் நிதீசஸ்ச - ஞான சஷூஸ் தபோமய :

அஷ்டோதார : ஷடாதார : - ஸர்பயுக்த : சிகீஸக :
பூதரோ பூதராதீச : - பூபதிர் பூதராத்மஜ :

கங்காளதாரீ முண்டீச - நாக யக்ஞோபவீதவாந்
ஜ்ரும்பணோ மோஹந : ஸ்தம்பீ மாரண : க்ஷோபணஸ்ததா

சுத்த நீலாஞ்ஜந ப்ரக்ய : - தைத்யஹா முண்டபூஷித
பலி புக்பலி புக் நாதோ - பாலோ பால பராக்ரம :

ஸர்வாபத் தாரணோ துர்கோ - துஷ்டபூதநிஷேவித :
காமீ கலா நிதி காந்த : - காமிநீ வசக்ருத்வசீ

ஸர்வ ஸித்திப்ரதோ வைத்யோ - ப்ரபுர் விஷ்ணு ரிதீ வஹி
அஷ்டோத்தரசதம் நாம் நாம் - ஸ்ரீபைரவஸ்ய மஹாத்மந:

ஓம் நமசிவய.



Thursday, October 22, 2015

யாரிடம் எதை கேட்பது ?


ஓம் நமசிவய. 

அன்பிற்குரிய நண்பர்களே, வணக்கம்.


இன்று பலரும் , பல விஷயங்களை அறிந்து கொள்ள விரும்புகின்றார்கள் .


அதனால் பலரையும் நாடி தாங்கள் அறிந்து கொள்ள விரும்பும் விஷயத்தைப் பற்றிய கேள்விகளை கேட்கிறார்கள்.
இவர்களால் கேள்வி கேட்கப்பட்டவர்களும் அவர்களுக்கு தெரிந்ததை பகிர்ந்து கொள்கின்றார்கள் .


இந்த நிலையில் . . .இந்த கட்டுரை பலனுள்ளதாக இருக்கும் என நம்புகின்றேன் .



யாரிடம் எதை கேட்பது , எதை கேட்க வேண்டும் ?

அறிவும் , ஞானமும் , ஆன்மீகமும்.

தண்ணீரைக் கொண்டு பலகாரியங்கள் (உண்பதற்கோ அல்லது மற்ற காரியங்களுக்கோ) செய்யலாம்,
அதுபோலவே எண்ணையைக் கொண்டு பல காரியங்கள் (உண்பதற்கோ அல்லது மற்ற காரியங்களுக்கோ) செய்யலாம் .

ஆனால் தண்ணீரைக் கொண்டு செய்வதை எண்ணையாலோ அல்லது எண்ணையைக் கொண்டு செய்வதை மாற்றி தண்ணீராலோ செய்ய முடியாது.

ஞானமார்க்கம் தெளிந்த ஞானிகள் அறிவாளிகளைப் போல பேசுவதும்,
படித்து அறிந்த அறிவாளிகள் என்பவர்கள் ஞானமார்க்கம் பற்றி பேசுவதும்,
முரண்பாடானது ஆகும்.

படிப்பு அறிவிற்கும் , ஞான தெளிவிற்கும் எந்த தொடர்பும் இல்லை.

அறிவால் சிந்திக்கக்கூட முடியாதவைகளை ஞானத்தால் மிக சாதாரணமாக சொல்ல முடியும்.

அறிவு என்பது எந்த ஒரு விஷயமோ அது தொடர்பான புத்தகங்களை படித்து அறிந்ததுதான்.
படித்து அறிந்ததற்கு மேல் ஒன்றும் சொல்லவோ பேசவோ தெரியாது .
ஏனென்றால் அதனைப் பற்றி படித்தது அவ்வளவுதான்.
படிக்காத ஒரு விஷயத்தை பற்றி எப்படி கூறமுடியும் .
ஆனால் ஒன்று செய்யலாம் ,

