என்னை தொடர்ந்து

வாருங்கள், நண்பரே வணக்கம். தங்கள் வருகையை பதிவு செய்யுங்களேன் !அன்புடன் கருணாகரன்6,இடைப்பாடி. அன்பர்களே ! முழுக்க முழுக்க தமிழில் திருக்கணித முறையில் ஜாதகம் கணிக்க வேண்டுமா? உங்கள் பெயர், பெற்றோர் பெயர், பிறந்த தேதி, மாதம் வருடம், பிறந்த இடம் போன்ற விபரங்களை தாருங்கள், உங்கள் ஜாதகம் கூரியர் மூலமாக உங்களுக்கு அனுப்பி வைக்கப்படும்.( நள்ளிரவில் இரவு 12.00 மணிக்கு மேல் காலை 7.00 மணிக்குள் பிறந்திருந்தால் விடிந்தால் என்ன கிழமை என குறிப்பிடவும்.K.செந்தில்குமார்,கணேஷ் கம்ப்யூட்டர்ஸ்,34,கடைவீதி, இடைப்பாடி,சேலம் மாவட்டம்-637101.

Wednesday, August 25, 2010

ஜோதிட சிக்கல்கள்

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்
அன்பானவர்களே !!
இந்த உலகில் எங்கு சென்று நீங்கள் கேட்டாலும் இரண்டும் + இரண்டும் நான்குதான் அதில் எங்குமே, என்றுமே மாற்றமில்லை,
ஆனால் ஜோதிடத்தில் மட்டும் ஒருவருக்கு நடைபெறும் ஒரே திசை- ஒரே புக்தி காலத்தை ஒவ்வொரு ஜோதிடர் ஒவ்வொரு மாதிரி சொல்வதன் காரணம் என்ன ?
முழுமையாக க்ரஹங்களையும், முழுமையாக ஜோதிடத்தையும் அறியாததே காரணமாகும். 
ஆகவே பெயரையும், பந்தாவையும், பரம்பரையையும், ஆளின் தோற்றத்தையும் வைத்து ஜோதிடம் பார்க்க செல்லாமல் அந்த ஜோதிடருக்கு முதலில் ஜோதிடம் தெரியுமா? என்று தெரிந்துகொண்டு ஜாதகம் பார்க்க செல்வது சிறந்ததாகும்.  

அன்புடன் கருணாகரன்6.இடைப்பாடி.  

4 comments:

ராவணன் said...

இரண்டும் இரண்டும் நான்கு என்பது கணிதம்...சோதிடத்தில் இது தவறாக வாய்ப்பு உள்ளது.உங்களுக்குச் சோதிடம் தெரிந்தால் இது புரியும்.
கணிதத்திலும் கூட்டல்,பெருக்கல், கழித்தல், வகுத்தல் உள்ளன.
சோதிடன் ஒரு சாதாரண மனிதனே!

இரண்டும் இரண்டும் எட்டு என்பதே சோதிடத்தில் சரியான விடை.உங்கள் சோதிட அறிவைப் பயன்படுத்திக் கண்டுபிடியுங்கள்.

இர.கருணாகரன் said...

அன்பு ராவணரே,வருக,

உங்கள் வருகைக்கும் மேலான கருத்துக்கும் நன்றி,

ஜோதிடம் என்பது முழுக்க முழுக்க கணிதமும், விஞ்ஞானமும் கலந்தது.

நீங்கள் அதனை அறிந்திருக்க வாய்ப்பில்லை.

அடியேன் சொன்னதில் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை.

ஜோதிடரும் மனிதனே அதில் மாற்றமில்லை.

ஆனால் ஜாதகத்தை கொடுத்துவிட்டு அவரை ஒரு கடவுளாக எண்ணி வாய் பார்த்து காத்துக் கொண்டுள்ளார்களே அவர்களின் நிலையைதான் எண்ணி வேதனைப்படுகிறேன்,

கடந்த தேர்தலின் போது தமிழ்நாட்டின் மிகப்பெரிய ஜோதிட ஜாம்பவான்களின் கணிப்பு என்னவானது?

நடந்தபின் ஆயிரம் காரணங்கள் யார் வேண்டுமானாலும் சொல்லலாம், அதை ஏன் முன்பே கணிக்கவில்லை?

உண்மையான ஜோதிடரை கண்டு செல்லுங்கள் என்றுதான் சொல்கிறேன்.

பால்,சர்க்கரையுடன் டீத்தூள் கலந்தால் டீ தான் வரவேண்டும், காபி வரக்கூடாது, வந்தால் நாம் கலந்தது டீத்தூள் அல்ல என்றுதான் பொருள். இதற்கு பெரிய பெரிய பார்முலா தெரிந்திருக்க வேண்டிய அவசியம் இல்லை அல்லவா?

நம்முடைய ஜோதிட அறிவு என்னவோ அதைப் பொறுத்துதான் நாம் சொல்லும் பதிலும், பலனும் இருக்கும்.

என்றும் அன்புடன், கருணாகரன்,இடைப்பாடி.

நடேஷ்மணிக்கம் said...

அன்பு கருணையின் கடலான அன்பு தம்பி பருணாகரன் ஐயா

உண்மையான கருத்துகளை முன்வைத்திருக்கிறீர்கள்.

இர.கருணாகரன் said...

அன்பிறகும் மதிப்புக்கும் உரிய அண்ணார் திரு.நடேஷ்மாணிக்கம் ஐயா (மலேசியா)அவர்களுக்கு, உங்கள் அன்பு தம்பியின் வணக்கங்கள்.

உங்கள் வரவு எனக்கு ஆனந்தத்தை அளவின்றி தருகிறது.

வருக, தங்களின் பதிவுகளை அளவின்றி தருக.

என்றும் உங்கள் தம்பி.

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...