என்னை தொடர்ந்து

வாருங்கள், நண்பரே வணக்கம். தங்கள் வருகையை பதிவு செய்யுங்களேன் !அன்புடன் கருணாகரன்6,இடைப்பாடி. அன்பர்களே ! முழுக்க முழுக்க தமிழில் திருக்கணித முறையில் ஜாதகம் கணிக்க வேண்டுமா? உங்கள் பெயர், பெற்றோர் பெயர், பிறந்த தேதி, மாதம் வருடம், பிறந்த இடம் போன்ற விபரங்களை தாருங்கள், உங்கள் ஜாதகம் கூரியர் மூலமாக உங்களுக்கு அனுப்பி வைக்கப்படும்.( நள்ளிரவில் இரவு 12.00 மணிக்கு மேல் காலை 7.00 மணிக்குள் பிறந்திருந்தால் விடிந்தால் என்ன கிழமை என குறிப்பிடவும்.K.செந்தில்குமார்,கணேஷ் கம்ப்யூட்டர்ஸ்,34,கடைவீதி, இடைப்பாடி,சேலம் மாவட்டம்-637101.

Monday, August 24, 2015

மாந்தி பன்னிரு பாவங்களில் நின்ற பலன்

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்
அன்பிற்குரியவர்களே, வணக்கம்.

ஜாதகத்தில் " மா " அல்லது "குளி" என குறிப்பிடப்படும் மாந்தி எனும் காரகம் (கிரகம் அல்ல ) எம் மாதிரியான பலன்களை அந்த ஜாதகருக்கு தர வல்லது என்று பார்ப்போம்.
மாந்தி என்பதுதான் சரியான பதமாகும்.

குளிகன் அல்லது குளிகை என்பது வேறு , மாந்தி என்பது வேறு என்பதனை நினைவில் கொள்ளுங்கள்.

மாந்தி தான் இருக்குமிடம் அதற்கு நேர் ஏழாமிடம் தான் இருக்குமிடத்திற்கு முன்னே உள்ள இடத்தையும் (2ம வீடு ) தான் இருக்குமிடத்திற்கு பின்னே உள்ள இடத்தையும் (12ம் வீடு) பார்க்கும் வலிமையை பெற்றவராகும்.

தான் இருக்குமிடம் , பார்க்கும் இடம் இவைகளுக்கு தனது நிலையைப் பொறுத்து , பாவகத்தின் தன்மையை முழுமையாக மாற்றி அமைக்கும் பலம் படைத்தவர் .

உதாரணமாக : அழகு தரும் லக்கினமாக இருந்து இவர் முழு பலத்துடன் இருந்துவிட்டால் அவலட்சணமான உருவத்தை தந்துவிடுவார்.

பன்னிரெண்டு பாவங்களில் இவர் இருந்தால் எம்மாதிரியான பலன்களைத் தருவார் என பொதுவான பலன்கள் இங்கே தரப்படுகின்றது

இது பொதுப்பலனே தவிர முழுபலன் அல்ல.
காரணம் ஜாதகத்தில் உள்ளபலம்பொருந்திய சுபக் கிரஹ பார்வை , மாந்தியின் தாக்கத்தினை குறைக்கலாம் .

இப்போது பன்னிரண்டு பாவங்களிலும் மாந்தி இருந்தால் என்ன பலன் என்று பார்ப்போம்.

1ம் இடத்தில( லக்கினத்தில்) மாந்தி இருந்தால் குண்டான உடல‌மைப்பு, உடல் உபாதைகளும், மறைமுக நோய்களும், அடக்கம் மற்றும் வெட்கம் இல்லாதவராகவும், மனக்கவலை அதிகம் கொண்டவராகவும், குறும்புத்தனம் கொண்டவராகவும், சுறுசுறுப்பானவராகவும் இருப்பார்கள். சுபகிரக சேர்க்கை மற்றும் பார்வை இருந்தால் பொன், பொருள் சேர்க்கை உண்டாகும்.

2 ம் இடத்தில் மாந்தி அமைந்திருந்தால் குடும்ப வாழ்க்கை நிம்மதி இல்லாதவராகவும், பேச்சில் தடுமாற்றமும், கீழ்த்தரமான புத்தி கொண்டவராகவும், வீண் பொருள் விரயம் செய்பவராகவும், கண்களில் நோய், தீய பழக்கம் கொண்டவராகவும் இருப்பர்.