என்ன அது ?
அப்படி ஒன்று இல்லவே இல்லை என்று ஒரேயடியாக கண்மூடித்தனமாக மறுக்கலாம்.
அதற்கு ஆதாரமாக தான் படித்த பல புத்தகங்களிலிருந்து மேற்கோள்களை அள்ளி விட்டு தனது படிப்பறிவை பறை சாற்றலாம் .
சித்தர்களை , ஞானிகளை , யோகிகளை , முனிவர்களை அல்லது அவர்களின் கருத்தை மறுக்கலாம்.
ஏனென்றால் அவர்கள் படித்த புத்தகங்களில் இவர்களைப் பற்றி ஏதும் சொல்லப்படவில்லை,
மேலும் அவர்களைப்பற்றி சொன்ன புத்தகங்களை இவர்கள் படிக்கவில்லை.

ஆனால் ஞானம் என்பது படித்து வருவதில்லை. ஒரு மனிதன் , தனது மனதின் , உடலின் தீவிர பயிற்சியினாலும் , தவத்தாலும், த்யானத்தாலும் இறைவனின் பேரருள் கருணையாலும் தன்னுள் பெறுவது , அது அவனுள் வியாபிப்பது.
இது இருந்த இடத்தில் இருந்தே அனைத்தையும் விளங்கிக் கொள்வது , மற்றவருக்கும் விளங்கச் செய்வது.

இது மேஜிக் அல்ல , மற்றவருக்கு நிகழ்ச்சியாக நடத்திக் காட்டுவதற்கு.
மனித மனது , தன் சுய உணர்தலின் உச்ச கட்டம்.
இதனை பெரிதுபடுத்த வேண்டிய அவசியமே இல்லை .

எங்கோ ஒருவர் தன்னை ஞானி என்றோ , யோகி என்றோ , முனிவர் என்றோ, சித்தர் என்றோ சொல்லி ஏமாற்றினார் என்பதற்காக எல்லோரையும் ஒரே மாதிரி பார்ப்பது நீதியாகாது.

கல்வியிற் சிறந்த கல்விமான்கள் , பேராசிரியர்கள் , ஆய்வாளர்கள் என்று சொல்லிக் கொள்பவர்கள், பெயருக்கு பின் இரண்டு முழம் அளவிற்கு பட்டங்களை போட்டுக் கொள்பவர்கள் எல்லாம் தவறு செய்யவில்லையா?

உடனே படித்தவர்கள் அனைவரும் தவறானவர்கள் எனப் பொருள் கொள்வது சரியான முடிவாகாது அல்லவா !! 

ஆகவே அறிவால் அறிய வேண்டியதை அறிவில் சிறந்தவர்களையும் ,
ஞானத்தால் உணர வேண்டியதை மெய்ஞானம் உணர்ந்தவர்களோடும் கேட்டு அறிந்துகொள்ளுங்கள்.
மாறாக . . .
அவரிடம் கேட்க வேண்டியதை இவரிடமும் , இவரிடம் கேட்க வேண்டியதை அவரிடமும் கேட்டால் ,

எங்கே தெரியாது என்று சொன்னால் தம்மை குறைத்து மதிப்பிட்டு விடுவார்களோ என எண்ணி அவர்கள் தங்களது எண்ணத்தை முடிவாக வெளியிடுவார்கள் .

பின் அதையே தனது வழக்கமாக்கி பின்னர் அதை தனது கொள்கையாக கொள்வார்கள்.

அதனால் நீங்கள் இனிமேல்
தண்ணீரால் செய்ய வேண்டியதை தண்ணீராலும்,
எண்ணையால் செய்ய வேண்டியதை எண்ணையாலும் செய்யுங்கள்

மாற்றி செய்தால் பொருளும் வீணாகி , நேரமும் , பணமும் வீணாவதைபோல –
நமக்கு இருக்கும் கொஞ்ச நஞ்ச அறிவும் , பக்தியும் , ஆன்மீக உணர்வும் வீணாகி போகும்.

ஓம் நமசிவய.
Related Posts Plugin for WordPress, Blogger...