3ம் இடத்தில் மாந்தி அமைந்திருந்தால் நல்ல உடலமைப்பு, தைரியம், துணிவு, பலரை வழிநடத்தும் திறன், புதிய முயற்சிகளில் ஈடுபட்டு வெற்றிகளை குவிக்கும் சூழ்நிலை ஆகியவை உண்டாகும்.

4ம் இடத்தில் மாந்தி அமைந்திருந்தால் நிம்மதியற்ற நிலை, உடல் நிலை பாதிப்பு, வீட்டு மனை சேர்க்கை உண்டாகத் தடை, தாயாருடன் சுமூக நிலை இல்லாமை ஆகியவை ஏற்ப்படும்.

5ம் இடத்தில் மாந்தி அமைந்திருந்தால் மனநிலை பாதிப்பு, புத்திர தோஷம் பாதிப்பு, குறைந்த வயதில் கண்டம், செல்வம் செல்வாக்கை இழக்கும் நிலை, கடவுள் நம்பிக்கை இல்லாத்வராகவும், சுய இன்பப்பழக்கம் அல்லது முறையற்ற உறவு கொண்டவராகவும் இருப்பார்கள்.

6ம் இடத்தில் மாந்தி அமைந்திருந்தால் நீண்ட ஆயுள், பிற‌ருக்கு உதவி செய்யும் மனோபாவம், ஆரோக்கியமான வாழ்வு, எதிர்கள் இல்லாத நிலை அல்லது எதிரிகளிடம் எப்போதும் வெற்றி, வாழ்வில் படிப்படியான உயர்வு பெறுவார்கள்.

7 ம் இடத்தில் மாந்தி அமைந்திருந்தால் மெலிந்த உடல், இல்லற வாழ்வில் நிம்மதியற்ற நிலை, குறைவான நட்பு, மனைவியின் சொத்தை அழிக்கும் நிலை, நம்பியவர்களால் ஏமாற்றப்படுதல் ஆகியன ஏற்படும்.

8 ம் இடத்தில் மாந்தி அமைந்திருந்தால் அதிக பசி கொண்டவராகவும், மறைமுக நோய் கொண்டவராகவும், அதிக கவலை கொண்டவராகவும், எதிலும் தோல்வியே ஏற்படும் நிலையும், வீண் விரயம் செய்பவராகவும் இருப்பர்.

9ம் இடத்தில் மாந்தி அமைந்திருந்தால் மெலிந்த உடலமைப்பு கொண்டவராகவும், தந்தைக்கு தோஷம் உடையவராகவும், தவறான பாதைக்கு செல்பவராகவும், அதனால் தவறான பழக்கவழக்கங்களும்,முறையற்ற பாலுணர்வு உடையவராகவும், எப்பொழுதும் சோதனை உடையவராகவும், பணக்கஷ்டம் உடையவராகவும் இருப்பர்.

10ம் இடத்தில் மாந்தி அமைந்திருந்தால் சுயநலம் மிக்கவராகவும், மற்றவர்களைப் பற்றி கவலை இல்லாதவர்களாகவும், நன்றாக உழைக்கக்கூடியவராகவும், வாழ்வில் படிப்படியாக முன்னேற்றம் ஏற்ப்படும்.

11ம் இடத்தில் மாந்தி அமைந்திருந்தால் செல்வம், செல்வாக்குடன், நல்ல மனைவி, மிகுந்த புகழ், நெருங்கியவர்களுக்கு உதவி புரியும் தன்மை, தெய்வ நம்பிக்கை கொண்டவராகவும், குறுகிய கால்களை கொண்டவராகவும் இருப்பர்.

12ம் இடத்தில் மாந்தி அமைந்திருந்தால் வீண் விரயம் செய்பவராகவும், இழிவான செயல்களை செய்பவராகவும், உடலில் குறையுடன், குறைவான சந்தோசம் கொண்டவராகவும், குடும்பவாழ்வில் சோகம், சோதனை கொண்டவராகவும், சோம்பல் கொண்டவராகவும் இருப்பர்.

மற்றபடி மற்ற கிரகங்களின் பார்வை சேர்க்கை பொறுத்து பலன்கள் வேறுபடலாம் 
பெரும்பாலானோருக்கு பொருந்தும்.

மீண்டும் நினைவில் கொள்ளுங்கள் இது பொதுவான பலனே.

ஓம் நமசிவய

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...